ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
ஐபிபி-களுக்கு உதவித் தொகை கொடுக்கப்படுவதில்லை
பெரும்பாலோர் நினைப்பதுபோல் சுயேச்சை மின் உற்பத்தியாளர்களுக்கு (ஐபிபி) எரிபொருள் உதவித் தொகை வழங்கப்படுவதில்லை. எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சின் மூத்த இயக்குனர் அஸ்ஹார் ஒமார் இதனைத் தெரிவித்தார். ஐபிபிகளுக்கு எரிபொருள் வழங்கும் தெனாகா நேசனலே (டிஎன்பி) எரிபொருளுக்கான செலவையும் ஏற்றுக்கொள்கிறது. இதனால் பயனீட்டாளர்களுக்கு மலிவு விலையில் மின்சாரம்…
ஜிஎல்சிகளில் கூடுதல் இடம் தேவை-அம்னோ மகளிர்
அரசாங்கத்திலும், அரசுசார்பு நிறுவனங்களிலும்(ஜிஎல்சி), மாநில அம்னோ தொடர்புக் குழுக்களிலும் மகளிருக்குக் கூடுதல் இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில் விரும்புகிறார். .“மாநில தொடர்புக்குழுக்களில் செயலாளர்களாக, பொருளாளர்களாக இருக்கும் தகுதி எங்களுக்கு இல்லையா? “ஜிஎல்சி-களில் இயக்குனர்களாக, தலைவர்களாக இருக்கும் தகுதி பெண்களுக்கு இல்லாமல்…
கைரி: ‘ஹிடுப் மலாயு’ முழக்கம் மட்டும் போதாது
மலாய் சமூகத்தை முன்னுக்குக் கொண்டு செல்லாமல் ‘ஹிடுப் மலாயு(வாழ்க மலாய் இனம்) என்று முழக்கமிடுவதால் எந்தப் பயனும் இல்லை என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் எச்சரித்துள்ளார். “மலாய்க்காரர்கள் எப்படிப்பட்ட வாழ்கை வாழ வேண்டும் என நினைக்கிறீர்கள்? “அவர்கள் வறுமையில் வாடுவதைவிட கெளரவத்துடன் வாழ்வதுதானே மேலானது. எனவே,…
அரசாங்கம் நேரடிப் பேச்சு வழி பொருள் கொள்முதல் செய்வதைக் குறைத்துக்…
அரசாங்கம், ஊழலைத் தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக நேரடிப் பேச்சு நடத்திப் பொருள் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொண்டு டெண்டர் முறையைப் பின்பற்றும். “இனி, பொருள் வாங்குவதற்கு, தவிர்க்க முடியாத நிலை இருந்தாலொழிய, நேரடிப் பேச்சு நடத்துவதில்லை என அமைச்சரவை கடந்த வாரக் கூட்டத்தில் முடிவு செய்தது”, என அமைச்சர்…
மேம்பாட்டாளருக்கு 1,000ஆண்டு பழைமையான சண்டி இருப்பது தெரியாதாம்
பூஜாங் பள்ளத்தாக்கில் ஆயிரமாண்டு பழமைவாய்ந்த சண்டி ஒன்றைத் தரைமட்டமாக்கிய பண்டார் செளஜானா சென். பெர்ஹாட்டுக்கு அங்கு அப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னம் இருப்பது தெரியாதாம். “செப்டம்பரில் நிலத்தைத் துப்புரவுபடுத்துமுன்னர் அந்த இடத்தைப் பார்வையிட சென்றிருந்தோம். ஒரு கல் கட்டுமானத்தைப் (சண்டி) பார்த்தோம். அது என்ன என்பது எங்களுக்குத்…
நிதி முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படாதது ஏன்? சிலாங்கூர் விளக்க வேண்டும்
சிலாங்கூர் மாநிலத்தில் சாலைப் பராமரிப்புக்குக் கூட்டரசு அரசாங்கம் கொடுத்த நிதி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. அரைகுறையாகவே பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. “சாலைப் பராமரிப்புக்காக மத்திய அரசு வழங்கிய நிதி ஏன் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்பதை சிலாங்கூர் அரசு விளக்க வேண்டும்”, என டிஏபி பூச்சோங் எம்பி கோபிந்த் சிங்…
பூஜாங் பள்ளத்தாக்கில் பழங்கால கோயில் தரைமட்டமாக்கப்பட்டதற்கு மத்திய அரசே பொறுப்பு
பூஜாங் பள்ளத்தாக்கில் 8ஆம் நூற்றாண்டு கோயில் ஒன்றைத் தரைமட்டமாக்கிய வீடமைப்பு நிறுவனத்துக்கு அங்கு மேம்பாட்டுப் பணி மேற்கொள்ள ஒப்புதல் அளித்தது மத்திய அரசுதான் என பாஸ் கூறியது. வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டுள்ள அந்த நிலத்தை வாங்குவதற்கு மட்டுமே அப்போதிருந்த பாஸ் தலைமையிலான மாநில அரசு உதவியது என அதில்…
நஜிப் எம்ஏசிசி சுதந்திரமாக செயல்பட வகைசெய்யும் சட்டம் கொண்டுவரத் தயார்,…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் சுதந்திரமாக செயல்பட வகைசெய்யும் சட்டமுன்வரைவை, “2014-இல் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்திலேயே கொண்டுவரத் தயாராக இருக்கிறார். ஆனால், ஒன்று. அதற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்கும் என்ற உத்தரவாதம் இருந்தால் மட்டுமே அதைக் கொண்டு வர முடியும். இன்று,…
