“நஜிப் ஒரே மலேசியாவுக்கு மரணச் சான்றிதழில் கையெழுத்திட்டு விடலாம்”

நேற்றிரவு ஷா அலாம் நிகழ்வு ஒன்றில் மலாய்க்காரர்களுக்கு ஆத்திரத்தை மூட்ட வேண்டாம் என மலாய்க்காரர் அல்லாதாருக்கு "பகைமைப்" போக்குடைய எச்சரிக்கையை விடுத்துள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை  பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியிருக்கிறார். நஜிப் "ஒரு பாவமும் செய்யாத" மலாய்க்காரர் அல்லாதாருக்கு விடுத்த எச்சரிக்கையை உண்மையான…

“ஞானாசிரியர்கள்” தேவைதான், கர்பால்

டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், மூத்த தலைவர்களை ஞானாசிரியர்கள் என்று குறிப்பிடுவது தகாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் முன்னேற்றத்துக்கு இப்படிப்பட்ட மூத்தவர்களும் தேவைதான் என்றாரவர். ஞானாசிரியர்கள் என்ற சொல் தப்பாக அர்த்தம் செய்துகொள்ளப்படலாம் என்று கூறிய கர்பால், கட்சிக்கு அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவோர்தான் தேவையில்லை…

ராமசாமி: டிஏபி-க்கு ஞானாசிரியர்கள் தேவையில்லை

டிஏபியில் தேர்தல்களின்போது தொகுதிஒதுக்கீட்டை முடிவு செய்வது மத்திய செயலவை (சிஇசி) தான் என்பதால் "ஞானாசிரியர்கள்" தேவையில்லை என்று பினாங்கு டிஏபி துணைத்தலைவர் பி.ராமசாமி அறிவித்துள்ளார். கட்சி, 2012-இல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் தேர்தலுக்குத் தயாராகிவரும் வேளையில் இட ஒதுக்கீட்டை எந்தவொரு தனிமனிதரும் முடிவு செய்யக்கூடாது.  டிஏபி தலைவர்கள் பலரும்…

பாஸ்: அரசாங்கச் சேவையில் “எதிர்ப்பு” உருவாகும்

அரசாங்கச் சேவையில் உயர் நிலைப் பதவிகளுக்கு "வெளி நிபுணர்கள்" நியமிக்கப்படுவதை அனுமதிக்கும் முறையை அரசாங்கம் கைவிட வேண்டும் என பாஸ் கூறுகிறது. காரணம் அத்தகைய நடவடிக்கை அரசாங்க ஊழியர்களிடையே ஆத்திரத்தை மூட்டி விடும் என அது தெரிவித்தது. அரசாங்கத்தில் உள்ளவர்கள் குறிப்பாக மூத்த பதவிகளில் உள்ளவர்கள் அமைதியாக இருக்க…

“பாலாய் போலீஸ் கெரிஞ்சி” பிகேஆர் தொகுதி ஒன்றில் வாக்காளர்

லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 2,180 அஞ்சல் வாக்காளர்களில் பிரச்னைக்குரிய 90க்கும் மேற்பட்ட பெயர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அந்தத் தகவலை அந்தத் தொகுதிக்கான பிகேஆர் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் வெளியிட்டார். "தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் இல்லாத 97 வாக்காளர்களின் பெயர்களை…

கூட்டத்துக்கு ஏற்றவாறு பல்லவியை மாற்றுவது நம்பிக்கையைக் கொடுக்காது

அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மலாய்க்காரர் அல்லாதாரை மிரட்டி அவமானப்படுத்துவதில்   உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சுவதற்கு வழி வகுத்த அதே மனிதர்களே மலேசியா பல இன நாடு எனப் பிரகடனம் செய்கின்றனர். துணைப் பிரதமர்: 'வெற்றி பெற்ற பல இன நாடுகளில் மலேசியாவும் ஒன்று' பகுத்தறிவு: இனவாதத்தைத் தூண்டி…

பிரதமர் நஜிப்: பக்கத்தான் ஆட்சியில் மலாய்க்கார்களுக்கு அழிவு ஏற்படும்

மலாயக்கார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தைத் தற்காப்பதைத் தவிர வேறு வழியில்லை ஏனென்றால் மலாய்க்காரர்களின் எதிர்காலத்தையும் இஸ்லாத்தின் உன்னத்தையும் பாதுகாப்பதற்கு இது ஒன்றுதான் வழி என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறினார். "மாற்று வழியைக் காட்டுகிறவர்கள் இருக்கிறார்கள். கேட்கப்பட வேண்டிய கேள்வி இதுதான்: அவர்கள் தற்போதைய நிருவாகத்தைவிட சிறப்பாக இருக்க…

