பிகேஆர்: “நஜிப்பை வீழ்த்துவதற்கு ஆயுதங்கள் தயார் நிலையில்’ இருப்பதைப் புத்தகம்…

அம்னோ விவகாரங்களுடைய பரிதாபகரமான நிலைக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது பழி போடப்பட்டாலும் அந்த மலாய் தேசியவாதக் கட்சியின் சிரமங்களுக்கு அதன் கூட்டுத் தோல்வியே காரணம் என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறுகிறார். Kesilapan-kesilapan Najib (நஜிப்பின் தவறுகள்) என்ற தலைப்பைக் கொண்ட அந்தப்…

மகாதிர்: வலைப்பதிவுகள் கருத்துச் சொல்ல ஒரு மாற்றுவழி

வலைப்பதிவுகள் கருத்துச் சொல்ல ஒரு மாற்றுவழி. அரசியல் தலைவர்கள் கருத்துச் சொல்ல ஒரு மாற்றுவழியாக வலைப்பதிவுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “கட்சிகளில் கருத்துகளைச் சொல்ல இடமளிக்காதபோது நம் கருத்துகளை வெளியிட வலைப்பதிவுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கட்சிகளில் அவர்கள் (தலைவர்கள்) சில நேரங்களில் எதையும் செவிமடுக்க…

பிரதமர் முன்னாள் எம்பிகள் சந்திப்பு: நாடாளுமன்றக் கலைப்பின் அறிகுறியா?

சீன நாளேடு ஒன்றில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பணி ஓய்வுபெற்ற பிஎன் எம்பிகளை இன்று சந்திப்பார் என்று வெளிவந்திருக்கும் செய்தி விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்காக நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற வதந்திக்கு மேலும் வலுச்சேர்ப்பதுபோல் அமைந்துள்ளது. 13-வது  பொதுத் தேர்தல் தொடர்பில் சந்தித்துப் பேச எல்லா…

அழியா மை இப்போதே வேண்டும், பக்காத்தான் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி)-இல் இடம்பெற்றுள்ள பக்காத்தான் ரக்யாட் எம்பிகள், இன்று அக்குழு நான்காவது தடவையாகக் கூடிப்பேசும்போது உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய சீரமைப்புகளை உடனே அமல்படுத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு (இசி) அழுத்தம் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.  “அழியா மை, முன்கூட்டிய வாக்களிப்பு போன்ற பரிந்துரைகளை இசி உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்…

‘கெமாஸ் கோல்ட்’ வாக்யூ மாட்டிறைச்சியைப் போன்று விலை உயர்ந்தது

மலேசியர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்கின்றனர். போதுமான விநியோகம் இல்லாததும் இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சி விலை அதிகமாக இருப்பதும் சாதாரண மனிதருக்கு பெரும் சுமையாக இருந்தது. இவ்வாறு சமூக மேம்பாட்டுக்கான ஆய்வு மய்யம் கூறுகிறது. அதனால் 2008-ம் ஆண்டு கால் நடை வளர்ப்புக்காக அரசாங்கம் என்எப்சி என்ற தேசிய விலங்குக்…

‘நானும் கடுமையாக உழைக்கிறேன்; எனக்கும் அரசாங்கத் திட்டம் தேவை

"ஷாரிஸாட் அவர்களே, உங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக நீங்கள் முடிவு எடுக்கக் கூடாது. நீங்கள் பொது மக்களுடைய பிரதிநிதி. அது போன்று நடந்து கொள்ளுங்கள்." ஷாரிஸாட்: என் குடும்பத்தை தாக்க வேண்டிய அவசியமில்லை டாக்டர் ஜேக்கப் ஜார்ஜ்: அரசாங்க நிதிகள் பயன்படுத்தப்படும் போது இயக்குநர்கள் குழு ஒன்றுக்குச் சொந்தமான ஒரு…

ஸ்ரீஅண்டலாஸ் தொகுதி மக்களின் 7 கோரிக்கைகள், சேவியர்

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும்  அவரின் அமைச்சரவை சகாக்களும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற தொகுதியில் இவ்வாண்டு தீபாவளியை கொண்டாட வருவதை வருக வருக என்று வரவேற்கிறேன் என்று கூறுகிறார் அச்சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான சேவியர் ஜெயக்குமார். "கடந்த 42 மாதங்களாக என்னுடன்…

அரசு ஊழியர்கள் ஆட்குறைப்புச் செய்யப்படமாட்டார்கள் என பக்காத்தான் வாக்குறுதி

பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் அரசாங்க ஊழியர் யாரும் ஆட்குறைப்புச் செய்யப்பட மாட்டார்கள் என எதிர்த்தரப்புக் கூட்டணி இன்று விளக்கமளித்தது. அதற்குப் பதில் அரசு சேவையின் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என அது கூறியது. 1.2 மில்லியன் ஊழியர்களைக் கொண்ட அரசு சேவை சீரமைப்புச் செய்யப்படும் என்ற…

