அன்வார்: மகாதிர் பிரதமர் பொறுப்பை ஒப்படைக்க காலவரையறை நிர்ணயிக்கப்போவதில்லை

டாக்டர்    மகாதிர்   முகம்மட்    குறிப்பிட்ட   காலத்துக்குள்    பிரதமர்   பதவியை  மாற்றிவிட     வேண்டும்    என்று   காலவரையெல்லாம்   விதிக்கப்போவதில்லை     என   பிகேஆர்   நடப்பில்    தலைவர்   அன்வார்   இப்ராகிம்   கூறுகிறார். “சிலர்   நிகழ்ந்துள்ள   (பிஎன்னிடமிருந்து   பக்கத்தான்   ஹரப்பானுக்கு) ஆட்சிமாற்றம்  நீடிக்காது   என்று   நினைக்கிறார்கள்.  நான்  அப்படி    எண்ணவில்லை. “அது  நீடிக்காமல்   உடைந்துபோக   எனக்கும் …

குட்டி 1எம்டிபிகள் நிறையவே உண்டு- டயிம்

அரசுத்  துறைகளும்   ஜிஎல்சிகளும்   சம்பந்தப்பட்ட    பல  முறைகேடுகள்  குறித்து   பக்கத்தான்  ஹரப்பான்   அரசாங்கத்துக்குத்    தெரிய  வந்திருப்பதாக      மூத்த ஆலோசகர் மன்ற(சிஇபி)த் தலைவர் துன் டாயிம்    சைனுடின்   தெரிவித்தார். “குட்டி  1எம்டிபிகள்  நிறையவே  உள்ளன”,  என்று   புளூம்பெர்க்கிடம்   தெரிவித்த   டயிம்,  “இழப்புகள்  மலைக்க  வைக்கின்றன.  கணக்கிட்டு   வருகிறோம்.  பெரிது  மிகப்  …

மகாதிர் : மக்களுக்குத் தேவைப்படும் வரை, நான் பணியாற்றுவேன்

துன் டாக்டர் மகாதிர் முகமட், மக்கள் விரும்பும் வரை அல்லது அவரது சேவை மக்களுக்குத் தேவைப்படும் வரை, பிரதமராகப் பணியாற்றத் தயாராக இருப்பதாக கூறினார். "ஆனால், நிச்சயமாக நான் எவ்வளவு காலம் வாழமுடியும் என்பது எனக்குத் தெரியாது," என்று கூறிய அவர், இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனக்கு 95…

நஜிப்மீது குற்றஞ்சாட்டுமாறு புதிய ஏஜியை அவசரப்படுத்தாதீர்- ஸ்ரீராம்

1எம்டிபி   விவகாரம்   தொடர்பில்  முன்னாள்  பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்மீது  குற்றஞ்சாட்ட   புதிய   சட்டத்துறைத்   தலைவ(ஏஜி)ருக்குப்  போதுமான   அவகாசம்  வழங்கப்பட    வேண்டும்  என்கிறார்   மூத்த   வழக்குரைஞர்    கோபால்  ஸ்ரீராம். நஜிப்புக்கு  எதிராக  2015-இலேயே   குற்றப்பத்திரிகை   தயாராகி    விட்டதாகக்  கூறப்பட்டாலும்  நஜிப்   குற்றம்   எதுவும்  செய்யவில்லை    என்று  முன்னாள்   ஏஜி …

‘மருத்துவமனையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதே என் கே.பி.ஐ.’

அரசாங்க மருத்துவமனைகளில் காத்திருக்கும் செயல்முறைகளைத் துரிதப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவுள்ளதாகப் புதிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மட் உறுதியளித்தார். சில மருத்துவமனைகளால் அவ்வாறு செய்ய முடிகிறது என்றும் நாடு முழுவதும் அதனைச் செயல்படுத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். "இது என் கே.பி.ஐ.-இன் (செயல்திறன் காட்டி அட்டவணை) ஒரு…

புதிய தேசியக் கார் திட்டம், மகாதிர் விருப்பம்

பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், ஒரு புதிய தேசியக் கார் திட்டத்தை நிறைவேற்ற விரும்புவதாக வலியுறுத்தியுள்ளார், புரோட்டனின் கிட்டத்தட்ட பாதி பங்கு சீனாவிற்கு விற்கப்பட்ட நிலையில். “புரோட்டன் இப்போது தேசியக் கார் இல்லை. "அது இப்போது சீனாவுக்குச் சொந்தமானது. "ஆசிய நாடுகள் மற்றும் நமது பங்காளிகளின் உதவியுடன்…

நஜிப் மீது குற்றம் சாட்டுவதில் அவசரம் வேண்டாம், மகாதிர் எச்சரிக்கிறார்

  1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் மீது குற்றம் சாட்டுவதில் அவசர நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சிக்கு எதிராக பிரதமர் மகாதிர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "நாம் எப்போது நஜிப்பை கைது செய்யப் போகிறோம் என்பதற்காக பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு சுலபமானதல்ல. நீதிமன்றம் ஏற்றுகொள்ளக்கூடிய ஆதாரங்களை…

