கர்பாலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் சாமிவேலு

  நேற்று அதிகாலையில் சாலை விபத்தில் மரணமுற்ற நாட்டின் மூத்த அரசியல்வாதி கல்பாலுக்கு இன்று மாலை (ஏப்ரல் 18 ) முன்னாள் அமைச்சர் ச.சாமிவேலு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். தமது இறுதி மரியாதையைச் செலுத்த பினாங்கில் கர்பால் சிங்கின் இல்லத்தை சென்றடைந்த சாமிவேலுவை பினாங்கின் முதலமைச்சர் லிம் குவான்…

இண்ட்ராப்: எம்ஓயு-வை மதிக்கவில்லை என்பதை பிஎன் அறிவிக்க வேண்டும்

பிஎன்  கூட்டணி,  இண்ட்ராப்- பிஎன்  புரிந்துணர்வு  ஒப்பந்தத்தை(எம்ஓயு) மதிக்கப்போவதில்லை என்பதை  ஒப்புக்கொண்டு  அதை  வெளிப்படையாக  அறிவிக்கவும்  வேண்டும்  என  இண்ட்ராப்  செயலாளர்  பி.ராமேஷ் வலியுறுத்தியுள்ளார். அந்த  எம்ஓயு  கைப்பொப்பமிடப்பட்டு ஒராண்டு  நிறைவுபெறும்  வேளையில். பிஎன்  தலைமைச்  செயலாளருக்கு  எழுதிய  திறந்த  மடலில்  ராமேஷ், அரசாங்கம்  இவ்விவகாரத்தில்   தன்  நிலையை…

பிள்ளை பராமரிப்பை ஷியாரியா நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும்

தேசிய  ஷியாரியா  வழக்குரைஞர்  சங்கம் (பிஜிஎஸ்எம்),  எஸ்.தீபா, முஸ்லிமாக  மாறிய  இஸ்வான்  அப்துல்லா  ஆகியோரின் வயது  வராத  பிள்ளைகளை  யாரின்  பராமரிப்பில்  விடுவது  என்பதை  முடிவு  செய்ய  வேண்டியது  ஷியாரியா  நீதிமன்றமே  தவிர  சிவில்  நீதிமன்றம்  அல்ல  என்று  கூறுகிறது. “பெற்றோரில்  ஒருவர்  இஸ்லாத்துக்கு  மாறினாலும் 18வயதுக்குக்  குறைந்த …

போலீஸ் காவலில் இறந்தவருக்கு 11-ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை

2003-இல்  போலீஸ்  காவலில்  வைக்கப்பட்டிருந்த  தம்  மகன் 19-வயது  உலகநாதன்  இறந்து  போனது  எப்படி  என்று   11 ஆண்டுகளாகக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்  அவரின்  தாயார். அந்தக் கேள்விக்கு  இன்றுவரை  பதில்  இல்லை. போலீசால்  உலகநாதனின்  கொலையாளிகளையும்  கண்டுபிடிக்க  முடியவில்லை, இறப்புக்கான  காரணத்தையும்  சொல்ல  முடியவில்லை  என்று  கண்ணீர்  மல்கக்  கூறினார் …

நீர்ப் பங்கீட்டை நிறுத்து; இல்லையேல் போராட்டம்-சிலாங்கூர் அம்னோ எச்சரிக்கை

சிலாங்கூர்  அரசு  நீர்ப்  பங்கீட்டை  முடிவுக்குக்  கொண்டுவரத்  தவறினால்  ஆர்ப்பாட்டம்  நடத்தப்  போவதாக  சிலாங்கூர்  அம்னோ  எச்சரித்துள்ளது. சிலாங்கூர்  அம்னோ  தலைவர்  நோ  ஒமார்,  மே 4 வரை  சிலாங்கூர்  அரசுக்கு  கால  அவகாசம்  வழங்குவதாகக்  கூறினார் “ஆர்ப்பாட்டங்கள்  நடத்துவோம்.  தொடர்  கூட்டங்களை  நடத்துவோம். “அம்னோ  மட்டுமல்ல, மக்கள் …

நாடாளுமன்றத்தில் கர்பாலின் இறுதிப் பேச்சு

மக்களவையில்  அனல் கக்கும்  உரைகளுக்குப்  பேர் பெற்றவர் காலஞ்சென்ற  கர்பால்  சிங். கருத்துக்களும்  ஆணித்தரமாக  இருக்கும்; குரலும்  கம்பீரமாக இருக்கும்.  இதனாலேயே ‘ஜெலுத்தோங்  புலி’  என்றும்  அவர்  அழைக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில்  அவர்  கடைசியாக  பேசிய  பேச்சிலும்  அந்தப்  ‘புலியின்  உருமலை’க்  கேட்க  முடிந்தது. “இரண்டாவது  தடவையாக  அவையில்  நீதிபதிகளின் …