துணைப் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டிஏபி விரும்புகிறது

டிஏபி மலேசியாவை "குடியரசாக" மாற்ற விரும்புகிறது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறிக்  கொண்டிருப்பது "அப்பட்டமான பொய்" என்று கூறிய டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அதற்காக முஹைடின் மன்னிப்புக் கேட்க வேண்டும் என  கேட்டுக் கொண்டிருக்கிறார். ஷா அலாமில் நேற்றிரவு நடைபெற்ற பக்காத்தான்…

நஸ்ரி: தெரு ஆர்ப்பாட்டத் தடை வேண்டும் என்பதற்கு மே13 கலவரமே…

அமைதிப்பேரணி மசோதாவுக்கு எதிரான கடுமையான குறைகூறல்களுக்கு எதிர்வினையாற்றியுள்ள நடப்பில் சட்ட அமைச்சர், 1969 மே 13 கலகத்தையும் ஆகஸ்ட் மாத லண்டன் கலவரங்களையும் காரணம் காண்பித்து அதை நியாயப்படுத்தப் பார்க்கிறார். மசோதாவை எதிர்க்கிறீர்களா, உங்கள் எதிர்ப்பை அடுத்த பொதுத் தேர்தலில் காட்டுங்கள், பார்க்கலாம் என்றும் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட்…

போலீஸ் போக்குவரத்து, தளவாடத் துறை 13வது பொதுத் தேர்தலுக்கு தயார்

அண்மைய எதிர்காலத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் 13-வது பொதுத் தேர்தலுக்கு போலீஸ் போக்குவரத்து தளவாடத் துறை தயாராக இருக்கிறது. இவ்வாறு புக்கிட் அமான் போக்குவரத்து தளவாடத் துறையின் இயக்குநர் சுல்கிப்லி அப்துல்லா கூறுகிறார். பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தேவையான சாதனங்கள், நிதிகள் குறித்து தமது துறை தற்போது உள்துறை…

ஷாரிஸாட் விலக வேண்டும் என்கிறார் இன்னொரு அம்னோ தலைவர்

என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலில் தமது அமைச்சர் பதவியை மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் துறக்க வேண்டும் என செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சையட் அலி அல்ஹாப்ஸி கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே கினாபாத்தாங்கான் எம்பி பாங் மொக்தார்…

அமைதிப்பேரணி மசோதா தீய நோக்கம் கொண்டது- முன்னாள் போலீஸ் அதிகாரி

முன்னாள் போலீஸ் விசாரணை அதிகாரி ஒருவர்- கடந்த வாரம் மக்களவையில் இரண்டாம் வாசிப்புக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட- அமைதிப் பேரணி மசோதா தீய நோக்கம் கொண்டது என்கிறார். கோலாலம்பூர் குற்றவியல் புலனாய்வுத்துறை முன்னாள் தலைவர் மாட் சைன் இப்ராகிம், அம்மசோதா “பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி” என்றார். “நஜிப் அம்மசோதாவைக் கொண்டுவந்து…

நிக்கோல் தலைசிறந்த, வெற்றி பெற்ற விளையாட்டுச் சின்னம் எனப் பிரதமர்…

தேசிய ஸ்குவாஷ் விளையாட்டாளரான நிக்கோல் ஆன் டேவிட், நாட்டின் தலைசிறந்த வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனை என பிரதமர் புகழாரம் சூட்டியிருக்கிறார். தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக அவர், உலக ஸ்குவாஷ் விருதைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஈடு இணையில்லாதது என்றும் அவர் வருணித்தார். புத்ராஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில்…

துணைப் பிரதமர்: “வெற்றி அடைந்த பல இன நாடுகளில் மலேசியாவும்…

பல்வேறு துறைகளில் பல இன ஒத்துழைப்பை வலுப்படுத்துவதின் மூலம் நாட்டின் அமைதியையும் ஒத்துழைப்பையும் நிலை நிறுத்தும் போக்கைத் தொடர பாரிசான் நேசனல் அரசாங்கம் (பிஎன்) உறுதி பூண்டுள்ளது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். அரசியல் அதிகாரப் பகிர்வு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவையும் அந்த ஒத்துழைப்பில் அடங்கும்.…

நஜிப்பின் பேருரை, மூன்றாம் உலக மனப்போக்கின் உருவகம்

“அம்னோவின் நடத்தை பற்றி உயர்வான எண்ணம் என்றும் இருந்ததில்லை, என்றாலும் ஒரு பிரதமர் அவ்வளவு தரக்குறைவாக பேசுவதைக் கேட்டு அதிர்ந்து போனேன்.”   "மடத்தனம் மிக்க" பாஸ் பக்காத்தானிலிருந்து வெளியேறத் தயரா- சவால் விடுகிறார் நஜிப் பெயரிலி_4041: அடக் கடவுளே! என்ன, பிரதமர் ஐயா, நஜிப் அப்துல் ரசாக்?…