ஹரப்பான் வழியில் போராடுவீர்: அம்னோவுக்கு பங் அறிவுறுத்து

அம்னோ    உச்சமன்ற   உறுப்பினர்     பங்    மொக்தார்   ரடின்,   மே  9 பொதுத்   தேர்தல்   தோல்வியால்  துவண்டு  போன  தம்   தீவகற்ப   சகாக்களுக்கு   பயனான   எதிர்க்கட்சியாக   விளங்குவது    எப்படி   என்று   ஆலோசனை    கூறியுள்ளார். மலேசியாகினியிடம்    உரையாடிய    பங்,   பக்கத்தான்   ஹரப்பான்  எதிரணியில்    இருந்தபோது    எப்படிச்   செயல்பட்டதோ   அதே  முறையில்   அம்னோவும்   …

கிட் சியாங்: 1998 மக்கள் எழுச்சி மீண்டும் நிகழாது

டிஏபி    பெருந்  தலைவர்     லிம்  கிட்   சியாங்,   1998-இல்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்   பிரதமராகவும்   அன்வார்   இப்ராகிம்   துணைப்  பிரதமராகவும்    இருந்தபோது   நிகழ்ந்த   மக்கள்    எழுச்சி  போன்று    மீண்டும்  ஒன்று   நிகழ  வாய்ப்பில்லை    என்று   நம்புகிறார். கடந்த   20  ஆண்டுகளில்தான்   எத்தனை  மாற்றங்கள்.  அத்தனையும்    நல்லதுக்கென்றே     தோன்றுகிறது    என்றாரவர்.…

பிகேஆரில் பிளவா? மறுக்கிறார் வான் அசிசா

பிகேஆர்   பல்வேறு  அணிகளாக   பிளவுபட்டு   ஒன்றோடொன்று   சர்ச்சையிட்டுக்  கொண்டிருப்பதாகக்  கூறப்படுவதை   மறுத்த    அதன்    தலைவர்   டாக்டர்   வான்   அசிசா   கட்சியில்  இருப்பது   ஒரே  அணிதான்  என்றார். “ஒரே  அணிதான்  உண்டு.  அதுவும்   என்னுடைய   அணி”,  என்று   பெட்டாலிங்   ஜெயாவில்     செய்தியாளர்   கூட்டத்தில்    வான்  அசிசா   கூறினார். பிகேஆரில்   பல  …

பேங்க் நெகாராவின் முன்னாள் மேலாளர் கோகிலாவுக்கு நீதி வேண்டும்

கடந்தாண்டு ஜூலை 19-ம் தேதி, மலேசிய தேசிய வங்கியில் 12 ஆண்டுகளாக மேலாளராக இருந்த கோகிலா பணி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பேங்க் நெகாரா கூறிய காரணம், மே 1, 2016 தொழிலாளர் தினத்தன்று நடந்த ஒரு பேரணியில், ‘பாதால் ஜிஎஸ்டி’ (ஜிஎஸ்டி-யை ஒழிப்போம்) எனும் டி-சட்டையை கோகிலா…

முன்னாள் அம்னோ பிரதிநிதி பேராக் எம்பி ஆலோசகரா? எம்பிக்கு எதிராக…

பேராக்   மந்திரி   புசார்  அஹமட்   பைசல்  அஸுமு,  முன்னாள்   அம்னோ   சட்டமன்ற   உறுப்பினரான  சைனோல்  பாட்ஸி பஹாருடினை     தமக்கு   ஆலோசகராக   நியமனம்  செய்திருப்பதற்குத்   தக்க   விளக்கமளிக்கத்   தவறினால்   பேராக்   செயலகத்துக்கு   வெளியில்    ஆர்ப்பாட்டம்   நடத்தப்போவதாக    Otai Reformis  எச்சரித்துள்ளது.    Otai Reformis  அன்வார்   இப்ராகிமின்   தீவிர   ஆதரவாளர்களைக்  கொண்ட  …

சலாஹூடின் : சொத்துக்கள் அறிவிப்பு நேர்மையை மீட்டெடுக்கும் சரியான நடவடிக்கை

அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அரசியல் செயலாளர்கள் அனைவரும் பிரதமரிடம் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்பது, பொது ஊழியர்கள் நேர்மையை நிலைநாட்ட ஒரு துல்லியமான நடவடிக்கை ஆகும். விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலாஹூடின் அயூப், பரிசு போன்றவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் நியாயமானது, இதனால் எந்தவொரு…

கிட் சியாங்கின் அரசியல் செயலாளராக வழக்குரைஞர் ஷயாரெட்ஸான் நியமிக்கப்பட்டுள்ளார்

  வழக்குரைஞர் ஷயாரெட்ஸான் ஜோகன் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஎபியின் நாடாளுமன்ற தலைவர் மற்றும் இஸ்கண்டர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம்மின் அரசியல் செயலாளராக ஷயாரெட்ஸான் நியமிக்கப்பட்டிருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக டிஎபி தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில்…

