மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
மகாதிர் பிரதமர் ஆவதற்கு முக்கியத்துவம் வழங்கவில்லை; வேறு வழியில்லை என்கிற…
2003வரை இருபதாண்டுகள் பிரதமராக இருந்த டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு மீண்டும் பிரதமராகும் ஆசையெல்லாம் கிடையாது. “அப்பதவிக்குப் பொருத்தமாக வேறு ஒருவர் கிடைக்கவில்லை என்ற நிலை உருவானால் ஒரு வேளை இந்த 92வயது மனிதன் பிரதமர் வேட்பாளராகலாம்”, என்றாரவர். பக்கத்தான் ஹராபான் தலைவரான மகாதிர், இரண்டு வாரங்களுக்கு முன்பு எதிரணியினர் …
ஜைட்டை சிலாங்கூர் எம்பி ஆக்குவது டிஏபி திட்டமாம்: ஜமால் கூறுகிறார்
முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிமை சிலாங்கூர் மந்திரி புசாராக்க டிஏபி திட்டமிடுவதாக தகவல் கிடைத்துள்ளது என சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் கூறுகிறார். “டிஏபி யில் உள்ள மலாய் நண்பர்களிடமிருந்து” கிடைத்த தகவல் என்று கூறிய ஜமால், டிஏபி அடுத்த பொதுத் தேர்தலுக்குப் …
டுரியான் விலை உயர்வது நல்லதுதானே: சீனத்தூதர் ஜோக்கடித்தார்
டுரியான் பழங்கள் சீனாவுக்கு அதிகம் ஏற்றுமதியாவதற்குத் தாமே காரணம் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொன்னாலும் சொன்னார் இப்போது அதுவும் ஒரு அரசியல் விவகாரமாகி முள்ளாகக் குத்தத் தொடங்கியுள்ளது. மலேசியாவில் டுரியான் கிடுகிடுவென விலை உயர்ந்திருப்பதற்கு நஜிப்பே காரணம் என்றும் பலரும் அவரைக் குற்றம் சொல்கிறார்கள். நிலைமை …
ஆய்வாளர் : டிரம்பின் பைடூல்மாக்டிஸ் அங்கீகாரம், தடுமாற்றத்தில் நஜிப்
இஸ்ரேலின் தலைநகரமாக பைடூல்மாக்டிஸை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையைக் குற்றம் கூற பிரதமர் நஜிப்புக்குத் தைரியம் இல்லை என்று ஓர் அரசியல் ஆய்வாளர் கூறியுள்ளார். பினாங்கு இன்ஸ்டிடியூட்சைச் சேர்ந்த வோங் சின் ஹூவாட், தன்னை ஓர் இஸ்லாமிய போர்வீரனாக விவரிக்கும் பிரதமர், டிரம்ப்பின் கோபத்தை உயர்த்தி,…
டச்சு மாடல் அழகியின் குடும்பத்தார் இண்டர்போல் உதவியை நாடினர்
கடந்த வியாழக்கிழமை ஜாலான் டாங் வாங்கி அடுக்குமாடி கட்டிடத்தின் 20-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்து கிடந்த டச்சு மாடல் அழகி இவானா எஸ்தர் ரோபர்ட் ஸ்மித்தின் இறப்பு குறித்து இண்டர்போல் விசாரணை நடத்த வேண்டும் என மலேசியாவில் உள்ள டச்சுத் தூதரகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்த 19வயது மாடல் …
அரசாங்கம் : பள்ளி பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆய்வு…
அடுத்த ஆண்டு பள்ளி அமர்வுக்கான பேருந்து கட்டணத்தை உயர்த்தும் பரிந்துரையை ஆய்வு செய்யுமாறு, மலேசியப் பள்ளிப் பேருந்து தொழில் முனைவோர் சங்கத்தை அரசாங்கம் கேட்டுக்கொண்டது. துணையமைச்சர் டத்தோ பி.கமலநாதன், பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கும் முன், பெற்றோர், ஆசிரியர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார். "இன்னும் ஆழமான விவாதம்…
சித்தி ஹஸ்மா: விருதுகளைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி கணவர் கட்டாயப்படுத்தவில்லை
டாக்டர் மகாதிர் முகம்மட்டைப் பின்பற்றி அவரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா அலியும் அவருக்குக் கொடுக்கப்பட்ட சிலாங்கூர் அரச விருதுகளைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார். இன்று காலை அது குறித்து முகநூலில் பதிவிட்டிருந்த சித்தி ஹஸ்மா,91, அவற்றைத் திருப்பிக் கொடுக்குமாறு மகாதிர் கட்டாயப்படுத்தியதில்லை என்றார். “அவர் கட்டாயப்படுத்தவில்லை. நான்தான் சொந்த …
ஸைட்டைப் போலிஸ் புக்கிட் அமானுக்கு அழைத்தது
நாளை காலை, கோலாலம்பூர் புக்கிட் அமானில், தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு, பிரதமர் துறை இலாகாவின் முன்னாள் அமைச்சர் ஸைட் இப்ராஹிம்மை காவல்துறை பணித்துள்ளது. இந்த விசாரணை, டிசம்பர் 5-ம் தேதி, சிலாங்கூர் சுல்தான் பற்றி, தான் டுவிட்டரில் பதிவிட்ட செய்தி தொடர்பாக இருக்கலாம் என்று தான் நம்புவதாக…