கடலடித் தேடலில் இதுவரை பலனில்லை

நான்கு  தடவை கடலடிக்குச்  சென்று  தேடிப்  பார்த்த தானியங்கி  குட்டி  நீர்மூழ்கிக்  கப்பலான  புளுஃபின்-21(ஏயுவி)  அங்கு  எம்எச்370  விமானம்  இருப்பதற்கான  தடயங்கள்  எதையும்  காணவில்லை. இன்று  அது ஐந்தாவது  கடலடிப் பயணத்தை  மேற்கொண்டிருப்பதாக கூட்டு  ஒருங்கிணைப்பு  மையம்  தெரிவித்தது. புளுஃபின்  மிக  மெதுவாகத்தான்  செயல்படும். இதுவரை  110 சதுர …

மினி-ரோபோட்டுகளைக் கொடுத்துதவ முன்வந்தார் ஜேம்ஸ் கேமருன்

ஆழ்க்கடல்  ஆய்வாளரும்  திரைப்பட  இயக்குனருமான  ஜேம்ஸ்  கேமருன்,  டைடேனிக்  கப்பலின்  உடைந்த  பகுதிகளை  ஆராய  தமக்குப்  பயன்பட்ட  தொலைவிலிருந்து  இயக்கப்படும்  சிறு-ரக  நீர்மூழ்கிச்  சாதனங்கள்  எம்எச்370-ஐத்  தேடும்பணிக்கும்  உதவியாக  இருக்கும்  என்று  கூறியுள்ளார். “கப்பலின்  உடைந்த  பகுதிகளை  ஆராய  நாங்கள்  உருவாக்கிய  ரோபோட்டுகள்  பயன்படுமானால்  அவற்றைக்  கொடுத்துதவ  தயார்”, …

கர்பால் விபத்து : லாரி ஓட்டுநர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தார்

இன்று  அதிகாலை  புக்கிட்  குளுகோர்  எம்பி  கர்பால்  சிங்  கொல்லப்பட்ட  சாலை  விபத்தில்  சம்பந்தப்பட்ட  லாரியின்  ஓட்டுநர்  போதைப்  பொருள்  உட்கொண்டிருந்தார்  என்பது  தெரிய  வந்துள்ளது. தொடக்க  நிலை  ஆய்வுகள்  அவரது  உடலில்  கேன்னபிஸ்  இருப்பதைக்  காட்டின  என்று  பேராக்  போலீஸ்  தலைவர்  ஏக்ரைல்  சானி  அப்துல்லா  கூறினார்.…

பினாங்கில் கர்பாலுக்கு அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்கு

பினாங்கு  அரசு,  காலஞ்சென்ற  நாடாளுமன்ற  உறுப்பினர்  கர்பால்  சிங்குக்கு  அதிகாரப்பூர்வமான  முறையில்  இறுதிச்  சடங்குகளைச்  செய்யும். கர்பாலின்  நல்லுடல்  பினாங்கு  கொடியால்  போர்த்தப்படும்  என  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறினார். மாநில  அரசுக் கட்டிடங்களில்  பினாங்கு  கொடிகள்,  ஞாயிற்றுக்கிழமைவரை  அரைக் கம்பத்தில்  பறக்கவிடப்படும். கர்பாலின்  உடல்  பொதுமக்கள் …

தெய்வச் சிலைகள் குறித்து முன்னாள்-நீதிபதி சொன்ன இனவாத கருத்துக்கு மஇகா…

மேல்முறையீட்டு  நீதிமன்றத்தின்  முன்னாள்  நீதிபதி  முகம்மட்  நூர்  அப்துல்லா  மீண்டும்  கண்டனத்துக்கு  இலக்கானார்.   இம்முறை  இந்து,  புத்த   சிலைகள்  பொது  இடங்களில் வைக்கப்பட்டிருப்பது  இஸ்லாத்துக்கு  விரோதமானது  என்று  கூறியதற்காக  அவருக்குக்  கண்டனம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. .   “பத்து  மலை  கோயிலிலும்   பினாங்கு  புத்த  ஆலயத்திலும்  வைக்கப்பட்டுள்ள  “பெரிய”  சிலைகள், …

ஒரே ஒரு நாள் நஜிப் குறைந்த-விலை வீட்டில் தங்குவாரா?

