தெலோக் இந்தான் இடைத் தேர்தல் மே 31

தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தல்  மே  31ஆம்  நாள்  என்றும்  வேட்பாளர்  நியமன  நாள்  மே 19  என்றும்  தேர்தல்  ஆணைய(இசி)த்  தலைவர்  அப்துல்  அசீஸ்  யூசுப்  இன்று  அறிவித்தார். இது, கடந்த  மே  மாத  பொதுத் தேர்தலுக்குப்  பின்னர்  நடைபெறும்  ஆறாவது  இடைத்  தேர்தலாகும்.  டிஏபி-இன்  தெலோக்…

சீனர் ஆதரவைப் பெறுவது எப்படி என பிஎன்னுக்குப் பாடம் நடத்துகிறது…

நியாயமான  கொள்கைகள்தாம்  சீனச் சமூகத்தின்   ஆதரவை  மீண்டும்  பெற  உதவுமே  தவிர  அச்சுருத்தல்  ஒருபோதும்  உதவாது  என்று  சரவாக்  எதிரணித்  தலைவர்   சோங்  சியாங்  ஜென்  கூறினார். “முதலமைச்சர் (அடினான்  சாதெம்) பிஎன்னுக்கு  சீனச்  சமூகத்தின்  ஆதரவைப்  பெற  விரும்பினால்,  மாநில  திட்டங்களில்  சீனர்கள்  ஓரங்கட்டப்படுவார்கள்  என  மிரட்டுவதன்வழி …

எம்ஏஎஸ்-இல் மேலும் பணம்போட அரசாங்கம் தயாராக இல்லை

மூன்றாண்டுகளாக  ஆதாயம்  காண முடியாமல்  தத்தளிக்கும்  மலேசிய  விமான  நிறுவனத்தை  மீட்டெடுக்க  மேலும்  பணம்போடும்  எண்ணம்  அரசாங்கத்துக்கு  இல்லை  எனச்  சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  கூறினார். போட்டிமிக்க  சூழலைச்  சமாளிக்க  முடியாமல்  தடுமாறிக்  கொண்டிருக்கும்  எம்ஏஎஸ்  விவகாரத்தில்  என்ன  செய்யலாம்  என்பது  அரசாங்கத்துக்கே  புரியவில்லை…

சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளை ஓரங்கட்டியது ஏன்?

  கடந்த ஐந்து ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 97 தமிழ்ப்பள்ளிகளும் கணிசமான நிதி உதவியைப் பெற்றுள்ளன. அந்நிதி உதவியைக் கொண்டு சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள், கணினி மையங்கள் அமைக்கப்பட்டதோடு இன்னும் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சிலாங்கூர் மாநில அரசால் வழங்கப்பட்ட இந்த நிதி உதவியின் பயனை…

மகாதிர்: பகிர்ந்துகொள்வது டிஏபி-க்குப் பிடிக்காது

சீனர்கள்  ஆதிக்கம்  செலுத்தும்  டிஏபி,  இனங்களுக்கிடையில்  பகிர்தல்  என்பதில்  நம்பிக்கை  இல்லாத  கட்சி  என  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  அவரது  வலைப்பதிவில் சாடியுள்ளார். “தகுதிமுறையைத்தான்  அக்கட்சி  நம்புகிறது”,  என்றாரவர்.  தகுதிமுறையில்,  தகுதியுள்ளவர்கள்  இருப்பதையெல்லாம்  அள்ளிக்கொள்வார்கள். பொருளாதார  ஆதிக்கத்தை  விட்டுக்கொடுக்காமல்,  அரசியல்  அதிகாரத்தைப்  பெறுவதே  டிஏபி-இன்  இலக்காகும் …

முஸ்லிமின் கையை வெட்டுவதும் முஸ்லிம்-அல்லாதாரைச் சிறையில் இடுவதும்தான் நியாயமாகும்

ஒரு  முஸ்லிம்,  முஸ்லிம்-அல்லாத ஒருவருடன்  சேர்ந்து  குற்றம்  புரிந்திருந்தால்,  ஹுடுட்  சட்டத்தின்படி  அவரின்  கையை  வெட்ட  வேண்டும்;  அவருக்கு உடந்தையாக  இருந்த  முஸ்லிம்-அல்லாதவர்  சிவில்  சட்டப்படி  தண்டிக்கப்பட  வேண்டும். அதுதான்  நியாயம்  என்கிறார்  கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  நிக்  அமார்  அப்துல்லா. சினார்  ஹரியான்  ஏற்பாடு  செய்திருந்த …

‘நிக் நஸ்மிமீது மீண்டும் குற்றம்சாட்டுவது முறையல்ல’

