நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பத்தினர், தங்களது அன்புக்குரியவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அஞ்சுகின்றனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணி 11ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், குடும்பத்தினரின் கவலை மேலும் அதிகரித்துள்ளது. மலேசிய குடும்பங்களின்…
ஒஎஸ்எப் நிதி: மரினா போலீஸ் கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்து…
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா இன்று புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டு ஒஎஸ்எம் என்ற அமைப்பு அளித்ததாக கூறப்படும் மான்யம் குறித்து போலீசாரால் விசாரிக்கப்பட்டார். கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த விட்ட மாரியா, தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் பதில் கூறுவார். இதனை மரியாவின் வழக்குரைஞர் பர்ஹானா அப்துல் ஹாலிம்…
அஸ்மின்: ஆட்சியாளர்கள் நஜிப்பின் உதவியாளர் இசி-க்கு நியமனம் செய்யப்பட்டதை நிராகரித்தனர்
தேர்தல் ஆணையம் (இசி) பிஎன் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை வலியுறுத்திய சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முதன்மை செயலாளரை அதன் துணைத் தலைவராக்கப் பரிந்துரைக்கப்பட்டதைக் கவனப்படுத்தினார். அப்பரிந்துரையை ஆட்சியாளர்கள் ஏற்கவில்லை என்றவர் கூறினார். “துணைத் தலைவராக நியமனம் செய்வதற்கு ஒரு பெயர் …
சீரியா செல்லும் வழியில் மலேசியர் இருவர் துருக்கியில் கைது
சீரியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொள்ளத் திட்டமிட்டிருந்த இரு மலேசியர்களை துருக்கிய அதிகாரிகள் கைது செய்ததாக மலேசிய போலீஸ் அறிவித்தது. அவ்விருவரும் ஐஎஸ்-ஸில் சேர்வதற்காக ஐஎஸ் உறுப்பினராகவுள்ள மலேசியரான முகம்மட் வாண்டி முகம்மட் ஜெடியால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார்.…
ஒஎஸ்எப்-உடன் எந்தத் தொடர்புமில்லை என்கிறது பினாங்கு கழகம்
பினாங்கு கழகம் , அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் ஆதரவில் செயல்படும் ஓபன் சொசைடி அறநிறுவன(ஓஎஸ்எப்)த்திடமிருந்து நிதியுதவி பெற்றதாகக் கூறும் ஊடகச் செய்திகளை மறுத்தது. “டிசி லீக்ஸ் என்ற இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த ஒரு ஆவணத்தை அடிப்படையாக வைத்து இக்குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. “பினாங்கு கழகம், ஓபன் சொசைடி அறநிறுவனத்திடம் நிதியுதவி …
ஒதுக்கீடுகளை அலுவலகத்துக்காக அல்லாமல் மக்களுக்காக செலவிடுவீர்: சிலாங்கூரில் பிஎன் பிரதிநிதிகளுக்கு…
சிலாங்கூர் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தொகுதிகளுக்காகக் கொடுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை மக்களுக்குச் செலவிடாமல் அலுவலகச் செலவினங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என டிஏபியின் கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் கூறுகிறார். “நேற்று சட்டமன்றத்தில் சிலாங்கூர் பட்ஜெட் 2017 மீதான விவாதங்களை முடித்து வைத்துப் பேசிய …
ஐஜிபி: சிவப்புச் சட்டையினர் மலேசியாகினியை அடித்து நொறுக்கப்போகிறார்களா? பார்ப்போம்
சனிக்கிழமை சிவப்புச் சட்டையினர் மலேசியாகினி அலுவலகத்துக்குமுன் ஆர்ப்பாட்டம் செய்வார்களானால் அங்கு என்ன நடக்கிறது என்பதை போலீசார் பார்க்கத்தான் போகிறார்கள் என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ்(ஐஜிபி) காலிட் அபு பக்கார் கூறினார். “சனிக்கிழமை பார்ப்போம்”, என்று புக்கிட் அமானில் செய்தியாளர் கூட்டத்தில் காலிட் தெரிவித்தார். சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள சிவப்புச் …
ஐஜிபி: மலேசியாகினியை விசாரிக்க சிறப்புக் குழு
மலேசியாகினி அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடமிருந்து மான்யம் பெற்றதாகக் கசிந்துள்ளதாக தகவலை விசாரிக்க போலீஸ் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. கூட்டரசு குற்றப்புலனாய்வுத் துறை துணை இயக்குனர் ஒருவரின் தலைமையில் அக்குழு செயல்படும் என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரை மேற்கோள்காட்டி உத்துசான் மலேசியா …
