நஜிப் : கெடா மாநில அரசிற்கு, மத்திய அரசின் உதவிகள்…

அடுத்த 5 ஆண்டுகளில், வடக்கில் புக்கிட் காயு ஈத்தாமை முக்கியப் போக்குவரத்து தளமாக உருவாக்கும் முயற்சியில் ஒன்றாக, அலோர்ஸ்டார், சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையம் (எல்.தி.எஸ்.ஏ.எச்.) சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படும். பிரதமர் நஜிப் துன் ரசாக் இதனை அறிவித்தபோது, தாய்லாந்தின் எல்லைப் பகுதியான புக்கிட் காயு…

நஸ்ரி மன்னிப்பு கோர வேண்டும், மசீச இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

  தொழிலதிபர் ரோபர்ட் குவோக் குறித்து கூறிய கருத்துக்காக சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் நஸ்ரி அசிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி மசீச இளைஞர்கள் ஆர்பாட்டம் செய்தனர். மசீசவின் 69 ஆம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டம் இன்று மசீச தலைமையகத்தில் நடைபெற்றது. அப்போது…

சுப்ரா செகாமாட்டைத் தக்க வைத்துக்கொள்வார்: இகா இளைஞர்கள் நம்பிக்கை

மஇகா  தலைவர்   டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்   அவரது   செகாமாட்   நாடாளுமன்றத்  தொகுதியைத்    தக்க வைத்துக்கொள்ளும்  வாய்ப்பு   பிரகாசமாக  உள்ளதாய்   கூறுகிறார்  இளைஞர் பகுதி தலைவர்   சி.சிவராஜா. “தலைவர்  நீண்டகாலம்  அப்பகுதியில்  பணியாற்றி  வந்துள்ளார். “கிடைக்கும்  பின்னூட்டங்களிலிருந்து  அவர்(சுப்ரமணியம்)  எளிதாக   தொகுதியைத்   தக்க  வைத்துக்கொள்வார்   என்று   நம்புகிறோம். அது   பிரச்னையாக    இருக்காது”, …

நஸ்ரி எதிர்க்கட்சிகளின் கூட்டுச்சதிகாரர்: லியோ சாடல்

சுற்றுலா,  பண்பாட்டு  அமைச்சர்   நஸ்ரி  அசிசை  எதிர்க்கட்சிகளின்      கூட்டுச்  சதிகாரர்    என்று  மசீச    தலைவர்   லியோ   தியோங்  லாய்   அடையாளப்படுத்தியுள்ளார். “இன்று  மசீச,   வலிமைவாய்ந்ததாகக்    காணப்படும்   எதிர்க்கட்சிகளை   மட்டுமல்லாமல்  பிஎன்னில்  இருக்கும்  ‘கூட்டுச்சதிகாரர்களையும்’  எதிர்கொள்ள  வேண்டியுள்ளது. “நான்  குறிப்பிடும்  ‘எதிர்க்கட்சிகளுடன்  இணைந்து   பணியாற்றும்  கூட்டுச்  சதிகாரர்’  யார்  என்பதை   …

ஊழலை அம்பலப்படுத்துவதில் அரசுத் துறைகளுக்கு நேர்மை அவசியம், சேவியர்

  பினாங்கு கடலடி சுரங்கப்பாதை ஆகட்டும்,  சிலாங்கூர் நில ஊழலாகட்டும்,  எதனையும்  விசாரித்து  குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை  வழங்குவது பற்றி மக்களுக்குப் பாரபட்சமின்றிச் செய்தி வழங்குவதை வரவேற்கிறோம்.  ஆனால்  அத்துறைகளின்  பணி  அழுகும் பிள்ளைக்கு   இனிப்பு தருவதாக மட்டுமே அமைந்துள்ளது. நாட்டை உண்மையான  திருடர்களிடமிருந்தும் ஊழல் பெருச்சாளிகளிடமிருந்தும் காப்பாற்றுவதில் …

