இந்தோனேசியப் பணிப்பெண்களைத் தருவிக்கும் நடவடிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை

இந்தோனேசியாவிலிருந்து பணிப்பெண்களை வேலைக்குச் சேர்க்கும் நடவடிக்கை தொடர்பில்  இந்தோனேசிய அரசாங்கத்துடன் பேச்சுக்கள் இன்னும் தொடர்கின்றன. பணிப்பெண்கள் மலேசியர்களின் தேவைக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்ய வேண்டியிருப்பதால் பல அம்சங்களை ஆராய வேண்டி இருப்பதாக மனிதவள துணை அமைச்சர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் கூறினார்.  

உள்துறை அமைச்சு ஊடகங்களுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்த வேண்டும்

உள்துறை அமைச்சு, அச்சக, பதிப்பகச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களைத் தண்டிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என ஜிங்கா 13 அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் த ஹீட் செய்தித்தாளுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டது ஒரு “கடுமையான” நடவடிக்கை என்று குறிப்பிட்ட ஜிங்கா 13, தடையை உடனடியாக நீக்க…

டோல் கட்டண உயர்வு ‘அப்பட்டமான வாக்குறுதி மீறல்’ ஆகும்

அரசாங்கம்  சாலைக்கட்டணத்தை உயர்த்தினால் அது “அப்பட்டமான வாக்குமீறல்” ஆகும் என முன்னாள் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா இன்று கூறினார். “டோல் கட்டணத்தை மறுபரிசீலனை செய்வோம் என்பது தேர்தல் வாக்குறுதி. அரசாங்கம் இப்போது (டோல் கட்டணத்தை உயர்த்தும்) அதன் நடவடிக்கையைத் தொடர்ந்தால் அது வாக்குறுதி மீறலாகும். அது…

கருத்துக்கணிப்பு: விலை உயர்வுதான் பலரின் பெருங் கவலை; கவலையைக் குறைக்க…

2014 பட்ஜெட் பல சலுகைகள் பற்றிப் பேசினாலும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க அவை உதவும் என்ற நம்பிக்கை பெரும்பாலான மலேசியர்களுக்கு இல்லை. அவர்களின் இப்போதைய பெருங் கவலை எல்லாம்  எண்ணெய், சீனி, ஆகியவற்றின் விலை உயர்வும் மின்கட்டண உயர்வும்தான். மலாயாப் பல்கலைக்கழக ஜனநாயக மற்றும் தேர்தல் மையம் (Umcedel)…

மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை: குவான் எங்குக்கு ஜஹாரா எச்சரிக்கை

பினாங்கு சட்டமன்ற எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட், தம்மை “இனவாதப் பாட்டி” என்று குறிபிட்டதற்காக முதலமைச்சர் லிம் குவான் எங் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். செபராங் பிறை முனிசிபல் மன்றம் மலாய்க்கார அங்காடி வியாபாரிகளின் கடைகளாக பார்த்து…

விலை உயர்வு-எதிர்ப்பியக்கத் தலைவர் முகம்மட் அஸான் கைது

பல்கலைக்கழக மாணவரும், பொருள் விலைகள், சேவைக்கட்டணங்கள் ஆகியவற்றைக் குறைக்கப் போராடும் காபோங்கான் மஹாசிஸ்வா இஸ்லாம் மலேசியா (காமிஸ்), ஒரு என்ஜிஓ-வான துருன்(Turun) ஆகியவற்றின் தலைவருமான முகம்மட் அஸான் சபார்(இடம்) நேற்றிரவு கைது செய்யப்பட்டார். நேற்று  நள்ளிரவுக்குமுன், கோலாலும்பூர் கம்போங் பாருவில் உணவருந்திக் கொண்டிருந்த அஸான் அமைதிப் பேரணிச் சட்டத்தின்கீழ்…

இசா: அம்னோவின் இடத்தை பெர்காசாவால் நிரப்ப முடியாது

அம்னோவின் இடத்தில் இருந்து கொண்டு மலாய்க்காரர் நலன் காப்போம் என்று பெர்காசா கூறுவது நடவாத காரியம் என்கிறார்  அம்னோ உச்சமன்ற உறுப்பினர்  இசா சமட். மலாய்காரர் நலன் காத்தல் என்பது சாதாரணமான செயல்  அல்ல என்று  கூறிய இசா, பெர்காசாவே அம்னோவிடமிருந்து நிறைய உதவி பெற்றுள்ளது  என்றார். “அது…

மகாதிர்: மனிதர்கள்தான் தீமை செய்கிறார்கள் ஆவிகள் அல்ல

தீயச் செயல்களுக்கும் வன்முறைகளுக்கும் ஆவிகள் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்டவை காரணம் என்பதைக் காட்டிலும் மனிதர்களே காரணம் என்பதைத்தான் அதிகம் நம்புவதாகக் கூறுகிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். மலாய்க்காரர்களுக்கு ஆவிகள், பூதங்கள்மீது தீரா மோகம் இருக்கிறது. அது, திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் வெளிப்படுகின்றது.   இந்நம்பிக்கை இஸ்லாத்துக்கு எதிரானது.…

