பேரரசர்: ஜிஎஸ்டி-இன் நன்மைகளை எம்பிகள் விளக்க வேண்டும்

நாடாளுமன்ற  உறுப்பினர்கள்(எம்பி-கள்)  பொருள்,  சேவை வரி(ஜிஎஸ்டி)யின்  நன்மைகளையும்  அது  செயல்படும்  விதத்தையும்  மக்களுக்கு  எடுத்துரைக்க  வேண்டும்  என்று  பேரரசர்  அப்துல்  ஹாலிம்  முவா’ட்ஸாம்  ஷா  வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின்  2014-ஆம்  ஆண்டுக்கான  கூட்டத்தொடரைத்  தொடக்கிவைத்து  உரையாற்றிய  பேரரசர்,  ஜிஎஸ்டி  என்பது  கூடுதல்  வரி  அல்லவென்பதையும்  நடப்பில்  உள்ள  விற்பனை  மற்றும் …

குற்றச்சாட்டைத் தள்ளிவைக்க அன்வார் முறையீடு செய்தார்

குதப்புணர்ச்சி  வழக்கில்  குற்றவாளி  என்ற  தீர்ப்பைத்  தள்ளுபடி  செய்ய  கூட்டரசு  நிதிமன்றத்துக்கு  மனு  செய்திருப்பதாக  அன்வார்  இப்ராகிமின்  வழக்குரைஞர்  ராம்  கோபால்  கூறினார். “அன்வாருக்கான  பிணையை  இப்போது  செலுத்திக்  கொண்டிருக்கிறோம். முறையீட்டு  மனுவைத்  தாக்கல்  செய்தாகி  விட்டது”, என்றாரவர். கடந்த  வெள்ளிக்கிழமை,  உயர்  நீதிமன்றத்தின்  தீர்ப்பைத்  தள்ளுபடி  செய்து …

ஜாஹிட்: ஐரோப்பிய பெயர்கள்; ஆசிய முகங்கள்- அது எப்படி?

ஆசியர்கள்  போன்ற  உடல் அமைப்பைக் கொண்டவர்கள்  ஐரோப்பிய  பெயர்களில்  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370-இல்  பயணிக்க  அனுமதித்த  குடிநுழைவு  அதிகாரிகளை  உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட் ஹமிடி  கடுமையாகச்  சாடினார். “இத்தாலிய,  ஆஸ்திரிய  பயணிகளாக   இருக்கிறார்கள்  ஆனால்,  ஆசியர்கள்போன்று  காட்சியளிக்கிறார்களே  என்று (குடிநுழைவு  அதிகாரிகள்)  சற்றும்  சிந்திக்காதது  எப்படி …

எம்ஏஎஸ் விமானத்தின் கதவும் வால்பகுதியும் கண்டெடுக்கப்பட்டன?

வியட்னாமிய  மீட்புக்  குழு, கடலில்  ஒரு  விமானத்தின்  கதவும்  வால்பகுதியும்  மிதக்கக்  கண்டதாகவும்  அவை மலேசிய  விமான  நிறுவன (எம்ஏஎஸ்)த்தின்  போயிங்  777-200க்குச்  சொந்தமானவையாக  இருக்கலாம்  என்று நம்புவதாகவும்  அறிவித்துள்ளது. இத்தகவல் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில்  வெளியாகியுள்ளது. ஆனால்,  எம்ஏஎஸ்  தனக்கு  அது பற்றி  எதுவும் தெரிவிக்கப்படவில்லை  என்று …

காஜாங் இடைத் தேர்தல்: அன்வாருக்கு பதிலாக வான் அசிஸா

  பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் அக்கட்சியின் புதிய வேட்பாளராக காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அக்கட்சி இன்று அறிவித்தது. பிகேஆர் சார்பில் காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடவிருந்த அதன் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கடந்த வெள்ளிக்கிழமை குதப்புணர்ச்சி வழக்கு II…

மாஸ் எம்எச்370 விமானத்தின் உடைந்த பாகங்கள் எதுவும் காணப்படவில்லை

  மாஸ்சின் விமானம் எம்எச்370த்தின் உடைந்து சிதறைய பாகங்கள் எதுவும் வியட்னாமிய கடலில் காணப்படவில்லை என்பதை வியட்னாமிய கடற்படையினருடன் உறுதிப்படுத்திக் கொண்டதாக அரச மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது என்று பிரதமர் நஜிப் கூறினார். "உடைந்து போன பாகங்கள் ஏதும் இல்லை என்று அரச மலேசிய கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது", என்று…

