சமீபத்திய மாநிலத் தேர்தலில் சீன சமூகம் கபுங்கன் ராக்யாட் சபாவை (GRS) நிராகரித்ததாகக் கூறுவது தவறாக வழிநடத்துகிறது என்று அதன் துணைத் தலைமைச் செயலாளர் ஆர்மிசான் முகமது அலி கூறுகிறார். அத்தகைய கூற்றுக்கள் ஏன் தவறானவை என்பதை விளக்க, தனது பாப்பர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பந்தாய் மானிஸ்…
‘73,000 பிலிப்பினோக்கள் பெரிய பனிப்பாறையின் நுனியே’
"73,000 பிலிப்பினோக்கள் மட்டுமே என்பதை உள்ளூர் சபா மக்கள் நம்ப வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனரா ? அத்தோடு இந்தோனிசியர்களைப் பற்றி என்ன சொல்வது ?" பெர்ஜெயா அரசாங்கம் சபாவில் 73,000 பிலிப்பினோக்களை குடியமர்த்தியது நம்பாதவன்: சபாவில் சில நூறாயிரம் (அல்லது மில்லியன் கணக்கில்) பேர்களுக்கு சட்ட விரோதமாக…
அமைதியான அதிகார மாற்றம் நமது பாரம்பரியம் என பிரதமர் பிரகடனம்
ஜனநாயகத் தேர்தல்களுக்குப் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் நடைமுறைக்கு இணங்க அதிகாரத்தை அமைதியாக ஒப்படைப்பது மலேசியாவில் வழக்கமான ஒன்று என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியிருக்கிறார். "நாம் சுதந்திரம் பெற்றது முதல் 12 பொதுத் தேர்தல்களை நடத்தியுள்ளோம். நமது அரசமைப்பு நிர்ணயம் செய்துள்ள வழிகளுக்கு ஏற்ப அவை…
தமிழ்ப் பள்ளிகள் மீது அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்க இருவருக்கு…
தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மீது அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதாக கூறிக் கொண்டு அதன் மீது பிரதமரையும் துணைப் பிரதமரையும் கேள்வி கேட்பதற்கு கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கும் மனித உரிமைக் கட்சித் தலைவர் பி உதயகுமாருக்கும் சட்டப்பூர்வத் தகுதி இருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முறையீட்டு நீதிமன்றம் ஏகமனதாக இன்று…
சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என டிஏபி ஆரூடம்
சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் பெரும்பாலும் நெகிரி செம்பிலான் சட்ட மன்ற தவணைக் காலம் நிறைவடையும் மார்ச் 27க்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என டிஏபி ஆரூடம் கூறியுள்ளது. சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர்ப்பார் என அந்தக் கட்சியின் வியூகவாதியான…
பெர்ஜெயா அரசாங்கம் சபாவில் 73,000 பிலிப்பினோக்களை குடியேற்றியது
1970ம் ஆண்டுக்கும் 1984ம் ஆண்டுக்கும் இடையில் சபா மாநில அரசாங்கம் அந்த மாநிலத்தில் பிலிப்பினோவைச் சேர்ந்த 73,000 அகதிகள் நிரந்தரமாக குடியேறுவதற்கு அனுமதி அளித்தது. இவ்வாறு சபாவில் குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் துறையில் உள்ள குடியேற்றப் பிரிவுத் தலைவர் அப்துல் ஜபார் அலிப்…
அவதூறு வழக்கில் தி ஸ்டார் நாளேடு ரோஸ்லியிடம் மன்னிப்புக் கேட்கும்
2009ம் ஆண்டு மசீச-வுக்குச் சொந்தமான தி ஸ்டார் நாளேட்டுக்கு எதிராகத் தாம் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கை மீட்டுக் கொள்ள முதுநிலை வழக்குரைஞரான ரோஸ்லி டாஹ்லான் இன்று ஒப்புக் ண்டுள்ளார். 2007ம் ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு முதல் நாளன்று ரோஸ்லி கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டது சம்பந்தப்பட்டது அந்த…
‘அரங்கத்தில் கூட்டத்தினர் எண்ணிக்கை அளவை மீறுவது குற்றமல்ல’
ஒர் அரங்கத்திற்குள் வரம்புக்கு மேல் பெரிய கூட்டத்தைக் கொண்டு வருவது குற்றம் என இந்த நாட்டில் எந்தச் சட்டமும் சொல்லவில்லை என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறுகிறார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணி பெரும் கூட்டத்தைக் கவர்ந்தது என்பதற்கு அந்தப் பேரணி ஏற்பாட்டாளர்கள் மீது போலீஸ்…
லண்டனில் மலேசியர் ‘எழுச்சி’ ஊர்வலம்
கோலாலம்பூரில் சனிக் கிழமை நடைபெற்ற மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மலேசியர்கள் குழு ஒன்று லண்டன் மாநகரச் சாலைகளில் ஊர்வலமாகச் சென்றது. "அவர்கள் கொடிகளையும் தோரணங்களையும் ஏந்தியிருந்தனர். தூய்மையான தேர்தல்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் சுலோகத்தையும் முழங்கினர். தேர்தலுக்காக வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் தாயகம்…
இந்திய சமுதாயம் இலவச அரிசிக்காக தெருவில் கையேந்தி நிற்கின்றது!
