ஒய்வு வயது மசோதா இவ்வாண்டு நிறைவேற்றப்படும் சாத்தியமில்லை

ஒய்வு வயதை 55லிருந்து 60 ஆக உயர்த்துவதற்கு வகை செய்யும் உத்தேச தனியார் துறை ஓய்வு வயது மசோதா இவ்வாண்டு சட்டமாகக் கூடிய சாத்தியம் இல்லை என்று மனித வள அமைச்சர் எஸ் சுப்ரமணியம் கூறுகிறார். அதன் நகல் மசோதாவை சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் இன்னும் பரிசீலிக்க…

பக்காத்தான்: புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் ஏஜி,முன்னள் ஐஜிபி மீது விசாரணை

அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மூசா ஹசான் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் என்று டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்துள்ளார். முன்னாள் வணிகவியல் குற்றப்புலனாய்வுத்…

அன்வாரை இலக்காகக் கொண்ட ஆபாச வீடியோ, செய்திகள் எம்பி-க்கு அனுப்பப்பட்டுள்ளன

செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங், தமது கைத் தொலைபேசியில் கிடைத்துள்ள பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமை நோக்கமாகக் கொண்ட ஆபாச வீடியோ, செய்திகள் தொடர்பில் எம்சிஎம்சி என்ற மலேசிய பல்லூடக, தொடர்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளார். Anuwar pembohong (அன்வார் பொய்யர்),  Anwar tidak…

ஹிண்ட்ராப், விழித்துக் கொள், பிரதமரை நம்பவே கூடாது

"பகல் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை தர்பூசணிகளை உடைத்தாலும் உங்கள் மாடுகள் வீடு திரும்பப் போவதில்லை." ஹிண்ட்ராப்: நஜிப் இந்தியர்களுடைய நம்பிக்கையை சிதறடித்து விட்டார் குவிக்னோபாண்ட்: இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப் கடைப்பிடிக்கும் இனவாத அணுகு முறையை நான் எப்போதும் அங்கீகரித்தது இல்லை.…

பக்காத்தான் செராமாவில் ஏளனம் செய்து கொண்டிருந்த ஒருவர் பிடிபட்டார்

கோலா சிலாங்கூரில் நேற்றிரவு நடைபெற்ற பக்காத்தான் ராக்யாட் செராமா ஒன்றில் ஏளனம் செய்துகொண்டிருந்த ஒருவரை பங்கேற்பாளர்கள் பிடித்து வைத்தனர். அவர் தாக்கப்படுவதை தடுப்பதற்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாஸ் கட்சி அமைத்துள்ள அமால் பிரிவினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். செராமா நிகழ்ந்த கோலா சிலாங்கூர் அரங்கத்துக்கு வெளியில் 20 இளைஞர்கள்…

பெர்சே, 3.0 பேரணி மீது அடுத்த மாதம் முடிவு செய்யும்

சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கான மூன்றாவது பேரணியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை பெர்சே 2.0 அமைப்பு தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மறுத்துள்ளார். தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி), தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய தனது பணிகளை நிறைவு செய்த பின்னரே மூன்றாவது பேரணி குறித்து முடிவு…