வான் அசீசா: கண்ணீர் வேண்டாம், நடக்க வேண்டியதில் கவனம் வைப்போம்

தம்  கணவரும்  பிகேஆர்  நடப்பில்  தலைவருமான  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கின்  தீர்ப்புக்  குறித்து  நீண்டகாலம்  வருத்தப்படுவதை  விடுத்து  அடுத்து  செய்ய  வேண்டியவற்றில்  கவனம்  செலுத்த  வேண்டும்  என  பக்காத்தானுக்கு  அறிவுரை  கூறியுள்ளார்  பிகேஆர்  தலைவர்  வான்  அசீசா  வான்  இஸ்மாயில். “கண்ணீர்  தற்காலிகமானதே;  கண்ணீரைத்  துடைத்துவிட்டு  அடுத்துச் …

அன்வார் வழக்கின் தீர்ப்புக்கு மனித உரிமைக் குழுக்கள் கண்டனம்

முறையீட்டு   நீதிமன்றத்தில், அன்வார்  இப்ராகிம்  மீதான  குதப்புணர்ச்சி  வழக்கில்  அவருக்கு  ஐந்தாண்டுச்  சிறைத்  தண்டனை  வழங்கப்பட்ட  தீர்ப்பை,  உள்நாட்டையும்  வெளிநாடுகளையும்  சேர்ந்த  மனித  உரிமைப்  போராளிகள்  கண்டித்துள்ளனர். “நீதியின் பெயரால் அன்வாருக்கு  இழைக்கப்படும்  முடிவில்லா  கொடுமைகள்  மலேசிய  நீதித்துறையில்  படிந்துள்ள சகிக்க  முடியாத  ஒரு கறையாகி  விட்டது”,  எனப் …

அஸ்மின்: மிக வக்கிரமான தீர்ப்பு

நேற்று,  முறையீட்டு  நீதிமன்றத்தில்  பிகேஆர்  நடப்பில் தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கில்  வழங்கப்பட்ட  தீர்ப்பு “வக்கிரமானது”  என்றும்  நாட்டுக்கு  பெரிய அநீதி  இழைக்கப்பட்டிருக்கிறது  என்றும்  பிகேஆர்  கூறியுள்ளது. “தீர்ப்பு  வக்கிரமானது.  நீதியின்  எல்லாக்  கேட்பாடுகளுக்கும்  எதிரானது. வெட்கக் கேடானது. “அன்வார்  இப்ராகிமுக்கு  மட்டுமல்ல,  நாட்டு  மக்கள்  அனைவருக்குமே …

எம்ஏஎஸ் விமானம், 239 பேருடன், காணாமல் போனது

பெய்ஜிங்  நோக்கிப்  பறந்து  கொண்டிருந்த  மலேசிய  விமான  நிறுவனத்தின் (எம்ஏஎஸ்)  விமானமொன்று  காணாமல் போனது. இரவு  12.41-க்குக்  கோலாலும்பூரிலிருந்து  புறப்பட்டுச்  சென்ற  அவ்விமானத்துடன்  பின்னிரவு  2.40-க்குப்  பிறகு  தொடர்புகொள்ள  முடியவில்லை  என  அவ்விமான  நிறுவனம்  அறிக்கை  ஒன்றில்  கூறியது. B777-200 ரக  விமானமான  அதில்,  இரு  குழந்தைகள்  உள்பட …

குதப்புணர்ச்சி வழக்கு II: அன்வாருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை

  இன்று மாலை மேல்முறையீட்டு நீதிமன்றம் பிகேஆரின் தலைவர் அன்வார் இப்ராகிம் அவருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு II இல் குற்றவாளியே என்று தீர்ப்பளித்து அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது. நீதிமன்றம் அன்வாரை பிணையில் விடுவித்தது. பிணை திங்கள்கிழமை செலுத்தப்படும் என்று அன்வாரின் தலைமை வழக்குரைஞர் கர்பால்…

குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் குற்றவாளியே: நீதிமன்றம் தீர்ப்பு

முறையீட்டு  நீதிமன்றம்,  குதப்புணர்ச்சி  வழக்கில்  அன்வார்  விடுவிக்கப்பட்டதற்கு  எதிரான  அரசுதரப்பின்  மேல்முறையீட்டை  ஏற்று  அன்வார்  குற்றவாளியே  எனத்    தீர்ப்பளித்தது. நேற்றும்  இன்றும்,  இரு  தரப்பு  விவாதங்களையும்  செவிமடுத்த  பின்னர்   மூவரடங்கிய  நீதிபதிகள்   குழு  ஏகமனதாக  அந்தத் தீர்ப்பை  அளித்துள்ளது. நீதிபதிகள்  குழுவுக்கு  நீதிபதி  பாலியா  யூசுப்  வாஹி  தலைமை …

கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத் தடையால் 3.6 மில்லியன் பேர்…