“அம்னோவுக்கு பக்காத்தான் பதிலடி”

பக்காத்தான் கட்டுக்குள் உள்ள மாநிலங்களை மீண்டும் கைப்பற்றப் போவதாக சூளுரைக்கப்பட்டு போர் முரசு கொட்டப்பட்ட அம்னோ பொதுப் பேரவை முடிந்த மறு நாள், எதிர்க்கட்சிகளும் பதில்  தாக்குதலை தொடங்கியுள்ளன. சிலாங்கூரைப் பக்காத்தான் தக்க வைத்துக் கொள்வதோடு அந்த மாநிலத்தில் தேர்தலில் கூடுதல் இடங்களையும் பெறும் என ஷா அலாமில்…

இந்தியர்களின் நலனைக் காக்கும் அரசாங்கம் வேண்டும் – சார்ல்ஸ்

பக்காத்தான் ராக்யாட் அளித்திருக்கும் உறுதிமொழிகள் அரசியல் தந்திரமானால் 53 ஆண்டு காலமாக தே.மு அரசாங்கம் அளித்து வரும்  உறுதி மொழியை என்னவென்று சொல்வது என கேள்வி எழுப்பினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி இந்தியர்களின் நலம் பாராமல் இருந்த ஒரே காரணத்தால்தான்…

மலாய் வாக்குகளைக் கவரும் பொருட்டு மலேசியப் பிரச்னைகள் ஒதுக்கப்பட்டு விட்டன

"கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைச் செலவுகள் கூடியிருப்பது, உலக அளவில் போட்டி அதிகரித்துள்ள வேளையில் நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றை அம்னோ பேராளர்கள் விவாதிப்பர் என நாகரீகமான ஒவ்வொரு மலாய்க்காரரும் சரியான சிந்தனை கொண்ட ஒவ்வொரு மலேசியரும் எதிர்பார்த்தனர்." அம்னோ: அளவற்ற மகிழ்ச்சியிலிருந்து கசப்பான உண்மை நிலைக்கு ஹெர்மன்கெய்ன்: அம்னோ தலைவர்கள்…

என்எப்சி திட்டத்தை ஆய்வு செய்ய அந்நிய நிபுணர்களை வழங்க சிலாங்கூர்…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் குறித்து புலனாய்வு செய்ய அந்நிய நிபுணர்களை வரவழைக்க நிதி ஒதுக்குவதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன் வந்துள்ளது. நிர்வாக அல்லது நிறுவனக் குற்றங்களை புலனாய்வு செய்வதற்கு அத்தகைய அணுகுமுறையை பல வளர்ச்சி அடைந்த நாடுகள் பின்பற்றியுள்ளதாக சிலாங்கூர் மந்திரி…

இங் யென் யென்: தோல்வி கண்ட “கார் பார்க்” திட்டத்துக்கு…

பினாங்கு கொடி மலையின் அடிவாரத்தில் 5 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட பல அடுக்கு கார் நிறுத்துமிடத் திட்டம் தோல்வி கண்டதற்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பொறுப்பேற்க வேண்டும் என சுற்றுலா அமைச்சர் டாக்டர் இங் யென் யென் கூறுகிறார். தமது ஏமாற்றத்தைத் தெரிவித்த இங்,…

புவா: KR1M பாலில் இ-கோலி கலந்துள்ளது குறித்து லியாவ் பேச…

KR1M என்ற கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளிலிருந்து சோதனைக்காகப் பெறப்பட்ட பால் மாதிரிகளில் இ-கோலி கலந்துள்ளதை சுகாதார அமைச்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியதை பற்றி பேச சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் மறுப்பதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா குற்றம் சாட்டியுள்ளார். KR1M  கடைகளிலிருந்து…

அம்னோ திருந்துவதற்கு இடமில்லாத காலத்திற்குப் பொருந்தாத கட்சி

"அதன் தலைவர்களைப் பொறுத்த வரையில் அனைத்து தேசியப் பிரச்னைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் இனம், சமயம், மலாய் ஆட்சியாளர்கள் ஆகியோரைச் சார்ந்துள்ளது." அம்னோ ஏன் டிஏபி-யைக் கண்டு அஞ்சுகிறது டிங்கி: நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் அம்னோபுத்ராக்கள் தங்களை மட்டுமே வளப்படுத்திக் கொண்டு வருவதை கிராமப்புற மலாய்க்காரர்கள் உணர…

அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ அமைக்கப்படுவதை சபா எம்பி…

சபா அடையாளக் கார்டு திட்ட ஊழல் மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் நியமிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள போதிலும் அந்த மாநிலத்தில் அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வாக்குரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பிரச்னைக்கு அது தீர்வு காணும் வழி அல்ல என்று சபா…