நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பத்தினர், தங்களது அன்புக்குரியவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அஞ்சுகின்றனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணி 11ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், குடும்பத்தினரின் கவலை மேலும் அதிகரித்துள்ளது. மலேசிய குடும்பங்களின்…
மூத்த ஆர்வலர்களுக்கு எதிராக ஹிண்ட்ராப் தலைமைத்துவத்தின் சட்ட நடவடிக்கை!
இந்நாட்டு ஏழை இந்தியச் சமுதாயத்தின் நல்வாழ்விற்காக தேசிய முன்னணியுடன் 2013 இல் ஹிண்ட்ராப் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த உடன்படிக்கை தோல்வி அடைந்ததுள்ளது. அது சார்பாக கேள்வி எழுப்பி அதிலிருந்து வெளியான எட்டு மூத்த ஆர்வலர்கள் ஹிண்ட்ராப் தலைமைத்துவத்தின் சட்ட நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என்கிறார் அதன் முன்னாள் ஆலோசகர் என்.…
“நிர்மாணிக்கப்பட்ட” 19 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றனவா?
பிரதமர் துறை மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு பிப்ரவரி 2014 இல் வெளியிட்டுள்ள ஒரு செயலறிக்கையில் "2012 பட்ஜெட்டில் மாற்றிடங்களில் நிர்மாணிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள்" அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணையில் கீழ்க்கண்ட நிர்மாணிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளைப் பற்றிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது: எண் பள்ளி மாநிலம் நிதியுதவி(ரி.ம) 1 மவுண்ட்…
பினாங்கு எக்ஸ்கோ: பிபிஎஸ் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன
பினாங்கில் தன்னார்வ ரோந்து படை(பிபிஎஸ்) தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அதற்கான முடிவெடுக்கப்பட்டதாக அப்படையை மேற்பார்வை செய்யும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ தெரிவித்தார். அப்படையின் நடவடிக்கைகள் முடக்கப்படுவதற்கு போலீசும் ஒரு காரணமாகும். அப்படையைக் கலைக்கும்படி அது …
அம்னோ பேராளர்: லஞ்சம் கொடுப்பவரைப் பிடிக்க வேண்டும் பெறுபவரை அல்ல
மலேசிய ஊழல் -தடுப்பு ஆணையம் இருக்கிறதே அது கையூட்டு கொடுப்பவர்களைத்தான் பிடிக்க வேண்டும், பெறுபவர்களைப் பிடிக்கக் கூடாது என்று பேராளர் ஒருவர் அம்னோ பேரவையில் வேடிக்கையாகக் குறிப்பிட்டார். “கொடுப்பதற்கு ஆள் இல்லை என்றால் வாங்குவதற்கும் ஆள் இருக்க மாட்டார்கள்”, என நெகிரி செம்பிலான் பேராளர் ஷம்சுல் அம்ரி இஸ்மாயில் …
இரவல் கொடுத்த தொகுதிகளைத் திருப்பிக் கேட்கிறது மசீச
கடந்த பொதுத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளை மசீச இரவல் கொடுத்ததோ அவை திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று மசீச தலைவர் லியோ தியோங் லாய் கோரிக்கை விடுத்துள்ளார். 2013 பொதுத் தேர்தலில் மசீச அது வழக்கமாக போட்டியிட்டு வந்த வங்சா மாஜு, குவாந்தான், கேளாங் பாத்தா ஆகிய …
சேவியர்: பிரதமர் சுயநலனுக்காக நாட்டின் எதிர்காலத்தை அழிக்க முற்படக் கூடாது!
மலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக் தனது சுய அரசியல் நல்வாழ்வுக்காக இந்நாட்டின் எதிர்காலத்தை முற்றாக அழிக்கும் மற்றுமொரு முன்நகர்வை மேற்கொண்டுள்ளார் என்றால், அது மிகையாகாது என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார். தற்போது நடந்துகொண்டிருக்கும் அம்னோ பொதுப்…
அம்னோ பேராளர்: சீனர்களும் இந்தியர்களும் கடந்த காலத்தில் இழைத்த தவறுகளை…
அம்னோ மிகுந்த பொறுமையுடைய கட்சி. கடந்த காலத்தில் தாய்லாந்துக்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகளை மன்னிக்கும் பெரிய மனசு கொண்டவர்கள் மலாயக்காரர்கள் என்று இன்று அம்னோ பொதுக்கூட்டத்தில் கிளந்தான் அம்னோ பேராளர் முகமட் சையாபுடின் ஹசிம் கூறினார். கடந்த காலத்தில் தாய்லாந்துக்காரர்கள் கெடாவை தாக்கி ஏராளமான…
கிளந்தானில் பாஸ்தான் அம்னோவின் எதிரி: அம்னோ பேராளர்
மற்ற இடங்களில் எப்படியோ ஆனால், கிளந்தானில் அம்னோவின் எதிரி என்று அம்னோ பேராளர் ஒருவர் அம்னோ பொதுப் பேரவையில் முழக்கமிட்டார். “தேசிய நிலையில் கிளந்தானின் ஆளும் கட்சி(பாஸ்) அம்னோவுடன் நட்பாக இருப்பதுபோல் தெரிகிறது ஆனால் உண்மையில் - விரும்புகிறீர்களோ இல்லையோ- கிளந்தானில் உள்ள எங்களுக்கு அதுதான் தெள்ளத் தெளிவான …
ரோஸ்மா: பெர்மாத்தா நிதி என் கைப்பைக்குச் செல்வதில்லை
தம்மால் உருவாக்கப்பட்ட பெர்மாத்தாவுக்கு ஒதுக்கப்படும் அரசாங்க நிதிகள் தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதை ரோஸ்மா மன்சூர் வலியுறுத்தினார். “அரசாங்கத்திடமிருந்து வரும் பணம் எதுவும் என் கைப்பைக்குள் செல்வதில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்ல விரும்புகிறேன்”, என்று ரோஸ்மா கூறியதும் கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார், …
ஐஜிபி: டத்தோ எஜமானரைச் சுட்டுக் கொன்றவருக்கு இராணுவப் பின்னணி உண்டு
நேற்றிரவு பினாங்கு லிம் சொங் யூ விரைவுச்சாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு இராணுவப் பின்னணி உண்டு என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார். அந்த 35வயதான மெய்க்காப்பாளருடன் “மன நோயாளி”யான இன்னொருவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக …
பேராளர்: மலாய்க்காரர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருத்தல் வேண்டும் என்று கூறுவதை…
அம்னோ, மலாய்க்காரர்கள் கட்சிக்கு விசுவாசம் காட்ட வேண்டும் என்று கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஜோகூர் பேராளர் ஒருவர் வலியுறுத்தினார். மலாய்க்காரர்களின்றி அம்னோ ஒன்றுமில்லாததற்குச் சமம் என்று கெமேலா சட்டமன்ற உறுப்பினர் ஆயுப் ரஹ்மாட் கூறினார். “மலாய்க்காரர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதை அம்னோ நிறுத்திக்கொள்ள வேண்டிய …
நஜிப்பின் பேச்சு இனப் பேரிடருக்கு வழிகோலும்: சைபுடின் தாக்கு
நேற்று அம்னோ பொதுப்பேரவையில் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ஆற்றிய உரை இனப் பேராபத்தை உண்டு பண்ணும் வகையில் அமைந்திருந்தது என முன்னாள் கல்வித் துணை அமைச்சர் கூறினார். அப்படி ஓர் உரையாற்றிய நஜிப்பை முன்னாள் அம்னோ எம்பியும் இப்போது பக்கத்தான் ஹராபானின் தலைமைச் செயலாளருமான சைபுடின் அப்துல்லா …
தன்னார்வ ரோந்து படையைக் கலைப்பீர்: பினாங்குக்கு ஐஜிபி வலியுறுத்து
போலீஸ் நடவடிக்கை எடுக்குமுன்னர் பினாங்கு அரசு மாநில தன்னார்வ ரோந்து படையைக் கலைப்பது நல்லது என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் அறிவுறுத்தினார். “அதை வைத்திருப்பதில் பயனில்லை, எப்படியும் அது சட்டவிரோதமானது என்று அறிவிக்கத்தான் போகிறோம்”, என்று காலிட் இன்று பினாங்கில் கூறினார். “மாநிலப் பாதுகாப்பையும் …
கேஎல் மேயர்: பேருந்து முனையம் முன்பே அம்னோவுக்கு விற்கப்பட்டு விட்டது
புத்ரா பேருந்து முனையம் பல ஆண்டுகளுக்கு முன்பே அம்னோவுக்கு விற்கப்பட்டு விட்டதாக கோலாலும்பூர் மேயர் முகம்மட் அமின் நோர்டின் அப்துல் அசீஸ் கூறினார். “அதை அம்னோவுக்கு விற்றோம். அது பற்றிய விவரங்கள் என்னிடம் இல்லை. ஆனால், கடந்த ஆண்டில் அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே அது அம்னோவுக்கு விற்கப்பட்டது”, …
ஓப்ஸ் வாட்டர் நடவடிக்கையில் எம்ஏசிசி மொத்தம் ரிம114 மில்லியன் ரொக்கத்தையும்…
