தமிழ்ப்பள்ளி நிலத்தை திருப்பிக் கொடுங்கள் என மஇகா-விடம் பவர் கோரிக்கை

சிலாங்கூர் பண்டார் உத்தாமாவில் உள்ள தமிழ் தொடக்கப் பள்ளி ஒன்றுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்குமாறு மஇகாவை கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை தமிழர் உரிமைப் போராட்ட அரசு சாரா அமைப்பு ஒன்று இன்று அந்தக் கட்சியிடம் வழங்கியுள்ளது. "நமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக அந்த மூன்று…

ராபிஸியும் சுராய்டாவும் ஷாரிஸாட் அப்துல் ஜலில் மீது எதிர் வழக்குப்…

பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலும் அந்தக் கட்சியின் மகளிர் தலைவி சுராய்டா கமாருதினும் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலுக்கு மீது இன்று காலை எதிர் வழக்கைச் சமர்பித்துள்ளனர். என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் தொடர்பில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் அதிகார அத்துமீறல்கள் திறந்த நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்படுவதை…

“நஜிப் புதல்வி திருமண நிச்சயதார்த்த செலவுகளுக்கு பிரதமர் அலுவலகம் பணம்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதல்வியின் திருமண நிச்சயதார்த்த விருந்து செலவுகளுக்கான கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியதற்கான ஆதாரத்தை இன்று பிகேஆர் வெளியிட்டது. அந்த ஸ்ரீ பெர்டானா நிகழ்வு விருந்துக்கான உணவை வழங்கிய ஷங்ரிலா ஹோட்டலின் விருந்து நிகழ்வு அளிப்பாணையை காட்டிய பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் அந்த…

சிலாங்கூர் எம்பி:நாட்டின் ஜிடிபி-க்கு அதிகம் பங்களிப்பது நாங்களே

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் கிட்டதட்ட கால்பகுதி சிலாங்கூரின் பங்களிப்பாகும். நேற்றிரவு மலேசிய வெளிநாட்டுச் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் இதனைத் தெரிவித்தார். அது, புள்ளிவிபரத் துறையும் தலைமைக் கணக்காய்வாளரும் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் என்று அறிவித்த அவர், 2008-இல்,…

ஆசிரியர்களின் அரசியல்சார்பைப் பதிவுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில்லை

கல்வி அமைச்சு, ஆசிரியர்களின் அரசியல்சார்புப் பற்றித் தகவல் சேகரிக்குமாறு மாநில கல்வித் துறைகளுக்கு உத்தரவு பிறப்பித்ததில்லை என்கிறார் கல்வி துணை அமைச்சர் புவாட் ஸர்காஷி. தாவாவ் கல்வித் துறை அதற்கான கடிதத்தை வெளியிட்டிருப்பது பற்றி வினவியதற்கு, அப்படி ஒரு கடிதத்தைத் தாம் பார்த்ததில்லை என்றும் தமக்குத் தெரிய அப்படி…

காலணியை விட்டெறிந்த இமாமுக்கு சிறை “மித மிஞ்சிய” தண்டனையாகும்

மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை நோக்கிக் காலணியை விட்டெறிந்த இமாம் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என்று முடிவுசெய்து கூட்டரசு நீதிமன்றம் அவருக்கு ஒராண்டு சிறைத் தண்டனை என்று அளித்துள்ள தீர்ப்பு மிதமிஞ்சியதும் பொருத்தமற்றதுமாகும் என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் சாடியுள்ளார். ஹொஸ்லான் ஹுசேனைத் தற்காத்துப் பேசிய சுரேந்திரன்…

எதிர்வாதம் புரியுமாறு முன்னாள் மசீச தலைவருக்கு ஆணை

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ( PKFZ )மீது அரசாங்கத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கள் மீது எதிர்வாதம் புரியுமாறு முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியாங் சிக்-கிற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 68 வயதான முன்னாள் மசீச தலைவருக்கு எதிராக வழக்கு இருப்பதை அரசு தரப்பு வெற்றிகரமாக…