உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN), தனது அமலாக்கப் பிரிவை ஒரு துறையாக (Department) தரம் உயர்த்துவதற்கான முன்மொழிவை ஆய்வு செய்து வருகிறது. இதன் மூலம் அதன் திறன்களை வலுப்படுத்தவும், பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையிலான அமலாக்கப் பணிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அமைச்சகத்தின் அமைச்சர் அமிரான்…
கேமரன் இடைத்தேர்தல் : பிஎன் அபார வெற்றி, நாட்டின் முதல்…
கேமரன் மலை இடைத்தேர்தலில் பாரிசான் வென்றது, அக்கூட்டணியின் வேட்பாளர் ரம்லி முகமட் நோர், பூர்வக்குடியினரைச் சார்ந்த முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 3,238 வாக்குகள் வித்தியாசத்தில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எம் மனோகரனை ரம்லி வென்றார். ரம்லிக்கு 12,038 வாக்குகள் கிடைத்த வேளை, மனோகரனுக்கு 8,800 வாக்குகள் கிடைத்தன.…
கேவியஸ் : மைபிபிபி மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தால், நீதிமன்றம் போவேன்
தனது தலைமையிலான மைபிபிபி கட்சியின் பதிவை, மலேசிய சங்கங்கள் பதிவிலாகா (ஜெபிபிஎம்) இரத்து செய்ததைத் தொடர்ந்து, தான் உள்துறை அமைச்சர், முஹிடின் யாசினிடம் முறையீடு செய்ததை எம் கேவியஸ் ஒப்புக்கொண்டார். மைபிபிபி பதிவை, ஜெபிபிஎம் இரத்து செய்த மறுநாள், ஜனவரி 15-ம் தேதி, நேரடியாக அமைச்சரிடமே அம்முறையீட்டைச் செய்ததாக,…
குற்றத்தை ஒப்பினார் மனோகரன்
கேமரன் மலை இடைத் தேர்தல்: பக்கத்தான் ஹரப்பான் சின்னம் பொறிக்கப்பட்ட சட்டை அணிந்து வாக்களிப்பு மையம் வந்தது தப்புத்தான் என்பதை கேமரன் மலை இடைத் தேர்தல் ஹரப்பான் வேட்பாளர் எம்.மனோகரன் ஒப்புக்கொண்டார். “அது என் தவறுதான். அதிகாலையில் அவசரமவசரமாக ஓடி வந்தேன். இசி அதிகாரி சொன்னதும் வாக்களிப்பு மையத்தை…
பதிவுநீக்கத்துக்கு எதிராக ஆர்ஓஎஸ்மீது வழக்கு தொடுக்க மைபிபி ஆலோசனை
மக்கள் முற்போக்குக் கட்சி (மைபிபிபி) அதன் பதிவுநீக்கத்துக்கு எதிராக செய்துள்ள மேல்முறையீடு உரிய கவனத்தைப் பெறத் தவறினால் சங்கப் பதிவகம்(ஆர்ஓஎஸ்)மீது வழக்கு தொடுப்பது குறித்து ஆலோசிக்கும். மைபிபிபி கட்சி ஜனவரி 15-இல் பதிவுநீக்கம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளே ஆர்ஓஎஸ் வழியாக உள்துறை அமைச்சர் முகைதின் யாசினுக்கு மேல்முறையீடு…
கட்சி சின்னம் கொண்ட சட்டை அணிந்த மனோகரன் வெளியேற்றப்பட்டார்
பக்கத்தான் ஹரப்பான் சின்னம் பொறிக்கப்பட்ட சட்டை அணிந்து வாக்களிப்பு மையத்துக்குள் வந்த ஹரப்பான் வேட்பாளர் எம்.மனோகரன் தேர்தல் அதிகாரிகளால் வெளியில் அழைத்துச் செல்லப்பட்டார். அது தேர்தல் சட்டப்படி ஒரு குற்றமாகும். இச்சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்ட பிஎன் வேட்பாளர் ரம்பி முகம்மட் நோர், பல தேர்தல் களங்களைக் கண்ட மனோகரன்…
காலை மணி 11வரை 47 விழுக்காட்டினர் வாக்களித்தனர்
கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான பரப்புரைகள் முடிவுற்று. வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2014 தேர்தலுக்குப் பின்னர் இதுவே கடுமையான போட்டி நிலவும் இடைத் தேர்தலாக விளங்குகிறது. தொகுதி முழுக்க உள்ள வாக்களிப்பு மையங்கள் காலை மணி 8-க்கே திறக்கப்பட்டு விட்டன. லோஜிஸ்டிக்ஸ் காரணத்தால் அவை வெவ்வேறு நேரங்களில்…
ஆண்டு வட்டி ரிம500மில்லியன், அதனால்தான் இசிஆர்எல் கைவிடப்பட்டது- அஸ்மின்
கிழக்குக் கரை இரயில் பாதை(இசிஆர்எல்)த் திட்டத்துக்கு ஒவ்வோராண்டும் செலுத்த வேண்டிய வட்டி மிக அதிகம் என்பதால் அத் திட்டத்தை இரத்துச் செய்வதென முடிவு செய்யப்பட்டதாக பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி கூறினார். அத் திட்டத்தைத் தொடரும் பட்சத்தில் ஆண்டுக்கு ரிம500 மில்லியன் வட்டி கொடுக்க வேண்டிவரும் என்பதால்…
இந்தியர்களிடம் மகாதிர் மன்னிப்பு கேட்க வேண்டும், மஇகா வலியுறுத்து
கேமரன் இடைத்தேர்தல் | எம் மனோகரனுக்கு எதிரான பிரதமர் டாக்டர் துன் மகாதிரின் நகைச்சுவை, இனவாதமாக இருப்பதால், இந்திய சமூகத்திடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மஇகா தகவல் தொடர்பு பொறுப்பாளர், வி குணாளன், மகாதிர் மன்னிப்பு கேட்க வேண்டும், குறிப்பாக கேமரன் மலை இந்திய வாக்காளர்களிடம்…
அம்பிகா : பிஎன் –ஐ வெளியேற்றுங்கள், ஹராப்பான் பல மடங்கு…
கேமரன் இடைத்தேர்தல் | நாளை நடைபெறவுள்ள கேமரன் மலை இடைத்தேர்தலில், பாரிசானுக்கு வெளியேறும் வழியைக் காட்டச் சொல்லி, முன்னாள் வழக்கரைஞர் மன்றத் தலைவர், அம்பிகா சீனிவாசன் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார். தன்னைப் பக்காத்தான் ஹராப்பானின் முக்கிய விமர்சகர் எனக் கூறிக்கொண்ட அம்பிகா, புதிய அரசாங்கத்தின் நிர்வாகம், முந்தைய அரசாங்கத்தைவிட பன்மடங்கு…
நஜிப் : ஹராப்பான் பரிசுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், பாரிசானுக்கு வாக்களியுங்கள்
நாளை, கேமரன் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள வேளையில், முன்னாள் பிரதமர் நஜிப் வாக்காளர்களுக்கு ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளார். ஹராப்பான் மிரட்டினால், புன்னகை செய்யுங்கள். பரிசு பொருள்களைக் கொடுத்தால், பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், மறந்தும் ஹராப்பானுக்கு வாக்களித்து விடாதீர்கள். இது, பூர்வக்குடியினரை அவமதித்து, மிரட்டிய சம்பவம் நடதுள்ளதாக கூறி, 2 மணி…
B40 காப்புறுதி திட்டம் குறித்து பி.எஸ்.எம். கவலை தெரிவித்துள்ளது
இன்று, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), ‘மைசலாம்’ எனும் B40 குழுவினருக்கான சுகாதாரக் காப்பீட்டு திட்ட அமலாக்கம் குறித்த ஒரு மகஜரை நிதியமைச்சிடம் கையளித்தது. இன்று காலை 10.30 மணியளவில், பிரதமர் டாக்டர் மகாதிர் ‘மைசலாம்’ திட்டத்தை அறிவித்த ஒரு மணி நேரத்தில், கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர்,…
