மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
கட்டியை அகற்ற கிட் சியாங்கிற்கு அறுவைச் சிகிட்சை
டிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங்கின் இடது சிறுநீரகத்திலிருந்த கட்டியை அகற்ற மேற்கொண்ட அறுவைச் சிகிட்சை வெற்றிகரகமாக முடிந்தது. அவர் முதல் கட்ட புற்றுநோயிலிருந்து குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவரது மகன் லிம் குவான் எங் கூறினார். டிசம்பர் 19 இல், 76 வயதான…
அடுத்த வாரம் போலீஸ் இசா சமட்டிடம் விசாரணை
போலீசார், ஜாலான் செமராக் நில விவகாரம் தொடர்பில் பெல்டா முன்னாள் தலைவர் முகம்மட் இசா சமட்டை அடுத்த வாரம் விசாரிப்பார்கள். நில உரிமை மாற்றப்பட்ட நேரத்தில் பெல்டா தலைவராக இருந்தவர் என்பதால் இசாவின் வாக்குமூலத்தைப் பெறுவது முக்கியமாகும் என போலீஸ் படைத் துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் …
தென்கிழக்காசியாவில் வறுமை விகிதம் குறைவாக உள்ள நாடு மலேசியா- சாலே
அமெரிக்க மத்திய உளவுத்துறை (சிஐஏ) வெளியிட்டிருக்கும் World Factbook 2017 தென்கிழக்காசியாவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியாவில்தான் வறுமை விகிதம் மிகக் குறைவாக உள்ளதெனக் குறிப்பிடுவதாக தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறுகிறார். மலேசியாவில் வறுமை விகிதம் 3.8 விழுக்காடுதான். வியட்நாமிலும் தாய்லாந்திலும் 11.3 விழுக்காடு, …
பாஸ் மறுத்தாலும் ஹாடியின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது: மசீச சாடல்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் தாம் அமைக்கும் அமைச்சரவை எப்படி இருக்கும் என்று விளக்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கை அவர் முஸ்லிம்- அல்லாதாரிடம் பாகுபாடு காட்டுவதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என மசீச தலைவர் ஒருவர் கூறினார். அமைச்சரவையில் முஸ்லிம்-அல்லாதார் "kepakaran dan pengurusan" (நிபுணத்துவ, நிர்வாக) பணிகளுக்கு …
பிஎன் உயர்த்தலைவர்கள் கூட்டம் ஜனவரி 3-இல்
ஜனவரி 3-இல் நடைபெறும் பாரிசான் நேசனல் உச்சமன்றச் “சிறப்புக் கூட்டம்” தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கும் என்று பெரித்தான் ஹரியான் கூறியுள்ளது. பொதுத் தேர்தல் 2018 முதல் காலாண்டில் நடைபெறலாம் என ஒரு வட்டாரம் அந்நாளேட்டிடம் தெரிவித்துள்ளது. பிஎன் தலைவர்கள் பலரும் புத்ரா உலக வாணிக மையத்தில் நடைபெறும் …
பாஸ்: ‘முஸ்லிம் – மட்டுமே அமைச்சரவை’ என்று ஹாடி கூறவில்லை
அமைச்சரவையில் மலாய்-முஸ்லிம்கள் மட்டுமே சேரலாம் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியதாக வெளிவந்துள்ள செய்தியை பாஸ் மறுக்கிறது. டிசம்பர் 22 இல் ஹாடி வெளியிட்ட ஊடகச் செய்தியில் சில அமைச்சரவை பதவிகள் மலாய்-முஸ்லிம்களுக்கு ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் என்றுதான் ஹாடி கூறினார் என்று பாஸ் கட்சியின் தகவல்…
எரிபொருள் விலை ‘துருன் துருன்’ கண்டனக் கூட்டத்திற்கு போலீஸ் நிபந்தனைகள்…
புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பு டிசம்பர் 31இல் "துருன் ஹர்கா மின்யாக், துருன் நஜிப்" என்ற எதிர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு போலீஸ் பல நிபந்தனைகளை விதித்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் இன்று கூறினர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் அலுவலக உறுப்பினர் அஹமட் சூகிரி செ அபு ரசாக் போலீஸ் விதித்துள்ள நிபந்தனைகளில்…
ஹாடியின் ‘மலாய்-முஸ்லிம்-மட்டுமே அமைச்சரவை’ கூற்றுக்கு குவான் எங் கண்டனம்
இந்நாட்டின் அமைச்சரவை மலாய் - முஸ்லிம் உறுப்பினர்களை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியிருப்பதற்கு டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹாடியின் இக்கூற்று அரசமைப்புக்கு முரணானது என்பதோடு இது மலேசியாவின் சிதைவுக்கு இட்டுச்…
