மர்தியா ஜொஹாரி கூறுகையில், 2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு DAP மற்றும் PH கட்சிகளுக்கு UMNO-வின் ஆதரவு தேவைப்பட்டபோது, இந்த விவகாரம் எழுப்பப்படவில்லை என்றார். PAS பிரதிநிதி மர்தியா ஜோஹாரி கூறுகையில், UMNO-வின் ஆதரவு தேவைப்பட்டபோது மௌனம் காத்த DAP, தற்போது விடுத்துள்ள அழைப்பு…
முகைதின் யாசின் சவால்: நஜிப், என் மீது வழக்கு போடுங்கள்
தாம் பிரதமர் நஜிப் மீது சாட்டியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றால் தமக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அவரது முன்னாள் எஜமானர் நஜிப்புக்கு சவால் விட்டிருக்கிறார். இது நஜிப் 1எம்டிபி மூலமாக பொதுப் பணத்தை மோசடி செய்து நாட்டிற்கு…
தமிழ்ப்பள்ளிகள் குண்டர்களை உருவாக்குகின்றன என்ற அறிக்கைகள் சரியானவை அல்ல
தமிழ்ப்பள்ளிகள் குண்டர்களை உருவாக்கும் இடம் என்ற அறிக்கைகள் சரியானவை அல்ல, ஏனென்றால் அவை தவறான மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டவை என்று ஒரு சிவில் சமூக அமைப்பின் தலைவர்கள் கூறுகின்றனர். இவ்விவகாரம் சம்பந்தமாக விளக்கம் பெறுவதற்காக மைஸ்கில்ஸ் இயக்குநர் எஸ். பசுபதியை சந்தித்ததாகவும் அவர் "தமிழ்ப்பள்ளிகள் குண்டர்தனத்தின் பிறப்பிடம்…
ரபிசி: வருத்தமில்லை; சிறை செல்லவும் தயார்
பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லி எதற்கும் கலங்காதவர். அதிகாரத்துவ இரகசிய சட்டத்தை (ஓஎஸ்ஏ) மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் சிறை செல்லவும் தயார் என்கிறார். கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ரபிஸியை அதிகாரத்துவ இரகசிய சட்டம் 1972-இன்கீழ் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக எதிர்வாதம் செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் …
பிரேசில் அதிபர் ரூசெப் பதவிநீக்கம், டெமர் புதிய அதிபர்
ஊழல்களாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் அலைக்கழிக்கப்பட்டு வந்த லத்தின் அமெரிக்காவின் மிகப் பெரிய நாடான பிரேசிலில் செனட் அவை அதிபர் டில்மா ரூசெப்பைப் பதவிநீக்கம் செய்தது. ரூசெப்மீது அடுக்கடுக்காகக் கூறப்பட்டு வந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் செனட்டர்கள் 61க்கு 20 என்ற வாக்குகளில் அவரைப் பதவியிலிருந்து நீக்கினர். அவருக்குப் பதிலாக …
‘ஜனநாயகத்தைக் கீழறுக்க முயன்றதாக’ டிஏபி, பிகேஆர் பிரதிநிதிகள், மாணவர்கள் முதலியோரிடம்…
கடந்த வார இறுதியில் நடைபெற்ற தங்காப் எம்ஓ1 பேரணி தொடர்பில் டிஏபி-இன் ராசா எம்பி தியோ கொக் சியோங், பிகேஆரின் ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் மாட், சில மாணவர்கள், ஒரு சமூக ஆர்வலர் ஆகியோரை வாக்குமூலம் பதிவு செய்வதற்காக போலீஸ் அழைத்திருந்தது. அவர்கள் இன்று …
ஓஎஸ்ஏ குற்றச்சாட்டில் எதிர்வாதம் செய்யும்படி நீதிமன்றம் ரபிஸிக்கு உத்தரவு
கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லியை அதிகாரத்துவ இரகசிய சட்டம் 1972-இன்கீழ் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக எதிர்வாதம் செய்ய உத்தரவிட்டிருக்கிறது. “அவர்மீது வழக்கு தொடுக்க போதுமான காரணங்கள் இருப்பதை அரசுத்தரப்பு நிறுவியுள்ளது எனக் கருதுகிறேன்”, என்று செஷன்ஸ் நீதிபதி சுல்கர்னைன் ஹசான் கூறினார்.…
மலேசியாவின் முதல் ஸிக்கா நோயாளி
கிள்ளானைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு ஸிக்கா நோய் கண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு இன்று அறிவித்தது. அவரே மலேசியாவின் முதல் ஸிக்கா நோயாளியாக இருக்கக்கூடும். அந்த 58-வயது அம்மையார், சிங்கப்பூரில் ஸிக்கா நோய்க்கு ஆளான ஒரு பெண்ணின் தாயாராவார் என சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.…
TangkapMO1 பேரணி: வாக்குமூலம் அளிக்க எம்பி-க்கு அழைப்பு
தங்காப் எம்ஓ1 பேரணி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக போலீசார் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) தியோ கொக் செங்-கை அழைத்துள்ளனர். தியோ பேரணி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் அல்ல என்பதால் தன்னை போலீஸ் விசாரணைக்கு அழைக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. “நான் ஏற்பாட்டாளன் அல்ல. மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே சென்றேன். “மஸ்ஜித் நெகராவில் …
சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26பேருக்கு ஸிக்கா…
