“கூட்டரசு சாலைகளில் பராமரிப்பு வேலைகள் தேங்கிக் கிடப்பதற்கு நிதிப் பற்றாக்குறைதான்…

நாட்டில் கூட்டரசு சாலைகள் சிலவற்றில் பராமரிப்பு வேலைகள் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன என்றால் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததுதான் அதற்குக் காரணம் என்று பொதுப் பணி அமைச்சர் பாரு பியான் கூறினார். 2019 பட்ஜெட்டில் நாடு முழுக்க கூட்டரசு சாலைப் பராமரிப்புக்கு ரிம100 மில்லியனே ஒதுக்கப்பட்டதால் சாலைப் பராமரிப்பு…

தாமான் மங்கீஸ் குடியிருப்பாளர்கள், டாக்டர் எம்-ன் அரசியல் செயலாளரை வழி…

பினாங்கு, தாமான் மங்கீஸ் மக்கள் வீடமைப்பு திட்டத்தின் (பிபிஆர்) குடியிருப்பாளர்கள் டாக்டர் மகாதிரின் அரசியல் செயலாளர், அபு பாக்கார் யாஹ்யாவை, கொம்தார் கட்டடத்திலிருந்து வெளியேறவிடாமல், வழிமறித்து நின்றனர். அண்மையில் தங்கள் வாடகைக் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட அம்மக்களைக் காண, அபு பாக்கார் நேற்றிரவு மணி 7 அளவில், அவர்கள்…

பிரதமர்: அமெரிக்காவைவிட ‘பணக்கார’ சீனாவே மலேசியாவின் தேர்வு

மலேசியா, இரண்டு மிகப் பெரிய வல்லரசுகளுக்கிடையில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்வதாக இருந்தால் “அடுத்து என்ன செய்யும் என்பதை முன்னறிய முடியாத” அமெரிக்காவைவிட “பணக்கார” சீனாவைத் தேர்வு செய்யும் என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் அவ்வாறு கூறிய…

அம்பிகா : ‘அம்னோ-பாஸ்’ , சொல்லாடலில் அச்சம் கொள்ள வேண்டாம்

‘அம்னோ-பாஸ்’ எனும் சொல்லாட்சியில் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தொந்தரவு அடையக்கூடாது என்று முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். அதற்கு மாறாக, பல்லின மக்களை ஒற்றுமைபடுத்துதல், மக்களுடையப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் பிஎச் கூட்டணி கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர். அம்பிகாவின்…

பத்துமலை கோயில் அதிகாரிகளில் ஒருவர் விடுதலை, இருவருக்கு காவல் நீட்டிப்பு

கோலாலம்பூர், ஜாலான் பண்டாரில் அமைந்திருக்கும் ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான ஒரு நில மேம்பாடு தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, 3 நாள்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். கோயிலின் உயர் நிர்வாக உறுப்பினரான, ‘தான் ஶ்ரீ’ பட்டம் வைத்திருக்கும் 75 வயது கொண்ட…

உங்கள் கருத்து: அம்னோவும் பாஸும் ஒன்று சேர்வதால் மஇகாவும் மசீசவும்…

‘நேர்மையாக நினைத்துப் பாருங்கள், இப்போது முற்றிலும் மதிப்பிழந்து கிடக்கும் பிஎன்னுடன் 60ஆண்டுகளாகச் சேர்ந்திருந்தீர்களே, என்ன சாதித்தீர்கள்?’ பெயரிலி_3f4b: மசீச அல்லது மஇகா என்ன செய்யப்போகிறது என்பது பிரச்னை அல்ல, பக்கத்தான் ஹரப்பானுக்கு முழுமனத்துடன் பிளவுபடாத ஆதரவைக் கொடுத்தார்களே சீனர்களும் இந்தியர்களும் அவர்களின் நிலை என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி.…

12 தடுப்பூசிகளில் இரண்டைக் கட்டாயமாக்கலாமா என்று சுகாதார அமைச்சு பரிசீலனை

தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் உள்ள 12 வகை தடுப்பூசிகளில் இரண்டையாவது போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்க வேண்டுமென்ற மலேசிய குழந்தைமருத்துவர் சங்கத்தின் பரிந்துரையைப் பரிசீலிக்கச் சுகாதார அமைச்சு தயாராகவுள்ளது. தட்டம்மை, தாளம்மை அல்லது கூவைக்கட்டு, ரூபெல்லா (எம்எம்ஆர்) ஆகியவற்றுக்கும் டிப்தீரியா எனப்படும் தொண்டை அழற்சி நோய்க்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்குமாறு கூறும்…

