மலேசியாவின் குறைந்த ஊதியப் பிரச்சினைக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பலன்களை மலேசியர்கள் அனுபவிக்க முடியாமல் இருக்கும் உண்மைக்கும் 2027 வரவுசெலவுத் திட்டம் தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று தெரிவித்தார். கசானா ஆராய்ச்சி நிறுவனம் என்ற சுதந்திரமான ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வை மேற்கோள்…
பினாங்கு முதல்வர்: பதவியை நீண்டகாலத்துக்குப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டேன்
கெராக்கான் தலைவர் கோ சூ கூன் 18 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை விடாமல் பிடித்துக்கொண்டிருந்ததுபோல் தாம் இருக்கப்போவதில்லை எனப் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கூறியுள்ளார். சீன நாளேடான சைனா பிரசுக்கு சிறப்பு நேர்காணல் வழங்கிய லிம், மாநில முதலமைச்சர் ஆனதை அடுத்து அரசியல் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை…
தேர்தல் வெற்றியில் மாற்றரசுக் கட்சிக்கு அளவுமீறிய நம்பிக்கை
கெடாவுக்கு நான்கு மணி நேரம் காரோட்டிச் செல்லும் மாற்றரசுக் கட்சித் தலைவர் என்.சுரேந்திரன் அங்கு பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார். புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். அங்கிருந்து சீனச் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாற்றரசுக் கட்சி நிதிதிரட்டும் நிகழ்வு ஒன்றுக்குச் செல்கிறார்.மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என 2,500க்கும்…
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு முதல் கட்டமாக 22 நாடுகள் ஆதரவு!
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை மன்ற மாநாட்டில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு முதல் கட்டமாக இதுவரை 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநாட்டில் தமக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முழுவீச்சுடன் முன்னெடுத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், தீர்மானத்தை ஆதரிப்பதற்கு…
மன்னிப்பு வேண்டாம், மாற்றம்தான் வேண்டும்!, இராமகிருஷ்ணன்
நான்கு ஆண்டுகளுக்குப் பின், 2008 ஆம் ஆண்டுகால தவறுகளுக்காக பிரதமர் நஜிப் ரசாக் மன்னிப்பு கேட்டுவிட்டார். மக்களின் அன்றைய புறக்கணிப்பை தாம் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வதாகவும், குறைகளை நிவர்த்தி செய்வதாகவும் மலாய் மைய மாநிலமான கெடாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதமர் கூறியுள்ளத்தை செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.…
சமூக நலத் துறை: வருமானம் கூடியதால் பூருஸிஸ் உதவியை இழந்தார்
உடற்குறையுடைய குடியானவர் பூருஸிஸ் லெபியின் வருமானம் கூடியதால் அவருக்கு வழங்கப்பட்ட சமூக நல உதவி நிறுத்தப்பட்டது என சமூக நலத் துறை கூறுகிறது. சரவாக் விவசாய நவீன மயத் துணை அமைச்சர் மொங் டாஹாங் உத்தரவு காரணமாக அவ்வாறு செய்யப்படவில்லை என அந்தத் துறையின் தலைமை இயக்குநர் ஹாட்சிர்…
போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளோட்டியை உதைத்தார் என நேரில் பார்த்த நால்வர்…
ஜோகூர் தங்காக்கில் போலீஸ் சாலைத் தடுப்பு ஒன்றில் கடுமையான காயங்களுக்கு இலக்கான 14 வயது மோட்டார் சைக்கிளோட்டி லிம் ஹப் ஹுவாங்கை போலீஸ்காரர் ஒருவர் உதைத்ததால் அவர் கீழே விழுந்தார் என நேரில் பார்த்த நால்வர் கூறிக் கொண்டுள்ளனர். ஆனால் போலீஸ்காரர்கள் அதனை மறுத்துள்ளனர். கடந்த வார இறுதியில்…
வேதமூர்த்தியின் “மனித உரிமை காவலன்” விருது பெரியவர் சின்னையாவுக்கு சமர்ப்பணம்
இந்தியாவை தலைமையகமாகக் கொண்டு செயல் படும் “மனித உரிமை பாதுகாப்பு (HRDI) அமைப்பு அதன் 2 ஆவது அனைத்துலக பேராளர்கள் மாநாட்டை கடந்த பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் புது டில்லியில் ஏற்பாடு செய்திருந்ததது. அந்த மாநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களின் அடிப்படை மனித…


