அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சபா மாநிலத் தேர்தல், ஐக்கிய அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான உறவின் சோதனையாக இருக்கும் என்று அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் புவாட் சர்காஷி கூறுகிறார். பாரிசான் நேசனல் (பிஎன்) தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, 16வது பொதுத் தேர்தலில் கூட்டணி ஆட்சியில் இருக்கும்…
சரவாக் ‘விடுதலை வானொலி’ அறிவிப்பாளர் கோத்தா கினாபாலுவில் கைது!
சரவாக் விடுதலை வானொலி ( Radio Free Sarawak ) அறிவிப்பாளர் பீட்டர் ஜான் ஜபான் இன்றுகாலை கோத்தா கினாபாலு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மிரி-க்குச் செல்வதற்காக அந்த விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார். Papa Orang Utan என்ற புனை பெயரில் பீட்டர் லண்டனைத் தளமாகக்…
‘பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி’ அரசாங்க உதவியைப் பெறுவதற்கான தந்திரம் அல்ல
பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா வீட்டுக்கு முன்னால் 'பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி' யை தனது உறுப்பினர்கள் நடத்தியது கூட்டரசு அரசாங்க நிதி உதவியைப் பெறுவதற்கான முயற்சி எனக் கூறப்படுவதை முன்னாள் இராணுவத்தினரைப் பிரதிநிதிக்கும் சங்கம் ஒன்று மறுத்துள்ளது. "நிச்சயமாக இல்லை. அரசாங்கம் எனக்கு ஆதரவு அளித்தால் நான்…
பிரஞ்சுக்காரர்கள் மிகவும் ரகசியமான ஆவணத்தை மலேசிய கடற்படையிடமிருந்து ‘வாங்கினர்’
மலேசிய அரசாங்கம் கொள்முதல் செய்யவிருக்கும் ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிக் கப்பல் குறித்த மலேசியக் கடற்படையின் மதிப்பீடான- மிகவும் ரகசியமான ஆவணத்தை பிரஞ்சு தற்காப்பு நிறுவனம் ஒன்று 'விலைக்கு வாங்கியதாக' கூறப்படுகிறது. 'வர்த்தக பொறியியல்' வேலைகள் என்ற பெயரில் Terasasi (Hong Kong) Ltd என்னும் நிறுவனத்துக்கு அந்த பிரஞ்சு…
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நிலத்துக்கு மஇகா கட்டிய பிரிமியம் திருப்பித்தரப்படும்
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்காக மேம்பாட்டு நிறுவனத்தால் ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்ட மஇகா அந்நிலத்தைத் தமிழ்ப்பள்ளியிடம் திரும்பத் தந்தால், சிலாங்கூர் மாநில அரசும் நிலத்துக்காக மஇகா கட்டிய பிரிமியத்தை திரும்பத்தரும். இன்று, மே 30 ஆம் நாள், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த முடிவு…
3,457 கிள்ளான் வாக்காளர்களைக் காணவில்லையாம், எம்பி கூறுகிறார்
கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, தம் தொகுதியில் 3,457வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து மாயமாய் மறைந்துவிட்டதாகக் கூறுகிறார். “2008 பொதுத் தேர்தலில் அவர்கள் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களாக இருந்தனர்.ஆனால், அவர்களின் அடையாள அட்டை எண்ணை தேர்தல் ஆணையத்தின் தரவுதளத்தில் பதிந்து கொண்டு தேடிப் பார்த்தால் ‘தகவல் ஏதுமில்லை’ என்று காண்பிக்கிறது”.…
மூசா: போலீஸ் அதிகாரிகளே என் பெயரைக் கெடுக்கப் பார்க்கிறார்கள்
முன்னாள் போலீஸ்படைத் தலைவர் மூசா ஹசான், தம்மைப் பிடிக்காத சிலர் ஒன்றுசேர்ந்து தமக்கு இரகசியக் கும்பல்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி தம் பெயரைக் கெடுக்கப் பார்க்கிறார்கள் என்று கூறுகிறார். “முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சிலர் ஒன்றுசேர்ந்து எனக்கெதிராக சதி செய்கிறார்கள். என் மதிப்பைக் கெடுப்பதுதான் அவர்களின் நோக்கம். ஒருவேளை அன்வார்(குதப்புணர்ச்சி 1)வழக்கில்…
