முன்னாள் எம்ஏசிசி தலைவர் மரணம்

மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) முன்னாள் தலைவர் அஹமட் சைட் ஹம்டான்,67, நேற்றிரவு அவரின் மகள் வீட்டில் காலமானார். அவரது உடல் இன்று ஸுஹூர் தொழுகைக்குப் பின்னர் கோட்டா டமன்சாரா முஸ்லிம் மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்படும் என எம்ஏசிசி துணை ஆணையர் ஷம்சுன் பஹாரின் முகம்மட் ஜமில் கூறினார்.…

சீனாவில் ஆயிரக்கணக்கானவர் மலேசியா சுற்றுலாவை இரத்து செய்தனர்

புகை மூட்டத்தின் காரணமாக சீன நாட்டின் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களின் மலேசிய விடுமுறையை இரத்துச் செய்துவிட்டு மற்ற ஆசியான் நாடுகளுக்குச் செல்கிறார்கள். மலேசியா வரவிருந்த 100க்கு மேற்பட்ட சுற்றுலாக் குழுக்கள், ஒவ்வொரு குழுவிலும் 30 பயணிகள், தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொண்டு வியட்நாம், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகியவற்றுக்குச் சென்றதாக…

உங்கள் கருத்து: ஆட்சியில் உள்ளவர்களே பிரிவினையைத் தடுக்க வேண்டும்

மலேசியத் தினத்தில் மகாதிர்: சிலர் நம்மைப் பிரிக்க விரும்புகிறார்கள், அதற்கு இடமளிக்காதீர்கள் ஜோகூர்வாக்காளன்: பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவர்களே, உங்கள் கருத்தே பெரும்பாலான குடிமக்களின் கருத்துமாகும். பல்லினங்களையும் பல சமயங்களையும் சேர்ந்த மலேசிய மக்களை ஒன்றிணைப்பதே நாட்டின் தலையாய பணியாகும் என்பதை நாங்களும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், நீங்கள்…

சுற்றுப்பயணத்தை ஊக்குவிக்க விசா கட்டணம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்

விசா கட்டணத்தைக் குறிப்பிட்ட சில பருவ காலங்களில் தள்ளுபடி செய்வது குறித்து புத்ரா ஜெயா ஆலோசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அது சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை பெருக உதவும் என கெப்போங் எம்பி லிம் லிப் எங் ஓர் அறிக்கையில் கூறினார். தாய்லாந்து நவம்பருக்கும் ஏப்ரலுக்குமிடையில் சுற்றுப்பயணிகளுக்கு விசா கட்டணத்தைத்…

பி.எஸ்.எம். : ரவாங் துப்பாக்கிச் சூட்டு விசாரணையைப் புக்கிட் அமான்…

அண்மையில், ரவாங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவ விசாரணையைச் சிலாங்கூர் காவல்துறையினர் கையாண்டது குறித்து கவலைகள் எழுந்துள்ள நிலையில், அதன் விசாரணைகளை புக்கிட் அமான் ஏற்று நடத்த வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்கள்,…

பொய்யான செய்திகளை எதிர்க்கும் மாநாட்டைக் கூட்ட டிஏபி தயார், அதில்…

பொய்யான செய்திகளையும் வெறுப்புப் பேச்சுகளையும் எதிர்க்கும் மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு டிஏபி ஆயத்தமாக உள்ளது என்று கூறிய அதன் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் லிம் கிட் சியாங், எதிர்க்கட்சிகள் உளப்பூர்வமான ஆர்வத்துடன் அதில் கலந்துகொள்ளத் தயாரா என்றும் சவால் விடுத்தார். முன்பு டிஏபி எதிர்க்கட்சியாக இருந்தபோது, இனங்களுக்கிடையேயும்…

ஹாடி, பிரதமர் பதவி பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொண்டு அம்னோவுக்கு உதவுவது…

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிம்தான் என்ற பக்கத்தான் ஹரப்பானின் ஒருமித்த முடிவு குறித்துக் கருத்துரைப்பதைத் தவிர்க்க வேண்டும் என பிகேஆர் இளைஞர் தலைவர் ஒருவர் அறிவுறுத்தினார். அதற்குப் பதில், அந்த இஸ்லாமியக் கட்சித் தலைவர் அம்னோ மீண்டும் எழுச்சிபெற உதவுவது ஏன்…

துணை அமைச்சர் பாரிட் ரபிக் காலமானார்

பிரதமர்துறை துணை அமைச்சர் முகம்மட் பாரிட் முகம்மட் ரபிக் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 43. தேசிய ஒற்றுமை மற்றும் சமுக நல்வாழ்வு துணை அமைச்சரான பாரிட், பொந்தியான் மருத்துவமனையில் காலை மணி 5.30க்கும் 6-க்குமிடையே உயிர் துறந்ததாகத் தெரிகிறது. பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்த பாரிட், தஞ்சோங்…

