ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
1மலாயு’ எனல் வேண்டும் என்றுரைத்த அம்னோ பேராளர் அதற்காக மன்னிப்பு…
அம்னோ பேரவையில் பினாங்கு பேராளர் மூசா ஷேக் பாட்சிர், இனி 1மலேசியா வேண்டாம் 1மலாயு என்றுதான் முழங்க வேண்டும் என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என கெராக்கான் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க மாட்டார். “கெராக்கான் ‘ஹீரோ’ ஆக முயல்கிறது......நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் தவறு ஏதும்…
அம்னோ ‘1மலாயு’-வை ஆதரிக்காது- அம்னோ தலைவர்கள்
அம்னோ பொதுப்பேரவையில் ‘1மலாயு’ பற்றிப் பேசப்பட்டாலும் அம்னோ ‘1மலேசியா’ என்பதைக் கைவிடாது என அக்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். மலாய் ஆதரவை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் ஏற்கவில்லை. கட்சிக்கு “மற்றவர் ஆதரவும் தேவை”. “இது அம்னோ பொதுப்பேரவை. பேராளர்கள் சொந்த கருத்துக்களை எல்லாம் எடுத்துரைப்பார்கள்”, என்று…
முக்ரிஸ்: ‘1மலாயு’ எனல் வேண்டும் என்றுரைத்தவரைத் தண்டிக்க வேண்டியதில்லை
“1மலேசியா”-வுக்குப் பதில் இனி “1மலாயு” என்றுதான் சொல்ல வேண்டும் என முன்மொழிந்த புக்கிட் மெர்தாஜாம் தொகுதித் தலைவர் மூசா ஷேக் பாட்சிரைத் தண்டிக்க வேண்டியதில்லை என கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் கூறினார். நேற்று அம்னோ பொதுப்பேரவையில் அவ்வாறு கூறிய மூசா அப்படிச் சொன்னதை மீட்டுக்கொள்ள வேண்டும்,…
நம் நாட்டு மாணவன் சிங்கப்பூர் மாணவனைவிட படிப்பில் நான்காண்டு பின்தங்கி…
சிங்கப்பூர், சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளின் கல்வித் தரத்துடன் ஒப்பிட்டால் மலேசியாவில் ஒரு சராசரி 15-வயது மாணவன், படிப்பில் நான்காண்டுகள் பின்தங்கி இருப்பதாக டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். அனைத்துல மாணவர் மதிப்பீட்டுச் சோதனை முடிவுகளை(PISA) அடிப்படையாக வைத்து அவர் இவ்வாறு கூறினார். 74-நாடுகளில்…
ஷரிசாட்: அன்வார்-நஜிப் கலந்துரையாடல் வீணான செயல்
அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில், கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமும் கலந்துரையாடுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார். “அது நேரத்தை வீணாக்கும் செயல். பிரதமர் வேறு நல்ல காரியங்களைச் செய்யலாம்”, என்றவர் கூறினார். நேற்று நஜிப், அம்னோ…
உத்துசான் நிஜாருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்: நீதிமன்றம் தீர்ப்பு
கார் இலக்கத் தகடு (நம்பர் பிளேட்) விவகாரத்தில் முன்னாள் பேராக் மந்திரி புசார் நிஜார் ஜமாலுடின் பெயரைக் களங்கப்படுத்தியதற்காக உத்துசான் மலேசியா நாளேடு ரிம250,000 இழப்பீடு கொடுக்கத்தான் வேண்டும். இன்று முறையீட்டு நீதிமன்றம், உத்துசான் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து ஏற்கனவே உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை…
அரசாங்கக் குத்தகைகள், ஜிஎல்சி வேலைகள் பூமிகளுக்கு மட்டுமே- அம்னோ பேராளர்…
அரசாங்கக் குத்தகைகள் பூமிபுத்ராக்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். அரசுதொடர்பு நிறுவனங்கள் பூமிபுத்ரா நிறுவனங்களுடன்தான் கொள்முதல் வைத்துக்கொள்ள வேண்டும். வேலைக்கு ஆள்சேர்க்கும்போது பூமிபுத்ரா பட்டதாரிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். இன்று அம்னோ பொதுப்ப்பேரவையில் பாச்சோக் அம்னோ பேராளர் ஆவாங் அடெக் உசின் முன்வைத்த தீர்மானத்தில் இப்பரிந்துரைகள் அடங்கி இருந்தன. தீர்மானத்தை முன்வைத்தவர்,…
வெள்ள நிலை மோசமடைந்து வருகிறது; 42,626பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
தீவகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மாநிலங்களில் வெள்ள நிலவரம் மோசமடைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளவர் எண்ணிக்கை இன்று காலை 42,626 ஆக உயர்ந்தது. நேற்றிரவு அது 37,136 ஆக இருந்தது. மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் பகாங். அங்கு துயர்துடைப்பு மையங்களில் இருப்போர் எண்ணிக்கை 34,235.…