இந்தப் படம் நேற்று செமின்ஞியில் பிரதமர் நஜீப் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காக இலவச அரிசி பொட்டலங்கள் கொடுக்கும் போது எடுக்கப்பட்டதாகும். ஒரு அரிசி பொட்டலத்துக்காக இந்தியர்களை கையேந்த வைத்து பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டனர். இந்த நிலமை மாற வேண்டும்.…
பாஸ்: ‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்தக் கூடாது
பாஸ் கட்சி, முஸ்லிம் அல்லாதவர்கள் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீதான தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது. இஸ்லாம் அல்லாத சமயப் புத்தகங்களில் 'இறைவன்' என்ற சொல்லுக்கு மொழிபெயர்ப்பாக 'அல்லாஹ்' என்ற சொல் பயன்படுத்தப்படக் கூடாது என அதன் Syura மன்றம் முடிவு செய்துள்ளதே அதற்குக்…
வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் வாசகர்கள் அனைவருக்கும் செம்பருத்தி இணையத்தளத்தின் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 'இல்லங்கள்தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள்தோறும் தங்கட்டும் இன்பங்கள்!' மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாக கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளைபொருள்களை வைத்து புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கலோ பொங்கல் என்று இறைவனை…
மக்கள் எழுச்சியும் ‘சீ.. சீ.. இந்தப் பழம் புளிக்கும்’ என்ற…
"அம்னோ அதிர்ஷ்டக் குலுக்கை நடத்தியது, அரங்கத்துக்கு ஆதரவாளர்களை வாகனங்களில் கொண்டு சென்றது, அத்துடன் வந்தததற்காக பணமும் கொடுத்தது- பேராசை பிடித்த ஆட்சிக்கு ஆதரவு அதனால் தான்" சிலாங்கூர் பிஎன்: கேஎல்112ல் கலந்து கொண்டவர்கள் 'கட்சி ஊழியர்கள்' பெர்ட் தான்: சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் அவர்களே,…
“112 பேரணியில் பிள்ளைகள் முடியாது; நஜிப் நிகழ்வில் முடியுமா ?”
பிரதமருடைய நேற்றைய நிகழ்வில் பிள்ளைகளையும் மாணவர்களையும் அனுமதித்து விட்டு மெர்தேக்கா அரங்கில் நிகழ்ந்த மக்கள் எழுச்சிப் பேரணிக்கு அவர்களைத் தடை செய்த அரசாங்கத்தின் இரண்டு வகையான தரம் கண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று செமினியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பங்கு கொண்ட நிகழ்வில் பிள்ளைகளும் மாணவர்களும் காணப்பட்டதை மிபாஸ் எனப்படும் மலேசிய…
சிலாங்கூர் பிஎன்: கேஎல்112 பங்கேற்பாளர்கள் ‘கட்சி ஊழியர்கள்’
நேற்று நடைபெற்ற மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டது பற்றி சிலாங்கூர் பிஎன் கவலைப்படவில்லை. மாறாக பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் மற்ற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கட்சி ஊழியர்கள் என அது கூறியது. "நாங்கள் கவலைப்படவில்லை. அதற்கு மிகவும் எளிதான காரணம் இது தான்: அந்தக் கூட்டத்தில்…
அம்னோவுக்கு ஊடகங்கள் முக்கியமானவை என்கிறார் நஜிப்
மக்களுடைய உணர்வுகளையும் அவாக்களையும் அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் இடையராக (intermediary) ஊடகங்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். அரசாங்கத்துக்கு எதிராகக் கூறப்படுகின்ற குறைகளையும் கண்டனங்களையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும். அப்போது தான் அரசாங்கம் மேம்பாடுகளைக் கொண்டு வர முடியும். "மக்களுடைய நன்மைகளை நோக்கமாகக்…
கேஎல்112 பேரணி உண்மையில் “வரலாற்றில் இன்று நிகழ்வாகும்”