  மலேசியாவில்  சொத்துச்  சந்தையில்  விலைகள்  கிடுகிடுவென்று  உயர்கின்றன.  சொத்துக்களை  வைத்து  ஊக  வணிகம்  செய்வோர்  கொள்ளை  இலாபம்  பெறுகின்றனர்.  ஆனால்,  ஏழைகளோ  நன்கு  பராமரிக்கப்படாத  குறைந்த-விலை  அடுக்குமாடி  விடுகளில்  கொண்டு  போய்த்  திணிக்கப்படுகிறார்கள். இந்நிலையைக்  கவனப்படுத்துவதற்காக மலேசிய  சோசலிசக்  கட்சியும்(பிஎஸ்எம்) ஒரு  டஜன்  என்ஜிஓ-களும்  சேர்ந்து  ஒரு …

காலிட்: அன்வாரின் மேலாதிக்கம் இல்லை

அன்வார்  இப்ராகிம்  சிலாங்கூரின்  பொருளாதார  ஆலோசகராக  இருந்தாலும்  நிர்வாக  முடிவுகளைச்  செய்வதில்  அவருடைய  மேலாதிக்கம்  இல்லை  என  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிம்  கூறினார். பொருளாதார  ஆலோசகரிடமிருந்து  ஆலோசனைகள்   பெற்றாலும்  மாநிலத்  தலைவர்  என்ற  முறையில்  தம்மால்  செய்யப்படும்  முடிவுகளுக்குத்  தாமே  பொறுப்பு  என்றாரவர். “அவ்வப்போது  கலந்து  பேசுவோம். …

கர்பால் சிங் விபத்தில் கொல்லப்பட்டார்

  மலேசியாவின் பெருமைமிக்க எதிரணித் தலைவர் கர்பால் சிங் இன்று அதிகாலையில் நடந்த ஒரு விபத்தில் கொல்லப்பட்டார். அதிகாலை மணி 1.10 க்கு 301.6 கிமீ வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. கர்பாலின் மகன் ராம் கர்பால் மற்றும் ஓட்டுநர் காயமுற்றதாக நம்பப்படுகிறது. இன்று நடைபெறவிருக்கும் வழக்கு…

அன்வார்: கருப்புப் பெட்டியைப் ‘பாதுகாக்க’ முயல்கிறார்களா?

எம்எச்370-இல்  இருந்த  கருப்புப்  பெட்டி  யாருக்குச்   சொந்தம்  என்பதைத்  தீர்மானிப்பதற்காக  சட்டத்துறைத்  தலைவர்  அப்துல்  கனி  பட்டேய்ல்  பிரிட்டனுக்குச்  சென்றிருப்பதன்  நோக்கம்  அது  வெளிநாட்டவர்  கைகளில்  சிக்கிவிடாமல்  தடுப்பதற்காகத்தானோ  என்று  ஐயுறுகிறார்  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம். “கருப்புப்  பெட்டியைப்  பாதுகாப்பதில்  அதிக  அக்கறை  காட்டுகிறார்கள். இது …

சுல். நூர்டின்: ஹுடுட்டுக்காக அல்லாஹ் கர்பாலைச் சாகடித்தார்

புக்கிட்  குளுகோர்  எம்பி  கர்பால்  சிங்கின் இறப்புக்காக  இரங்கல்  செய்திகள்  குவியும்  வேளையில்,  இதயமற்ற   சிலர்  அவரின்   இறப்பைக்  கொண்டாடுகிறார்கள். அந்த  வகையில்  கூலிம்  பண்டார்  பாரு  எம்பி  சுல்கிப்ளி  நூர்டின்  தெரிவித்துள்ள  கருத்து  பலரின்  ஆத்திரத்தைக்  கிளறி  விட்டிருக்கிறது. அவர்,  கர்பாலின்  இறப்பு   மலேசியாவில்  ஹுடுட்  சட்டம் …

கர்பால் மறைவு நீதித்துறைக்கும் நாட்டுக்கும் மாபெரும் இழப்பு

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஸ்ரீஅண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர், ஏப்ரல் 14, 2014. மலேசியாவுக்கு இன்று ஒரு கருப்பு தினம், நாடு ஒரு அஞ்சாத சிங்கத்தை இழந்து விட்டது. மனித உரிமை மற்றும் நீதிக்கான ஓயாத போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட கர்பால் சிங்கை நாடு இழக்க நேரிட்டது…

