சேவியர்: சட்ட ஒழுங்கை மீறும் அரசு, மக்களை குறைசொல்லக்கூடாது

இந்நாட்டு சட்ட ஒழுங்கைப்பற்றி இங்கிலாந்தில் பிரதமர் உரை நிகழ்த்தியுள்ளார். ஆனால், அவரும், அவர் கட்சிக்கார்களும், அவரின் அரசாங்கமும் சட்ட ஒழுங்கை சரிவரக் கடைப்பிடிக்கிறதா என்று எண்ணி பார்க்க வேண்டும் என்று     கேட்டுக்கொண்ட சிலாங்கூர்  மாநில ஆட்சிக்குழுறுப்பினர்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பெர்சே தலைவர் அம்பிகா வீட்டின் முன் பெர்கர் கடை நடத்துவதும், துணை…

பத்திரிக்கைப் படப்பிடிப்பாளரைத் தாக்கியதாக இரண்டு போலீஸ்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த போது குவாங் மிங் டெய்லி என்ற சீன மொழி நாளேட்டின் படிப்பிடிப்பாளரைத் தாக்கியதாக இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. முகமட் கைருல் அஸ்ரி முகமட் சோப்ரி, ஷாருல் நிஸா…

கைரி-க்கு முன்னால் ‘பின்புறத்தை காட்டும் உடற்பயிற்சியை’ செய்யப் போவதாக முன்னாள்…

தனியார் வீடு ஒன்றுக்கு முன்னாள் 'பின்புறத்தை காட்டும் உடற்பயிற்சியை' மேற்கொண்ட முன்னாள் இராணுவ வீரர்கள் குழுவை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் கண்டித்துள்ளதைத் தொடர்ந்து அவரது வீட்டில் தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படலாம். தனியார் வீடு ஒன்றுக்கு முன்னாள் மலேசிய ஆயுதப் படைகளின் முன்னாள் வீரர்கள் சங்கம்…

எல்லாக் கட்சிகளும் கலந்துகொள்ளும் பொது விவாதங்கள் நடத்த இசி ஆலோசனை

எல்லாக் கட்சிகள் பற்றிய செய்திகளும் ஊடகங்களில் நியாயமான அளவில் இடம்பெறுவதை உறுதிப்படுத்த பொதுவிவாதங்களை ஏற்பாடு செய்து அவற்றில் போட்டியிடும் கட்சித் தலைவர்களைப் பங்கேற்க வைக்கலாமா என்று தேர்தல் ஆணையம்(இசி) ஆலோசிக்கிறது. “மற்ற நாடுகளில் நடப்பதுபோல் தேர்தலில் போட்டியிடும் கட்சித் தலைவர்களுக்கிடையில் பொதுவிவாதங்களுக்கு இசி ஏற்பாடு செய்யக்கூடும்.” நேற்றிரவு  கோலாலம்பூரில்…

முன்னாள் இராணுவ வீரர்கள்: பின்புறத்தைக் காட்டிய ‘உடற்பயிற்சி’ பெர்சே 4.0ஐ…

பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால்  பின்புறத்தைக் காட்டி 'உடற்பயிற்சி' செய்த முன்னாள் இராணுவ வீரர்கள் மலேசியர்கள் தங்களை குறை கூறாமல் நன்றி சொல்ல வேண்டும் எனக் கூறுகின்றனர். அம்பிகா வீட்டுக்கு முன்னாள் தங்களது பின்புறத்தை ஆட்டிக் காட்டியது பெர்சே இன்னொரு பேரணியை நடத்துவதிலிருந்து தடுத்து…

விழ விழ எழுவோம்… விழ விழ எழுவோம்… ஒன்று விழ…

உலக முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் படுகொலை செய்தது. இலங்கை இராணுவத் தாக்குதலில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிகேட்டும் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரவும் உலகம் முழுமையும் உள்ள…

ஆஸ்ட்ரோவில் செய்திகள் 5-நிமிடம் தாமதித்தே ஒளியேறுகின்றன

மலேசியாவில் நாம் பார்க்கும் பன்னாட்டுச் செய்திகளும் உலகின் மற்ற பகுதிகளில் பார்க்கப்படும் செய்திகளும் ஒரே மாதிரியானவை அல்ல என்றுதான் தோன்றுகிறது. இங்கு பார்க்கப்படும் பிபிசி, சின்பிசி, ஆஸ்திரேலிய ஒளிபரப்புக்கழகம், அல் ஜசீரா உள்பட அனைத்துலக ஒளிபரப்பு நிறுவனங்களின் செய்திகள் நேரடியாக ஒளிபரப்பப்படாமல் முதலில் பதிவுசெய்யப்பட்டு 5-நிமிடம் தாமதித்தே ஒளிபரப்படுவதாக…