13வது பொதுத் தேர்தலில் அரசியல் கேலிச்சித்திரங்களுக்குத் தடை
13வது பொதுத் தேர்தலில் தனிப்பட்டவர்களைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் அல்லது தோரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளது. 2011 சரவாக் தேர்தலின்போது, பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் தனிப்பட்டவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் கேலி செய்யும் விதத்தில் இருந்தன என்று தேர்தல் ஆணைய(இசி)த் துணைத் தலைவர் வான்…
பின்புறத்தைக் காட்டியவர்கள்: நாங்கள் அம்னோ கைப்பாவைகள் அல்ல
பெர்சே இணைத் தலைவர் அம்பிகா வீட்டுக்கு முன்னாள் பின்புறத்தைக் காட்டி உடற்பயிற்சி செய்து பொது மக்களிடையே ஆத்திரத்தை மூட்டி விட்ட பிவிடிஎம் என்ற மலாய் முன்னாள் இராணுவ வீரர் சங்கம்- தான் அம்னோ ஏஜண்டு எனக் கூறப்படுவதை வன்மையாக மறுத்துள்ளது. "அரசாங்கம் எங்களைப் பயன்படுத்தவில்லை. நாங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறுவதை…
அஸ்மின் ‘ஊழல் கோப்பு’ கசிந்தது மீது எம்ஏசிசி போலீசில் புகார்…
கேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி 1995ம் ஆண்டு 'ஊழலுக்காக விசாரிக்கப்பட்டதை' நிரூபிக்கும் ரகசிய அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாக பிரபல வலைப்பதிவாளர் ராஜ பெத்ரா கமாருதின் கூறியுள்ளது தொடர்பில் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போலீசில் புகார் செய்துள்ளது. பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம்,…
முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் பிரதமர் அலுவலகத்தை ஆக்ரமித்துள்ளனர்
தங்களுக்கு புக்கிட் ஜாலில் தோட்டத்தில் நான்கு ஏக்கர் நிலம் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை சம்பந்தமாக பிரதமர் நஜிப்பை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது அலுவலகத்தின் முன் புக்கிட் ஜாலில் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் முகாமிட்டுள்ளனர். காலை மணி 11.00 அளவில் பிரதமர் அலுவலகத்தின் முன் அத்தொழிலாளர்களின்…
‘WWW1 அனுமதி எண் பட்டை’ மீது நிஜார் கூறிய கருத்துக்களை…
ஜோகூர் சுல்தான் 'WWW1 அனுமதி எண் பட்டையை வாங்கியது மீது தமது டிவிட்டர் மூலம் முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் தெரிவித்த கருத்துக்களை தாங்கள் புலனாய்வு செய்வதை ஜோகூர் போலீசார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் அந்தப் புலனாய்வுக்காக பணிக் குழு ஒன்றை அமைத்திருப்பவதாகவும் தேச…
நிஜார்: என்னுடைய டிவிட்டர் செய்தி யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்
அண்மையில் ஜோகூர் சுல்தான் 'WWW 1' கார் எண்ணை 520,000 ரிங்கிட்டுக்கு வாங்கியதை குறை கூறிய தமது டிவிட்டர் செய்தி யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் முன்னாள் பேராக் மந்திரி புசார் நிஜார் ஜமாலுதின் தயாராக இருக்கிறார். "அந்த டிவிட்டர் செய்தி தங்களைப் புண்படுத்தியுள்ளதாக எந்தத்…
நஜிப்பின் முடிவு காலம் நெருங்குகிறது
உங்கள் கருத்து: “தேர்தலை விரைவில் நடத்த நஜிப்புக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்னை அல்ல.அவருக்குத் தேர்தலை நடத்தும் துணிச்சலே இல்லைபோல் தெரிகிறது.பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை.” டாக்டர் எம்: நஜிப் பலவீனமாக உள்ளார், தேர்தலைத் தாமதிப்பது நல்லது பீரங்கி: தீவிர சிகிச்சைப்…