மக்கள் சக்தி தலைவர் ஆர்.எஸ். தானேந்திரன், பாரிசான் நேசனலில் (பிஎன்) மஇகாவை மாற்றும் எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்று வலியுறுத்தியுள்ளார். மஇகா மற்றும் பாரிசான் இடையே நடந்து வரும் உள் பதட்டங்களை கட்சி பயன்படுத்திக் கொள்ளாது என்றும், இந்திய சமூகத்தின் நலன்களை முன்னேற்றுவதற்காக மஇகாவுடன் இணைந்து பணியாற்ற…
90 வயதைத் தாண்டிய வாக்காளர்கள் பற்றிய தகவல் இசி குளறுபடிகளை…
"பல ஆயிரக்கணக்கான அந்நியர்கள் வாக்காளர்களாக மாற்றப்பட்டது, ஆவி வாக்காளர்கள், இப்போது முதிர்ந்த வயதுடைய வாக்காளர்கள் ஆகிய தகவல்கள் வாக்காளர் பட்டியல் மீதான சந்தேகங்களையே அதிகரித்துள்ளன." நூறு வயதை எட்டியவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு கண்டு பிடித்துள்ளது உங்கள் அடிச்சுவட்டில்: தேர்தல் ஆணையம் எப்போதும் கோமாளித்தனமான பதில்களையே…
‘செரண்டா தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்’
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், பெப்ரவரி 6, 2013. கடந்த 4-2-2012 தமிழ் நாளிதழ்களில் வெளிவந்துள்ள செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் குறித்த செய்தி வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலின் போது 2010 ஏப்ரல் 24ந் தேதி அங்கு வருகை…
பொர்ன்திப்-பைக் கொண்டு வருவதற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்தது
ஜனவரி 23ம் தேதி போலீஸ்காரர்களினாலும் கும்பல் ஒன்றினாலும் அடிக்கப்பட்டு மரணமடைந்ததாக கூறப்படும் சி சுகுமார் மீது இரண்டாவது சவப் பரிசோதனையை நடத்துவதற்கு பிரபலமான தாய்லாந்து உடற்கூறு நிபுணரான டாக்டர் பொர்ன்திப் ரோஜாசுனானந்-தை அனுமதிப்பதற்குத் தேவையான ஆவணங்களை வெளியிடுவதற்குச் சுகாதார அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது. புத்ராஜெயாவில் நிகழ்ந்த ஒரு சந்திப்பின்…
தீபக்: எனது நிறுவனத்தை வாங்குமாறு பிரதமர் Boustead-க்கு ஆணையிட்டார்
கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், தமக்குச் சொந்தமான Asta Canggih Sdn Bhd-டை Boustead Holdings Bhd வாங்கியதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டுள்ளார். குளறுபடியான நிலப் பேரத்தில் சம்பந்தப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காக நஜிப் அதனைச் செய்தார் என தீபக்…
லிம் குவான் எங்: என் குடும்பத்தினர் பற்றிய ‘பொய்கள்’ என்னைக்…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் சகோதரி வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளார் என்ற 'பொய்யான' செய்தியை வெளியிட்டதின் மூலம் தி ஸ்டார் நாளேடு மீண்டும் லிம்-மைக் காயப்படுத்தியுள்ளது. "அது தி ஸ்டார் ஏட்டின் முழுமையான பொய். அந்த ஏடு சில வலைப்பதிவுகளிலிருந்து அதனை எடுத்துள்ளது. …
முன்னாள் ஐஜிபி: எல்லா ‘திடீர் மரணங்களையும்’ கொலைகள் என புலனாய்வு…
உலு லங்காட்டில் ஜனவரி 23ம் தேதி பாதுகாவலரான சி சுகுமார் மரணமடைந்தது உட்பட எல்லா 'திடீர் மரணங்களையும்' கொலைகள் என புலனாய்வு செய்யுமாறு முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார். "திடீர் மரணம்' சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நடத்தப்படும் புலனாய்வு கொலையைப் போன்றதாகவே…
கேஎல்112-இல் கலந்துகொண்ட ஆயுதப் படையினருக்குப் பிரச்னை
கடந்த மாதம் ஹிம்புனான் கெபாங்கித்தான் ரக்யாட் (அல்லது கேஎல்112)-இல் கலந்துகொண்ட ஆயுதப்படை வீரர்கள் அறுவருக்கு எதிராக “ஆயுதப் படைக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்திவிட்டதாக”க் குற்றம் சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம். அறுவரில் ஐவர் அரச மலேசிய கடற்படையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இராணுவத்தைச் சேர்ந்தவர். அவர்கள் 1972 ஆம் ஆண்டு ஆயுதப்…
ஓர் அரசியல் கட்சி ராமசாமியின் புதல்வியை பதிவு செய்துள்ளது
தமக்குத் தெரியாமல் வாக்காளராகத் தாம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டுள்ள பினாங்கு இரண்டாவது முதலமைச்சர் பி ராமசாமியின் புதல்வியை ஓர் அரசியல் கட்சி வாக்காளராகப் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் (இசி) விளக்கியுள்ளது. 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி செமினி சட்டமன்றத் தொகுதியிலும் உலு லங்காட்…
லெம்பா பந்தாய் நூருலுக்கு அவ்வளவு பாதுகாப்பான இடமல்ல
உங்கள் கருத்து: ‘லெம்பா பந்தாய் வாக்காளர்களில் 25 விழுக்காட்டினர்தான் பங்சார்வாசிகள். மற்ற 75விழுக்காட்டினர்?’ லெம்பா பந்தாயைப் பிடிப்பது பிஎன்னுக்குக் கடினமாக இருக்குமா? ஸ்வைபெண்டர்: அம்னோ, மக்களின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெறுவது எப்படி என்பதை அறியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது. பல்லாண்டுகளாக தேர்தலில் மோசடி செய்தும், ஊழல்கள் புரிந்தும் திமிராக நடந்துகொண்டும்…
உங்கள் கருத்து : இசி ஹீரோ அல்ல வில்லன்!