பினாங்கு சுரங்கப்பாதை விவகாரம்: மேலும் ஒரு டத்தோ கைது

மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையம் (எம்ஏசிசி),   ரிம6.3 பில்லியன்   மதிப்பிலான   பினாங்கு கடலடிச் சுரங்கப்பாதைத்   திட்ட   ஊழல்மீதான  விசராணையைத்    தடுப்பதற்கு   ரிம3மில்லியன்  ரிங்கிட்    பெற்றதாகக்  கூறப்படும்   ‘டத்தோ’  ஒருவரைக்  கைது   செய்துள்ளது. அவ்விசாரணை  பற்றி   நன்கு    அறிந்த   வட்டாரமொன்று   அந்த  64-வயது   நபர்   நேற்று   கோலாலும்பூரில்   கைது  செய்யப்பட்டார்  எனத்  …

ஹரப்பான் வெற்றி பெற்றால் பிபிஎஸ்எம்ஐமீது முடிவெடுக்கக் கருத்துக்கணிப்பு

பொதுத்   தேர்தலில்  பக்கத்தான்   ஹரப்பான்  வென்று   ஆட்சி   அமைத்தால்    பள்ளிகளில்    கணிதம்,  அறிவியல்   பாடங்களை    ஆங்கிலத்தில்  கற்பிக்கும்  முறையைத்    திரும்பக்  கொண்டு  வரலாமா  என்பதை   மலேசியர்களே  முடிவு  செய்யும்  வாய்ப்பைப்  பெறுவார்கள். அக்கொள்கைக்கு  ஆதரவும்   எதிர்ப்பும்   இருப்பதாக  நேற்று    செய்தியாளர்  கூட்டமொன்றில்   ஹரப்பான்   தலைவர்   டாக்டர்  மகாதிர்   கூறினார்.…

மகாதீர் : பிபிஎஸ்எம்ஐ செயல்பாட்டை, வாக்கெடுப்பின் வழி தீர்மானிப்போம்

14-வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதப் பாட கற்றல், கற்பித்தல் (பிபிஎஸ்எம்ஐ) கொள்கையை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு வாக்கெடுப்பு நடத்தும். பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் முடிவு செய்யும் என்று ஹராப்பான் தலைவரான டாக்டர் மகாதீர் கூறினார்.…

மகாதிர் : தூண்டிலில் பொறியாக இருக்கவும் நான் தயார்

மலாய் வாக்குகளை வெல்ல, பக்காத்தான் ஹராப்பானுக்கு ஒரு தூண்டுதலாக செயல்பட தயாராக இருப்பதாக டாக்டர் மகாதிர் முகமட் கூறினார். தனக்கு 92 வயதான போதும், ஹராப்பானுக்கு உதவ தான் தயாராக இருப்பதாக அந்த முன்னாள் பிரதமர் தெரிவித்தார். “எனக்கு இப்போது 92 வயதாகிறது, எத்தனை காலத்திற்கு என்னால் பிரதமராக…

ஆஸ்திரேலியாவில் இருக்கும் பணம் சட்டபூர்வமானது, புக்கிட் அமான் இயக்குனர் நிரூபித்தார்

புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு துறை இயக்குநர் அஹ்மட் நஜ்முட்டின், தனது ஆஸ்திரேலிய வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் சட்டப்பூர்வமானது என்பதை நிரூபித்துவிட்டார் என, தலைமை போலிஸ் அதிகாரி முகமட் ஃபூஷி ஹருன் கூறினார். சிலாங்கூர், ஷா ஆலாமில் அவரது இல்லத்தை, அப்போதைய சந்தை விலையில் விற்றதன் மூலம்…

சிஐடி இயக்குனரின் வங்கிக் கணக்கை ஆஸ்திரேலியா கைப்பற்றியது

  ஆஸ்திரேலிய போலீஸ், புக்கிட் அமான் சிஐடி இயக்குனர் வான் அஹமட் நாஜ்முடின் முகமட்டின் சிட்னி வங்கிக் கணக்கை முடக்கியுள்ளது. அக்கணக்கில் A$320,000 (ரிம971,800) இருக்கிறது. சிட்னி மோர்னிங் ஹெரால்ட் செய்திப்படி, வான் அஹமட்டின் கணக்கில் போடப்பட்ட பணம் சலவை செய்யப்பட்டது அல்லது குற்றச்செயல்கள் வழி கிடைத்த வருமானம்…

