டுரியான் பழத்தோட்ட வழக்கு : பி.ஜி.ஏ.-ஐ ரவூப்புக்கு ஏவினார் ஐ.ஜி.பி.

நேற்று, டுரியான் விவசாயிகள் மற்றும் அமலாக்கப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அரச மலேசியக் காவல்துறையின் (பி.டி.ஆர்.எம்) பொது செயல்பாட்டுப் படை (பி.ஜி.ஏ) பஹாங், ரவுப்பிற்கு அணிதிரட்டியது. காவற்படை தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி, அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் ஆட்சேபனை…

அசைபட வழக்கு : மேலும் 4 ஆர்வலர்களிடம் போலீஸ் விசாரணை

காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தாக்கப்பட்ட தனிநபர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பான அசைபடம் குறித்து சாட்சியமளிக்க மேலும் நான்கு ஆர்வலர்களை போலீசார் அழைத்தனர். ஜூலை 2-ம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சுதந்திரத் திரைப்பட வலையமைப்பின் (Freedom Film Network - எஃப்எஃப்என்) அலுவலகம் மற்றும் கேலிச்சித்திர ஓவியர் அமின் லண்டாக்கின்…

எச்.கே.எல். மனநல வார்டில் கோவிட் -19 நோய்தொற்றுகள் – ஆடாம்…

கோலாலம்பூர் மருத்துவமனையில், ஆண்கள் மனநல வார்டில் உள்ள 10 நோயாளிகள் கோவிட் -19 தொற்றுக்குச் சாதகமான முடிவுகளைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா தெரிவித்தார். அதனை அடுத்து, அந்த ஆண்கள் மனநல வார்டு "உறைய" வைக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதே வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆடாம்…

ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு முன்னதா அம்னோ பி.என்.-இருந்து விலகும் –…

ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு முன்னதா, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கான முடிவைக் கட்சி இறுதி செய்யும் என்று தான் நம்புவதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் மொஹமட் புவாட் சர்காஷி தெரிவித்தார். அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, கூட்டணி அரசாங்கத்திலிருந்து கட்சியை வெளியேற்ற முயன்றார், ஆனால்…

‘நாடாளுமன்றக் கூட்டத்தொடர் விளக்கக் கூட்டமாக மாறிவிடுமோ’ – எம்.பி.க்கள் கவலை

ஜூலை 26-ம் தேதி கூடவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர், அரசாங்கத்தின் விளக்கக் கூட்டமாக இருக்குமோ என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர். பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ.) வெளியிட்ட அறிக்கையில், சபை விவாதம் குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பதிலாக, தேசிய மீட்புத் திட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்துவதையும், மாநாட்டை கலப்பின முறையில்…

6,387 புதிய நேர்வுகள், 77 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,387 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. சிலாங்கூரில் மட்டும் மொத்தம் 2,610 புதிய நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலாங்கூரில், தொடர்ந்து ஏழாவது நாளாக 2,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், இன்று 77 மரணங்கள்…

ஜூலை 7-ல், மீட்பு திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில் பினாங்கு

ஜூலை 7 முதல், தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் (பிபிஎன்) இரண்டாம் கட்டத்திற்குப் பினாங்கு நகரும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார். இன்று, பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு, பஹாங் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்கள் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்ததைப் பின்பற்றி, அடுத்து பினாங்கும் செல்கிறது.…

அரசு மக்களவை கூடும் என்றதும், ஜாஹித் அடுத்தகட்ட நடவடிக்கையில்

தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம், நாடாளுமன்றத்தை மீண்டும் திறப்பதாக இன்று அறிவித்ததை அடுத்து, அஹ்மத் ஜாஹிட் ஹமிடி இப்போது அடுத்த நடவடிக்கைகளுக்குத் திட்டமிட தொடங்கிவிட்டார். பதிவைப் பொறுத்தவரை, பி.என்-க்கு அம்னோ வழங்கிய 14 நாள் காலம் நேற்று முடிவடைந்தது. இன்று மாலை, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உட்பட…

ஜூலை 26-ல் நாடாளுமன்றம் கூடும்

ஜூலை 26-ஆம் தேதி, மக்களவை மீண்டும் கூடும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 14-ஆம் நாடாளுமன்றத்தின் மூன்றாம் காலச் சிறப்புக் கூட்டம் ஜூலை 26 முதல் 29 மற்றும் ஆகஸ்ட் 2-ஆம் தேதியென 5 நாட்களுக்கு மக்களவை கூட்டமும், ஆகஸ்ட் 3 முதல் 5 வரையில் 3 நாட்களுக்கு…

மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்குப் போதுமான படுக்கைகள் இல்லை

பொது மருத்துவமனைகளில், கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது அதிகமாக இருப்பதால், மோசமாக நோயுற்ற பல கோவிட் -19 நோயாளிகள், மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) படுக்கை பெற காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இருந்தாலும்,…

அன்வருக்கு ஆதரவாக எஸ்.டி. கையொப்பம் உண்மையே – அம்னோ எம்.பி.