எம்ஓஎப்: ராயா போனசுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவை

முந்தைய    அரசாங்கத்தால்    அரசுப்   பணியாளர்களுக்கு   வழங்கப்படும்  என்று    வாக்குறுதி   அளிக்கப்பட்ட    ஹரி  ராயா   போனஸுக்கு   நிதி  ஒதுக்க   நாடாளுமன்ற  ஒப்புதல்   தேவை   என்று   நிதி  அமைச்சு  வலியுறுத்தியது. “ ஹரி  ராயா   போனஸ்   பற்றி   2018  பட்ஜெட்   உரையில்   குறிப்பிடப்பட்டது   என்றாலும்    பட்ஜெட்டில்   அதற்கான   நிதி  ஒதுக்கப்படவில்லை”,  என …

1எம்டிபி: நஜிப் மீது குற்றம் சாட்ட அமெரிக்கா ஆலோசிக்கிறது, அதை…

  முன்னாள் பிரதமர் நஜிப் அல்லது அவரது சகாக்கள் மீது குற்றம் சாட்டும் சாத்தியத்தை அமெரிக்க அரசு தரப்பு வழக்குரைஞர்கள் எண்ணிப்பார்த்துள்ளனர். இருப்பினும், அவர்கள் மீது முதலில் மலேசியா கிரிமினல் குற்றம் சுமத்துவதை அமெரிக்க அதிகாரிகள் விரும்புகின்ற்னர். இப்படித்தான் அது செய்யப்பட வேண்டும் என்று ஓர் அமெரிக்க சட்ட…

மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிரான வெறுப்பு தூண்டிவிடப்படுவதால் சிலாங்கூர் சுல்தான் திகிலடைந்துள்ளார்

  மலாய் ஆட்சியாளர்களை பகிரங்கமாக அவமதித்தல், சிறுமைப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிடுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷா திகிலடைந்திருப்பதாக கூறினார். இதில் வருத்தத்திற்குரிய இவற்றை செய்பவர்கள் மலாய்க்காரர்களே என்று கிள்ளானில் இன்று ஒரு நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் பேசிய சுல்தான்…

முடியாட்சியை நிராகரிக்கவில்லை, அவர்களை மக்களின் கோபத்திற்காளாகமல் பாதுகாக்கிறேன், மகாதிர் கூறுகிறார்

சில தரப்பினர் கூறுவது போல தாம் முடியாட்சியை நிராகரிக்கவில்லை என்று பிரதமர் மகாதிர் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் புரட்சியில் இறங்கிவிடும் அளவிற்கு ஆட்சியாளர்கள் மக்களுக்கு சினமூட்டாமல் இருப்பதைத் தடுப்பதே தமது நடவடிக்கைகளின் நோக்கம் என்று பிரதமர் சினார் ஹரியானுக்கு அளித்த நேர்காணலில் கூறினார். "நாம் கவனமாக…

அல்தான்துயா கொலையாளி சிருல் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்

  அல்தான்துயாவை கொலை செய்தவர்களில் ஒருவரான முன்னாள் போலீஸ் கொமாண்டோ சிருல் அஸ்ஹார் ஒமார் ஒரு மாதத்திற்குள் மலேசியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று த கார்டியன் அதன் இன்றையச் செய்தில் கூறுகிறது. மலேசியா விடுத்திருந்த வேண்டுகோளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சிருலை முறையாக நடத்தவும், அவரை திருப்பி அனுப்புவதற்கான செலவை…

ஜிஇ14 கேமரன் மலை முடிவு மீதில் சவால்

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின், பிகேஆர் வேட்பாளர் எம்.மனோகரன் பாரிசான் நேசனல் (பிஎன்) வேட்பாளர் சி. சிவராஜின் தேர்தல் வெற்றிக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனோகரன், 59, சி.சிவராஜ்-க்கு எதிராக, குமார் அசோசியேட்ஸ் வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கை…

ஜோ லோவின் வழக்கறிஞர் எம்ஏசிசி-ஐ தொடர்பு கொள்ளவில்லை

1எம்டிபி-உடன் தொடர்புள்ள, சர்ச்சைக்குரிய தொழில் முனைவர் ஜோ லோவின் வழக்கறிஞர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என ஆதாரங்கள் கூறுகின்றன. "ஜோலோவின் வழக்கறிஞர் எங்களை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை, அவர் ஏன் நேரிடையாக பேசாமல், வழக்கறிஞர் மூலம் பேச வேண்டும்?" என்று மலேசியாகினியிடம்…

அரசு ஊழியர்கள் அரசியல் அடிமைகளாக இருக்கமாட்டார்கள், சலாஹூடின் உறுதியளித்தார்

விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலாஹூடின் அயூப், அவருடைய அமைச்சின் ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுத்தபடமாட்டார்கள் என்று உறுதியளித்தார். மாறாக, மக்கள் மற்றும் நாட்டிற்கு, தங்கள் சேவையை ஆற்ற அவர்களுக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்றார். "அரசாங்க அதிகாரிகளுக்குத் தங்கள் கடமைகளை நிறைவேற்ற சுதந்திரம் கொடுப்பதன் மூலம், அவர்களின்…