செய்தியாளர் கசோகியைக் கொலை செய்தவர்கள் மீது குற்றம் சாட்டப்படும், சவூதி…

  மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து கொடுத்த அழுத்ததைத் தொடர்ந்து செய்தியாளர் ஜமால் கசோகியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று சவூதி அரேபியா ஐக்கிய நாட்டு மன்றத்திடம் (ஐநா) திங்கட்கிழமை கூறியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சவூதி அரேபியாவின் செயல்பாடுகள் பற்றிய ஐநாவின் முதல் ஆய்வுக் கூட்டத்தில்…

தீபாவளி வாழ்த்துகள்

தீபாவளி திருநாளைக் கொண்டாடும் அனைத்து வாசகர்களுக்கும்  மலேசியாஇன்று  குடும்பத்தினரின் இனியத் தீபத் திருநாள் நல்வாழ்த்துகள். அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பின் ஒளி பரவட்டும்..... மகிழ்ச்சியும் இனிமையும் நிறையட்டும்!

RM263 மில்லியன் இலஞ்சம் தொடர்பான 35 ஊழல் குற்றச்சாட்டுகளை மூசா…

சபா முன்னாள் முதலமைச்சர் மூசா அமானுக்கு எதிராக, RM263 மில்லியன் பெறுமதியானக் கட்டுமரக் குத்தகை ஒப்பந்தம் தொடர்புடைய 35 ஊழல் குற்றச்சாட்டுக்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) பதிவு செய்துள்ளது. 2004 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், பினாமிகள் வழியாக ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் மூசா அச்செயல்களில் ஈடுபட்டதாகக்…

இந்து அரசுப் பணியாளர்களுக்கு தீபாவளிக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை

அரசாங்கத்தில் பணிபுரியும் இந்துக்களுக்கு இவ்வாண்டு தொடங்கி தீபாவளிக்கான ஒரு நாள் பொது விடுமுறையுடன் ஒரு நாள் கூடுதல் விடுப்பும் வழங்கப்படுகிறது. இது பதிவு செய்யப்படாத விடுப்பாகும். இந்த நற்செய்தி பொதுச் சேவை தலைமைச் செயலாளர் பொர்ஹான் டோலா விடுத்துள்ள அதிகாரத்துவ சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பதிவு செய்யப்படாத அந்த விடுப்பை…

கட்சியைக் கலைக்க வேண்டும், 16 அம்னோ உறுப்பினர்களின் கோரிக்கையை நீதிமன்றம்…

குறிப்பிட்ட காலவரைக்குள் கிளை மற்றும் தொகுதி தேர்தல்களை நடத்தத் தவறியதால், அம்னோவைக் கலைக்க வேண்டும் எனும் 16 அம்னோ உறுப்பினர்களின் முறையீட்டை, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. டாக்டர் படாரியா சாகமித் தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு,  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தக்க வைத்துக்கொண்டது. 14-வது…

பி.எஸ்.எம். : B40 காப்புறுதி திட்டம், ஏழைகளுக்கு முழுமையானப் பயனைக்…

2019 பட்ஜெட் | மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், 2019 வரவு செலவுத் திட்டத்தின் கீழ், B40 குழுவினர் பயனடையும் வகையில், கடுமையான வியாதிகளுக்கு RM8,000 வரையில் இலவச மருத்துவத்திற்கான காப்புறுதி திட்டத்தை வழங்கும், புதிய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாகக் கூறியுள்ளார். இருப்பினும்,…

மூசா அமானுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் சாபா முதல்வர் மூசா அமான் ஊழல் குற்றங்களுக்காக இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாமே வெட்டுமரக் குத்தகை கொடுக்கப்பட்டதில் நிகழ்ந்த ஊழல்கள். அவர்மீது 35 ஊழல் குற்றங்கள் சுமத்தப்படும் என்று அரசாங்கத்துக்கு அணுக்கமான வட்டாரம் ஒன்று தெரிவித்தது. இந்த ஊழலில் மொத்தம் யுஎஸ்$63…

பிரதமர் அரசாங்க அதிகாரியா, இல்லையா? கூட்டரசு நீதிமன்றம் முடிவு செய்யும்

பிரதமர் என்பவர் அரசாங்க அதிகாரியா இல்லையா என்ற விவகாரத்துக்குக் கூட்டரசு நீதிமன்றம் முடிவு காணும். அவ்விவகாரத்தைக் கூட்டரசு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல டமன்சாரா எம்பி டோனி புவாவுக்குக் கூட்டரசு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு அனுமதி அளித்தது. முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரசாங்கப் பணியில் இருந்தபோது…