சாபா நீர் துறை ஊழல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் வாட்டர் நடவடிக்கைகளில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக மொத்தம் ரிம114.5 மில்லியன் ரொக்கத்தையும் அசையும் அசையா சொத்துகளையும் கைப்பற்றியுள்ளது. அந்த நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக அறிவித்தபோது எம்ஏசிசி இதைத் தெரிவித்தது. “எம்ஏசிசி அதன் விசாரணைகளை விரைவில் …
தெங்கு ரசாலி: ஓராங் அஸ்லிகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுப்பது…
குவாங் மூசா எம்பி தெங்கு ரசாலி ஹம்சா, தம் தொகுதிவாழ் ஓராங் அஸ்லிகளின் கோரிக்கைகள் தமக்குப் புரிகிறது என்றுரைத்து அதே நேரத்தில் அவர்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளவும் கூடாது என்றும் வலியுறுத்தினார். இன்று அம்னோ பொதுப்பேரவைக் கூட்டத்துக்கிடையே செய்தியாளர்களிடம் தெங்கு ரசாலி பேசினார். மரம் வெட்டுவோரைத் தடுக்க …
நஜிப்: டிஏபி மலாய்க்காரர்களுக்கு எதிரி; இஸ்லாத்துக்கு எதிரி
இன்று காலை அம்னோ பொதுப்பேரவையைத் தொடக்கி வைத்து உரையாற்றிய கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், டிஏபி பூமிபுத்ராக்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஒரு மிரட்டல் என்று குறிப்பிட்டார். டிஏபி ஆட்சிக்கு வந்தால் அது இஸ்லாத்தைச் “சிறுமைப்படுத்தும்” என்றாரவர். “நாங்கள் (அம்னோ) அதை அனுமதியோம். “நாங்கள் மூண்டெழுந்து (இஸ்லாத்தைக்) காப்போம்”, என …
ஐஜிபி: மரியா துப்பாக்கித் தோட்டவைக் கையில் பிடித்திருக்கக் கூடாது; தடயம்…
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கொலை மிரட்டலாக வந்த துப்பாக்கித் தோட்டா ஒன்றைக் கையில் ஏந்தி அனைவரிடமும் காண்பித்தது தவறு எனப் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கண்டித்தார். அவரது செயலால் அதிலிருந்த தடயம் அழிந்து விட்டது என்றாரவர். “அடுத்த முறை இப்படி எதையும் …
போலீஸ் மோப்ப நாய்க்கும் பயிற்றுநருக்கும் பாராட்டுப் பதக்கங்கள்
செகாமாட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த எட்டு-வயது மோப்ப நாய்க்கும் அதன் பயிற்றுநரான லான்ஸ் கார்ப்பரல் ஹாடின் இங் காங்கும் பாராட்டுப் பதக்கங்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிடிஆர்எம் முகநூல் பக்கத்தில் ஒரு செய்தி காணப்படுகிறது. மூராட் என்ற அந்த நாய், நவம்பர் 16-இல் போலீசாரால் தேடப்பட்டு வந்த ‘கேங் காப்பாக்’ …
கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்களுக்கு ஆதரவாக ஓராங் அஸ்லிகள் நீதிமன்றத்தில்…
கிளந்தான், குவா மூசாங் உள்பகுதியில் மரம் வெட்டுவோரைத் தடுக்க முனைந்ததற்காக கைது செய்யப்பட்ட 41 ஓராங் அஸ்லி சமூகப் போராட்டவாதிகள் விசாரணைக்காக இரண்டு நாள் தடுத்து வைக்கப்பட்டனர். நேற்று பிற்பகல் பாலா, பெரியாஸ் ஸ்டோங் செலாதான் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் அவர்கள் அமைத்திருந்த தடுப்பு அரண்களை போலீசாரும் வனத்துறை …
பெர்சேயாலும் மகாதிர், சோரோஸாலும் பேராபத்து: அம்னோ பிரிவுகள் ஆண்டுக் கூட்டத்தில்…
நேற்றிரவு அம்னோவின் நடப்பில் துணைத் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி ஆற்றிய உரையைத் தொடர்ந்து இவ்வாண்டு அம்னோ பிரிவுகளின் ஆண்டுக் கூட்டங்களில் பெர்சே மீதும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அமெரிக்கக் கொடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் ஆகியோர்மீதும் மிகுந்த கவனம் செலுத்தப்படுவதைப் பார்க்கிறோம். மகாதிர் எதிரணியில் சேர்ந்து…
முக்ரிஸ்: என் தந்தையின் செல்வாக்குடன் நஜிப் அவரது செல்வாக்கை ஒப்பிட…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோவில் அவரது செல்வாக்கை அவருக்கு முன்னவரான டாக்டர் மகாதிர் முகம்மட்டின் செல்வாக்குடன் ஒப்பிடுவது தேவையற்றது என்கிறார் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா துணைத் தலைவர் முக்ரிஸ். “மகாதிர் கட்சியிலிருந்து வெளியேறி நீண்ட காலம் ஆயிற்று. அதனால் மகாதிரின் செல்வாக்கு குறித்து கேள்வி எழுப்ப …
ஐஜிபி: மரியா திரும்பவும் கைது செய்யப்படும் சாத்தியம் உண்டு
போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் , பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா மீண்டும் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதை மறுக்கவில்லை. இன்று செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் மரியாமீது அமைதிப் பேரணிச் சட்டத்தின்கீழும் போலீஸ் விசாரணை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். “பிபிஏ-இன்கீழ் விசாரணை செய்து …


