அதிகச் செலவில் அலுவலகத்தைப் புதுப்பித்ததாகக் கூறப்படுவதை சேவியரும் ஹலிமாவும் மறுத்தனர்

சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களான டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் டாக்டர் ஹலிமா அலியும் தங்களது அலுவலகங்களை அதிகச் செலவில் புதுப்பித்துக் கொண்டதாக தங்களது முன்னாள் சகா ஹசான் அலி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். 2008ம் ஆண்டு கல்வி, உயர் கல்வி, மனித வள மேம்பாட்டுத் துறைக்கு பொறுப்பேற்ற பின்னர்…

ஹசான்: இரண்டு ஆட்சி மன்ற உறுப்பினர்கள் என்னை விட அதிகமாக…

சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி, தமது இரண்டு முன்னாள் சகாக்களான- டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் ஹலிமா அலியும்- தம்முடன் ஒப்பிடுகையில் தங்களது அலுவலகங்களை புதுப்பிப்பதற்குக் கணிசமான அளவு கூடுதலாகச் செலவு செய்துள்ளதாக கூறிக் கொண்டுள்ளார். "சிலாங்கூர் அரசாங்கம் என் செலவுகளையும் அதே நேரத்தில்…

காடிர்: உயர்தலைவர்கள் என்னை வெளியேற்றத் திட்டமிட்டனர்

அமானா துணைத் தலைவர் காடிர் ஷேக் ஃபாதிர், தாம் அம்னோவிலிருந்து விலகியதற்குக் அக்கட்சிக்குச் சொந்தமான ஊடகங்களில் விடாமல் வந்துகொண்டிருந்த தாக்குதல்களும் மிரட்டல்களும்தான் காரணம் என்கிறார். அம்னோவின் நீண்டகால உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான காடிர், “அதிகாரத்தில் உள்ளவர்களின் ஏற்பாட்டில்தான்” ஊடகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக் கூறினார். “அதனை அடுத்து அம்னோ தலைமைச்…

பணி ஓய்வுச் சட்டம் இவ்வாண்டில் வருமெனத் தோன்றவில்லை

தனியார்துறை பணிஓய்வு வயதை 55-இலிருந்து 60-க்கு உயர்த்தும் உத்தேச சட்டமுன்வரைவு இவ்வாண்டில் சட்டம் ஆகுமெனத் தெரியவில்லை என்கிறார் மனிதவள அமைச்சர் எஸ்.சுப்ரமணியம். அச்சட்ட முன்வரைவைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அலசி ஆராய வேண்டியிருப்பதாக அமைச்சர் கூறினார். “(அது)நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படமாட்டாது.அடுத்தக் கூட்டத்தில்தான் கொண்டுவரப்படும்”, என்று ஆங்கில…

அன்வார் நல்லாவுக்கும் உத்துசானுக்கும் எதிராக 100 மில்லியன் ரிங்கிட் வழக்கு

உத்துசான் மலேசியா பத்திரிக்கையில் மார்ச் மாதம் 20ம் தேதி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் ( MUIP ) தலைவர் செனட்டர் எஸ் நல்லகருப்பனுடைய அறிக்கையில் உள்ள இழிவுபடுத்தும் கருத்துக்கள் மீது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்,  நல்லகருப்பனுக்கு எதிராக 100 மில்லியன் ரிங்கிட்…

அனைத்து யூதத் தொடர்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன என பாஸ் இளைஞர்…

யூத அமைப்புக்களுடன் அவை யூத இனவாதத்தை ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் அவற்றுடன் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருதின் ஹசான் வலியுறுத்தியுள்ளார். யூத மக்களுடன் வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் காலத்திலிருந்து இன்றைய சூழ்நிலை வேறுபட்டுள்ளதே அதற்குக் காரணம் என நஸ்ருதின் தெரிவித்தார்.…

கூடுதல் தொகுதிகள் இல்லையேல் மும்முனை போட்டிதான் -டிஏபி எச்சரிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் டிஏபி-க்குக் கூடுதல் தொகுதிகள் வழங்கப்படவில்லையென்றால் அக்கட்சி வேறு வழியில்லாமல் மும்முனை போட்டியை உருவாக்கக்கூடும். கெடாவில் டிஏபி-இன் ஒரே சட்டமன்ற உறுப்பினராகவுள்ள லீ குவான் ஏய்க் இவ்வாறு கூறியுள்ளார். டிஏபி, கெடா அரசில் கூடுதல் பங்காற்ற விரும்புகிறது, அதற்கு மாநில அரசில் கூடுதல் பிரதிநிதிகள் இருக்க…