நஜிப்: எ, பி, சி கட்சிகளை விட அம்னோ அதிக…

2011ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றிய அதன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், நாட்டு வரலாற்றிலும் அம்னோ வரலாற்றிலும் பல முக்கியமான அம்சங்களை எடுத்துக் காட்டியதுடன் எதிர்க் கட்சிகள் ஜனநாயாக ரீதியில் செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அம்னோ தனது தலைவர்களை நேரடியாகத் தேர்வு செய்வதற்கு பெரும்…

பக்காத்தான் வெளிநடப்புச் செய்தது சரியா?

உங்கள் கருத்து: “ஒரு தரப்பினர், இறுதிவரை இருந்து எதிர்த்துப் போராடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், இன்னொரு தரப்பினர் வெளிநடப்புத்தான் சரி, அதன்வழி பேரணி மசோதாவுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்காமல் மறுக்கப்பட்டிருகிறது என்று நினைக்கிறார்கள்.”     பக்காத்தான் ஏமாற்றி விட்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் சூசாகேஸ்: இங்கு…

டிஎபி இவ்வாண்டு அம்னோவுக்கான “சுவையூட்டி”

"அம்னோ அதிகாரத்தை இழந்தால் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பர் எனத் துணைப் பிரதமர் சொல்வது மிக மிக பொறுப்பற்றதாகும். அது அப்பட்டமான பொய்." முஹைடின்: 13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்களுக்கு மிக முக்கியமான தேர்தல் பார்வையாளன்: அம்னோ பொதுப் பேரவையில் முஹைடின் யாசின் ஆற்றிய உரையில் சில பகுதிகள்: 13வது…

பிகேஆர்: என்எஃப்சி புத்ரா ஜெயாவில் நிலம் வாங்கியது

தேசிய ஃபீட்லோட் கர்ப்பரேசன்(என்எப்சி), அரசாங்கம் கொடுத்த ரிம250மில்லியன் கடனைக்கொண்டு ஆடம்பர கொண்டோ வாங்கியதை அம்பலப்படுத்திய பிகேஆர், இன்று இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவலையும் வெளியிட்டது. அந்தக் கடனில் ஒரு பகுதி  நிலம், ஆடம்பர கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றுக்கும் செலவிடப்பட்டிருக்கிறது. என்எப்சியின் நிதி ஆவணங்கள், அதன் துணை நிறுவனமான…

கைரி: உளவுத்துறை அறிக்கை எல்லாம் தேர்தலில் வேட்பாளராக உதவாது

அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்,உறுப்பினர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அரசாங்க அமைப்புகளின் சாதகமான அறிக்கைகளைக் காண்பிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று   கோலாலம்பூரில், புத்ரா உலக வாணிக மையத்தில், அம்னோ இளைஞர் பகுதிக் கூட்டத்தை முடித்து வைத்து உரையாற்றிய  கைரி, தம்மை அணுகிய சிலர் அவர்களுக்குச் சாதகமான…

ஏர் ஏசியாவின் அனைத்துலகப் பயணங்களுக்கான பயணிகள் சேவைக் கட்டணம் உயருகிறது

அதிகரிக்கப்பட்ட விமான நிலைய வரி எனப் பொதுவாக அழைக்கப்படும் பயணிகள் சேவைக் கட்டணம், நாளை டிசம்பர் முதல் தேதி தொடக்கம் தனது அனைத்து அனைத்துலக விமானப் பயணங்களுக்கும் அமலுக்கு வருவதாக ஏர் ஏசியா பெர்ஹாட் அறிவித்துள்ளது. லங்காவி, கூச்சிங், பினாங்கு அனைத்துலக விமான நிலையங்களிலிருந்து புறப்படும் எல்லாப் பயணங்களுக்கும்…

புவா: “குறைந்த கட்டணம்” என்றால் என்ன என்பது எம்ஏஎச்பி புரிகிறதா?