‘சிலாங்கூர் பாஸ் பிரதிநிதிகள் ஹாடி விசுவாசிகள்’
சிலாங்கூரின் இப்போதைய பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எப்போதும் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்குக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளனர் என்கிறார் சிலாங்கூர் பாஸ் தலைவர் இஸ்கண்டர் அப்துல் சமட். “காஜாங் நடவடிக்கை”யின்போது சிலாங்கூர் மந்திரி புசாராக காலிட் இப்ராகிம் தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் என்று ஹாடி …
‘சாபா எதிரணியின் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளை மதிப்பதில்லை’
சாபா எதிர்க்கட்சிகளின் கூட்டணியான காபோங்கான் சாபா, பக்கத்தான் ஹரபானுடனும் பார்டி வாரிசான் சாபா(வாரிசான்)வுடனும் தேர்தல் கூட்டு வைத்துக்கொள்வதற்கு அரும்பாடு படுகிறது. ஆனால், அவை இரண்டும் பிடி கொடுக்காமல் இழுத்தடிக்கின்றன. மலேசிய மாநிலங்களில் சாபாவில்தான் எதிர்க்கட்சிகள் அதிகமாக பிரிந்து கிடக்கின்றன. 60பேரைக் கொண்ட சாபா சட்டமன்றத்தில் ஐந்து எதிர்க்கட்சிகள், நான்கு …
எச்எஸ்ஆர் குத்தகையைப் பெற மெகா-குழுமம் அமைக்கிறது சீனா
சீனாவின் இரயில்வே துறை கோலாலும்பூர்-சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்டத்துக்கான குத்தகையைப் பெற பல நிறுவனங்களைக் கொண்ட மிகப் பெரிய இரயில்வே குழுமம் ஒன்றை அமைக்கிறது. அக்குழுமத்தில், சீன இரயில்வே கார்ப்பரேசன்(சிஆர்சி) தலைமையில் சீன இரயில்வே குரூப், சீன இரயில்வே கட்டுமான கார்ப்பரேசன், சீன கம்முனிகேசன் கட்டுமான நிறுவனம், சிஆர்ஆர்சி …
ஜெருசலம் விவகாரத்தில் கிறிஸ்துவர்களும் ஒன்றிணைந்துள்ளனர், ஹெர்மன் கூறுகிறார்
மலேசிய முஸ்லிம்கள் ஜெருசலம் விவகாரத்தில் தங்களுடைய ஒற்றுமையை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துவர்களும்கூட ஒன்றிணைந்துள்ளனர், ஆனால் அது அவர்களுடைய தேவாலயங்களுக்குள்ளேயே என்று மலேசிய தேவாலயங்கள் மன்றத்தின் பொதுச் செயலாளர் ஹெர்மன் சாஸ்திரி கூறுகிறார். இங்குள்ள பெரும்பாலான தேவாலயங்கள் ஜெருசலம் பற்றிய விவகாரத்தில் ஐநாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றன என்று அவர்…
புவாட் : பெல்டாவில் ‘மாஃபியா’ இருக்கிறதா?
பெல்டாவின் இடமாற்றப்பட்ட நிலத்தை மறுபடியும் திருப்பி வழங்குவதில் ஒத்துழைக்க மறுத்தால், கோலாலம்பூர் வெர்டிகல் சிட்டி திட்ட மேம்பாட்டாளரைக் கருப்புப் பட்டியலிட வேண்டுமென டாக்டர் புவாட் ஷார்காசி அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளார். அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான அவர், அந்நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் இயக்குநர் குழு உறுப்பினர்கள் அனைவரையும் பொதுவில் அறிவிக்க வேண்டும்…
பாஸ் : ஆர்சிஐ தேவையில்லை, பெல்டா ஊழல் வழக்கு நேரடியாக…
ஜாலான் செமாராக், கோலாலம்பூரில் உள்ள பெல்டாவிற்குச் சொந்தமான நிலப் பரிமாற்றப் பிரச்சினையை விசாரிக்க, அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) தேவையில்லை, காரணம் அது ‘நேரடியான’ வழக்காக உள்ளது என பாஸ் கருதுகிறது. பாஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர், தகியுட்டின் ஹாசான், மலேசியக் காவற்படை (பிடிஆர்எம்) மற்றும் மலேசிய…
ஆய்வாளர் : ஆசியானில், ஐஎஸ்-சுக்கு எதிரான மிகவும் பாதுகாப்பான நாடு…
தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பயங்கரவாதத்திற்கு எதிராக மலேசியா சிறந்த பாதுகாப்பைக் கொண்டுள்ளது என ஓர் ஆய்வாளர் கூறியுள்ளார். பயங்கரவாத குழுக்களால் பல தாக்குதல்களைச் சந்தித்த இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு மலேசிய மண்ணில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) ஒரு தாக்குதலை மட்டுமே நடத்தியது. சமீபத்திய…