ஜெராண்துட் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர், அஹ்மத் நஸ்லான் இட்ரிஸ், எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமைப் பிரதமராக ஆதரிக்கும் வாக்குமூலத்தில் (எஸ்டி) கையெழுத்திட்டதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. டாக்டர் மகாதீர் மொஹமட் தலைமையிலான முந்தைய பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகம் தோல்வியுற்றதாலும், முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம் மக்களுக்கு உதவுவதில்…

மைசெஜாத்ராவால் குழப்பம், ஏமாற்றமடைந்த மூதாட்டி

தடுப்பூசி மையத்திற்கு (பிபிவி) வருமாறு முந்தைய நாள் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க, மறுநாள் பிபிவி சென்ற ஒரு வயதான பெண்மணி, தடுப்பூசியின் முதல் மருந்தளவு ஊசி பெறுபவர்களின் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தெரிந்ததும் குழப்பமும் வருத்தமும் அடைந்தார். 68 வயதான அவர், ஜூலை 2-ஆம் தேதி,…

6,045 புதிய நேர்வுகள், பேராக்கில் நேர்வுகள் அதிகரிப்பு

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,045 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. 2-ஆம் கட்டத்திற்குள் நுழையும் தருவாயில், பேராக்கில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இன்று 63 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 5,497 பேர் பலியாகியுள்ளனர்.…

`கருப்பு குறியீடு` மற்றும் `கருப்பு திங்கள்` நாங்கள் ஆதரிக்கிறோம் –…

மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.), நாட்டில் சுகாதார ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. எனவே, ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஆதரவைக் காட்ட மக்களை ஊக்குவிக்கும் பிரச்சாரமான ஜூலை 1 முதல் 12 வரை `கருப்பு குறியீடு` (கோட்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மேலும் பல குழுக்கள் முன்வந்துள்ளன

சிலாங்கூரில் பெரும்பாலான பகுதிகளிலும், கோலாலம்பூரில் சில பகுதிகளிலும் மேம்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு (பி.கே.பி.டி.) அமலாக்கக் காலத்தில், வருமானம் பாதிக்கப்பட்டுள்ள அதிகமான மலேசியர்களுக்கு உதவுவதற்காக, மூன்று இளைஞர் அமைப்புகள் 'புரோஜெக் ரக்யாட் கென்ஞாங்' (Projek Rakyat Kenyang) நிதி திரட்டலைத் தொடங்கியுள்ளன. ஜூலை 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட தங்களின் நிதி…

தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல்கள் ஆகஸ்டில் அறிவிக்கப்படும்

இரண்டு மருந்தளவுகள் கோவிட் -19 தடுப்பூசி பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல்களை அரசு விரைவில் வெளியிடும் என்று கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். இரண்டு மருந்தளவுகள் தடுப்பூசி பெற்றவர்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். "இருப்பினும், டெல்டா மாறுபாடு பரவுவதால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து…

மனிதக் கடத்தல் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டது – மனித…

அமெரிக்க வெளியுறவுத்துறையின், மனிதக் கடத்தல் அறிக்கை (Trafficking in Persons திஐபி) 2021-இல், 3-வது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மலேசியாவின் தரவரிசை குறித்து, ஹக்காம் மனித உரிமை குழு (மனித உரிமைகள் சங்கம்) தனது கவலையை வெளிப்படுத்தியது. திஐபி அறிக்கையில், நிலை 3 என்பது மிகக் குறைந்த மட்டமாகும், மேலும்…

படுக்கை பற்றாக்குறை, தரையில் சிகிச்சை – எச்.கே.எல். இயக்குநர் விளக்கம்

கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் (எச்.கே.எல்.) படுக்கைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது, இதன் விளைவாக சில நோயாளிகள் தரையில் சிகிச்சை பெற்றனர் என்று மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஹெரிக் கோரே தெரிவித்தார். மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெரும்பாலான நேர்வுகள், கோவிட் -19 நிலை 4…

6,658 புதிய நேர்வுகள், 107 இறப்புகள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,658 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 107 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 5,434 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 5,677 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…

சட்ட அமைச்சராக ராய்ஸ் – குவான் எங் முன்மொழிந்தார்

தக்கியுடின்ன் ஹாசனுக்குப் பதிலாகப் பிரதமர் திணைக்களத்தில் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) புதிய அமைச்சராக, ராய்ஸ் யாத்திமை நியமிக்க வேண்டும் என்று டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் பரிந்துரைத்தார். இந்த மாதத்திற்குள், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த அகோங்கின் உத்தரவுக்கு "விசுவாசமும் கீழ்ப்படிதலும்" இருப்பதை உறுதி செய்வதற்காக, மேலவை சபாநாயகரான…

‘பெரும்பாலான முதலாளிகள் வீட்டிலிருந்து வேலை செய்வதை விரும்பவில்லை’

கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி, 'தொழிலாளர்களுக்காக பணியாற்றுதல்' (Working for Workers) விண்ணப்பத்தின் மூலம், மனிதவள அமைச்சு பெற்ற மிக அதிகமான புகார்கள், முதலாளிகள் தொழிலாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கவில்லை (பி.டி.ஆர்) என்பதாகும். மனிதவளத் துணை அமைச்சர் அவாங் ஹாஷிம் கூறுகையில், நாடு முழுவதும்…

5 மாநிலங்கள் மீட்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்தன

தேசிய மீட்புத் திட்டத்தின் (பிபிஎன்) கீழ், கட்டம் 2-ற்கான மூன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு வாசல் மதிப்புகளையும் ஐந்து மாநிலங்கள் வெற்றிகரமாக அடைந்துள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. ஜூலை 5-ஆம் தேதி தொடங்கி, பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு, பஹாங் மற்றும் பேராக் ஆகிய ஐந்து மாநிலங்களும் 2-ஆம் கட்டத்திற்குள்…

அமைச்சர் : பி.கே.பி.டி. பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படுகின்றன

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பி.கே.பி.டி. பகுதிகளில், கட்டுமானம் மற்றும் அது தொடர்புடைய அனைத்து பணிகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார். "இதன் பொருள் என்னவென்றால், முன்னதாகப் பெறப்பட்ட மிட்டியின் அனுமதி கடிதத்தை, பி.கே.பி.டி. காலத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடரப் பயன்படுத்த…