ஜோகூர் தரைப்பாலத்தை எடுத்துவிடலாம் என்கிறார் மகாதிர்

புதிதாக  நட்புறவுப்  பாலம்  கட்டுவதாக  இருந்தால்  ஜோகூர்  கோஸ்வேயை (தரைப்பாலம்)  எடுத்துவிடலாம்  என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  பரிந்துரைத்துள்ளார். ஜோகூர் தரைப்பாலத்தால்  ஜோகூர்  பாருவில்  சுற்றுச்சூழல்  விவகாரங்கள்,  போக்குவரத்து  நெரிசல்  உள்பட  பல  பிரச்னைகள்  ஏற்படுவதாக  அவர்  கூறினார். “பாலம்  கட்டுவதானால்  பிறகு  இந்தத்  தரைப்பாலம் …

வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க அனைத்துலக வாரியம்

போக்குவரத்து  அமைச்சு,  மலேசியாவின்  வெளிப்படைத்தன்மையை  நிரூபிக்க  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  காணாமல்போனதை  விசாரணை  செய்ய  அனைத்துலக  நிபுணர்  வாரியம்  ஒன்றை  அமைக்குமாறு    அமைச்சரவையிடம்  பரிந்துரைத்துள்ளது. இன்று  செய்தியாளர்களிடம்  பேசிய  இடைக்காலப்  போக்குவரத்து  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன், விமானம்  காணாமல்போன  விவகாரத்தில்  மலேசியா  எதையும்   மூடி மறைக்க  வேண்டிய …

கோத்தபாய இராஜ பக்சே மலேசிய வருகை கண்டனதிற்குறியது

தமிழர்களைக் இனப்படுகொலை செய்த இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய இராஜ பக்சேவை மலேசிய பிரதமர் நஜீப் துன் ரசாக் நேற்று மாலை புத்திரஜெயாவில் சந்தித்து பேசியதாதாக பெர்னாமா அறிக்கை கூறுகிறது.    ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் நடுநிலையாக இதற்கு முன்பு வாக்களித்த மலேசியா…

மூன்றாவது தடவையாக எம்எச்370-ஐத் தேடி கடலடிக்குச் சென்றது புளுஃபின் நீர்மூழ்கி

எம்எச்370  கடலடி  தானியங்கி கலமான  புளுஃபின்-21,  இன்று  காலை  தொழில்நுட்பப்  பிரச்னை  காரணமாக  தேடல்  முயற்சியைக் கைவிட  நேர்ந்ததாக  கூட்டு  ஒசுங்கிணைப்பு  மையம் (ஜேஏசிசி)  கூறியது. பின்னர், பிரச்னை  சரிசெய்யப்பட்டு,  அமெரிக்கக்  கடற்படைக்குச்  சொந்தமான  புளுஃபின்-21,  எம்எச்370-இன்  உடைந்த  பகுதிகளைத்  தேடும்பணியைத்  தொடர்வதற்காக   மீண்டும்  கடலடிக்கு  அனுப்பப்பட்டது. “அது …

தாம் சொன்னதை பிரதமர் திரித்துக் கூறினார் என அன்வார் ஆத்திரம்

பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  சீன  நாளடான  சதர்ன்  வீக்லி- இடம்  தாம்  கூறிய  ஒரு  கருத்தைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் தம்  வசதிக்கு  ஏற்ப “திரித்துக்  கூறிவிட்டார்”  எனச்  சாடியுள்ளார். நேற்று  நிதி  அமைச்சின்  கூட்டத்தில்  பேசிய  நஜிப், “தாம்  மட்டும்  பிரதமராக  இருந்தால் …

நேர்மைவாய்ந்த மலாய்க்காரர்கள் குறைந்துவிட்டார்களே: வருந்துகிறார் ஜைட்

ஒரு   நேர்மைவாய்ந்த  மலாய்க்காரர். தனக்கு  எது  செய்யப்படக்கூடாது  என்று  நினைக்கிறாரோ  அதை  அவர்  மற்றவருக்குச்  செய்ய  மாட்டார்  என்கிறார்  ஜைட்  இப்ராகிம். அப்படிப்பட்ட  மலாய்க்கார்கள்  நிறைய  பேர் இருக்கிறார்களா   என்று  அந்த  முன்னாள்  சட்ட  அமைச்சர்  தம்  வலைப்பதிவில்  ஒரு  கேள்வியை  எழுப்பியுள்ளார்.  அதற்கு  அவரே  பதிலும்  அளித்துள்ளார்.…