நான்கு இளம் பிள்ளைகளை போலீஸ் “கைது செய்து அடித்தது”

மலாய் இளைஞர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டதாக கூறப்படுவதின் தொடர்பில் ஸ்தாபாக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யச் சென்ற  14 வயதான நான்கு இந்திய இளம் பிள்ளைகள் கைது செய்யப்பட்டு அடிக்கப்பட்டதுடன் குற்றங்களை ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். தாக்குதலுக்கு இலக்கான அந்த நால்வருக்கு உதவி செய்யச் சென்ற அவர்களுடைய 21…

மலாய் அரசு சாரா அமைப்பு: சட்டவிரோதப் பேரணிகளுக்கு வெள்ளிக்கிழமையைப் பயன்படுத்தக்…

வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பின்னர் "முறையற்ற" தெரு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவது குறித்து பினாங்கைத் தளமாகக் கொண்டுள்ள மலாய் அரசு சாரா அமைப்பு ஒன்று ஆத்திரமடைந்துள்ளது. ஏனெனில் வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்குப் புனிதமான நாள் ஆகும். அத்தகைய பேரணிகளுக்கு "ஏற்பாடு செய்கின்றவர்கள் அல்லது நிதி உதவி செய்கின்றவர்கள்" மீது தாம் மிகவும்…

அடக்கவிலை வீடுகள் கட்டுக:பினாங்கு அரசுக்கு நெருக்குதல்

பினாங்கு அரசு குறைந்த-நடுத்தர-விலை வீடுகளைக் கட்டிக்கொடுத்ததாக பெருமையடித்துகொள்வது தவறு என்று கண்டிக்கப்பட்டுள்ளது.அந்த வீடுகளைக் கட்ட 2008-க்கு முன்னதாக உண்மையில் திட்டமிட்டது பாரிசான் நேசனல்தான். ஏழைகளுக்கு அடக்க விலையில் வீடுகள் கட்டித்தந்ததில்லை என்று குறைகூறப்பட்டதை பினாங்கு அரசு மறுத்திருப்பது குறித்து கருத்துரைத்த பினாங்கு கெராக்கான் வீடமைப்புப் பிரிவுத் தலைவர் குவா…

சிலாங்கூர் அரசு நிறுவனங்களில் குறைந்தபட்ச சம்பளம் ரிம1,500

குறைந்தபட்ச சம்பளக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் சிலாங்கூர் அரசு மத்திய அரசை முந்திக்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டிலிருந்து மாநில அரசு நிறுவனங்களின் பணியாளர்கள் குறைந்தபட்ச சம்பளமாக ரிம1,500 பெறுவார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிய மந்திரி புசார் அப்துல் காலிட்…

பிபிஎஸ்எம்ஐ-யை அடுத்த ஆண்டு முதலாமாண்டு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தக் கோரிக்கை

அடுத்த ஆண்டு இரண்டாம் வகுப்பு மாணவர்கள் அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் கற்கும் விருப்பத்தேர்வு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருப்பத்தேர்வு முதலாமாண்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என மலேசியக் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக் குழு(பேஜ்)வும் ஜாரிங்கான் மலாயு மலேசியா(ஜேஎம்எம்)வும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் முடிவை வரவேற்ற பேஜ் தலைவர் நூர் அஸிமா அப்துல்…

புதிய விமான நிறுவனம் தொடங்குகிறார் ஏர் ஏசியா பெர்னாண்டஸ்

மலேசியாவின் ஏர் ஏசியா பட்ஜெட் விமான நிறுவனத் தலைவர் டோனி பெர்னாண்டஸ், புதிய விமான நிறுவனமொன்றைத் தொடங்கவுள்ளார். இதனைத் தெரிவித்த த சன் செய்தித்தாள், அந்த வட்டார விமான நிறுவனம் விரைவில் தொடக்கம் காண விருக்கும் குவாண்டாஸின் ரெட்குயு நிறுவனத்துக்குப் போட்டியாக விளங்கும் எனக் கூறியுள்ளது. முழுச் சேவைகளைக்…

அன்வார்: பக்காத்தான் கொள்கையில் ஹுடுட்டுக்கு இடமில்லை

கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதில் பாஸ் பிடிவாதமாக இருந்தாலும் பக்காத்தான் ராக்யாட் பொதுக் கொள்கையிலும் இணக்கத்திலும் சர்ச்சைக்குரிய அந்தச் சட்டங்களுக்கு இடம் இல்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சீன சமூகத்திற்கு உறுதி அளித்துள்ளார். அவர் நேற்றிரவு சுபாங் ஜெயாவில் 65க்கும் மேற்பட்ட சீனர் சங்கங்கள்,…