துணை ஐஜிபி காலிட் வீட்டின்முன் தோசைக் கடை: நிகழ்வு நடைபெறாது

பெர்சே 3.0 இன் இணைத் தலைவர் அம்பிகாவின் வேண்டுகோளுக்கு மதிப்பு அளித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 20 இல் மலேசிய போலீஸ் படையின் துணை ஐஜிபி காலிட் அபு பாக்காரின் வீட்டின்முன் போடவிருந்த தோசைக் கடை நிகழ்வு நடைபெறாது என்று அந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த 20 இந்திய அரசு…

அம்பிகாவின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைவதற்கு முயற்சி செய்யப்பட்டதா என சந்தேகிக்கப்படுகிறது

பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுடைய அலுவலகத்துக்குள் செல்வதற்கான நுழைவு கார்டுகள் செலுத்தப்படும் கட்டுப்பாட்டு பெட்டி சிதைக்கப்பட்டுள்ளது. அதனால் டமன்சாராவில் உள்ள அம்பிகாவின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்னும் சந்தேகம் தோன்றியுள்ளது. நுழை வாயிலுக்குள் செல்வதைக் கட்டுப்படுத்தும் அந்தப் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது இன்று காலை எட்டு…

கண்ணுக்கு கண் என்றால் மலேசியர்கள் இறுதியில் குருடர்களாகி விடுவர்

"ஒருவருடைய குடும்பத்தையும் அதன் தனிமையையும் நாம் மதிக்க வேண்டும். நாட்டுக்கு நன்மையானதையே நாம் கோருகிறோம். ஆகவே உயர்ந்த தார்மீகப் பண்புகளுடன் நடந்து கொள்வோம்." துணை ஐஜிபி வீட்டுக்குமுன் இலவச தோசை பீரங்கி: நாம் தேர்தல் சீர்திருத்தம் பற்றிக் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த தரப்பின் நிலைக்கு நாம் தாழ்ந்து…

செனபோன்: பெர்சே 3.0 தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டால் நான் எதிர்…

ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் இருந்ததின் மூலம் தாம் மலேசிய சட்டங்களை மீறியுள்ளதாக கூறப்படுவது மீது அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஆஸ்திரேலிய சுயேச்சை செனட்டர் நிக் செனபோன் தயாராக இருக்கிறார். 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்த…

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு வாக்குரிமை கிடைக்கலாம்

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு வகை செய்யும் பொருட்டு இசி என்ற தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தின் வரும் ஜுன் மாதக் கூட்டத்தில் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய எண்ணியுள்ளது. "எங்கள் இலக்கு ஜுன் கூட்டத் தொடர்," இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார்,…

மிரட்டப்படும் சம்பவங்கள், இனவாத அடிப்படையைக் கொண்டவை என்கிறது ஹிண்ட்ராப்

பள்ளிக்கூடங்களில் மலேசிய இந்திய மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் பல்வேறு மிரட்டல் சம்பவங்களை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு மிரட்டுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது. அந்த சமூகத்தைச் சார்ந்த மாணவர்களை நோக்கமாகக் கொண்டு இரண்டு வகையான அத்துமீறல்கள்…

பிகேஆர்-லிருந்து விலகுவதற்குத் தாம் 10 மில்லியன் ரிங்கிட் கோரியதாகக் கூறப்படுவதை…

2008ம் ஆண்டு பிற்பகுதியில் பிகேஆர் கட்சியிலிருந்து விலகுவதற்குத் தாம் டாக்டர் முகமட் கிர் தோயோவிடம் 10 மில்லியன் ரிங்கிட் கோரியதாக கூறப்படுவதை காப்பார் எம்பி எஸ் மாணிக்கவாசகம் மறுத்துள்ளார். வலைப்பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளித்த மாணிக்கவாசகம், பிகேஆரைக் கைவிடுவதற்கு அந்தத் தொகையை கொடுக்க முன்…

விடுதலை நம்பிக்கை குலைந்ததும் உண்ணாவிரதப் போராட்டம்

ஹாஜ்ஜா சிபி வீராவு பேரப் பிள்ளை ஒன்று மடியில் வைத்துக் கொண்டு தம்முடைய மூத்த பிள்ளை எழுதிய பல கடிதங்களை காட்டினார். "தாங்கள் விடுதலை செய்யப்படுவோம் என அவர்கள் மிக்க நம்பிக்கை வைத்திருந்தனர்" என கமுந்திங் தடுப்பு மய்யத்திலிருந்து சிறைச்சாலை வழங்கிய தாளில் தமது புதல்வரான முகமட் பாட்சுல்லா…

முள்ளிவாய்க்கால் பேரவலம் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!

கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை நினைவுகூரவும் போர் குற்றம் புரிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியும் உலகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வோர்…

புதிய ஊடகங்களைக் கட்டுப்படுத்த இணையப் போர் (cyber warfare) தொடங்கக்…

அரசாங்கம் அடுத்து வரும் ஆண்டுகளில் இணையத்தையும் புதிய ஊடகங்களையும் கட்டுப்படுத்த "தீவிரமான நடவடிக்கைகளில்" இறங்கும் என ஊடக சுதந்திரத்தைக் கண்காணிக்கும் CIJ என்னும் சுயேச்சை இதழிலியல் மய்யம் கூறுகிறது. "சுதந்தரமாக இயங்கு சுயேச்சை இணைய ஊடகங்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் விரிவான கட்டுப்பாட்டை பெற அரசாங்கம் முயலுவது தெளிவாகத் தெரிகிறது,"…

ஆர்ப்பாட்டம் செய்ய உரிமை உண்டு ஆனால் மிரட்டுவதற்கு உரிமை இல்லை

"நாம் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த இடத்தில்தான் நாம் அக்கறையுள்ள குடிமக்களாக இருப்பதை நிறுத்திக் கொண்டு மிரட்டல்களை விடுக்கின்றோம்." உடற்பயிற்சி' செய்வதற்கு உரிமை உண்டு என்கிறார் ஒரு வழக்குரைஞர் லிம் துக் சன்: நான் பெர்சே 2.0, 3.0 ஆகியவற்றில் கலந்து கொண்டவன். என்னைப் பொறுத்த வரையில்…

துணை ஐஜிபி காலிட் வீட்டின் முன் தோசைக் கடை

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 20 இல் மலேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் காலிட் அபு பாக்காரின் வீட்டின் முன் தோசைக் கடை போடுவதற்கு 20 இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளைப் பிரதிநிதிக்கும் அங்காத்தான் வர்ஹா அமான் மலேசியா (வர்ஹாஅமான்) திட்டமிட்டுள்ளது. இந்த தோசைக் கடை காலை மணி…

அரசு சாரா அமைப்பு: அம்பிகாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ‘தீய நோக்கம்…

பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான Proham கண்டித்துள்ளது. அந்த சம்பவங்கள் "முறையற்றவை, பொருத்தமற்றவை, தீய நோக்கம் கொண்டவை" என அது வருணித்தது. கூட்டரசு அரசமைப்பில் கூறியுள்ளவாறு அமைதியாகக் கூடுவதற்கு குடிமக்களுக்கு உரிமை இருந்தாலும் அவ்விரு 'அச்சுறுத்தல்…

முன்னாள் ஒட்டுநர்: நடிகை 1 மில்லியன் ரிங்கிட்டை வங்கியில் போட்டதை…

கிராமப்புபுற மேம்பாட்டு அமைச்சர் ஷாபியி அப்டாலிடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் 1 மில்லியன் ரிங்கிட்டை நடிகை ஸாஹிடா முகமட் ராபிக்   வங்கியில் செலுத்தியைத் தான் பார்த்ததாக அவருடைய முன்னாள் கார் ஓட்டுநர் ஒருவர் கூறிக் கொண்டுள்ளார். ஸாஹிடா இவ்வளவு பெரிய தொகையை ஒரே சமயத்தில் போட்டதை அப்போது தான் பார்த்ததாக…

அடுத்து இரு முனைகளில் பெர்சே இயக்கம்

தேர்தல் முறையில் காணப்படுகின்ற 'கவலை அளிக்கும்' நிலையைச் சமாளிப்பதற்கு தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 'வாக்களிப்பு, கண்காணிப்பு' என்னும் இரு முனை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. "தேர்தல் மோசடிகளை முறியடிக்கும் பொருட்டு வாக்களிக்க முடிந்த அனைவரும் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்கச் செல்ல வேண்டும்," என பெர்சே கூட்டுத் தலைவர்…

இந்தியத் தூதரகம் மொண்ட் கியாராவுக்கு இடம் மாறுகிறது

கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், ஜாலான் தாமான் டூத்தாவில் உள்ள தனது இப்போதைய இடத்திருந்து வரும் திங்கட்கிழமை தொடக்கம் 28வது மாடி, மெனாரா 1, மொண்ட் கியாரா, எண் 1, ஜாலான் மொண்ட் கியாராவுக்கு இடம் பெயர்கிறது. எனினும் அந்தத் தூதரகத்தின் கான்சுலர் ( consular ) பிரிவு…