இராணுவ முகாம்களை உருவாக்குவது தேசியப் பாதுகாப்புக்காக, தேர்தலில் வாக்குகளை வாங்க…
பொதுத் தேர்தலில் வாக்குகளை வென்றெடுப்பதற்காக, அரசாங்கம் சில இடங்களில் இராணுவ அதிகாரிகளை வைக்கவில்லை, மாறாக பாதுகாப்பு தேவை மற்றும் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உத்திகளை அது அடிப்படையாகக் கொண்டது. ஜொகூரின் சில பகுதிகளில், இராணுவ முகாம்களைக் கட்டியெழுப்புவது நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு அவமதிப்பு எனக் கூறிய ஜொகூர்…
இராணுவ அதிகாரியின் உடல் ஈயக் குட்டையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது
நெகிரி செம்பிலான், கம்போங் பெங்காலான் டுரியானில் ஒரு ஈயக்குட்டையில் மூழ்கியதாகக் கூறப்படும் இராணுவ அதிகாரி ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. கோலாலும்பூர் தற்காப்பு அமைச்சில் பணிபுரியும் அப்துல் ரஷிட் ஷாடானின் சடலம் காலை மணி 9.30க்கு ஈயக்குட்டையில் மிதக்கக் காணப்பட்டதாக போர்ட் டிக்சன் போலீஸ் மாவட்ட இடைக்கால …
இசா பெல்டா நில விவகாரம் தொடர்பில் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கத் தயார்
பெல்டா முன்னாள் தலைவர் இசா முகம்மட், ஜாலான் செமராக் நிலத்தின் உரிமை மாற்றிவிடப்பதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் போலீஸ் விசாரணையில் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறார். ஆனால், அவரை யாரும் இன்னும் விசாரணைக்கு அழைக்கவில்லை. இசா பெல்டா தலைவராக இருந்தபோது 2015-இல் செய்து கொள்ளப்பட்ட ஓர் ஒப்பந்தப்படி அந்த நிலத்தின் உரிமை …
பாஸ் பிரதிநிதிகளை இருகரம் நீட்டி வரவேற்கிறோம்- பிகேஆர்
சிலாங்கூரில் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித்தாவலில் ஈடுபடப்போவதாகக் கூறப்படுவதை பாஸ் மறுத்தாலும் அவர்களுக்கு பிகேஆர் கதவுகள் திறந்தே இருக்கும் என்கிறார் பிகேஆர் தலைவர் ஒருவர். சிலாங்கூரில் 10 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பக்கத்தான் ஹரபானுக்கு ஆதரவாக செயல்பட விரும்புவதாகக் கூறும் செய்திகளை பாஸ் எக்ஸ்கோ இஸ்கண்டர் அப்துல் சமட் …
YOURSAY | ‘I guess his term will have to…
Yoursay: Arul’s term extended because he knows all 1MDB's dirt Arul Kanda's term with 1MDB extended Anonymous 2443871479002035: When the 1MDB house of cards comes crashing down, don't forget the name of its president and…
மலேசியப் பொறியியலாளர், துபாயில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
சம்பளப்பணத்தைத் திருடிவிட்டார் எனும் சந்தேகத்தின் பேரில், கடந்த ஏப்ரல் மாதம் துபாயில் கைது செய்யப்பட்ட மலேசியப் பொறியியலாளர் ரிச்சர்ட் லாவ், விசாரணைக்காக இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் துபாய்க்கான மலேசியத் துணைத் தூதரகச் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். "வழக்குத் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை அறிய, தூதரகம் எப்போதும் அவரின்…
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
செம்பருத்தி.கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது
அமனா: நஜிப்புக்கு முகத்துதி செய்ய ஹாடி ஹரப்பான் பிரதமர் வேட்பாளரைச்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தங்களுடைய பிரதமர் வேட்பாளர்களை அறிவிக்கும் கட்சிகளை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இடைவிடாது தாக்கி வருவது பிரதமர் நஜிப்புக்கு முகத்துதி செய்வதற்குத்தான் என்று ஓர் அமனா தலைவர் கூறுகிறார். ஹாடி பேசுவதெல்லாம் 14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் அம்னோவுக்கு…