"நாட்டு வளங்கள் தங்களுக்கு முழுக் கட்டுப்பாட்டை வழங்கும் மாற்றங்களை மலேசியர்கள் விரும்புவது தெளிவாகி விட்டது. அவர்கள் பிச்சைகளை நம்பியிருக்க விரும்பவில்லை." "எழுச்சி" பேரணிக்கு மெர்தேக்கா அரங்கில் 100,000 பேர் கூடினர் ஜான் பியரே: மற்ற தெரு ஆர்ப்பாட்டங்களும் அரசியல் கூட்டங்களும் பெரிய அளவில் எதிர்ப்புக் கூட்டங்களும் நடத்தப்படலாம். ஆனால்…
தை பிறந்து விட்டது; வழி பிறக்க விவேகம் தேவை!, சேவியர்
நாட்டில் தைப் பொங்கல் புத்தாண்டை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் இனிய தைப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. தை பிறந்து விட்டது, வழி பிறக்க வேண்டும். அதற்கு ஆண்டவன் துணையும், மக்களின் விவேகமும், விழிப்புணர்வும் தேவை!…
பேரணி பற்றிய செய்தியைப் பரப்புங்கள் என அன்வார் வேண்டுகோள்
மக்கள் எழுச்சிப் பேரணிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் மெர்தேக்கா அரங்கத்தில் கூடிய வேளையில் அந்த நிகழ்வு பற்றிய தகவலைப் பரப்புமாறு வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். "வரும் தேர்தலில் வாக்களிக்கும் வெளிநாட்டு மலேசியர் என்ற முறையில் மலேசியாவில் நிகழ்கின்ற…
மெர்தேக்கா அரங்கத்துக்கு உள்ளும் புறமும் 100,000 பேர்
மக்கள் எழுச்சிப் பேரணி தொடங்கிய போது மெர்தேக்கா அரங்கத்துக்கு உள்ளும் புறமும் 100,000 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மழை பெய்யவில்லை. வானத்தில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. தேசிய கீதம் பாடப்பட்டதுடன் பேரணி தொடங்கியது. அரங்கதிற்கு வெளியில் காத்திருக்கும் மக்கள் செவி மடுப்பதற்கு உதவியாக ஒலிபெருக்கி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.…
‘பிஎன் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் ஆனால் மக்களுக்கு நன்றி சொல்லுங்கள்
"அது மக்கள் பணம். பிரதமர் நஜிப் ரசாக் அல்லது அம்னோ/பிஎன் பணம் அல்ல அது. உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்" 100 ரிங்கிட் அன்பளிப்பில் பிஎன் தலைவர்களைச் சம்பந்தப்படுத்துமாறு பள்ளிக்கூடங்களுக்கு ஆணை அடையாளம் இல்லாதவன்#19098644: விரக்தி அடைந்த ஒரு கட்சி இந்த நாட்டில் சட்டமியற்றும்…
கோலாலம்பூரில் 20,000 பேர், பேரணிக்கு முன்னதாக கூட்டம் தொடர்ந்து அதிகரிக்கிறது
முக்கியமான பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பக்காத்தான் ராக்யாட்டின் வலிமையைக் காட்டுவதற்கான நிகழ்வு எனக் கருதப்படும் மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள் கோலாலம்பூரில் கூடுகின்றனர். அந்தப் பேரணியில் அதிகமான மக்கள் கூடுவர் என ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். அதன் வழி இன்னும் முடிவு செய்யாமல் இருக்கும்…
சபாஷ் நடவடிக்கைகள் ஒப்படைக்கப்படுவதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் தனது நடவடிக்கைகளை உடனடியாக சிலாங்கூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அதற்கு நெருக்குதல் கொடுக்கும் பொருட்டு பிகேஆர் நாளை கையெழுத்துக்களைத் திரட்டும் இயக்கத்தைத் தொடங்குகின்றது. "சபாஷ் கௌரவமாக பின்வாங்குவதற்கு நெருக்குதல் தொடுக்கும் பொருட்டு தண்ணீரைப் பயன்படுத்தும் ஒரு மில்லியன் பயனீட்டாளர்களிடமிருந்து…
புலனாய்வு செய்வதற்கு என்ன இருக்கிறது என வினவுகிறார் துணை முதலமைச்சர்…
பினாங்கு துணை முதலமைச்சர் மான்சோர் ஒஸ்மான் அரசாங்க ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்ட காமத் துன்புறுத்தல் விவகாரத்தை மூடி மறைப்பதற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படும் விஷயத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்த தமது உதவியாளர் மீதான பூர்வாங்க அறிக்கையில் 'எதனையும் நிரூபிக்கவில்லை' எனக் கூறியிருக்கிறார்.…