மார்ச் 1 தொடக்கம், எஸ்.எல்.1எம் அலவன்ஸ் ரிம 2,000

2018, மார்ச் 1 தொடக்கம், 1மலேசியா பயிற்சித் திட்ட அலவன்ஸ் (எஸ்.எல்.1எம்) ரிம 1,500-ல் இருந்து ரிம 2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள பயிற்சியாளர்களின் சுமையைக் குறைப்பதே இதன் நோக்கம் என எஸ்.எல்.1எம்-ன் தலைமைச் செயலளார் நோரஷிகின் இஸ்மாயில் கூறினார். “தலைநகரில், வாழ்க்கை செலவுகள் மிகவும் அதிகமாக…

பெட்ரோனாஸ் RM19 பில்லியன் ஈவுத்தொகையை அரசாங்கத்திற்குச் செலுத்தும்

பெட்ரோலியம் நேசனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்), RM19 பில்லியன் ஈவுத்தொகையை அரசாங்கத்திற்குச் செலுத்த உறுதியளித்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி வான் சுல்கிப்ளி வான் அரிஃபின் கூறினார். கடந்த ஆண்டு, அந்தச் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் ஒரே பங்குதாரரான அரசாங்கத்திற்கு, RM16 பில்லியனை அந்நிறுவனம் கொடுத்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. கடந்தாண்டின்…

கிட் சியாங் கழிப்பறையில் தவறிவிழுந்தார், வார இறுதி நிகழ்ச்சிகள் இரத்து

நேற்றிரவு, நாடாளுமன்ற டிஏபி தலைவர், லிம் கிட் சியாங், அவரின் ஜொகூர், கேலாங் பாத்தா இல்லக் கழிப்பறையில் தவறிவிழுந்து, நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதால், இவ்வார இறுதி நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக, டிஏபி தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “லிம் கிட் சியாங், இவ்வார…

கிளாந்தானில் டிஏபி-க்கு நாற்காலி இல்லை

கிளாந்தான் மாநிலச் சட்டமன்ற நாற்காலிகளுக்கான பக்காத்தான் ஹராப்பானின் பேச்சு வார்த்தைகள் ஏறத்தாழ முடிவடைந்த நிலையில், டிஏபி-க்கு எந்தவொரு தொகுதியும் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. 1986-ஆம் ஆண்டுக்குப் பின்னர், மீண்டும் அம்மாநிலத்தில் போட்டியிட வேண்டும் எனும் டிஏபி-யின் விருப்பத்திற்கு அது மாற்றாக உள்ளது. கிளாந்தான் ஹராப்பானின் கூற்றுப்படி, இன்னும் மூன்று…

லியோ : பி.என்.-னில் சிலர் மசீச-வைச் சாகடிக்க நினைக்கின்றனர்

பி.என்.-னில் சில தரப்பினர் மலேசியச் சீனர் சங்கத்தை அழிக்க, வெளி சக்திகளுடன் சதிசெய்து வருவதாக மசீச தேசியத் தலைவர், லியோ தியோங் லாய் குற்றஞ்சாட்டியுள்ளார். “வெளியேயும் உள்ளேயும் மசீச-வை எதிர்க்க ஒத்துழைப்பு நடந்துவருவதை நம்மால் காணமுடிகிறது,” என்று அவர் கூறியதாக ‘ஓரியண்டல் டெய்லி’ செய்தி வெளியிட்டுள்ளது. எந்தவொரு பெயரையும்…

முகைதின்: அம்னோ கட்சித் தேர்தலை ஒத்திவைத்தது செல்லாது

அம்னோ   கட்சித்  தேர்தல்களை  மீண்டும்  ஒத்தி வைத்திருப்பது   அதன்   அமைப்பு  விதிகளுக்கு    எதிரான  செயல்    என  பெர்சத்து    தலைவர்   முகைதின்  யாசின்  இன்று   கூறினார். முன்னாள்   அம்னோ   துணைத்    தலைவரான   முகைதின்   ஆகக்  கடைசியான   ஒத்திவைப்பு  அம்னோ   அமைப்புவிதியின்   10.16  விதிக்கு முரணானது    என்றார். அமைப்புவிதி  10.16  அம்னோ …

ஈக்குவானிமிட்டி உல்லாசப் படகு கைப்பற்றப்பட்டது குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க 1எம்டிபி…

