பெர்லிஸ் அம்னோ உறுப்பினர்கள் பலர் பெர்சத்துவில் சேர்வார்கள்- வான் சைபுல்

பெர்லிசில் அம்னோ உறுப்பினர் பலர் பெர்சத்துவில் சேரத் தயாராக இருக்கிறார்கள் என்றும் அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படும் சாத்தியமும் உள்ளது என்றும் பெர்லிஸ் பெர்சத்து கூறிக்கொண்டது. அதன் செயலாளர் வான் சைபுல் வான் ஜான், அம்மாநிலத்தின் அம்னோ தலைவர்கள் பலரைச் சந்தித்ததாகவும் அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறுவதற்கு தயாராக உள்ளனர் என்றும்…

வாக்களிப்பில் அஸ்மின் அணி முன்னணி, பிகேஆர் துணைத் தலைவர் பதவி…

பிகேஆர் தேர்தல் | பினாங்கில், அஸ்மின் அலி மற்றும் ரஃபிசி ரம்லிக்கு இடையிலான பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டி மிகவும் உக்கிரமாக இருந்தது. இருப்பினும், அந்தப் பொருளாதார விவகார அமைச்சரின் அணி, வாக்குச்சீட்டு பெட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று பினாங்கில் நடந்த அக்கட்சி தேர்தலில், அஸ்மினுக்கு…

அன்வார் : நாற்காலியைத் தூக்கி வீசியவரை, கட்சியிலிருந்து தூக்கி வீசுவோம்

மக்களுக்குச் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டுமென, நாடளவில் இரண்டாவது அதிக எண்ணிக்கைக் கொண்ட சபா பிகேஆர் உறுப்பினர்களைப் பிகேஆர் பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். அக்கட்சி மேல் வர்க்கத்தினருக்கு மட்டுமல்ல, மாறாக மக்களுக்காகப் போராடும் , மக்கள் நலனைப் பாதுகாக்கும் ஒரு கட்சி என்பதைக் கட்சி உறுப்பினர்கள்…

பிஎன்-ஐ கலைத்துவிடுங்கள், இல்லையேல் அம்னோவை நீக்கிவிடுங்கள் : அம்னோ-பாஸ் கூட்டணியை…

அம்னோ மத அரசியலை நோக்கி நகருமானால், பாரிசான் நேசனலில் இருந்து அம்னோவை விலக்கிவிடுவோம் என மசீச தேசியத் தலைவர் லியோ தியோங் லாய் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று, 2018 சிலாங்கூர் மசீச கொன்வென்சனில் பேசிய லியோ, பாரிசான் நேசனல் பண்பாட்டு பன்முகத்தன்மையைக் கடைப்பிடித்து, இந்நாட்டு மக்களின் நல்லிணக்கத்தைக் காக்க…

Close to a Million Ringit Grant to MySkills…

      MySkills Foundation (MSF), an organisation committed to providing vocational training to under-privileged youths, and Global Banking and financial services provider J.P. Morgan launched a demand-led workforces readiness initiative to empower at-risk youth…

பிடி-யில் இராணுவ வீரர்களின் வீடுகளைப் பழுது பார்க்க RM500,000 ஒதுக்கீடு

போர்டிக்சனில் (பி.டி.) இராணுவ வீரர்களின் வீடுகளைப் பழுது பார்க்கவும் அவர்கள் குடும்பத்தினருக்குத் தேவையான உள்கட்டமைப்புகளைச் செய்யவும் பாதுகாப்பு அமைச்சு RM500,000-ஐ ஒதுக்கீடு செய்துள்ளது. நேற்று, அவ்வமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு இராணுவத் தள மையத்திற்கு (புசாஸ்டா) நேரிடையாக மேற்கொண்ட ஒரு பயணத்திற்குப் பின்னர்…

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் முன்மொழிவுகளை ஆதரிக்க முன்னாள் அமைச்சர் தயாராக உள்ளார்

நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கும் மசீச-வின் ஒரே பிரதிநிதியான டாக்டர் வீ கா சியோங், தற்போதைய அரசு நிறுவனத்தைச் சீர்திருத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எதிர்க்கட்சி பிரதிநிதியாக இருந்தபோதிலும், மக்கள் மற்றும் நாட்டிற்கு நன்மைகளைக் கொடுக்கக்கூடிய ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.…

கிட் சியாங்: மகாதிருடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டால் குவான் எங்…

டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்,   டாக்டர் மகாதிர் முகம்மட்டுடனான  உறவுகளைத் துண்டித்துக் கொண்டு  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப்   பதவி இறக்கும் முயற்சியையும் நிறுத்திக் கொண்டால்    தம் மகன் லிம் குவான் எங்மீதான வழக்குகள் கைவிடப்படுமென 2016இல் தம்மிடம் பேரம் பேசப்பட்டதாக மீண்டும் கூறியுள்ளார்.…

பிகேஆரில் தேர்தல்

பிகேஆர் கட்சித் தேர்தல் இன்று தொடங்கியது. முதன்முதலாக கெடா, பினாங்கு உறுப்பினர்கள் காலை மணி 9க்கு வாக்களிக்கத் தொடங்கினர். பிகேஆரில் அன்வார் இப்ராகிம் ஆகஸ்ட் 5-இல் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, இப்போது அனைவரின் கவனமும் துணைத் தலைவர் பதவிமீது பதிந்துள்ளது. துணைத் தலைவர் பதவி கொம்பாக் எம்பியும்…

விஷ மது : முதலாளிகள் வெளிநாட்டு தொழிலாளர்களைக் கண்காணிக்க வேண்டும்

விஷ மது அருந்தி, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உட்பட சிலர் இறந்ததன் காரணமாக, அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் முதலாளிகள் அவர்களைக் கண்காணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம். குலசேகரன், குறைந்த விலையிலான மதுபானம் பெரும்பாலும் வெளிநாட்டவர்களின் தேர்வாக இருப்பதுடன், அவர்களில் சிலர் சுயமாகவே மதுபானம்…

விஷத்தன்மை கொண்ட மதுபானம் அருந்தியதால் மாண்டோர் எண்ணிக்கை 29 ஆக…

இன்று நண்பகல்வரை மேலும் எழுவர்- கோலாலும்பூரில் அறுவர், பேராக்கில் ஒருவர்- விஷத்தன்மை கொண்ட மதுபானம் அருந்தியதால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. செப்டம்பர் 15இலிருந்து சிலாங்கூர், கோலாலும்பூர், பேராக் ஆகியவற்றில் 76பேர் விஷத்தன்மை கொண்ட மது அருந்தியதால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா…

மகாதிர் பிரதமர் ஆனதில் அன்வாருக்கு மகிழ்ச்சி

துன் டாக்டர் மகாதிர் முகமட், மலேசியப் பிரதமர் ஆனதில் தனக்கு ‘மகிழ்ச்சி’ என அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். தற்போது பிரதமராக பதவியேற்றிருக்கும் மகாதிருக்கு அதிகமான பணிகள் உள்ளதாக, அல் ஜஷீரா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அன்வார் இன்று கூறியுள்ளார். “அவருக்கு ஒரு பெரிய வேலை உண்டு, நமக்கு இப்போது…

அமானா : பி.டி. பிரச்சாரத்தில் அரசு ஊழியர்களைப் பயன்படுத்த வேண்டாம்

எதிர்வரும் அக்டோபர் 13-ல் நடைபெறவுள்ள போர்ட்டிக்சன் (பி.டி.) இடைத்தேர்தல் உட்பட, எந்தவொரு அரசியல் பிரச்சாரத்திற்கும், பக்காத்தான் ஹராப்பான் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துவதை அமானா ஏற்றுக்கொள்ளாது என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. அமானா தேர்தல் கமிஷனின் இயக்குநர், டாக்டர் ஹத்தா ரம்லி, அக்கூட்டணி வெற்றிபெற அவர்களின் அரசியல் இயந்திரமே போதுமானது என்பதால்,…

முன்னாள் ராக்கெட் தலைமைச் செய்தி ஆசிரியரை பெர்னாமா தலைவராக்குவது சரியல்ல-…

டிஏபி செய்தித்தாளான ராக்கெட்டின் தலைமைச் செய்தி ஆசிரியர் பெர்னாமா தலைவராக்கப்படுவார் என்று ஆருடங்கள் கூறப்பட்டுவரும் வேளையில் அம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். “அது சரியான தேர்வல்ல” என்று குறிப்பிட்ட அந்த பெர்சத்து…

நஜிப் ரிம3.5மில்லியன் பிணைத் தொகையில் முதல் பகுதியைச் செலுத்தினார்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது பிணைத் தொகையின் முதல் பகுதியான ரிம 1மில்லியனைக் கட்டுவதற்கு இன்று கோலாலும்பூர் நீதிமன்ற வளாகம் வந்தார். தம் மகன் நோராஷ்மானுடன் வந்த அவர் பிணைத் தொகையைக் கட்டி பிணை தொடர்பான பல்வேறு ஆவணங்களிலும் கையெழுத்திட்டார். இதற்கு 8 நிமிடங்கள் ஆனது,…