ரித்வான் டீ ‘இன ஒழிப்பு’மீது பாடம் நடத்தினாரா என்று விசாரிக்கப்படும்
யுனிவர்சிடி பெர்தஹான் நேசனல் மலேசியா விரிவுரையாளர் ரித்வான் டீ, பல்கலைக்கழகத்தில் இன ஒழிப்பு பற்றி பாடம் நடத்தியதாகக் கூறப்படுவதைத் தற்காப்பு அமைச்சு விசாரிக்கும். இதனைத் தெரிவித்த தற்காப்பு துணை அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி, உண்மைகளின் அடிப்படையில் இன ஒழிப்பு விவகாரங்கள் பற்றி விவாதித்திருந்தால் அதில் தப்பில்லை என்றார்.…
பிஎன் அல்லாத கட்சிகளின் செய்திகளையும் காண்பிக்க பெர்னாமாவுக்கு அறிவுறுத்தல்
அரசு ஊடகங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதைக் காண்பிக்க, பெர்னாமா டிவி, பெர்னாமா-அல்லாத கட்சிகளின் கூட்டங்கள் பற்றிய செய்திகளையும் ஒளிபரப்ப ஊக்குவிக்கப்படுகிறது. “டிஏபி-இடம் அதன் மத்திய செயலவை மறுதேர்தல் பற்றிய செய்திகளைச் சேகரிக்க அனுமதி கேட்கும்படி பெர்னாமா டிவியிடம் கூறினேன்”, என நேற்றிரவு மக்களவையில் தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹ்மட் ஷபரி…
டோனல்ட் லிம் மசீச துணைத் தலைவருக்குப் போட்டி
மசீச உதவித் தலைவர் டோனல்ட் லிம், கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் அப்பதவிக்குப் போட்டியிடப் போவதை அறிவித்துள்ளார் . எனவே, இப்போது அப்பதவி அவ்விருவருக்குமிடையிலான நேரடி போட்டியாக மாறியுள்ளது. லிம், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது…
மேம்பாட்டாளர் வரலாறு அறியாதிருப்பது வியப்பளிக்கவில்லை
கெடாவில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கு, நாட்டில் இந்து-புத்த சமயங்களின் கடந்தகால வரலாற்றை நினைவுறுத்தும் சின்னமாகும். மற்ற நாடுகளில் வரலாற்றுச் சின்னங்களைப் போற்றிப் பாதுகாப்பார்கள். இங்கு நிலவரம் வேறு என மலேசிய இந்தியர் முற்போக்குச் சங்க(மிபாஸ்) தலைமைச் செயலாளர் எஸ்.பாரதிதாசன் கூறினார். மேம்பாட்டு நிறுவனமான செளஜானா சென்.பெர்ஹாட் அங்குள்ள ஓர்…
பூஜாங் பள்ளத்தாக்கு மேம்பாட்டு திட்டம்: உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு
பூஜாங் பள்ளத்தாக்கில் சாந்தி சுங்கை பத்து அல்லது பூஜாங் பள்ளத்தாக்கு இடம் 11 என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு மேம்பாட்டாளருக்கு கெடா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கெடா மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் தாஜுல் உருஸ் முகமட் ஸைன் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேம்பாட்டு வேலைகளை உடனடியாக…
ஜாலான் பி.ரம்லி ஆலயம் தொடர்பில் மக்களவைக்குத் தப்பான தகவலைத் தந்திருக்கிறார்…
கூட்டரசு அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், கோலாலும்பூர் ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை உடைக்க நீதிமன்ற ஆணை இருப்பதாக மக்களவையில் தப்பான தகவலைச் சொல்லி இருக்கிறார் என சுபாங் எம்பி ஆர்.சிவராசா கூறினார். நீதிமன்றம், ஆலயத்தை உடைக்க ஆணை பிறப்பிக்கவில்லை என்பதைத் தெளிவாகவே வலியுறுத்தியுள்ளது என்றாரவர். 2012, ஜூலை …
2014-இல் மின்கட்டணம் 15 விழுக்காடு உயரும்
எதிர்பார்க்கப்பட்டதுபோல் மின்கட்டணம் உயரும் என்ற ஊகம் உண்மையாகியுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து அது 15 விழுக்காடு உயர்கிறது அதாவது ஒரு கிலோவாட் 4.99 சென் உயர்ந்து 38.53 சென்னாகும். இன்று, நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி இதை அறிவித்தார். இதற்குமுன் ஒரு…
மகாதிர்: மலேசிய ஜனநாயகம் குறைபாடற்றது அல்ல