டோல் கட்டண உயர்வு திருப்பி அடிக்கும்: அம்னோவுக்கு எச்சரிக்கை

சாலைக்கட்டண உயர்வு, அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவையே திருப்பி அடிக்கப்போகிறது என ரித்வான் டீ அப்துல்லா எச்சரித்துள்ளார். டோலை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவால் “குழப்பமடைவதாக” அந்தக் கல்வியாளர் கூறினார். “1மலேசியா என்று சொல்லி ‘மக்களுக்கு முன்னுரிமை, அடைவுநிலைக்கு முக்கியத்துவம்’ என்று முழக்கமிட்டதன் அர்த்தம் என்ன? தேர்தலின்போது மட்டும்தான் மக்களுக்கு…

நீதி வேண்டும்: அமினுல்ரஷிட்டின் தாயார் பிரதமரிடம் கோரிக்கை

மூன்றாண்டுகளுக்குமுன் காரில் விரட்டிச் செல்லப்பட்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 15வயது சிறுவனின் குடும்பம் நீதி வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமக்கு எழுதிய கடிதமொன்றைக் காண்பித்த அமினுல்ரஷிட்டின்  தாயார் நோர்ஷியா முகம்மட், அதில் தம் மகனின் சாவுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் “நீதியும் வெளிப்படைத்தன்மையும்” நிலைநாட்டப்படும்…

வயாக்ரா எவ்வகையிலும் உதவாது; அம்னோதான் ஏற்கனவே மசீசவைக் காயடித்து வைத்திருக்கிறதே

உங்கள் கருத்து “மசீச எவ்வளவு வயாக்ரா உட்கொண்டாலும் பயனில்லை. ஏனென்றால் பல ஆண்டுகளாகவே அம்னோ மசசீவைக் காயடித்து வைத்திருக்கிறது”. நஜிப்: மசீசவுக்கு அரசியல் வயாக்ரா ஊசி போட்டால் எல்லாம் சரியாகிவிடும் பெர்ட் டான்: மசீச பொதுப்பேரவையில் தலைமை விருந்தினராக அழைத்துவரப்பட்ட ஒரு தலைவர் அதிலும் பிரதமர், தம்மை அழைத்து…

என்னை கைது செய்தது தவறில்லை, ஆனால் தமிழின தலைவர் பிரபாகரனை…

அண்மையில் தமிழின தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வும், மாவீரர்களுக்கு வீர வணக்க நிகழ்வும் ஏற்பாடு செய்திருந்த என்னை காவல் துறை தேச நிந்தனை சட்டதிற்கு கீழ் கைது செய்து தீவிர விசாரணைக்கு பிறகு காவல்துறையின் பிணையில் விடுவித்தார்கள் என்று மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

‘மலாக்கா கம்போங் செட்டியைக் காப்பாற்ற யுனெஸ்கோவை அழைப்பீர்’

கலாச்சார கிராமமான கம்போங் செட்டி பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனச் செய்திகள் வந்திருப்பதால் அங்கு மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனை கூற யுனெஸ்கோவை அழைக்க வேண்டும். காவியன்  இலக்கியக் குழுத் தலைவரான உதய சங்கர் இவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். 1414ஆம் ஆண்டிலிருந்து இருந்துவரும் அக்கம்போங் அரச இதழிலும் பதிவு…

அன்வாரே தறிகெட்ட சாலைக்கட்டணத்துக்குக் காரணம்: டீ யோங் குற்றச்சாட்டு

நெடுஞ்சாலை குத்தகை ஒப்பந்தங்கள் சாலைப் பராமரிப்பாளர்களுக்குச் சாதகமாகவும் அரசாங்கத்துக்கும் பாதகமாகவும் இருப்பதற்குக் காரணம் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் என மசீச உதவித் தலைவர் சுவா டீ யோங் கூறினார். “நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில்  மிகப்பல- 10திலிருந்து 12வரை- 1991-க்கும் 1998-க்கும் இடைப்பட்ட காலத்தில் செய்துகொள்ளப்பட்டவை. அப்போது நிதி…

மலாய்க்காரர் பொருளாதார அவலத்துக்குக் காரணம் மலாய்க்கார்களே- தெங்கு ரசாலி

நிறுவனத்துறையிலும் பொருளாதாரத் துறைகளிலும் மலாய்க்காரர் முன்னிலை குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், மலாய்க்காரர் உரிமை மறுக்கப்படுவது  இதற்குக் காரணம் அல்ல. மலாய்க்காரர் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசாவின் 4ஆம் ஆண்டுக்கூட்டத்தில் உரையாற்றிய  தெங்கு ரசாலி ஹம்சா இவ்வாறு கூறினார். “மலாய்க்காரர்களிடம் போட்டியையும் சிக்கல்மிக்க வர்த்தகச் சூழலையும் எதிர்த்து நிற்கும் மன…