இந்தியர்களின் வாக்குகள் ஹராப்பானுக்குச் சாதகமானவை, சிவராஜ் ஒப்புக்கொள்கிறார்
கேமரன் இடைத்தேர்தல் | கேமரன் மலை இடைத்தேர்தலில், இந்திய வாக்காளர்களின் பிளவு, பக்காத்தான் ஹராப்பானுக்குச் சில நன்மைகளைக் கொண்டுவரும் எனக் கேமரன் மலை முன்னாள் எம்பி சி சிவராஜ் தெரிவித்தார். கேமரன் மலை நாற்காலியை மஇகா அம்னோவிடம் கொடுத்தது இந்திய வாக்காளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது மட்டுமின்றி, எம் மனோகரன்…
நீர் கட்டண உயர்வு: எல்லா மாநிலங்களும் வரவேற்பு என்கிறார் அமைச்சர்;…
ஜோகூர், சாபா மாநிலங்கள் நீர் கட்டணத்தை உயர்த்தப் போபதில்லை என்று கூறியுள்ளன. இது, நீர்க் கட்டணத்தை உயர்த்த எல்லா மாநிலங்களும் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக நீர், நில, இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறியதற்கு முரணாக உள்ளது. ஜோகூர் அனைத்துலக வாணிகம், முதலீடு, பயனீட்டுக் குழுத்…
திரெங்கானு சுல்தான் தலைமையில் ஆட்சியாளர் கூட்டம்
16வது பேரரசரையும் துணைப் பேரரசரையும் தேர்ந்தெடுப்பதற்காக கூடியுள்ள ஆட்சியாளர்களின் சிறப்புக் கூட்டத்துக்கு திரெங்கானு ஆட்சியாளர் சுல்தான் மிர்சான் சைனல் அபிடின் தலைமை தாங்குகிறார். இன்று காலை 11.15க்குத் தொடங்கிய அக்கூட்டத்தில் ஒன்பது மாலாய் ஆட்சியாளர்களில் எண்மர் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 6-இல் பேரரசர் பதவியிலிருந்து விலகிய கிளந்தான் ஆட்சியாளர்…
அமைச்சர் : தெலோம் அணைகட்டு திட்டத்தை அரசாங்கம் இரத்து செய்கிறது
கேமரன் இடைத்தேர்தல் | கேமரன் மலையில் தெலோம் அணைகட்டு திட்டம் தொடரப்படாது என்று எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் இயோ பீ யீன் இன்று அறிவித்தார். இன்று, போஸ் லானையில், பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தின்போது பேசிய அவர், கடந்த ஆண்டு அக்டோபரில் தனது…
நஜிப்: அல்டான்துயாவைச் சந்தித்ததில்லை. அவரின் உறவினர் சொல்வது பொய்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கொலையுண்ட மங்கோலியப் பெண்ணான அல்டான்துயாவைச் சந்தித்ததே இல்லை என்று அடித்துக் கூறினார். “சந்தித்தேன் என்பது அவதூறு. பொய். அவரை நான் பார்த்ததே இல்லை”, என கேமரன் மலையில் தேர்தல் பரப்புரையில் மும்முரமாக உள்ள நஜிப் செய்தியாளர்களிடம் கூறினார். ஏற்கனவே ஒரு பள்ளிவாசலில்…
அல்டான்துயா ‘துணைப் பிரதமர்’ ரசாக்குடன் உள்ள நிழற்படத்தைப் பார்த்தாராம் உறவினர்
அல்டான்துயா ஷாரிபுவின் உறவினர் ஒருவர் கொலையுண்ட மங்கோலியப் பெண் அவரின் அப்போதைய காதலர் அப்துல் ரசாக் பாகிண்டாவுடனும் ரசாக் என்ற பெயரைக்கொண்ட ஒரு “துணைப் பிரதமரு’டனும் உள்ள ஒரு புகைப்படத்தைப் பார்த்ததை இன்று மறுஉறுதிப்படுத்தினார். “நாங்கள் மங்கோலியாவில் சந்தித்துக் கொண்டபோது அவர் பாரிஸ் பயணத்தின்போது பிடித்த படங்களைக் காண்பித்தார்.…
ஹரப்பான் தேர்தல் பரப்புரைக்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்துகிறதா?