மகாதிர் திருப்பி அனுப்பிய விருதுகள் கிடைக்கப் பெற்றதாக சிலாங்கூர் சுல்தான்…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரும் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹம்சாவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை டிசம்பர் 7 இல் சிலாங்கூர் அரண்மனைக்கு திருப்பி அனுப்பினர். அவர்கள் திருப்பி அனுப்பிய விருதுகள் கிடைக்கப் பெற்றதாகவும் அவற்றை சிலாங்கூர் சுல்தான் எவ்வித ஆட்சேபமும் இன்றி பெற்றுக்கொண்டதாகவும் சிலாங்கூர் அரச…
அன்வாரை உடனடியாக விடுவிக்க வற்புறுத்துமாறு, மகாதீரை அமெரிக்க வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்
அமெரிக்காவைச் சார்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் ஒருவர், அன்வார் இப்ராஹிம்மை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனும் தனது பிரச்சாரத்திற்குள், துன் டாக்டர் மகாதிர் முகமட்டை இணைக்க உள்ளார். கிம்பர்லி மோட்லியின் கூற்றுப்படி, அந்த முன்னாள் பிரதமருடனான நாளைய சந்திப்பில், முடிவு எடுக்கப்படும் என அவர் நம்புகிறார். பெட்டாலிங் ஜெயாவில்…
மகாதிரின் விருதுகள் திருப்பிக் கொடுக்கப்பட்டது பற்றி சிலாங்கூர் அரண்மனை அறிக்கை…
சிலாங்கூர் சுல்தானிடமிருந்து முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் பெற்ற இரண்டு விருதுகளை அவர் திருப்பிக் கொடுத்து விட்டதாக வெளிவந்துள்ள அறிக்கைகளைத் தொடர்ந்து சிலாங்கூர் அரண்மனை ஓர் அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருதுகள் திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பதை நாங்கள் உறுதிப்படுத்தியதும் நாங்கள் ஓர் அறிக்கை வெளியிடுவோம் என்று சுல்தானின்…
தமிழ்ப்பள்ளிகளைத் தரமுயர்த்தும் பணிகளுக்கு ரிம50மில்லியன் ஒதுக்கப்பட்டது- அமைச்சு
இவ்வாண்டு கல்வி அமைச்சு நாட்டில் உள்ள தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளைத் தரமுயர்த்தவும் பராமரிக்கவும் ரிம50 மில்லியனை ஒதுக்கியதாகக் கல்வி அமைச்சர் மகாட்சிர் காலிட் கூறினார். இது தவிர தமிழ்ப் பள்ளிகளில் பள்ளிகளுக்கு- முந்திய 50 வகுப்பறைகளைக் கட்டுவதற்கு ரிம10 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது என்றாரவர். “பிரதமர் நஜிப் …
கேளாங் பாத்தா வாக்காளர்கள் பிஎன் பக்கம் திரும்பி விட்டனர்: அம்னோ…
கேளாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் 2013-இல் எதிரணியை ஆதரித்த வாக்காளர்கள் இப்போது பிஎன்னுக்கு ஆதரவாக திரும்பியிருப்பதாக அம்னோ உறுதியாக நம்புகிறது. அத்தொகுதியின் எம்பி டிஏபியின் லிம் கிட் சியாங் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் தொகுதி மக்களைச் சந்திக்கவும் அவர்களின் குறைகளைத் தீர்க்கவும் அரிதாகவே வருகை புரிகிறார் …
வலைப்பதிவரை மேலும் இரண்டு நாள்களுக்குத் தடுத்துவைக்க நீதிமன்றம் அனுமதி
Milosuam என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் வலைப்பதிவர் யூசுப் அல்-சித்திக்கை விசாரணைக்காக மேலும் இரண்டு நாள்கள் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. தொடக்கத்தில் வழங்கப்பட்ட மூன்று நாள்கள் காலாவதியானதைத் தொடர்ந்து தடுப்புக்காவலை நீட்டிக்க அனுமதி கேட்டு போலீசார் மனுச் செய்து கொண்டதாக வழக்குரைஞர் ஜி.சிவமலர் கூறினார். மிலோசுவாம் …
மந்திரி பெசாரை விசாரிக்க வேண்டும், ஜொகூர் மக்கள் விருப்பம்
இந்த ஆண்டு தொடக்கத்தில், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் லத்தீப் பாண்டி மீது, நில அபகரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, மந்திரி பெசார் முகமட் கலீட் நோர்டின், எந்தவொரு பாதிப்பையும் எதிர்நோக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால், கடந்த வாரம், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) வழக்கு தொடர்பான…