12  நாள்களுக்குமுன்  எந்தக் குற்றச்சாட்டிலிருந்து  விடுவிக்கப்பட்டாரோ  அதே  குற்றச்சாட்டை  மீண்டும்  ஸ்ரீசித்தியா  சட்டமன்ற  உறுப்பினர்  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்மீது சுமத்துவது  முறையல்ல  என்பதுடன்  அது  பொதுப்பணத்தை  விரயம்  செய்வதுமாகும்  என  வழக்குரைஞர் மன்றத்  தலைவர்  கிறிஸ்தபர்  லியோங்  கூறினார். கடந்த  ஆண்டு  பொதுத்  தேர்தலுக்குப்  பின்னர் நடத்தப்பட்ட …

தமிழ்ப்பள்ளிகளின் வாரியங்களை ஒருங்கிணைக்கும் தேசிய அமைப்பாக தமிழ் அறவாரியம் திகழும்

இந்நாட்டிலுள்ள 523 தமிழ் தொடக்கப்பள்ளிகளில் 300 க்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் பள்ளி வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பள்ளிகளை மேம்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்நாட்டு தமிழர்களின் அடையாளமாகக் கருத்தப்படும் தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக பல செயல்முறைத் திட்டங்களைத் தீட்டி அவற்றை வெற்றிகரமாக அமல்படுத்தி தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தமிழ்…

சிலாங்கூரில் நச்சுத்தன்மை வாய்ந்த நீர் பயன்படுத்தப்படுகிறதாம்

ஈயக்குட்டைகளில்  உள்ள  நீரைக்  கொண்டு  தண்ணீர் தட்டுப்பாட்டுக்குத்  தீர்வுகாணலாம்  என  சிலாங்கூர்  அரசு  திட்டமிட்டுக்  கொண்டிருக்கும்  வேளையில்  ஈயக்குட்டை  நீர்  “நச்சுத்தன்மை” வாயந்தது  என  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  செய்தி  கூறுகிறது. பெஸ்தாரி  ஜெயாவில் பயன்படுத்தாமல்  உள்ள  ஈயக்குட்டைகளின்  நீரைச்  சோதனை  செய்து  பார்த்ததில்  அதில்  காரீயம், இரும்பு,…

ஐஜிபி: இஸ்மா தலைவர் தேசநிந்தனை புரிந்தாரா என விசாரிக்கப்படுகிறது

ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா)  தலைவர் அப்துல்லா  ஜேய்க்  அப்துல்லா  ரஹ்மான்மீது  தேசநிந்தனைச்  சட்டத்தின்கீழ்   போலீஸ்  விசாரணை  நடத்தி  வருகிறது. இதை  மலேசியாகினியிடம்  தெரிவித்த  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார், சினமூட்டும்  வகையில்  பேசுவதைத்  தவிர்க்குமாறு  எல்லாத்  தரப்பினரையும்  கேட்டுக்கொண்டார். “இனங்களுக்கிடையில் பதற்றத்தைத்  தூண்டும்  வகையில் …

இஸ்மா என்னும் அபாய நோயைத் தடுத்து நிறுத்துக

“இஸ்மா”  என்ற  பெயரை  முதல்முதலாகக்  கேள்விப்பட்டபோது அது  ஒரு  பாலியல்  நோய்  என்றுதான்  நினைத்தார் எஸ். வேள்பாரி. “ஆனால், அது  அதைவிட  மோசமானது  என்பதை  இப்போது  தெரிந்துகொண்டேன்”, என்றாரவர். ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா  என்பதன்  சுருக்கமான  இஸ்மாவின் தலைவர்  அப்துல்லா  ஜைக்  அப்துல்லா,    அண்மையில்  சீனர்களைப்  கேவலமாக  பேசியது …

சஞ்சீவன்: ஓராண்டு ஆகிறது, ஐஓ-கூட யாரென்று தெரியவில்லை

குற்றத்  தடுப்புக்  கண்காணிப்பு  அமைப்பான  மைவாட்ச்-இன் தலைவர்  ஆர்.ஸ்ரீ சஞ்சீவன், தாம்  சுடப்பட்ட  சம்பவம்மீது  போலீஸ்  செயல்படாதிருப்பதாகக்  குறைகூறினார். சுடப்பட்டு   ஒராண்டுகிறது. இந்த வழக்கின்  விசாரணை  அதிகாரி(ஐஓ)யின்  பெயர்கூட  தெரியவில்லை  என்றாரவர். கடந்த  ஆண்டு  ஜூலை  27-இல், நெகிரி  செம்பிலானில் மோட்டார்  சைக்களில்  வந்த  இருவரால்  சுடப்பட்ட  சஞ்சீவன், …