சிங்கப்பூரில் ஸிக்கா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82ஆக உயர்ந்தது. கொசுக்களினால் பரப்பப்படும் ஸிக்கா நோய் முதன்முதலில் அமெரிக்க நாடுகளிலும் கரீபியனிலும் தோன்றியது. இப்போது அந்நோய் சிங்கப்பூரிலும் பரவி உள்ளது. கருவுற்றிருக்கும் பெண்கள் இந்நோயால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடனும் முளை வளர்ச்சிக் குன்றியும் …
தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட’ மூன்று ஐஎஸ் தீவிரவாதிகள் கைது
கேளிக்கை மையங்கள், பத்துமலை கோயில், போலீஸ் நிலையங்கள் ஆகியவற்றைத் தாக்குவதற்குத் திட்டமிட்டதாகக் கூறப்படும் முவரை போலீஸ் கைது செய்தது. ஐஎஸ் தீவிரவாதிகள் என்று நம்பப்படும் அம்மூவரும் தேசிய நாளுக்கு முன்தினம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார்களாம். தாக்குதல் நடத்தச் சொல்லி தற்போது சீரியாவில் உள்ள மலேசியரான ஐஎஸ் தீவிரவாதி முகம்மட் …
மலேசியாகினி தவறான வாசகத்தை வெளியிட்டது – பசுபதி
“ஒரு தமிழ்ப்பள்ளிக்கு போய், அங்குள்ள கழிவறைக்கு போனால் அங்கு குண்டர் கும்பல் அடையாளங்களை காண்பீர்கள்”, என்ற வாசகத்தை நான் சொன்னதாக வெளியிட்ட மலேசியாகினி அவ்வாசகத்தை மீட்டுக்கொண்டதாக பசுபதி சிதம்பரம் கூறினார். இந்தத் தவறான பதிவை அடிப்படையாகக் கொண்டு மலேசிய நண்பன் நாளிதழ் பல அவதூறான செய்திகளை வெளியிட்டிருப்பது வருந்தத்தக்கது என்றார்.…
பினாங்கில் ‘கோமாளி-முகம் கொண்ட குவான் எங்’ படங்கள்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கோமாளிபோல் சித்திரிக்கும் படங்கள் முன்பு நாடு முழுக்க உலா வந்ததுபோல் இப்போது பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கைக் கோமாளிபோல் காட்டும் படங்கள் வெளிவந்துள்ளன. பினாங்கில் பஸ் நிறுத்தங்கள், தெரு விளக்குக் கம்பங்கள் போன்றவற்றில் லிம்மின் கேலிச்சித்திரங்கள் 'Badut Banglo'(பங்களா கோமாளி) என்று …
எம்ஏசிசி 1எம்டிபி-யைக் கண்டுகொள்ளாமல் ஊழல்- எதிர்ப்பில் ஈடுபடுவது நம்பும்படியாக இல்லை
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) 1எம்டிபி ஊழலைக் கண்டுகொள்ளாமல் பல்வேறு உயர் அதிகாரிகள்மீது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹசான் சாடினார். பல தடவை எம்ஏசிசி-இடம் 1எம்டிபி ஊழல் மீதும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கில் பல-…
‘பங்சா ஜோகூர் பற்றி அறியாதவர்கள் அது குறித்து பேசக் கூடாது’
ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார், ஒன்றின் வரலாறு அல்லது பின்னணி பற்றி அறியாதவர்கள் அது குறித்துப் பேசக் கூடாது என்பதை இன்று மீண்டும் வலியுறுத்தினார். சுல்தான் ஆங்கில நாளேடான நியு ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் அவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ‘பங்சா …
இஸ்மா தலைவர் தேசநிந்தனை புரிந்திருக்கிறார்: நீதிமன்றம் தீர்ப்பு
காஜாங் செஷன்ஸ் நீதிமன்றம், ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா(இஸ்மின்) தலைவர் அப்துல்லா ஷேக் அப்துல் ரஹ்மான் தேச நிந்தனைக் குற்றம் புரிந்திருக்கிறார் என இன்று தீர்ப்பளித்தது. ஈராண்டுகளுக்கு முன்பு இஸ்மா அகப்பக்கத்தில் பதிவிட்டிருந்த ஒரு கட்டுரைக்காக அப்துல்லா ஷேக்மீது தேச நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டது. 'Kedatangan pendatang Cina bersama…
கிள்ளான் பள்ளத்தாக்கில் காலையில் திடீர் வெள்ளப் பெருக்கு
காலை நேரத்தில் கொட்டிய கடும் மழையால் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல இடங்களில் திடீர் வெள்ளம் பெருகி மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து நிலைகுத்தி நின்றதை முகநூலில் இன்போர்மாசி மலேசியா பதிவேற்றம் செய்த படங்கள் காண்பித்தன. சுபாங் ஸ்கைபார்க் முனையத்துக்குச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலையில் பல …
முன்னாள் பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் அமானாவில் சேர்வார்
பாஸ் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ஹுசாம் மூசா பார்டி அமனா நெகாரா(அமனா)வில் சேரப் போவது பற்றி இன்றிரவு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமனா தலைவர்கள் பலரும் அதை உறுதிப்படுத்தினார்கள். சாலோர் சட்டமன்ற உறுப்பினரான ஹுசாம், இன்றிரவு சைபர் ஜெயாவில் தம் முடிவை அறிவிப்பார் என்றவர்கள் தெரிவித்தனர்.