‘முஸ்லிம் பொருள்களை வாங்குங்கள்’ இயக்கம் தவறல்ல- அமைச்சர்

முஸ்லிம்- அல்லாதார் பொருள்களைப் புறக்கணிக்கும்படி கூறாதவரை, ‘முஸ்லிம் பொருள்களை வாங்குங்கள்’ இயக்கம் நடத்துவது தவறல்ல என்கிறார் தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர் முகம்மட் ரிட்சுவான் யூசுப் . அந்த இயக்கம் இனங்களிடையே பதற்றத்தை உண்டு பண்ணியதற்கு அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதுதான் காரணமாகும் என்றாரவர். “பொருள்களை வாங்கச் சொல்லி இயக்கம் நடத்துவதில்…

ராவாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் 08 குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள்-…

சிலாங்கூர் போலீஸ் கடந்த சனிக்கிழமை ஜாலான் ராவாங்- பத்து ஆராங் சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரில் இருவர் 08 குண்டர் கும்பலின் உறுப்பினர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சிலாங்கூரில் அவர்கள் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். செய்தியாளர் கூட்டமொன்றில் அச்சம்பவத்தின்போது கொல்லப்பட்டவர்களின் அடையாளங்களைத் தெரிவித்த மாநில போலீஸ் தலைவர் நூர்…

புகைமூட்டம்: 2,400க்கு மேற்பட்ட பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும்

புகைமூட்டம் மோசமடைந்து வருவதால் 2,400க்கு மேற்பட்ட பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்படுவதாகக்  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதனால் 1,732,842 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பள்ளிகள் மூடப்படும் என்ற தகவலைக் கல்வி அமைச்சு அதன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. காற்றின் மாசுகேட்டுக் குறியீடு 200 என்ற…

புத்திசாலித்தனம் இல்லாத புறக்கணிப்பு – இராகவன் கருப்பையா

வரலாற்றுப் பூர்வமாக கடந்த ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தற்போது பல கோணங்களிலும் திசைமாறி தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். தேர்தல் அறிக்கையை உதாசினப்படுத்தியுள்ளது ஒருபுறமிருக்க, கடந்த சில மாதங்களாக நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு முறையான தீர்வு காணப்படாமல் இருப்பது மக்களுக்குப்…

கிறிஸ்துவ மத நோக்கம் கொண்ட கருத்தரங்கு எனக் குற்றச்சாட்டு :…

‘புதிய மலேசியக் கதை கருத்தரங்கை போலீசார் விசாரிக்க வேண்டும்’ எனும் தலைப்பில், இன்று, மலேசியாகினி வலைதளத்தில், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், வெளியிட்ட ஓர் அறிக்கை தொடர்பில், புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர் மற்றும் விளையாட்டு துணை அமைச்சருமான ஸ்டீவன் சிம் ச்சீ…

பிரதமர் பதவிக்கு இன்னொரு நபர், அன்வார் மறுப்பு

தனக்குப் பதிலாக, இன்னொரு நபரின் பெயர் பிரதமர் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவதாக வெளியான செய்திகளை பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார். “அப்படி எதுவும் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரவர் சொந்த ஆசைக்கு இங்கு தடை ஏதும் இல்லை. "இது எனக்கு சற்று பொருத்தமற்றதாகத் தெரிகிறது. இது விவாதிக்கப்பட்டதா, சரிபார்க்கப்பட்டதா,…

அன்வார்: எல்லா கிராமங்களிலும் குடியிருப்புகளிலும் வறுமையைப் பார்க்கிறேன்

தேசிய வறுமை விகிதம் 2016-இல் அறிவிக்கப்பட்டதைப்போல் 0.4 விழுக்காடு அல்ல என்றும் அது உண்மையில் 15 விழுக்காடு என்றும் ஐநா ஆய்வு ஒன்று கூறியிருப்பதால் அரசாங்கம் வறுமை விகிதத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார். மலேசியாவின் வறுமை விகிதத்தைக் கண்டறிய ஆய்வு…

மூசா அமான் மகன் பெர்சத்துவில் இணைந்தார்

சிபிதாங் எம்பி யமானி ஹவிஸ் மூசா பெர்சத்துவில் சேர்ந்ததை அதன் துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதிர் வரவேற்றார். யமானி 2018 பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன் சார்பில் போட்டியிட்டு வென்றார். அதன் பின்னர் அவர் அக்கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சை எம்பி ஆக இருந்தார். இவ்வாரம் அவர் பெர்சத்துவில் சேர்ந்தார். யமானி…

ஜாகிரைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு விடாமல் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்- இந்தியா…