’நன்கொடை’ பொய்தான் பிஎன் தோல்விக்குக் காரணம்: நஜிப்பைச் சாடுகிறது அம்னோ…

தம் கணக்கிலிருந்த பணம் சவூதி அரசாங்கத்திடமிருந்து வந்த நன்கொடை என்று நெடுகிலும் கூறி வந்த நஜிப், இப்போது அது எங்கிருந்து வந்தது என்பது தமக்குத் தெரியாது என்றுரைத்திருப்பதன்வழி மலேசியர்களை, அதிலும் குறிப்பாக அம்னோ உறுப்பினர்களை ஏமாளிகளாக்கி விட்டார்”, என்று மிங்குவான் மலேசியா ஏடு சாடியுள்ளது. நஜிப், அல் ஜசீராவு…

மசீச-வின் புதியத் தலைவர், வீ கா சியோங்

மசீச தேர்தல் | ஆயேர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர், வீ கா சியோங், மசீச-வின் புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மசீச-வைப் பிரதிநிதித்து, நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கும் ஒரே தலைவர் வீ கா சியோங் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு தவணையாக, மசீச-வின் துணைத் தலைவராக இருந்த அவர், மும்முணைப் போட்டியில் வென்று,…

‘முந்தைய அரசாங்கத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ பேராக் சுல்தான் ஹராப்பானுக்கு நினைவூட்டல்

“முந்தைய அரசாங்க நிர்வாகத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், அதிகாரத் துஸ்பிரயோகம் செய்யும் தலைவர்களைத் தூக்கியெறிய மக்கள் தயங்கமாட்டார்கள்,” என பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா ஹராப்பான் அரசாங்கத்திற்கு இன்று நினைவுறுத்தினார். தனிப்பட்ட இலாபத்திற்காகப் பதவியைப் பயன்படுத்தும் தலைவர்களை அம்பலப்படுத்த, குடும்ப உறுப்பினர்களுக்குச் செல்வம் குவிக்கும் அல்லது வர்த்தகர்களுக்கு ஒரு…

பிடிபிடிஎன் : கடனைத் திருப்பிச் செலுத்த சிறந்த வழிகாண, கடனாளிகளுடன்…

பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து அறிவிக்கப்பட்ட நடவடிக்கையால் ஏமாற்றமடைந்த, டேவான் நெகாரா செனட்டர் யூஸ்மடி யூசுஃப், இந்தச் சிக்களுக்குச் சிறந்த தீர்வைக் கண்டுபிடிக்க, அரசாங்கம் கடனாளிகளுடன் கலந்துபேச வேண்டும் என்றார். கடன் வாங்கியவர்களின் கருத்துக்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அரசாங்கம் செயல்படுகிறது என்று அவர் விவரித்தார். “அரசாங்கம்…

2019 வரவு செலவு திட்ட விமர்சனங்களைப் புத்ரா ஜெயா தற்காக்கும்

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் முதல் வரவு செலவு திட்டமான, 2019-ஆம் ஆண்டின் பட்ஜெட்டை அனைத்து விமர்சனங்களில் இருந்தும் அரசாங்கம் தற்காக்கும் எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார். குறிப்பிட்ட சில தரப்பினரின் ஆரம்ப எதிர்பார்ப்புகள் வேறுமாதிரியாக இருந்தபோதும், அடிப்படையில் ஒதுக்கப்பட்ட வரவு செலவு திட்டம் மிக…

நஜிப் : ‘ஹராப்பான் சம்பளத்தை மட்டும் அறிவித்துள்ளது, பிள்ளைகளின் சொத்துக்களையும்…

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருமானத்தை மட்டுமே அறிவித்த, பக்காத்தான் ஹராபானின் நிர்வாக சொத்து பிரகடனத்தை, முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் இன்று விமர்சித்தார் ஹராப்பான் சொத்துக்களை அறிவிப்பது உண்மை என்றால், அமைச்சர்கள் மற்றும் எம்பி-க்களின் பிள்ளைகளின் வருமானம் மற்றும் சொத்துக்களையும் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும் என்றார் அவர்.…

கெனிங்காவ் வாக்களிப்பு மையத்தில் ரஃபிஸி தாக்கப்பட்டார்

பிகேஆர் தேர்தல் | பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரஃபிஸி ரம்லி, சபா, கெனிங்காவில் இன்று மதியம் தாக்கப்பட்டார். இன்று மாலை 4 மணியளவில், வாக்களிப்பு மையத்தை விட்டு வெளியேறியபோது, ஓர் ஆடவர் தன்னைத் தலையில் தாக்கியதாக ரஃபிஸி மலேசியாகினியிடம் தெரிவித்தார். "ஒரு குழுவினர் என்னை சுற்றி…