“அன்வார் பிரதமரானால் அவர், பாஸ் கட்சியின் கைப்பாவையாக இருப்பார்”

பிகேஆர் மூத்த தலைவர் பக்காத்தான் ராக்யாட்டுக்குள் பாஸ் கட்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் அந்த இஸ்லாமியக் கட்சிக்குக் குறிப்பாக ஹுடுட் சட்ட விஷயத்தில் அடி பணிந்து விடுவார் என மசீச-வின் லாபிஸ் எம்பி சுவா தீ யோங் கூறிக் கொண்டுள்ளார். "அன்வார் இப்ராஹிம் பிரதமராக வந்தால் கூட உண்மையான…

800,000 ரிங்கிட் எம்ஏசிசி விசாரிப்பதற்கு பெரிய விஷயம்!!!

"எதிர்க்கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் சில ஆயிரம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி மட்டுமே  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கவலைப்படும். அவற்றை ஆய்வு செய்ய அது முழுமூச்சாக உடனடியாக நடவடிக்கையில் இறங்கும்." அமைச்சர் குடும்பத்துக்கு விடுமுறை சுற்றுலாவுக்கு என்எப்சி 800,000 ரிங்கிட்டை…

ரவாங்கில் தீபாவளி உபசரிப்பு: எதிர்காலம் மக்கள் கையில்

நேற்று சிலாங்கூர் மாநில அரசு ரவாங் நகரில் ஒரு திறந்தவெளி தீபாவளி உபசரிப்பை பெரும் அளவிலான ஏற்பாட்டுடன் நடத்தியது. மூவாயிரத்திற்கும் கூடுதலான மக்கள் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டனர். மலாய் மற்றும் இந்திய மக்களோடு அதிகமான சீனர்களும் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டு அங்கு நடத்தப்பட்ட பல்வேறு கலை…

பிகேஆர்: என்எப்சி விவகாரத்தில் பிரதமரும் விவசாய அமைச்சரும் பொய் உரைத்தனர்

தேசிய விலங்கு தீவன ஊட்டல் நிறுவனத்திற்கு (என்எப்சி) வழங்கப்பட்ட கடன் குறித்து பிரதமர் நஜிப்பும் விவசாய-அடிப்படை தொழில்கள் சார்ந்த அமைச்சர் நோ ஒமாரும் நாடாளுமன்றதிடம் பொய் கூறினர் என்று பிகேஆர் கூறிக்கொண்டது. "நஜிப்பும் விவசாய அமைச்சரும் (நோ) நாடாளுமன்றத்திடம் பொய் உரைத்தனர். பிரதமரின் எழுத்து மூலமான பதிலில் ரிம181…

நிதி ஒதுக்கீடு: ஜெயக்குமார் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரினார்

தமது நாடாளுமன்ற தொகுதிக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்து பிஎஸ்எம் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான அனுமதி கோரும் மனுவை அவர் இன்று பெடரல் நீதிமன்ற பதிவகத்தில் பதிவு செய்தார். ஜெயக்குமாரின்…

ரசாலி மீது தடை ஆணை ஏதுமில்லை என்கிறார் முஹைடின்

முன்னாள் அம்னோ உதவித் தலைவரும் குவா மூசாங் எம்பி-யுமான தெங்கு ரசாலிக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின் மறுத்துள்ளார். "மாநில, தொகுதி நிலையில் எந்த அம்னோ தலைவர்களுக்கு எதிராகவோ அல்லது தனிநபர்களுக்கு எதிராகவோ எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை," என அவர்…

முன்னாள் பிஎன் தலைவர்கள்: எங்கள் குரலுக்கு இடமில்லை

பிஎன் என்ற பாரிசான் நேசனலின் உறுப்புக் கட்சிகளில் தங்களது குரலுக்கு ஜனநாயக ரீதியில் இடம் அளிக்கப்படுவதில்ல என பல முன்னாள் பிஎன் தலைவர்கள் கூறிக் கொண்டுள்ளனர். அதனால் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள அமானா எனப்படும் Angkatan Amanah Merdeka அமைப்பில் தாங்கள் இணைந்துள்ளதாக  அவர்கள் தெரிவித்தனர். நடப்பு அம்னோ தலைமைத்துவம்…

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள், தூதரகங்களில் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ள வேண்டும்

வாக்காளர்களாகப் பதிந்து கொள்ள தகுதி பெற்ற, வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் தாங்கள் வாழும் நாடுகளில்  உள்ள மலேசியத் தூதரகங்களில் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்வதின் மூலம் அவர்கள் வாக்களிப்பதற்கான தங்களது உரிமைக்கு உத்தரவாதம் பெற முடியும் என…