மலேசியாகினி அலுவலகத்தில் 50க்கு மேற்பட்ட சிவப்புச் சட்டையினர்
அம்னோ சுங்கை புசார் தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் தலைமையில் சுமார் 50 சிவப்புச் சட்டையினர் இன்று மலேசியாகினி அலுவலகத்துக்கு வந்தனர். பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்ட அக்கூட்டம் ‘மேரா, மேரா (சிவப்பு, சிவப்பு)’ என்றும் ‘ஹஞ்சோர் சோரோஸ் (சோரோஸ் ஒழிக)’ என்றும் முழக்கமிட்டது. ஜமாலும் அவருடன் சில …
லிம்: ஐஆர்பி ஜோ லாவை அல்லவா முதலில் விரட்டிப் பிடிக்க…
உள்நாட்டு வருமான வரி வாரியம் (ஐஆர்பி) வரி வசூலிக்கும் விசயத்தில் வணிகர்களை விரட்டுவதை விடுத்து பினாங்கில் பிறந்தவரான ஜோ லாவையும் அவரின் குடும்பத்தாரையும் பிடிப்பதற்கு முன்னிரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங். “வரி வசூலிப்பு குறைந்திருப்பதை ஈடு செய்ய ஐஆர்பி கடுமையான …
மரியா: பெர்சே டட்டாரான் மெர்டேகாவுக்குள் நுழையாது
நவம்பர் 19 பேரணியில் பங்கேற்போர் கோலாலும்பூரில் ஜாலான் ராஜாவை விட்டும் டட்டாரான் மெர்டேகாவை விட்டும் விலகி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறு போலீசார் பெர்சேயைக் கேட்டுக்கொண்டிருப்பதாக பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கூறினார். ஜாலான் ராஜா, பெர்சே பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டட்டாரான் மெர்டேகாவை அடுத்துள்ள …
சீனாவையே அதிகம் சார்ந்திருப்பது நல்லதல்ல: அன்வார் எச்சரிக்கை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சீனப் பயணத்தை வரவேற்ற முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சீனாவையே அதிகம் சார்ந்திருப்பது நல்லதல்ல என்றும் எச்சரித்தார். அதற்குப் பதில் நஜிப் பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிகேஆரின் நடப்பில் தலைவர் வலியுறுத்தினார். பொருளாதாரம் “சீர்குலைந்து கிடப்பதாக”க் குறிப்பிட்ட …
ஓஎஸ்எப் நிதியளிப்பை எம்சிஎம்சி விசாரிக்கிறது- அமைச்சர்
பெர்சே, கருத்துக்கணிப்புகளைச் செய்யும் மெர்டேகா மையம், இணையச் செய்தித்தளமான மலேசியாகினி ஆகியவை ஓபன் சொசைடி பவுண்டேச(ஓஎஸ்எப்)னிடமிருந்து நிதியுதவி பெற்றதாகக் கசிந்துள்ள தகவலை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) விசாரித்து வருகிறது. இதைத் தெரிவித்த தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக், அவ்விவகாரம் தொடர்பில் ஆணையம் பல …
மலேசியா ஒருபோதும் சீனாவின் கைப்பாவையாக மாறாது, ஏசிசிசிஐஎம்
சீனாவுக்குக் குத்தகைகளைக் கொடுப்பதால் மலேசியா சீனாவின் கைப்பாவையாக மாறும் என்று கூறப்படுவதை மலேசிய சீன வணிகச் சமூகம் மறுக்கிறது. மலேசியா பொருளியல் தடையற்ற ஒரு சந்தை என்பதால் அன்னிய முதலீடுகள் இங்கு வரவேற்கப்படுகின்றன என மலேசிய சீனர் வர்த்தக, தொழில்துறை சங்கத் (ஏசிசிசிஐஎம்) தலைவர் டெர் லியோங் யாப் …
நஜிப்பின் சீனாவுடனான ஒப்பந்தங்கள் மலேசியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையலாம், மகாதிர்…
சீனாவுடன் பிரதமர் நஜிப் ரசாக் செய்துகொண்டுள்ள பல ஒப்பந்தங்கள் மலேசியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக வந்து முடியக்கூடும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் தென்சீனக் கடலில் மலேசியா கோரும் ஒரு நிலப்பரப்பை சீனாவும் கோருவது அடங்கும். குறிப்பாக, ஈஸ்ட் கோஸ்ட் ரெயில் லிங்க்…
மலேசியர்கள் பெர்சே 5 பேரணியில் பங்கேற்க வேண்டும், அன்வார்
நவம்பர் 19 பெர்சே பேரணியில் மலேசியர்கள் பங்கேற்க வேண்டும் என்று முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வலிறுத்தியுள்ளார். ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று சிறையிலிருக்கும் அன்வார் இப்ராகிம் பிகேஆர் மூலம் வெளியிடப்பட்ட ஒரு குறிப்பில் கூறியுள்ளார். "மெர்தேக்கா பிரகடனம் 1957 மற்றும்…
நேரடிப் போட்டி பாஸுக்கு சம்மதமே, ஆனால் ஒரு நிபந்தனை