கேமரன் மலை தேர்தல்: பக்கத்தான் ஹரப்பான் பரப்புரைகளில் ஈடுபட பகாங் வனத்துறை வாகனங்களைப் பயன்படுத்துகிறதா என்ற கேள்விக்கு டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பதிலளிக்க மறுத்தார். “நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை...... (தேர்தல்) இயக்குனரும் அதிகாரிகளும் பதில் சொல்வதே பொருத்தமாக இருக்கும். “பரப்புரைகளுக்கு யார் பொறுப்போ…
சிசிஎம் உயர் அதிகாரியின் மகன் ரிம500 மில்லியன் குத்தகை தொடர்பான…
மலேசிய நிறுவனங்களின் ஆணைய(சிசிஎம்)த்தின்மீது மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மேற்கொண்டுள்ள புலன் விசாரணைக்கு உதவியாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரியின் மகன் சில ஆவணங்களை ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார். 20-வயதுடைய அந்நபருக்கு அந்த அரசுத் தொடர்பு நிறுவனத்தில் ரிம500 மில்லியன் பெறுமதியுள்ள ஒரு குத்தகையில் நிகழ்ந்த ஊழலில் தொடர்பிருப்பதாக…
டாக்டர் எம் : இஸ்ரேல் குற்றவாளி, அவர்களுடன் தொடர்பு வைத்துகொள்ள…
இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள், ஒரு குற்றவாளி நாட்டிலிருந்து வருவதால், அவர்களை மலேசியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் மீண்டும் வலியுறுத்தினார். நமது நாட்டில் விரும்பத்தகாதவர்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று டாக்டர் மகாதிர் கூறினார். பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களும் இதில் அடங்குவர். "அவர்களுடன் (இஸ்ரேல்)…
தைப்பூசத்தில் வானவேடிக்கை விபத்து : மேலும் ஒருவர் கைது
நேற்றிரவு தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது, பத்துமலை, ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயம் அருகே வெடித்த வானவேடிக்கை விபத்து தொடர்பில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை மணி 3 அளவில், பத்துமலை வட்டாரத்தில், 25 வயது நிரம்பிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக, கோம்பாக் போலிஸ் தலைவர் ஏசிபி சம்சோர்…
கிட் சியாங்: ரம்லி , ஓராங் அஸ்லிகளின் வெற்றி அல்ல…
பிஎன் வேட்பாளர் ஓராங் அஸ்லி இனத்தைச் சேர்ந்த ரம்லி முகம்மட் நோர் ஒரு முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி என்பது பழங்குடி மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் 60 ஆண்டுக்கால முயற்சிக்குக் கிடைத்த வெற்றியைக் குறிக்கவில்லை, தோல்வியைத்தான் குறிக்கிறது என்கிறார் லிம் கிட் சியாங். “மற்ற இனங்களுக்கு நிகராக ஓராங்…
மகள் இறந்து ஓராண்டு ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்கிறார்…
ஓர் ஆசிரியரின் கைபேசியைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட எம்.வசந்த பிரியா,13. இறந்து ஓராண்டு ஆகிறது. அவரது இறப்புமீது கடந்த ஜூலை மாதம் ஒரு மாதம் முழுக்க விசாரணை நடந்தது என்றாலும் மகளின் சாவுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் உள்ளார் அவரின் தந்தை ஆர்.முனியாண்டி.…





