'குறைந்த கட்டணம்' என்னும் கோட்பாட்டை எம்ஏஎச்பி என்னும் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் புரிந்து கொண்டுள்ளதா என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேள்வி எழுப்பியுள்ளார். நடப்பு குறைந்த கட்டண விமான முனையத்துக்கு பதிலாகக் கட்டப்படும் கேஎல்ஐஏ2-ன் கட்டுமானச் செலவுகள் இரண்டு பில்லியன் ரிங்கிட்டிலிருந்து இரண்டு மடங்கு…

பொதுக் கூட்ட மசோதா பிரதமரது தோற்றத்துக்கு “இன்னொரு களங்கம்”

அமைதியான பொதுக் கூட்ட மசோதா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தோற்றத்தை களங்கப்படுத்தியுள்ளதாக பல முக்கியமான பிஎன் பிரமுகர்கள் இடம் பெற்றுள்ள அமானா என்கிற நெருக்குதல் அமைப்பு கூறுகிறது. "உருமாற்றத்துக்கான பிரதமர் என்னும் நஜிப்பின் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள இன்னொரு தவறைக் காணும் போது வருத்தமாக இருக்கிறது," என…

அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் கூறிய கருத்தைக் கத்தோலிக்க ஆயர்…

அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான், ஒர் எதிர்க்கட்சியை "கிறிஸ்துவ மயத்துக்கான ஏஜண்டுகள்" என கூறியுள்ள குற்றச்சாட்டு "அச்சத்தை அதிகரிக்கும் நோக்கத்தை" கொண்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார். "அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ளும் பேராளர்கள் உணர்வுகளைத் தூண்டும்…

அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ அமைக்க தேர்தல் குழு…

சபாவில் அந்நியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டு வாக்களிப்பதற்கான உரிமை கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை விசாரிக்க ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி என்னும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. பிஎஸ்சி சமர்பித்துள்ள இடைக்கால அறிக்கையில் அந்தத் தகவல் காணப்படுகிறது. கடந்த வாரம்…

வெளிநாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் அனைவருமே தலத்தில் இல்லா வாக்காளர்கள் என்ற முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி) இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் அதன் பூர்வாங்க அறிக்கையில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது.  இப்போதைக்கு,…

“பக்காத்தான் ஏமாற்றி விட்டது”

அமைதிப் பேரணி மசோதாமீதான விவாதத்தின்போது வெளிநடப்புச் செய்தது அம்மசோதாவுக்கு எதிர்ப்புக் காட்டும் செயல் என்று பக்காத்தான் எம்பிகள் நியாயப்படுத்துகிறார்கள் ஆனால், இன்னொரு தரப்பினர் அதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்  . Read More

முஹைடின்: மலேசியாவைக் குடியரசாக்க டிஏபி முயலுகிறது

அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின் பக்காத்தான் ராக்யாட் மீது வெளிப்படையான தாக்குதலை தொடங்கியதின் வழி அம்னோ பொதுப் பேரவை தொடங்கியுள்ளது. பக்காத்தான் செய்வது எல்லாம் மலாய் நலன்களுக்கு எதிரானவை என்று அவர் குற்றம் சாட்டினார். அவர் நேற்றிரவு அம்னோ மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளின் பேரவைகளைக் கூட்டாகத்…

முஹைடின்: 13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்களுக்கு மிக முக்கியமான தேர்தல்

மலாய்க்காரர்களுடைய ஆட்சியுரிமையை நிலை நிறுத்த என்ன விலை கொடுத்தாவது புத்ராஜெயாவைத் தற்காக்குமாறு அம்னோ, தனது மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு வேண்டுகோள் விடுத்த அம்னோ துணைத் தலைவர் முஹடின் யாசின், அம்னோ இப்போது கடுமையான கால கட்டத்தில் இருப்பதாகச் சொன்னார்.…

பிஎஸ்சி பூர்வாங்க அறிக்கை வியாழனன்று தாக்கல் செய்யப்படும்

தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் (பிஎஸ்சி) பூர்வாங்க அறிக்கை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் கருத்தைச் செவிமடுக்கும் ஆறு நிகழ்வுகளில் இரண்டு முடிந்துள்ளது என்றும் அவற்றில் கிடைத்த பின்னூட்டங்கள் திருப்தி அளிப்பதாகவும் பிஎஸ்சி தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஒங்கிலி கூறினார். “100-க்கு மேற்பட்ட பரிந்துரைகள்…