ஜாஹிட் : 2019 வரவு செலவுத் திட்டத்தில், ஏழைகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்

நேற்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019 பட்ஜெட்டில், கிராமப்புறப் பகுதி மக்கள், குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள் போன்றோர் நேரடியாக பயனடையவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார். "அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைகள், பொருட்களின் விலை உயர்ந்துவரும் இக்காலக்கட்டத்தில், அவர்கள் மீது…

அரசாங்க ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி

2019 வரவு செலவு திட்டம் | அரசாங்க ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி வழங்கவுள்ளதாக, 2019 வரவு செலவு திட்டத் தாக்கலின் போது, நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் காட்டும் பொறுப்புணர்வுக்கு நன்றி கூறும் வகையில், கிரேட்…

RM500-லிருந்து RM1,000 வரை வாழ்வாதார உதவிநிதி

2019 வரவு செலவு திட்டம் | 40 விழுக்காடு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை (பி.எஸ்.எச்.) வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடரும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார். RM2,000 அல்லது அதற்கும் குறைந்த மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, RM1,000 உதவிதொகை…

தேர்ந்தெடுக்கப்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் மானியம்

2019 வரவு செலவு திட்டம் | நான்கு மில்லியன் கார் மற்றும் 2.6 மில்லியன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட மானிய திட்டங்களை அரசாங்கம் விரைவில் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோன் 95 பெட்ரோலுக்கு, மாதம் 30 சென் மானியம், 1.5cc கார் உரிமையாளர்களுக்கு 100 லிட்டருக்கும், 125cc…

பிஎம்ஓ கொடுத்த பணத்தில் ரிம 5மில்லியனைக் காணோம்; ரிம6.4மி. ஜிஇ14க்குக்குச்…

மலேசிய மலாய் வர்த்தகச் சங்க(டிபிஎம்எம்)த்தில் பிரச்னை. அதன் தலைவர் ரிசால் ஃபாரிஸ் மொகிதின் அப்துல் காடிரின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுவதால் துணைத் தலைவர் சைட் உசேன் அல்ஹாப்ஷியும் 17 நிர்வாக மன்ற உறுப்பினர்களும் அவசரக் கூட்டமொன்றை நடத்த விரும்புகிறார்கள். சந்தேகத்தை ஏற்படுத்தும் விசயங்களில் ஒன்று நஜிப் அப்துல் ரசாக்…

2019 வரவு செலவுத் திட்டம் : அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு

இன்று பிற்பகல் 3.30 மணியளவில், 2019-ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது. பக்காத்தான் ஹராப்பான் புதிய அரசாங்கத்தின், முதல் வரவு செலவுத் திட்டம் பலரின் எதிர்பார்ப்புகளுக்கு இடமளித்துள்ளது. பலர் இந்த வரவு செலவுத் திட்டத்தைப் பரபரப்பானதாகவும், சாத்தியமான ஒன்றாகவும் அமையும் என்றும் கருதுகின்றனர். அரசு ஊழியர்கள்…

தகவல் பெறுவதற்காக நஜிப்பின் கதவைத் தட்டியது எம்ஏசிசி

இன்று காலை எம்ஏசிசி அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று கோலாலும்பூர், லங்காக் டூடாவில் உள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இல்லம் சென்றது. அதிகாரிகள் அங்கு சென்றது திடீர்ச் சோதனைக்காக அல்ல என்று எம்ஏசிசி துணைத் தலைவர் (நடவடிக்கைகள்) அஸாம் பாக்கி கூறினார். ஆணையத்தின் விசாரணைக்குத் தேவையான…

பதின்ம வயதினருக்கு இரவுநேர ஊரடங்கு: கிளந்தான் அமனா, அம்னோ வரவேற்பு

கிளந்தான் அமனாவும் புத்ரி அம்னோவும் மாநில அரசு பதின்ம வயதினருக்கு இரவு நேர ஊரடங்கு விதிக்க உத்தேசித்திருப்பதை வரவேற்கின்றன. பதின்ம வயதினர் தீயவர்களின் செல்வாக்குக்கு எளிதில் ஆட்பட்டு அதன்வழி நாட்டில் குற்றச்செயல் பெருகுவதற்கும் காரணமாகிறார்கள் என மாநில அமனா இளைஞர் தலைவர் ஹஸ்மி ஹசான் கூறினார். “போதைப் பொருள்…