பக்காத்தான் ஆட்சிக்கு வரும் போது 'சபா ஆர்சிஐ-யைப் போன்று தேர்தல் ஆணையம் (இசி) மீது இன்னொரு ஆர்சிஐ அமைக்கப்படும்." இசி தலைவர்: சபா ஆர்சிஐ முடிவுகள் மீது முன் கூட்டியே கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் சேரிப் பையன்: இசி நடத்தியுள்ள பெரிய பெரிய தேர்தல் மோசடியை அதன் தலைவர்…
தமிழ்ப்பள்ளிகளுக்கான 2,000 ஏக்கர் நிலம்: சதித் திட்டமா?
-எம். குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், பெப்ரவரி 5, 2013. 2008 தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மக்கள் கூட்டணி அரசு தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்த்து மற்ற பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தலா 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருந்தது. மீண்டும் ஆட்சியில் அமர்ந்த தேசிய முன்னணி அரசு முதல்…
மெராப் ஆய்வு: நூறு வயதை எட்டுகின்றவர்கள் புதிய வாக்காளர்களாகப் பதிவு…
160 மலேசியர்கள் தங்களது 90வது பிறந்த நாளுக்குப் பின்னர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மெராப் எனப்படும் மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வு திட்ட அமைப்பு நடத்திய ஆய்வின் வழி அது தெரிய வந்துள்ளது. 90 வயதுக்கும் மேற்பட்ட 160 பேர் கடந்த தேர்தலுக்குப் பின்னர் வாக்காளர்களாகப் பதிவு…
கேஎல் மேயர் வாரிசான் மெர்டேகா பற்றி என்ஜிஓ-உடன் பேச மறுத்தார்
பெர்தஹான் தாமான் மெர்டேகா நெகாரா (பிடிஎம்என்) என்னும் என்ஜிஓ, சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வாரிசான் மெர்டேகா கோபுரத் திட்டம் பற்றி விவாதிக்க அனுமதிகேட்டு கோலாலும்பூர் மேயர் அஹ்மட் பீசல் தாலிப்புக்கு மூன்று கடிதங்கள் அனுப்பி விட்டுக் காத்திருந்தது. பதில் வரவில்லை. இனியும் பொறுப்பதற்கில்லை என்று புறப்பட்டு மேயரைச் சந்திக்க இன்று அவரது…
‘நீதித் துறை முடிவுகள் நிர்ணயம்’ தொடர்பில் புதிய காணொளியை குவே…
கிளானா ஜெயா எம்பி லோ குவோ பேர்ன் "நீதித் துறை ஊழலுக்கு மசியக் கூடியது" என்பதைக் காட்டுவதாக தாம் கூறிக் கொள்ளும் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 2007ம் ஆண்டு விகே லிங்கம் வீடியோ ஒளிப்பதிவுகளை வெளியிட்டதின் மூலம் குவோ பேர்ன் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை…
இசி தலைவர்: சபா ஆர்சிஐ மீது எந்த முடிவுக்கு வர…
சபா கள்ளக் குடியேற்றக்காரர்கள் பிரச்னையை விசாரிக்கும் ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணைய நடவடிக்கைகளில் இசி என்ற தேர்தல் ஆணையம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது தொடர்பில் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என எல்லாத் தரப்புக்களையும் அந்த ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆர்சிஐ தனது பணிகளைத் தொடரும் வேளையில்…
அன்வார்: கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் 20விழுக்காட்டைக் குறைத்தார் நஜிப்
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் நஜிப் அப்துல் நசாக் 20 விழுக்காட்டைக் குறைத்து விட்டதாகக் குற்றம் சாட்டிய மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், இது கல்வியின் பங்களிப்புக்கு பிஎன் அரசாங்கம் குழி பறிப்பதைக் காண்பிக்கிறது என்றார். யுனிவர்சிடி இண்டஸ்ட்ரி சிலாங்கூரில் இலவசக் கல்வி என்னும் தலைப்பில் முக்கிய…