மகாதிர்: ஹுடுட் குழுவில் கட்சிப் பிரதிநிதிகள் இருக்கக் கூடாது

ஹுடுட்டைச்  செயல்படுத்துவதுமீதான  தேசிய  தொழில்நுட்பக்  குழுவில் தனி சமய  அறிஞர்கள்தாம்  இருக்க  வேண்டுமே தவிர  அம்னோ,  பாஸ்  கட்சிகளைச்  சேர்ந்தவர்கள்  இருக்கக்  கூடாது  என  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறுகிறார். அது,  அக்குழுமீது தப்பெண்ணம்  உண்டாவதைத்   தவிர்க்கவும்  ஹுடுட் அமலாக்கம்  எந்தவொரு கட்சிக்கும்  சாதகமாக  இல்லாதிருப்பதை  உறுதிப்படுத்தவும்  உதவும் …

ஹுடுட்டை இகழாதே: கெராக்கானுக்கு அம்னோ எம்பி எச்சரிக்கை

அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  ரீசல்  மரைக்கான்  நைனா  மரைக்கான்,  இஸ்லாமிய  சட்டமான  ஹுடுட் பற்றி  முழுமையாக  தெரியாமல்  அதை இகழ்ந்து  பேசக்கூடாது  என பிஎன்  பங்காளிக்கட்சியான  கெராக்கானை  எச்சரித்துள்ளார். கிளந்தானில்  ஹுடுட்டைச்  செயல்படுத்துவது  பற்றி  ஆராய  கூட்டரசு  அரசாங்கத்தின்  ஆதரவுடன்  ஒரு  பணிக்குழு   அமைக்கப்பட்டிருப்பதால்,  கெராக்கான்  பிறர்  உணர்வுகளைப் …

புக்கிட் குளுகோரில் ராம்கர்பால் களமிறக்கப்படலாம்

புக்கிட்  குளுகோரில் காலஞ்சென்ற  கர்பால்  சிங்கின்  மூன்றாவது  புதல்வர்  ராம்கர்பால்  டிஏபி  வேட்பாளராக  நிறுத்தப்படலாம்  எனத்  தெரிகிறது. ராம்கர்பாலிடம்  அது  பற்றி  வினவியதற்கு, டிஏபி  தலைமைத்துவம்  நாளை  வேட்பாளரின்  பெயரை  அறிவிக்கலாம்  என்றார். இறுதிப்பட்டியலில்  தம்  பெயரும்  இருக்கிறது  என்றவர்  தெரிவித்தார்.  ஆனல், அதில்  இடம்பெற்றுள்ள  மற்றவர்கள்  பற்றி …

எம்எச்370: தேடும்பணிக்கான செலவு கூடிக்கொண்டே போகிறது

எம்எச்370-இன்  இரண்டு  மாதத்  தேடும்பணிக்கு, ஏர் பிரான்சின் ஏஎப் 447 விமானத்தைத்  தேடிக் கண்டுபிடிக்க  இரண்டு  ஆண்டுகளில்  செலவிட்டதைவிட  கூடுதலாக  செலவாகியுள்ளது. ஆஸ்திரேலியா  மட்டுமே  நாளொன்றுக்கு  ஆ$1 மில்லியன் (ரிம3.02 மில்லியன்)  செலவிட்டிருக்கலாம்  என  தற்காப்பு  வல்லுனர்கள்  கூறியுள்ளனர்.  அதன்படி  பார்த்தால்  அது  மார்ச்  17  தொடங்கி  ஏப்ரல்…

அன்வார் சிறை வைக்கப்படுவது நல்லது என்கிறார் சமூக ஆர்வலர்

பிரபல  சமூக  ஆர்வலரான  ஹிஷாமுடின்  ரயிஸ்,  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  குதப்புணர்ச்சி  வழக்கு  தொடர்பில்  சிறை  சென்றால்  அதற்காக  வருத்தப்பட  மாட்டார். நேற்றிரவு  ஒரு  கருத்தரங்கில்  பேசிய  அவர்,“அன்வார்  சிறை  செல்வது  நல்லதுதான்.  அதற்காக  மகிழ்வேன்”, என்றார். அது,  மக்கள்  மீண்டும்  தெரு  ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபட  தூண்டுதலாக …