டாங் வாங்கி போலீஸ் நிலையத்துக்கும்முன் கெராக்கான் மெரா ஆர்ப்பாட்டம்
கெராக்கான் மெரா இயக்கத்தினர், போலீசார் சனிக்கிழமை #TangkapMO1 பேரணியில் கலந்து கொண்டோரைக் கைது செய்யத் தவறியதைக் கண்டித்து இன்று டாங் வாங்கி போலீஸ் மாவட்ட தலைமையகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “(தங்காப் எம்ஓ1 பேரணியில் பங்கேற்ற) சமூக ஆர்வலர்களில் எவரையும் கைது செய்யாததைக் கண்டிக்கவே இன்று இங்கு கூடியுள்ளோம்.…
நஜிப்பின் கணக்கில் ரிம1 பில்லியன் இருந்ததற்கு ஆதாரம் காண்பிக்க முடியுமா?…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கில் கிட்டத்தட்ட ரிம1 பில்லியன் இருந்ததாகக் கூறும் முகைதின் யாசின் அதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க முடியுமா எனத் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி வினவினார். “அவரிடம் ஆதாரம் இருந்தால் காண்பிக்கச் சொல்லுங்கள்”, என புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் …
புகை மூட்டம் மோசமடைகிறது; தேசிய நாள் கொண்டாட்டம் பாதிக்கப்படுமா?
கிள்ளான் பள்ளத்தாக்கில் புகை மூட்டம் இன்று மோசமடைந்திருந்தது. பல இடங்களில் தெளிவாக பார்க்க முடியவில்லை, காட்டமான நெடி காற்றில் கலந்திருந்தது. ஆனாலும், சுற்றுச்சூழல் துறை (டிஓஇ), காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (ஏபிஐ) “நல்ல நிலை இருப்பதாகவும்” “மிதமான நிலையில் இருப்பதாகவும்” தெரிவித்தது. புகை மூட்டத்துக்கிடையிலும் இன்று டட்டாரான் மெர்டேகாவில் …
பெர்சே மஞ்சள் டி-சட்டை தடை ‘நியாயமற்றது’: நீதிமன்றம் தீர்ப்பு
முறையீட்டு நீதிமன்றம், இன்று, பெர்சேயின் மேல்முறையீட்டை ஏற்று அதன் மஞ்சள்நிற டி-சட்டைக்கும் பெர்சே என்று எழுதப்பட்ட துண்டு வெளியீடுகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை ‘நியாயமற்றது’ என அறிவித்தது. மூவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி முகம்மட் ஸவாவி முகம்மட் சாலே அவ்வாறு தீர்ப்பளித்தார். அவருடன் நீதிபதி அப்துல் ரஹ்மான் …
போதும் உங்கள் கபட நாடகம்: அம்னோவைச் சாடினார் சைட் சித்திக்
அம்னோ தலைவர்கள் கபட நாடகம் ஆடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனச் சாடினார் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) இடைக்காலச் செயல்குழுத் தலைவர் சைட் சித்திக் சைட் அப்துல் ரஹ்மான். “டாக்டர் மகாதிர் முகம்மட் பங்சா ஜோகூர் குறித்துக் கருத்துரைத்தபோது பலர், இவ்வளவு காலமாக மலேசியாவில் தாங்கள்தான் …
மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் ஊழல் பற்றி முதலில் கேளுங்கள், பின்னர் கேட்டறிந்ததை…
தமிழ் நாளிதழ் மலேசிய நண்பனில், மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளன. ஆனால், அவை தப்பானவை. அப்பள்ளியின் நிருவாகத்திற்கு பொறுப்பாளர்களாகிய எங்களிடம் எந்த ஒரு விளக்கமும் கேட்காமல் தான்தோன்றித்தனமாக வெளியிடப்பட்ட செய்திகள் அவை என்று மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் கா. உதயசூரியன் அப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை…