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மலேசிய ஜனநாயகம் “அப்பழுக்கற்றது அல்ல” என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனாலும் மக்கள் தெருவில் போராட்டம் நடத்துவதைவிட இது மேலானது. “மலேசிய ஜனநாயகம் குறைபாடற்றது அல்லதான். ஆனாலும், மக்கள் தெருக்களில் அடித்துக்கொண்டு சாவதைவிட குறைபாடுடைய ஜனநாயகம் மேலானது”. குறைபாடுகள் இருந்தாலும் மலேசியாவில் ஜனநாயகம் நிலைத்து…
கிழக்குக் கரை நெடுஞ்சாலை 2 தாமதத்தால் செலவு ரிம800 மில்லியன்…
கிழக்குக் கரை நெடுஞ்சாலையைக் கட்டிமுடிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் செலவு ரிம800 மில்லியன் கூடி உள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையின் இரண்டாம் பகுதி இதைத் தெரிவிக்கிறது. கெமாமான், ஜாபுரையும் கோலா திரெங்கானுவில் கம்போங் கெமுரு-வையும் இணைக்கும் அந்த 184கி.மீ. சாலையைக் கட்டும் திட்டத்துக்கு 2006-இல்…
டிஎன்பி பங்கு பரிவர்த்தனை இரத்து
மின்கட்டண உயர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால் அதன் பங்குகளின் பரிவர்த்தனையை நிறுத்தி வைக்குமாறு தெனாகா நேசனல் பெர்ஹாட் மலேசிய பங்குச் சந்தையைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. மாலை 5மணிவரை டிஎன்பி பங்கு பரிவர்த்தனை இரத்துச் செய்யப்பட்டிருக்கும். மின்கட்டண உயர்வு பற்றி எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி…
‘கலாச்சார காட்டுமிராண்டித்தனம்’ஏன்? நஜிப்பும் கெடா எம்பியும் விளக்கமளிக்க வேண்டும்
கெடாவில் பழங்கால இந்து கோயில் ஒன்று அழிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரும் மெளனம் சாதிக்காமல் விளக்கம் தர வேண்டும் என எதிரணி எம்பி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க பூஜாங் பள்ளத்தாக்கில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆலயமொன்று அழிக்கப்பட்டதை…
‘பெரும் பணக்காரர்கள்’ மீதான புலன்விசாரணை மலேசியாவில் அதிகம், ஹாங்காங்கில் குறைவு
பணக்காரர்களின் ‘பெரும் சொத்துக்கள்’ மீதான புலன் விசாரணை என்று பார்த்தால், ஹாங்காங்கில் சுதந்திரமாக செயல்படும் ஊழல் எதிர்ப்பு ஆணையத்தைவிட மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி)தான் அப்படிப்பட்ட விசாரணைகளை அதிகம் செய்கிறது. பிரதமர்துறை துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம், இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது இதைத் தெரிவித்தார். இதனிடையே, உள்துறை…
மகாதிர் பெட்ரோனாஸ் ஆலோசகர் பணியைத் துறந்தார்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்(88), பெட்ரொனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து விலகிக் கொண்டிருப்பதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. வேலைப் பளுவைக் குறைத்துக்கொள்ளும் நோக்கில் அவர் பதவி விலகியதாக அம்னோவுக்குச் சொந்தமான அந்த நாளேடு தெரிவித்தது. மகாதிர், யுனிவர்சிடி டெக்னோலோஜி பெட்ரோனாஸ் வேந்தர் பதவியிலிருந்தும் விலகினாரா என்பதை அது தெரிவிக்கவில்லை.…
மாநில கட்சித் தேர்தலில் அணிகளா? மறுக்கிறது பினாங்கு டிஏபி
பினாங்கு டிஏபி தலைவராக ஏழாவது தடவையாக பதவியைத் தக்கவைத்துக்கொண்ட சொள கொன் இயோ, தம் “அணி” மாநிலக் கட்சித் தேர்தலில் வென்றதாகக் கூறப்படுவதை மறுத்தார். “ஏதாவது ஓர் அணியை உங்களால் பெயர் குறிப்பிட முடியுமா? அணிகள் என்பதெல்லாம் ஊடகங்களின் அனுமானம்தான்”, என்றாரவர். “தேர்தல் முடிவு எல்லா ஐயங்களையும் தெளிவுபடுத்தி…
புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டனவா? கெடா அரசு ஆராயும்
ஒரு மேம்பாட்டாளர், கெடா பூஜாங் பள்ளத்தாக்கில் விலைமதிப்பற்ற புராதனச் சின்னங்களை அழித்துவிட்டார் என்று கூறப்படுவதை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் வல்லுனர்கள் கொண்டு ஆராயப்படும். மாநில கலை, பண்பாடு, பாரம்பரிய விவகாரங்கள் குழுத் தலைவர் அமினுடின் ஒமார் இவ்வாறு கூறினார். மேல்நடவடிக்கை எடுக்குமுன்னர் பாதிக்கப்பட்ட பகுதி எதுவென்பதை அடையாளம் காண…