சாபாவில் மற்றுமொரு சீன நாட்டவர் கடத்தல்

சாபா,  லாஹாட்  டத்து  சீலமில், ஒரு  மீன்வளர்ப்புப்  பண்ணையிலிருந்து  சீன  நாட்டுக்  குடிமகன்  ஒருவர் கடத்தப்பட்டதாக  நம்பப்படுகிறது. தஞ்சோங்  லபியானுக்கு  அப்பால்  உள்ள  கடல்பகுதியில் கடற்கொள்ளையர்கள் மீனவர்களிடம்  கொள்ளையிட்ட  24-மணி  நேரத்தில் இக்கடத்தல்  சம்பவம்  நிகழ்ந்ததாக  த  ஸ்டார்  அறிவித்துள்ளது. அந்தச்  சீன  நாட்டவரின்  பெயர்  யாங்  சைலின் …

“ஒண்டர்புல் மலேசியா” வீடியோ தயாரித்ததற்காக தெரெசா கோக் மீது தேசநிந்தனை…

  "ஒண்டர்புல் மலேசியா" என்ற சீனப் புத்தாண்டு நையாண்டி வீடியோவை தயாரித்ததற்காக டிஎபி செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரெசா கோக் மீது தேசநிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படவிருக்கிறது. கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் அவர் குற்றம் சாட்டப்படுவார் என்பதை அவரது வழக்குரைஞர் சங்கரா நாயர் உறுதிப்படுத்தினார். நாளை காலையில் தெரெசாவை நீதிமன்றத்திற்கு…

அதிகாரமீறலில் ஈடுபடாதீர்: ஆள்வோருக்கு மகாதிர் அறிவுரை

டாக்டர்  மகாதிர்  முகம்மட்  அவரது  22ஆண்டுக்கால  ஆட்சியின்போது  தவறுகள்  செய்ததாக,  அதிகாரமீறல்களில்  ஈடுபட்டதாக  எத்தனையோ  குற்றச்சாட்டுகள்  உண்டு. ஆனால்,  அத்தனையையும்  அவர்  மறுத்தே  வந்துள்ளார். இப்போது,  பதவி  விலகி  பதினோரு  ஆண்டுகளுக்குப்  பிறகு,  அந்த  முன்னாள்  பிரதமர்,  ஆட்சியில்  இருப்போர் பொறுப்புடன்  நடந்துகொள்ள  வேண்டும்  என்று  அறிவுறுத்தியுள்ளார். பேராக் …

எம்எச்370: கண்டுபிடிப்பவர்களுக்குப் புகழே போதும்; வெகுமதி தேவையில்லை

காணாமல்போன  எம்எச் 370-ஐத்  தேடிக்  கண்டுபிடிப்பவர்களுக்குப்  பெரும்புகழ்  கிடைக்கும்  என்றும்  அவர்களுக்குப்  பணவெகுமதி கொடுக்க  வேண்டும்  என்பது  அவசியமில்லை  என்றும்  இடைக்கால  போக்குவரத்து  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  கூறினார். “எம்எச்370-ஐக்  கண்டுபிடிப்போருக்கு  என்ன  கொடுத்தாலும்  போதுமானதாக  இராது. யார்  அதைக்  கண்டுபிடித்தாலும்  அது  அவர்களுக்குப்  பெரும்  புகழை  அள்ளிக் …

ஹுடுட் பக்காத்தானை அழிக்கும் ஆயுதமாக பிஎன்னுக்குப் பயன்படும்

ஹுடுட்  விவகாரத்தால்  பக்காத்தான்  ரக்யாட்டில்  ஏற்பட்டுள்ள  விரிசல்  விரிவடைந்து  வருவதைச்  சுட்டிக்காட்டி  அதைத்  தொடர்ந்து  வலியுறுத்துவதால்  பேராபாயம்   விளையலாம்  என  மேலும்  ஒரு  டிஏபி  தலைவர்  எச்சரித்துள்ளார். அம்னோ  விரித்துவைத்துள்ள  வலையில்  சிக்கிக்  கொள்ள  வேண்டாமென்று  பாஸுக்கு  எச்சரிக்கை  விடுத்த  சீபூத்தே  எம்பி,  தெரேசா  கொக்,  ஹுடுட்  விவகாரம் …

எல்சிடிடி நெரிசலுக்குக் காரணம் யார்?

நேற்று,  குறைந்த-கட்டண  விமான  முனையத்தில் (எல்சிசிடி)   நெரிசல்  ஏற்பட்டதற்கு  ஏர்  ஏசியாதான்  காரணம்  என்று  குடிநுழைவுத் துறை  பழி போட  முயல்வதாக  அந்த  விமான  நிறுவனம்  கூறுகிறது. எல்சிசிடி-இல்  தங்களுக்குத்  தேவையான  சேவைகள்  குறித்து  ஏற்கனவே  குடிநுழைவுத்  துறைக்குத்  தெரிவித்துவிட்டதாக  ஏர்  ஏசியா  தலைமை  செயல்  அதிகாரி  அய்ரீன் …