1எம்டிபி   அவைத்தலைவர்   இர்வான்  செரிகார்   அப்துல்லா    இந்தோனேசிய   அதிகாரிகளும்   அமெரிக்க   மத்திய  புலனாய்வுத்  துறை(எப்பிஐ)யும்  கைப்பற்றிய   ஈக்குவானிமிட்டி   உல்லாசப் படகு  தொடர்பாக   செய்தியாளர்கள்   கேட்ட   எந்தக்  கேள்விக்கும்  பதிலளிக்கவில்லை. இன்று  காலை   உள்நாட்டு  வருமான  வரி  வாரிய  நிகழ்வு  ஒன்றில்  கலந்து  சைபர்  ஜெயா   வந்த    இர்வான்  நிகழ்வு  …

கோடீஸ்வரர் மீதான சர்ச்சை: அமைச்சரவை கூட்டத்தில் பொறி பறந்தது

நேற்றைய  அமைச்சரவைக்  கூட்டத்தில்    அம்னோ   அமைச்சர்   நஸ்ரி   அப்துல்  அசீசுக்கும்   மசீச,  கெராக்கான்   அமைச்சர்களுக்குமிடையிலான   சர்ச்சை    அனல்  பறக்கும்  விவாதமாக   மாறியதாக   சீனமொழி   நாளேடுகள்  செய்தி   வெளியிட்டுள்ளன. ஹாங்காங்கில்   உள்ள  மலேசிய   கோடீஸ்வரர்  ரோபர்ட்  குவாக்  டிஏபிக்குப்  பண  உதவி   செய்வதாகக்  கூறப்பட்டதை    அடுத்து   அவர்மீது   தொடுக்கப்பட்ட  சரமாரியான  …

மகாதிர்-ஓராங் அஸ்லி சந்திப்புக்குச் செல்வதைத் தடுக்க பணமும் பாட்டுமா?

  இன்று பகாங், தாசிக் சின்னியில் மகாதிருக்கும் ஓராங் அஸ்லி சமூகத்திற்கும் இடையிலான சந்திப்புக் கூட்டத்தில் கிராம மக்களில் சுமார் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதே இடத்தில் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 500-க்கு மேற்பட்ட கிராம மக்களில் அதிகமானோர் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர்…

நஸ்ரி: மசீச சீனர்களின் குரல் அல்ல

அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்கை இழிவுபடுத்தியது ஒட்டுமொத்த சீன சமூகத்தையும் இழிவுப்படுத்தியதற்கு ஒப்பாகும் என்று மசீசவின் இளைஞர் பிரிவுத் தலைவர் சோங் சின் வூன் விடுத்திருந்த அறிக்கைக்காக மசீச-வை இன்று அமைச்சர் நஸ்ரி சாடினார். குவோக் சீனச் சமூகத்தை பிரதிநிதிக்கவில்லை என்று மீண்டும் கூறிய…

இந்தோனேசியா, எப்பிஐ பாலியில் ஜோ லோவின் உல்லாசப்படகை கைப்பற்றின

  1எம்டிபிலிருந்து உறிஞ்சிய பணத்தில் வாங்கியதாகப் கூறப்படும் ஈக்குவானிமிட்டி என்ற பெயரைக் கொண்ட உல்லாசப்படகு பாலியில் இந்தோனேசியா மற்றும் அமெரிக்க எப்பிஐயின் கூட்டு நடவடிக்கைக்குப் பின்னர் கைப்பற்றப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து அப்படகு இந்தோனேசியக் கடலில் இருந்து வருவதாகவும் அதில் 34 சிப்பந்திகள் இருந்ததாகவும் இந்தோனேசிய ஊடகச் செய்திகள்…

நஸ்ரி, குவோக்கை இழிவுப்படுத்தியது சீன சமூகத்தையே இழிவுப்படுத்தியதாகும், சோங் கூறுகிறார்

சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்கை கடுமையாக இழிவுப்படுத்தி பேசியிருப்பது சீன சமூகத்தையே இழிவுபடுத்தியதற்கு ஒப்பாகும் என்று மசீச இலைஞர் பிரிவுத் தலைவர் சோங் சின் வூன் கூறுகிறார். குவோக் சாதாரண மனிதர் அல்ல. அவர் உலகமுழுவதிலுமுள்ள சீன சமூகத்தினரால்…