பிஎன் பேச்சுகளுக்குமுன் இன்று அம்னோ உச்சமன்றம் கூடுகிறது

பிஎன் உறுப்புக் கட்சிகள் கூட்டணியைக் கலைக்கக் கோரிக்கை விட்டுவரும் வேளையில் அது குறித்துப் பரிசீலிக்க அம்னோ உச்சமன்றம் இன்று கூட்டம் நடத்தவுள்ளது. கூட்டம் நடைபெறுவதை உச்சமன்ற உறுப்பினர் அர்மாண்ட் அஸ்ஹா அபு ஹானிபா உறுதிப்படுத்தியதாக த மலேசியன் இன்சைட் கூறியது. அக்கூட்டத்தில் அம்னோ தலைவர்கள், மசீசவும் மஇகாவும் புதிய…

ஏப்ரல் 13-ல், ரந்தாவ் இடைத்தேர்தல்

எதிர்வரும் ஏப்ரல் 13-ம் தேதி, ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் (இசி) முடிவெடுத்துள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதியும், ஆரம்ப வாக்களிப்பு ஏப்ரல் 9-ம் தேதியும் நடைபெறும் என இசி தலைவர் அஸார் அஸிசான் ஹருண் தெரிவித்தார். ரந்தாவ் இடைத்தேர்தலுக்கு, RM1.8 மில்லியன் செலவாகும்…

நஸ்ரி பிஎன் உச்சமன்றக் கூட்டத்துக்குச் செல்லமாட்டார்

பிஎன் உச்சமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது ஆனால், பிஎன் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அசிஸ் அதில் கலந்துகொள்ள மாட்டார். நஸ்ரி கலந்துகொள்ளும் கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை எனக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான மசீசவும் மஇகா எச்சரித்ததை அடுத்து நஸ்ரி கூட்டத்துக்குச் செல்ல வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறார்.…

புதிய கூட்டணியால் பேராக்கில் ஆட்சி கவிழும் என்று பாஸ் கூறுவது…

அம்னோவும் இஸ்லாமியக் கட்சியும் கூட்டுச் சேர்ந்தால் பேராக்கில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி ஆட்டம் காணும் என்ற பேராக் பாஸ் இளைஞர் தலைவர் அக்மால் கமருடினின் கணிப்பு தப்பு. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேராக் சட்டமன்றத்தில் அம்னோ 27 இடங்களையும் பாஸ் மூன்று இடங்களையும் ஆக மொத்தம் 30…

பாஸ், அம்னோ கூட்டுச் சேர்வது பேராக்கிலும் கெடாவிலும் ஹரப்பானுக்கு ஆபத்து

பாஸும் அம்னோவும் முறையாக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் பேராக்கிலும் கெடாவிலும் பக்கத்தான் ஹரப்பானின் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கும். பேராக், பாஸ் இளைஞர் தலைவர் அக்மால் கமருடின், அம்னோவும் பாஸும் சேர்ந்து சட்டமன்றத்தில் 30 இடங்களை வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். ஹரப்பானுக்கு 29 இடங்கள்தான். கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ…

பிறந்தநாள் அன்று, சாமிவேலு மீது எம்ஏசிசி-யில் புகார் அளிக்கப்படும்

முன்னாள் சுங்கை சிப்புட் மஇகா தொகுதி தலைவர், எம் லோகநாதன், எதிர்வரும் மார்ச் 8-ம் தேதியன்று, கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் எஸ் சாமிவேலுவுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் அளிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். மூன்றாவது முறையாக புகார் செய்ய, லோகநாதன் தேர்ந்தெடுத்துள்ள மார்ச் 8,…

நஸ்ரி அல்லது மசீச, மஇகா – அம்னோவின் தேர்வு எது?

பிஎன் –னின் உறுப்புக்கட்சிகளான மசீச மற்றும் மஇகா இரண்டும், அக்கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்தில் நஸ்ரி அஜிஸ் பங்கேற்றால், தாங்கள் அக்கூட்டத்தைப் புறக்கணிக்கும் வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளன. மசீச மற்றும் மஇகா உயர் தலைவர்களால், இன்று வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், பிஎன் தலைமைச் செயலாளராக நஸ்ரி நியமிக்கப்பட்டது நியாயமற்றது…

பொறுமை காக்க: மசீச, மஇகா-வுக்கு அம்னோ இளைஞர்கள் அறிவுறுத்து

அம்னோ இளைஞர் பிரிவு, பாரிசான் நேசனலின் மூன்று உறுப்புக் கட்சிகளில் மற்ற இரண்டுமான மசீசவும் மஇகாவும் புதிய கூட்டணி அமைப்பதற்கு அவசரம் காட்ட வேண்டாமென்று கேட்டுக் கொண்டிருக்கிறது. அவ்விரண்டு கட்சிகளும் கட்சிநலனை விட மக்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர்…