பாஸ் கட்சி, 14வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு எதிராக நேரடிப் போட்டியை உறுதிப்படுத்துவதற்கு மற்ற எதிர்க்கட்சிகளுடன் பேச்சுக்குத் தயாராக உள்ளது என அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார். ஆனால், ஒரு நிபந்தனை. பாஸின் தாயகத்தில் அதற்கு மற்றவர்கள் தொல்லை கொடுக்கக் கூடாது. “பாஸ் எப்போதுமே (பேச்சுகளுக்கு) …
முன்னாள் இசி தலைவர் பெர்சத்துவில் சேர்ந்தார், உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார்
தேர்தல் ஆணைய(இசி)த்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் ரஹ்மான் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வில் சேர்ந்தார். இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அப்துல் ரஷிட் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள பெர்சத்துவின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அப்துல் ரஷிட் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அப்துல் ரஷிட் 2000த்திலிருந்து 2008 வரை …
அடுத்த ஆண்டு நான்கு நெடுஞ்சாலைகள் மட்டுமே சாலைக்கட்டணத்தை உயர்த்த உரிமை…
ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி நான்கு நெடுஞ்சாலைகள் மட்டுமே அடுத்த ஆண்டு சாலைக் கட்டணத்தை உயர்த்த முடியும் எனப் பொதுப் பணி அமைச்சர் பாடில்லா யூசுப் கூறினார். ஈஸ்டர்ன் டிஸ்பர்சல் லிங் (ஈடிஎல்), காஜாங்- சிரம்பான் நெடுஞ்சாலை (லிக்காஸ்), செனாய்- தேசாரூ விரைவுச் சாலை(எஸ்டிஇ), கத்ரி கோரிடோர் விரைவுச் சாலை(ஜிசிஇ) …
பெர்சே, சிவப்புச் சட்டையினர் டட்டாரான் மெர்டேகாவில் பேரணி நடத்த முடியாது:…
அம்னோ தொடர்புள்ள சிவப்புச் சட்டையினராக இருந்தாலும் சரி, பெர்சேயின் மஞ்சள் சட்டையினராக இருந்தாலும் சரி டட்டாரான் மெர்டேகாவில் பேரணி நடத்த முடியாது என கோலாலும்பூர் மேயர் முகம்மட் நோர்டின் அப்துல் அசிஸ் இன்று அறிவித்துள்ளார். இன்று மலேசியாகினியிடம் பேசிய அவர், நவம்பர் 5 சிவப்புச் சட்டை பேரணிக்கும் நவம்பர் …
சமையல் எண்ணெய் விலையை ‘KPDNKK’ நண்பர்கள் கண்காணிக்க வேண்டும்
‘KPDNKK’ என்ற பெயரில் உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சின் தோழர்களாக செயல்படும் பொதுமக்களும் கிராம, சமூகத் தலைவர்களும் விலைவாசிமீது எப்போதும் ஒரு கண்வைத்திருக்க வேண்டும் எனத் துணை அமைச்சர் ஹென்ரி சம் ஆகோங் கேட்டுக்கொண்டார். “விலைகள் அளவுமீறி உயர்வதைக் கண்காணிக்க ‘KPDNKK நண்பர்கள்’ அரசாங்கத்துக்கு உதவ …
சோரோஸ்-தொடர்புள்ள ஓஎஸ்எப்- இடமிருந்து நிதியுதவி பெற்றதாகக் கூறப்படுவதை மறுக்கிறது யுனிமாஸ்
யுனிவர்சிடி மலேசியா சரவாக்(யுனிமாஸ்), கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் நிறுவிய ஓபன் சொசைடி ஃபண்ட்ஸ்(ஓஎஸ்எப்) நிறுவனத்திடமிருந்து மானியம் பெற்றதாகக் கூறப்படுவதை அடியோடு மறுக்கிறது. அதனை மறுத்த யுனிமாஸ் துணை வேந்தர் பேராசிரியர் முகம்மட் காடிம் சுவார்டி, ஒருவேளை பல்கலைக்கழகத்துக்குத் தெரியாமல் அதன் ஆராய்ச்சியாளர்கள் அல்லது விரிவுரையாளர்கள் “அதிகாரப்பூர்வமற்ற வழிகளில்” நிதியுதவி …
ஏர் ஏசியா விமானம் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு சென்று விபத்துக்குள்ளானது
ஏர் ஏசியா விமான நிறுவனம் நேற்றிரவு கோட்டா பாருவிலிருந்து கோலாலும்பூருக்குப் பயணப்படவிருந்த அதன் ஏகே6443 விமானம் கிளந்தான் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் ஓடுபாதையில் மெதுவாக ஓடிக்கொண்டிருந்த வழுக்கிக்கொண்டு சென்று விபத்துள்ளானதை உறுதிப்படுத்தியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என அது அறிவித்தது. “பயணிகள் கவனிக்கப்பட்டு அவர்களுக்குத் …
இரகசியங்களைக் கசியவிட்டார் என்று கூறப்படுவதால் போலீஸ் முகைதினை விசாரணைக்கு அழைத்துள்ளது
நாடாளுமன்ற மக்களவையில் 2017 ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்தின் அமைச்சரவையின் இரகசியங்களை கசிய விட்டார் என்று கூறப்படுவது குறித்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீஸ் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினை அழைத்துள்ளது. போலீசார் தம்மை அழைத்ததாகவும், ஆனால் எப்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்பது நிர்ணயிக்கப்படவில்லை.…