தெங்கு அட்னான்: ஹம்சா சொன்னதைத் ‘திரித்துக் கூறிய’ ஊடகங்கள் இறைவனுக்குப்…
அம்னோ பொதுப்பேரவைக் கூட்டத்தில் உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹம்சா சைனுடின் பேசியதைத் ‘திரித்துக் கூறிய’ ஊடகங்கள் இறைவனுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். இன்று புத்ரா ஜெயாவில் பேசிய தெங்கு அட்னான் செய்தியாளர்கள் அவர்கள் …
சிலாங்கூரின் விருதுகளை மகாதீரும் சித்தி ஹஸ்மாவும் திருப்பிக் கொடுத்தனர்
துன் டாக்டர் மகாதீர் முஹமட் மற்றும் அவரது மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா முஹமட் அலி இருவரும், சிலாங்கூர் சுல்தானிடமிருந்து பெற்ற இரண்டு பதக்கங்களையும் திருப்பிக் கொடுத்தனர், அதில் ஒன்று அம்மாநிலத்தின் மிக உயரிய விருது ஆகும். இத்தகவலை, பெர்சத்து கட்சியின் தலைவர் ஒருவர் மலேசியாகினியிடம் உறுதி செய்தார்.…
பிகேஆர் தீபன் : தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஆங்கில புலமையை அதிகரிக்க…
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஆங்கிலப் புலமையை அதிகரிக்க அரசாங்கம் விவேகமாக செயல்படவேண்டும். அதற்கு இந்த இருமொழிப் பாடத்திட்டம் ஒரு முறையல்ல என்று சிலாங்கூர் மாநில மக்கள் நீதி கட்சி, இளைஞர் அணி உதவி தலைவர் தீபன் சுப்ரமணியம் கூறியுள்ளார். தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்க்கல்விக்கும் இது மிரட்டலாக அமையும் என்பதால், இத்திட்டத்தைத் தான்…
பேங்க் நெகாரா அடைந்த நட்டம்: நஜிப்பின் கீழ் ரிம161 பில்லியன்,…
தாம் நாட்டை வழிநடத்திய காலத்தில் பேங்க் நெகாரா அடைந்த நட்டத்தைவிட நஜிப்பின் கீழ் அது அடைந்த நட்டம் மிக மிக அதிகம் என்று கூறுகிறார் மகாதிர். ஒப்பிட்டு பாருங்கள்: நஜிப்பின் கீழ் பேங்க் நெகாரா அடைந்த நட்டம் யுஎஸ்$39.621 பில்லியன் (மலேசிய ரிங்கிட் 161 பில்லியன்). மகாதிரின்…
இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 16-ம் நாள்
டிசம்பர் 10, 2017 – சிலாங்கூர், டெங்கில் - நடைப்பயணத்தின் 16-ம் நாள், இன்று காலை 9 மணியளவில், சாலாக் திங்கியில் இருந்து, டெங்கிலை நோக்கி நடக்கத் தொடங்கியதாக தியாகு தெரிவித்தார். இன்று டெங்கில் வட்டாரத் தமிழ் ஆர்வளர்களும் இளைஞர்களும் தியாகுவுடன் சேர்ந்து நடந்து வந்துள்ளனர். வழிநெடுகிலும், அதிகமானோர்…
காலிட் இப்ராஹிம் ‘மிகவும் விசுவாசமான’ மந்திரி பெசார், சிலாங்கூர் சுல்தான்…
கடந்த 2014-ல், காலிட் இப்ராஹிம், மாநில மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது, சிலாங்கூர் சுல்தான் அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார். தி ஸ்டார் நாளிதழுக்கான ஒரு பேட்டியில், அரசியல் சூழ்ச்சிகளால் தான் களைப்படைந்து விட்டதாக கூறிய சுல்தான் ஷராஃபுட்டின் இட்ரிஸ் ஷா, எனினும், சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார்…
ஸைட்டை மிரட்டினார், ஜமாலுக்கு 2 நாள்கள் தடுப்புக் காவல்
நேற்று இரவு, ஸைட் இப்ராகிம்மை மிரட்டியதற்காக, கைது செய்யப்பட்ட 1மலேசியா அரசு சார்பற்ற இயக்கங்களின் தலைவர், ஜமால் முகமட் யூனுஸ், இன்று தொடக்கம் இரண்டு நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். சுங்கை பெசார் அம்னோ தலைவரான அவர் 2 நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு, செக்ஷன் 504-ன் கீழ் விசாரிக்க,…
பி.எஸ்.எம். : அரச பரம்பரையை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிரான…
ஜொகூர் அரசக் குடும்பத்திற்கு எதிரான விமர்சனங்களுக்காக கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), இந்த விஷயத்தை விளம்பரப்படுத்த, உரிமைகளுக்காக வாதிடும் சுவாராம் குழுவினரை ஒரு பிரச்சாரத்தைத் தொடங்க கேட்டுக் கொண்டுள்ளது. ‘ஆன்லைனில் வேடிக்கை’யாக தகவல் பரிமாறுபவர்களைக் கைதுசெய்து, குற்றஞ்சாட்டி, தகவல்…
