சட்டவிரோத கூட்டம் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
2008-இல், கோலாலும்பூர் மாநாட்டு மையத்தில் (கேஎல்சிசி) சட்டவிரோத கூட்டம் நடத்தியதாக 43 சமூக ஆர்வலர்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஆவணங்கள் முறையாக இல்லை என்பதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. ஐந்தாண்டுகளாக இந்த வழக்கு நடக்கிறது. முதலில், பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பத்து எம்பி சுவா தியான் சாங், மலேசிய…
நெல்சன் மண்டேலா காலமானார்
தென்ஆப்ரிக்காவின் இனவாத வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போரடி தமது வாழ்க்கையின் 27 ஆண்டுகளை சிறையில் கழித்து, இறுதியில் அந்த வெள்ளையர்களைத் தோற்கடித்து தென்ஆப்ரிக்காவின் அதிபரான நெல்சன் மண்டேலா நேற்று தமது 95 ஆவது வயதில் அவரது ஜோகானெஸ்பர்க் இல்லத்தில் காலமானார். நீண்டகாலமாக உடல்நலமற்று பலவீனமாக இருந்த போதிலும் அவரது…
பூஜாங் பள்ளத்தாக்கு சண்டிகளை கெஜட் செய்தால் அம்னோ ஒரு தொகுதியை…
சண்டி காணப்படும் அனைத்து இடங்களும் அரசாங்க கெஜட்டில் பதிவு செய்யப்பட்டால், கெடாவில் அம்னோ ஒரு தொகுதியை இழக்கும் என்று அம்னோ ஆண்டு பொதுக்கூட்டத்தில் நேற்று கூறப்பட்டது. இதற்கான காரணம், இந்த சின்னங்கள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன, மக்களின் வீடுகளுக்கு கீழும் அவை இருக்கின்றன என்று கெடா மாநில…
ஜாஹிட்: வெள்ளம் தொடர்பில் அவசரகாலம் பிரகடனம் செய்ய வேண்டியதில்லை
குவாந்தானில் வெள்ள நிலவரம் மோசமாக இருந்தாலும் அவசரகாலம் பிரகடனம் செய்ய வேண்டிய அவசியமில்லை என உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். முந்திய ஆண்டுகளைவிட இவ்வாண்டு அங்கு வெள்ள நிலவரம் மோசமாகத்தான் உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “வெள்ள நிலை மோசமாகத்தான் உள்ளது. ஆனாலும், அவசரகாலம் பிரகடனம்…
செர்டாங் மருத்துவமனையில் உள்கூரை மீண்டும் இடிந்து விழுந்தது
செர்டாங் மருத்துவமனையில் உள்கூரை மீண்டும் இடிந்து விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 தொடங்கி ஐந்தாவது தடவையாக அங்கு கூரை இடிந்து விழுந்திருக்கிறது. நேற்று பிற்பகல், மருத்துவமனையில் ஆபத்து அவசர சிகிச்சை பிரிவில் தாதியர் முகப்புப் பகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக மலாய்மொழி நாளேடான உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது. அப்பகுதியில் நோயாளிகள் இருப்பதாக…
என்ஜிஓ: ஆஸ்ட்ரோவின் ஏகபோக உரிமைக்கு முடிவு கட்டுவீர்
கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொண்டு மட்டரகமான நிகழ்ச்சிகளை ஒளியேற்றும் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின் ஏகபோக உரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சொலிடேரிடி அனாக் மூடா (எஸ்ஏஎம்எம்) வலியுறுத்தியுள்ளது. அந்த என்ஜிஓ-வின் ஐந்து உறுப்பினர்கள் சேர்ந்து 'Bantah Astro' அணி ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் இன்று தொடர்பு, பல்லூடக அமைச்சிடம் …
முக்ரிஸ்: நான் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்தான்
கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், தாம் மாநில தொடர்புக்குழுத் தலைவர் என்பதால் கட்சியின் முடிவுகளைச் செய்யும் சக்திவாய்ந்த உச்சமன்றத்திலும் இடம்பெற்றிருப்பதாகக் கூறினார். “கட்சித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுப்போன மாநில தொடர்புக்குழுத் தலைவர்கள் எல்லாருமே உச்சமன்றத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள்”, என்றாரவர். முக்ரிஸ் உச்சமன்றத்தில் இல்லை என்று கூறி கெடா பேராளர்கள்…
கேஎல் சொத்து மதிப்பீட்டு வரிக்கு எதிராக மக்கள் பேரணி: பக்காத்தான்…
கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) நியாயமற்ற முறையில் சொத்து மதிப்பீட்டு வரியை உயர்த்தியிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க டிசம்பர் 16-இல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேரணிக்கு மக்கள் திரண்டு வர வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைநகர் பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் அந்த வேண்டுகோளை விடுத்தனர். கண்டனக் கூட்டம் நடப்பதை…
பினாங்கில் ‘குட்டி நெப்போலியன்கள்’ கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்
பினாங்கு முனிசிபல் மன்ற(எம்பிபிபி)த்தில் “குட்டி நெப்போலியன்கள்” இருந்துகொண்டு மன்றத்தின் சேவைகளைத் தாமதப்படுத்துகிறார்கள் என்று கூறப்படுவதை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ மறுக்கவில்லை. ஆனால், அவ்விவகாரம் கட்டுக்குள் உள்ளதாக அவர் கூறினார். “அவர்கள் கட்டுபாட்டுக்குள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்”, என மாநில டிஏபி தலைவருமான செள செய்தியாளர் கூட்டத்தில்…
‘அம்னோ உறுப்பினர்கள் பணக்காரர்கள் என்கிறார்களா? கவலையே வேண்டாம்’
அம்னோ உறுப்பினர்கள் செல்வச் செழிப்பில் திளைப்பது பற்றி சங்கடப்படக்கூடாது. அது, அவர்களின் வெற்றிக்கும் திறமைக்கும் ஓர் அடையாளம். அம்னோ இளைஞர் பேரவையில் ஜோகூர் பேராளர் கைருல் அன்வார் ரஹ்மாட் இவ்வாறு கூறினார். “பணக்காரர்கள்” என மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அம்னோ உறுப்பினர்கள் “வருத்தப்படவே” கூடாது என்றாரவர். “இளைஞர் தலைவர்…
கணேசன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
மலேசிய இண்ட்ராப் இயக்க ஆலோசகர் என்.கணேசன், பினாங்கில் என்ஜிஓ-களின் கூட்டத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்கள் புகுந்து கலகம் செய்ததாக திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாரானால் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுத்திருப்பவர் ஒரு சாப்பாட்டுக் கடை உரிமையாளரான இரேகேந்திரன் சிவசாமி,58. கூட்டத்தில் கலகம்…
அம்னோ பேரவையில் வங்காள தேசிகள் வாக்களித்ததாக அன்வார் கூறியதைக் காண்பிக்கும்…
அம்னோ பேரவையில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் காட்சி அளித்தார்- காணொளி உருவில். 13வது பொதுத் தேர்தலில் வங்காள தேசிகள் வாக்களித்தனர் என்று அன்வார் கூறுவதைக் காண்பிக்கும் காணொளி ஒன்றை அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பேராளர்களுக்குத் திரையிட்டுக் காண்பித்தார். இணைய செய்தித்தளங்களிலிருந்தும் இதர மூலங்களிலிருந்தும் திரட்டப்பட்ட…
பிகேஆர்: மாணவர்களின் தரம் உயர சீரமைப்பு தேவை
அனைத்துலக மாணவர் தர மதிப்பீட்டுச் சோதனையில் மலேசியா பெற்றுள்ள இடவரிசை குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், நாட்டின் கல்விமுறையைச் சீரமைக்க இரு-கட்சி அணுகுமுறை தேவை என்று வலியுறுத்தியுள்ளார். இரு-கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றத் தேர்வுக்குழு அமைத்து அதனிடம் மலேசியக் கல்விமுறையைச் சீர்படுத்தும்…
சொய் லெக் மசீச தேர்தலில் போட்டியிட மாட்டார்
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், தாம் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி கட்சித் தேர்தலில் போட்டிடப்போவதில்லை என்பதை இன்று உறுதிப்படுத்தினார். 13வது பொதுத் தேர்தலில் மசீசவின் தோல்விக்குப் பொறுப்பேற்கும் வகையில் மே 6-இல் சுவா அவ்வாறு வாக்குறுதி அளித்திருந்தார். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். அதே நேரத்தில்…
மலேசிய மாணவர் தரம் தாழ்ந்து போயுள்ளது
கணிதம், அறிவியல், வாசிப்பு ஆகிய பாடங்களில் மாணவர்களின் தரம் குறித்து 65 நாடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மலேசியா பெற்ற இடம் பெருமைப்படத்தக்கதாக இல்லை. 2012 அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுப் பட்டியலில் மலேசியாவால் 52வது இடத்தைத்தான் பெற முடிந்தது. தாய்லாந்துக்கு 50 வது இடம். சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது.…