நஜிப் ‘அடுத்த மண்டேலா’வாக விளங்க வேண்டும்: ஒரு மசீச பேராளரின்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன-அடிப்படையிலான கொள்கைகளுக்கு முடிவுகட்டி “அடுத்த மண்டேலாவாக” விளங்க வேண்டும் என மசீச கெடா  பேராளர் லீ இயான் வாங் வலியுறுத்தினார். மசீச பொதுப்பேரவையில் உரையாற்றிய லீ,  இனஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராடிய காலஞ்சென்ற தென்னாப்ரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு ஒரு நிமிட மெளன…

மசீச தேர்தல்: லியாவ்-வீ வெற்றி பெற்றனர்

  லியாவ் தியோங் லாய் மற்றும் வீ கா சியோங் ஆகிய இருவரும் மசீச தேர்வில் முறையே தலைவராகவும் துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். 1,186 வாக்குகளைப் பெற்ற லியாவ் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் 1,000 வாக்குகளைப் பெற்ற கான் பிங் சியுவை தோற்கடித்தார். மசீச முன்னாள் தலைவர்…

கல்வி செயல்திட்டம் ஒரு மொழிக் கல்வி மட்டுமே என்ற நிலையை…

தேசிய கல்வித் திட்டம் என்பது நாட்டில் “ஒருமொழிக் கல்வி மட்டுமே” என்ற நிலையை உருவாக்கும் 1956ஆம் ஆண்டு ரசாக் அறிக்கையின் “முடிவான குறிக்கோளை”ச் செயல்படுத்தும் ஒரு வழிமுறையாகும் எனச் சீனக் கல்விநலக் குழுவான டொங் சொங் கூறியுள்ளது. கல்வி செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள் என கல்வி துணை அமைச்சர்…

சொய் லெக்: பொய்மூட்டைகளின் பாட்டி, அதுதான் பக்காத்தான்

மசீச தலைவர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் சுவா சொய் லெக் இன்று அக்கட்சியின் பேரவையில் உரையாற்றியபோது பக்காத்தான் ரக்யாட்டைப் “பொய்களின் பாட்டி, தாத்தா” என வருணித்தார். “2013 பொதுத் தேர்தல் பொதுத் தேர்தல்களில் தாய்த் தேர்தல் என்றால் அதில் வங்காள தேசிகள் வாக்களித்ததாக பொய் சொன்னார்களே அது பொய்களுக்கெல்லாம்…

நஜிப்: மசீச-வுக்கு அரசியல் வயாக்ரா ஊசி போட்டால் எல்லாம் சரியாகிவிடும்

பிரதமர்  நஜிப் அப்துல் ரசாக், மசீச-வின் மனத்தளர்ச்சியைப் போக்கி மன ஊக்கத்தைக் கொடுக்க அதற்குத் தேவை “அரசியல் வயாக்ரா”, எனக் கூறினார். மசீசவின் 60ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து  உரையாற்றியபோது நஜிப் அவ்வாறு குறிப்பிட்டார். “உங்களிடம் உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் இருக்கிறார்கள். அதாவது உடல் இருக்கிறது. ஆன்மா…

மசீச: பெண்களும் சொத்துக்களும் ஒன்றுதான் என்று கூறிய தெங்கு அட்னான்…

பெண்களைச் சொத்துக்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பதவி விலகிச் செல்லும் மசீச மகளிர் தலைவர் இயு சொக் தவ் கேட்டுக்கொண்டிருக்கிறார். தெங்கு அட்னான் அவ்வாறு கூறியது மகளிரைச் சிறுமைப்படுத்துகிறது என்றாரவர். “ஒரு பெண்ணின் மதிப்பு…

தமிழர் என்ஜிஓ-வுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது ஏன்? போலீஸ் விளக்க…

கெடா , கூலிமில்,  காலஞ்சென்ற தமிழீழ விடுதலை புலிகள் தலைவர்  வி.பிரபாகரனின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட தமிழ் என்ஜிஓ-ஒன்றின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது ஏன் என்று போலீஸ் விளக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்ட பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி, அதனைப் “பயங்கரவாதத்தின் புகழ்பாடும்” நிகழ்வு என…

த ஹீட் இதழ் தடைவிதிப்புக்கு ஊடகக் குழுக்கள் கண்டனம்

த ஹீட் வார இதழுக்குத் தற்காலிகத் தடை விதிக்க உள்துறை அமைச்சு செய்துள்ள முடிவை ஊடகக் குழுக்கள் சாடியுள்ளன. அது “விவேகமற்ற” நடவடிக்கை என்றும் ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் எனவும் தேசிய செய்தியாளர் சங்கம் (என்யுஜே) கூறியது. அதன் தலைவர் சின் சங் சியு (இடம்),  அந்தச்…