இஸ்லாமிய சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்புமாறு இந்தியா வலியுறுத்திக் கேட்கவில்லை என்று பிரதமர் டாக்டர் மகாதிர் கூறியிருப்பதைப் புது டில்லி மறுக்கிறது. . ஜாகிரை நீதிமன்றத்தில் நிறுத்த இந்தியா “விடாப்பிடியாகவும் தளராமலும்” முயன்று வருகிறது என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை மேற்கோள்காட்டி ஹிந்துஸ்தான்…

நெகிரி செம்பிலானில் சுவாச உறுப்புகள், கண் பாதிப்புகள் அதிகரிப்பு

நெகிரி செம்பிலான் சுகாதாரத் துறை, புகைமூட்டம் மோசமடைவதைத் தொடர்ந்து மேல்நிலை சுவாச மண்டலப் பாதிப்புகள் (யுஆர்டிஐ), கண் பாதிப்புகள், ஆஸ்த்மா தாக்குதல் முதலியவற்றைக் கண்காணித்து வருகிறது. அக்கண்காணிப்பில் நீலாய் சுகாதார மருத்துவகத்தில் மட்டும் சுவாச மண்டல பாதிப்புகள் 28.5 விழுக்காடு அதிகரித்திருப்பது தெரிய வருவதாக மாநிலச் சுகாதார, சுற்றுச்சூழல்,…

பி இராமசாமி : ‘புதிய அரசாங்கம், ஆனால் அதே பழைய…

சமீபத்தில், சிலாங்கூர், பத்து ஆராங்கில், காவல்துறையினருக்கும் மற்ற மூன்று பேருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்த முழு விசாரணையைத் தொடங்குமாறு, பினாங்கு துணை முதல்வர் II, பி இராமசாமி இன்று புத்ராஜயாவை வலியுறுத்தினார். சம்பவம் குறித்து, காவல்துறையினரின் பதிவுகள் தொடர்பான சர்ச்சையினால், இராமசாமி இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை…

பிரச்னைகளை அப்படியே தூக்கி எறிவது நமது வழக்கமல்ல- ஜாகிர் விவகாரம்…

ஒரு பிரச்னை என்றால் அதை அப்படியே தூக்கி எறிந்து விடுவது மலேசியாவின் வழக்கமல்ல என்கிறார்  பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.  சர்ச்சைக்குரிய வெளிநாட்டுச் சமய போதகர் ஜாகிர் நாய்க்கின் விவகாரம்  அதற்கு ஓர் உதாரணம் என்றாரவர். “என்ன காரணத்தாலோ, இன உணர்வுகள் இப்போது மேலோங்கி நிற்கின்றன. ஒருவர் வந்து ஏதோ…

‘பிகேஆர் கூட்டங்களுக்கு வாங்க, காப்பி, டீ சாப்பிட்டுப் போங்க’- ஸுரைடாவுக்கு…

பிகேஆர் தலைவருக்கும் அவருடன் ஒத்துப்போகாத உறுப்பினர்களுக்குமிடையில் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று உதவித் தலைவர் ஸுரைடா கமருடின் விடுத்துள்ள கோரிக்கைக்கு அன்வார் இப்ராகிம் இணங்குவார்போல் தோன்றவில்லை. சமரசக் கூட்டம் எதற்கு வழக்கமான பிகேஆர் கூட்டங்களே போதுமே என்று அன்வார் கூறியிருப்பது அதைத்தான் உணர்த்துகிறது. “அரசியல்…

ஹாடியின் வெறுப்பூட்டும் பேச்சுக்கு சரவாக்கில் இடமில்லை- டிஏபி-இன் பிடாயு இனத்…

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் சரவாக்கில் வெறுப்பூட்டும் வகையில் பேசி வருவதை டிஏபி-யைச் சேர்ந்த பிடாயு தலைவர் ஒருவர் கண்டித்தார். சிரியான் டிஏபி இளைஞர் தலைவரான புரோலின் நிக்கல்சன், “தீவகற்பக் கலாச்சாரத்தை” சரவாக் கொண்டு வர வேண்டாம் என்று கூறினார். “ஹாடிக்கு நான் கூற விரும்புவது இதுதான்…

புகைமூட்டம்: சரவாக்கில் அபாய நிலையில் ஏபிஐ; நாடு முழுக்க 500…

சரவாக்கில் இன்று காலை காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு மோசமான நிலையில் இருந்தது. கூச்சிங் அருகில் ஸ்ரீ அமானில் அது அபாயமிக்க எல்லையைத் தொட்டது. சுற்றுசூழல் துறையின் கணிப்பில் ஸ்ரீஅமானில் நேற்றிரவு 201 ஆக இருந்த ஏபிஐ இன்று காலை எட்டு மணிக்கு 365 என உயர்ந்தது. கூச்சிங்கில் ஏபிஐ…