“சரியான நேரத்தில்” தெரு ஆர்ப்பாட்ட தடை அகற்றப்படும் என்று எதிர்பார்க்கிறார்…

‘அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைதிப்பேரணி மீதான மசோதா தெரு ஆர்ப்பாட்டத்துக்கு ஒட்டுமொத்த தடை விதித்தாலும் இந்தத் தடைவிதிப்பு திருத்தப்படும் என்ற நம்பிக்கை  தமக்கு இன்னமும் இருப்பதாகக் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது ரெம்பாவ் எம்பியான கைரி இதனைத் தெரிவித்தார். “அதற்கு இது சரியான…

அமைதியாகக் கூடுதல் மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது

சர்ச்சைக்குரிய அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு மணி நேரம் விவாதித்த பின்னர் மக்களவை ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மசோதா தெரு ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கிறது. ஆனால் விதிமுறைகளுக்கு உட்பட்டு கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதிக்கிறது. குரல் வாக்களிப்பு மூலம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது…

கோலாலம்பூரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்

இதுவரை காலமும் இலங்கையில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள், செம்பருத்தி மற்றும் உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.11.2011) அன்று இரவு 7 மணிக்கு கோலாலம்பூரில் உணர்வுபூர்வமாக…

“பினாங்கு சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்களுக்கு பண உதவி”

பினாங்கில் உள்ள சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்கள் தொடக்கத்தில் மாதம் ஒன்றுக்கு 60 ரிங்கிட் நிதி உதவி கோரினார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு ஒரு நிபந்தனையுடன் 100 ரிங்கிட் வழங்க மாநில அரசாங்கம் முன் வந்துள்ளது. மாநில அரசாங்கம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 100 ரிங்கிட் வழங்க முன்…

“அரசாங்கம் அந்த பொதுக் கூட்ட மசோதாவை அவசரம் அவசரமாக நிறைவேற்ற…

சர்ச்சைக்குரிய அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தன்னிடம் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டு அவசரம் அவசரமாக நிறைவேற்றிக் கொள்ள முயலுவதாகத் தோன்றுகிறது என எதிர்த்தரப்பு தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார். அவர் அந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அரசாங்கம் வெகு வேகமாக அதனை…

அம்னோ உறுப்பினர்களைக் கொண்டு மட்டும் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த முடியாது

அம்னோ, 3.4 மில்லியன் பேரைக் கட்சி உறுப்பினர்களாக்கி இருப்பதை வைத்து பொதுத் தேர்தலில் வெற்றி உறுதி என்று அதிகப்படி நம்பிக்கை கொண்டுவிடக்கூடாது. தேர்தல்  வெற்றிக்கு உறுப்பினர்தொகை பெரிதாக இருப்பது மட்டும் போதாது  என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மட் மஸ்லான் கூறினார். “(ஏனென்றால்) 12மில்லியன் வாக்காளரில் நான்கில்…

பக்காத்தான் வெளிநடப்பு; மசோதாமீதான வாக்களிப்பில் கலந்துகொள்ளாது

அமைதிப் பேரணி சட்டமுன்வரைவு இன்று விவாதத்துக்கு வந்தபோது பக்காத்தன் ரக்யாட் எம்பிகள் மக்களவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அவர்கள் அதன்மீதான வாக்களிப்பிலும் கலந்துகொள்ள மாட்டார்கள். ஒரு முக்கியமான சட்டமுன்வரைவு மீதான விவாதத்தின்போது அவைத் தலைவர் -கட்சிக்கு ஒருவராக- மூன்று பக்காத்தான் ரக்யாட் எம்பிகளுக்கு மட்டுமே பேசுவதற்கு அனுமதி அளித்ததை அவர்களால்…

உரிமைக்கான ஊர்வலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

மலேசிய வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், இன்றிரவு மக்களவையில் வாக்களிப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அமைதிப் பேரணி மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றார்கள். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட அவ்வூர்வலம் பகல் 12.19க்குத் தொடங்கியது. வழக்குரைஞர்கள் ஊர்வலம் செல்லும் வழியில் கருப்பு உடை அணிந்த…