பத்துமலை ஆலய அதிகாரி ஒருவர் கைது

நேற்றிரவு மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அதிகாரிகள் பத்துமலை ஸ்ரீசுப்ரமணியர் ஆலய அதிகாரி ஒருவரின் வீட்டைச் சோதனையிட்டதுடன் அந்த அதிகாரியையும் கைது செய்தனர். எம்ஏசிசி அதிகாரிகள் இரவு மணி 7.45க்கு கோட்டா டமன்சாராவில் உள்ள அந்த வீட்டுக்குச் சென்றதாகவும் குறிப்பிட்ட நபரை விசாரணைக்கு இட்டுச் சென்றதாகவும்  தெரிகிறது. எம்ஏசிசி-யைத் தொடர்பு…

புதியக் கூட்டணி – மசீச , மஇகா யோசனை

பிஎன் -னிலிருந்து விலகி, புதிய கூட்டணி ஒன்றை அமைக்க மசீச மற்றும் மஇகா ஆராய்ந்து வருகிறது. பிஎன் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அசிஸ், இனவாத உணர்வைத் தூண்டும் வகையில் வெளியிட்ட அறிக்கைக்கு, அம்னோ ‘அமைதி’ காத்து வருவதைத் தொடர்ந்து, இம்முடிவை அவ்விரு கட்சிகளும் எடுத்துள்ளன. மசீச மற்றும்…

அம்னோ, பாஸ்-ஐ விட, அதிக ‘மலாய்’ ஆக மாறிவிடாதீர்கள், பிஎச்-க்கு…

சனிக்கிழமையன்று, செமினி இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததன் காரணமாக, அதிக ‘மலாய்’ ஆக மாறிவிட வேண்டாம் என டிஏபி செயற்குழு உறுப்பினர், ரோனி லியு பக்காத்தான் ஹராப்பானுக்கு (பிஎச்) நினைவூட்டினார். "செமினியில் தோல்வியுற்ற பயத்தில், சில பிஎச் தலைவர்கள், அதிக மலாய்க்காரர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள். “அம்னோ, பாஸ்-ஐ விட அதிக…

பிரதமர் விரைவில் மாற்றப்படுவது நல்லது: பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், செமிஞ்யே இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தோல்வி அடைந்ததை அடுத்து பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் உடனடியாக பிரதமராக்கப்படுவது அவசியம் என்று கூறியுள்ளார். ஆளும் கூட்டணிமீது மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அது அவசியம் என்று பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.குமரேசன் கூறினார்.…

ஸ்ரீராம் ரந்தாவில் நிறுத்தப்படுவாரா? பிகேஆர் உச்ச ஆட்சிக்குழு முடிவு செய்யும்

ரந்தாவ் இடைத் தேர்தலில் ரெம்பாவ் பிகேஆர் துணைத் தலைவர் டாக்டர் ஸ்ரீராமைக் களமிறக்குவதா அல்லது வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாமா என்பதை பிகேஆர் உச்ச ஆட்சிக்குழு முடிவு செய்யும். அதை விவாதிக்க, உச்ச ஆட்சிக்குழு விரைவில் கூட்டம் நடத்தும் என துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான்…

ரிம250 புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்: மஸ்லீ…

கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், முன்பு 1மலேசியா புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்ட (பிபி1எம்) த்தின்கீழ் ரிம250 ரொக்க உதவி வழங்கப்பட்டதுபோல் அடுத்த ஆண்டுவாக்கில் மீண்டும் வழங்கப்படும் என மாணவர்களுக்கு உறுதியளித்தார். இப்போது, உயர்க்கல்வி மாணவர் உதவித் திட்ட(பிபிபிடி)த்தின்கீழ் மாணவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. ஆனால், ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை…

சுரங்கப் பாதைத் திட்டத்தில் ஊழல் என்பது ராஜா பெட்ராவின் ‘கற்பனை’

பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் குத்தகைக்கு விடப்பட்டதில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக மலேசியா டுடே இணையத்தளம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதை செனித் கட்டுமான குழுமம்( CZC) மறுக்கிறது. அந்த இணையத்தளத்தை நடத்திவரும் ராஜா பெட்ரா கமருடின், பினாங்கு போக்குவரத்து பெருந் திட்டத்தின் ஒரு பகுதியான பினாங்குத் தீவைத் தலைநிலத்துடன்…

மஇகா : பாஸ், பிஎன் இரண்டையும் பயன்படுத்திக் கொள்ளும் செயலை…

செமினி இடைத்தேர்தலில் பிஎன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பாஸ் மற்றும் பிஎன் உறுப்புக்கட்சிகளைக், குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காகப் ‘பயன்படுத்தி’க் கொள்வதை அம்னோ நிறுத்த வேண்டுமென்று, மஇகா மத்தியச் செயலவைக் கேட்டுக்கொண்டது. மாறாக, தெளிவான முறையில், பாஸ் கட்சியுடன் இணைந்த ஒரு புதியக் கூட்டணியைப் பிஎன் அமைக்க வேண்டும், ‘தற்காலிக கிம்மிக்ஸ்’…