கேகேபி ‘ஆவிகளுக்கு’ பிரதமரது சீனப் புத்தாண்டு கடிதங்கள் கிடைத்துள்ளன
கோலக் குபு பாரு சட்டமன்றத் தொகுதியில் பலருக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சீனப் புத்தாண்டுக் கடிதங்கள் கிடைத்து வருகின்றன. அந்தக் கடிதம் அனுப்பப்பட்டவர்களில் சிலர் இருக்கின்றனரா இல்லையா என்ற கேள்வி கூட இப்போது எழுந்துள்ளது. காரணம் அவர்கள் யார் என்றே தெரியவில்லை. அதனால் வரும் பொதுத் தேர்தலில்…
தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி
மலேசிய தோட்டங்களில் வாழும் இந்திய மலேசியர்களின் குழந்தைகள் புதியதோர் சூழ்நிலையில் கல்வி கற்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் முதல் கட்டமாக சிலாங்கூர் மாநிலத்தில் தோட்டப்புற மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி கட்டும் திட்டம் கடந்த சனிக்கிழமை 2-ஆம் அதிகாரப்பூர்வமாக…
சபா முதலமைச்சரின் உறவினர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்
பிலிப்பீன்ஸ் அதிகாரிகளினால் தேடப்படும் குற்றவாளியான மானுவல் கேரிங்கால் அமாலிலியோவுக்கு போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோத்தா கினாபாலுவில் உள்ள முதலாவது எலிசபத் அரசியார் மருத்துவமனையில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் அவருக்கு அந்தத் தண்டனை வழங்கப்பட்டது. அமாலிலியோ மானுவல் கேரிங்கால் என்ற பெயரில் பிலிப்பீனோ…
முஹைடின்: பினாங்கில் வெற்றி பெறுவது முடியாத காரியமல்ல ஆனால் எளிதானதும்…
பினாங்கில் பிஎன் 2008ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வரும் தேர்தலில் நல்ல அடைவு நிலையைப் பெறும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் நம்பிக்கை கொண்டுள்ளார். "பினாங்கில் வெற்றி பெறுவது முடியாத காரியமல்ல ஆனால் எளிதானதும் அல்ல," என அவர் பினாங்கில் இன்று நிருபர்களிடம் கூறினார். "நாங்கள் அது குறித்து…
ஜோகூரைப் பக்காத்தான் சுனாமி தாக்கக்கூடும்
கருத்துரைப்பவர் LIEW CHIN TONG பிஎன்னின் கடைசிக் கோட்டையாக விளங்குவது ஜோகூர். ஆனால்,வரும் தேர்தலில் அது வெறும் மணல் கோட்டையாக மாறலாம். பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஜோகூரில் 35விழுக்காடு மலாய் ஆதரவும், 80விழுக்காட்டு சீனர் ஆதரவும், 50விழுக்காடு இந்தியர் ஆதரவும் கிடைத்தால் 20 நாடாளுமன்ற தொகுதிகள் அதன் கைக்கு எளிதில்…
பிஎன் எல்லா நம்பிக்கை சீட்டுக்களையும் பயன்படுத்தி விட்டது
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். ஆனால் இந்தியர்களுக்குப் பல முறை அம்னோ சூடு போட்டு விட்டது. இருந்தும் அவர்களுக்கு சுரணை வரவில்லை என்றால் சூழ்நிலைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்" என் மீது நம்பிக்கை வையுங்கள் என நஜிப் இந்தியர்களிடம் மன்றாடுகிறார் Shyyyyyy: "அரசாங்க உதவி பெறாத தேசிய…
சபாவில் 100,000 வாக்காளர்கள் ‘முரண்பாடான இன வம்சாவளியை’ சார்ந்தவர்கள்
சபாவில் உள்ள வாக்காளர்களில் 12 விழுக்காட்டினர் 'முரண்பாடான ('irregular') இன வம்சாவளியை' சேர்ந்தவர்கள் என்பது மெராப் எனப்படும் மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வுத் திட்டம் மேற்கொண்ட ஒர் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல, அந்த வாக்காளர்களில் கால் பகுதியினர் வைத்துள்ள அடையாளக் கார்டுகள் சபாவில் 1999ம்…