வழக்குரைஞர் ஆர்ட் ஹருன் இசியின் புதிய தலைவர்

மூத்த வழக்குரைஞரான ஆர்ட் ஹருன் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அஸ்ஹார் அசிசான் தேர்தல் ஆணைய(இசி)த்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்ஹாரின் நியமனத்துக்கு யாங் டி பெர்துவான் ஆகோங் சுல்தான் ஐந்தாம் முகம்மட் இணக்கம் தெரிவித்திருப்பதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் இஸ்மாயில் பக்கார் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.…

நஜிப்பின் தாயார் வீட்டில் போலீஸ் தீடீர் சோதனை

  கோலாலம்பூர், ஜாலான் ஈட்டனிலுள்ள நஜிப்பின் தாயார் ராஹா முகமட் நோஆவின் வீட்டை போலீசார் இன்று மாலை திடீர் சோதனையிட்டனர். போலீஸ் வட்டாரத் தகவல்படி, பிற்பகல் மணி 4.00 அளவில் போலீசார் அந்தத் திடீர் சோதனையை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட அதே நேரத்தில் கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நஜிப் மீது…

நஜிப்புக்கு 3.5 மில்லியன் பிணை, நீதிமன்றம் அறிவித்தது

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசூரா அல்வி, 3.5 மில்லியன் ரிங்கிட் பிணையில், முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக்கிற்கு ஜாமீன் வழங்கினார். இன்று, 4 ஊழல் மற்றும் அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட 1எம்டிபி தொடர்பிலான RM2.6 பில்லியன் சம்பந்தப்பட்ட 21 மோசடி வழக்குகளை நஜிப் எதிர்கொண்டார். எல்லாக்…

கைரி : ‘வெட்கப்படாதீர்கள் துன், உங்கள் அரசாங்கம்தான் பிடிபிடிஎன் கல்விக்…

தேசிய உயர்க்கல்வி கடனுதவி (பிடிபிடிஎன்) தொகையைத் திருப்பி செலுத்தாத சிலரின் போக்கைக்கண்டு தான் வெட்கப்படுவதாகக் கூறியுள்ள பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் கூற்றை, ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுட்டின் விமர்சனம் செய்துள்ளார். அத்தொகையைத் திருப்பி செலுத்த, கால அவகாசம் கொடுத்தது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம்தான், எனவே மகாதிர்…

நஜிப் வழக்கு விசாரணையில் அமெரிக்கப் பார்வையாளர்கள்

இன்று தலைநகரில் நடந்த, முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் மீதான நீதிமன்ற விசாரணையில், அமெரிக்கப் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். நஜிப் குற்றம் சாட்டப்படுவதைப் பார்வையிட அமெரிக்க அதிகாரிகள் இருவர் நீதிமன்றத்தில் இன்று காணப்பட்டனர். அமெரிக்காவில் 1எம்டிபி சம்பந்தப்பட்ட பணமோசடி தொடர்பான ஒரு சிவில் வழக்கில், மலேசிய அதிகாரி 1 (MO1),…

நஜிப் மீது 32க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்

  இன்று பிறபகல் 2.25 க்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவருக்கு எதிராக மொத்தம் 32 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். பிற்பகல் மணி 2.15 அளவில் நஜிப்பின் வழக்குரைஞர் குழு நீதிமன்றத்திற்குள் வந்தனர்.

போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் அக்டோபர் 13 இல் நடைபெறும்

அக்டோபர் 13-இல், போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் நடைபெறும். அதற்கான வேட்பாளர் நியமனம் செப்டெம்பர் 29 இல் நடைபெறும். தேர்தல் பரப்புரைக்கு 14 நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கு ரிம3.6 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது. இந்த இடைத் தேர்தலில்…

ஹிசாம் இனத்தின், நாட்டின் எதிர்காலம் பற்றி பேச மகாதிரை சந்தித்தாராம்

  அம்னோவின் உதவித் தலைவார் ஹிசாமுடின் ஹூசேன் நேற்று புத்ரா ஜெயாவில் பிரதமர் மகாதிரை சந்தித்ததை உறுதிப்படுத்தினார். என்எஸ்டி செய்திப்படி, முன்னாள் தற்காப்பு அமைச்சரின் சிறப்பு அதிகாரி அந்தச் சந்திப்பு "(மலாய்) இனத்தின் மற்றும் நாட்டின் எதிர்காலம்" பற்றிய மகாதிரின் திட்டம் என்ன என்று தெரிந்து கொள்வதுதான்..."அவ்வளவுதான்" என்று…