சிலாங்கூர்   நீர்ப்  பங்கீட்டுத்  திட்டத்தின்  மூன்றாம்  கட்டம்  மார்ச்  10-இல்  அமல்படுத்தப்படும்போது 3.6  மில்லியன்  பேர்  நீர்  விநியோகத்  தடையால்   பாதிக்கப்படலாம்  என  தேசிய  தண்ணீர்  சேவை  ஆணையம்(ஸ்பான்)  கூறியது. சிலாங்கூர்  அரசு,  சுங்கை  சிலாங்கூர்  அணைக்கட்டிலிருந்து  திறந்துவிடும்  நீரின்  அளவை  மேலும்  குறைக்க  முடிவு  செய்திருப்பதன்  விளைவு …

எம்ஏசிசி விசாரணை அறிக்கைகளை ஏஜிசி காண்பிக்க வேண்டும்

மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையம்,  தலைமைக்  கணக்காய்வாளரின்  அறிக்கையில்  சுட்டிக்காட்டப்பட்ட  முறைகேடுகள்மீது  விசாரணை  நடத்தி  மேல்நடவடிக்கையாக வழக்குத்  தொடுப்பதற்காக விசாரணை  அறிக்கைகளைத்  தலைமை  வழக்குரைஞர்  அலுவலகத்துக்கு(ஏஜிசி)  அனுப்பி  வைத்தது.  ஆனால்,  ஏஜிசி  வழக்குத்  தொடுக்கத் தேவையில்லை  என்ற  முடிவுக்கு  வந்துள்ளது. ஏஜிசி-இன்  முடிவைக்  கண்டித்த  கூட்டரசுப்  பிரதேச  பாஸ்  இளைஞர் …

ஷரிசாட்: ‘கணவரைத் தேடிக்கொள்’ என்பது வேடிக்கையாகச் சொல்லப்பட்டது

அம்னோ   மகளிர்  தலைவர், ஷரிசாட்  அப்துல்  ஜலில்,  தாம்  மசீச  உதவித்  தலைவர்  சியு  மெய் பன்னிடம்  காஜாங்  இடைத்  தேர்தலுக்குப்  பின்  “ஒரு  கணவரைத்  தேடிக்கொள்ள  வேண்டும்”  என்று  கூறியது  விளையாட்டாகச்  சொல்லப்பட்ட  ஒன்று  எனவும்   சியுவை  அவமதிக்கும்  நோக்கம்  துளியும்  அதில்  இல்லை  எனவும்  விளக்கினார்.…

சிங்கப்பூர்: தண்ணீர் கட்டணத்தை மறுபரிசீலனை செய்யும் உரிமை மலேசியாவுக்கு இல்லை

சிங்கப்பூரும்  மலேசியாவும்  செய்துகொண்ட தண்ணீர் ஒப்பந்தத்தின்படி  1987-இல்  தண்ணீர்  கட்டணத்தை  மலேசியா  மறுபரிசீலனை  செய்திருக்கலாம்  ஆனால்,  அப்படிச்  செய்யவில்லை.  அதனால்,  கட்டணத்தை  மறுபரிசீலனை  செய்யும்   உரிமையை  அது  இழந்து  விட்டது  என்கிறார்  சிங்கை  வெளியுறவு  அமைச்சர்  கே.சண்முகம். “மலேசியா  தண்ணீர்  கட்டணத்தைத்  திருத்தி  அமைக்கும்  உரிமையை  இழந்துவிட்டது  என்பதே …

துணை அமைச்சர்: மாணவர்கள் இல்லை; தமிழ்ப்பள்ளியும் இல்லை

பினாங்கில் தமிழ் இடைநிலைப் பள்ளி  அமைக்கக்  கோரிக்கை  விடுக்கும்  மாநில  அரசு  முதலில்,  அங்கு  தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்  எண்ணிக்கை  உயர்வதற்கு   உதவ  வேண்டும்   எனக்  கல்வி  துணை  அமைச்சர் II, பி.கமலநாதன்  வலியுறுத்துகிறார். பினாங்கு  அரசும்  சில  என்ஜிஓ-களும்,  தமிழ்  இடைநிலைப்  பள்ளிக்குக்  கோரிக்கை விடுத்திருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது …

பிரதமர்: செல்வாக்கு குறைந்தால் குறையட்டும், நாடு நன்றாக இருக்க வேண்டும்

உதவித்தொகை  குறைப்பு,  புதிய  வரிகளின்  அறிமுகம்  போன்றவற்றால்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  செல்வாக்குக் கடுமையாக  சரிந்திருந்தாலும்  அதைப்  பற்றி  அவர்  கவலைப்படவில்லை. “நாட்டின்  நீண்டகால  நன்மைக்காக  என் குறுகியகால  செல்வாக்கை  விட்டுக்கொடுக்க  தயார்”,  என்கிறார்  அவர். அப்படிப்பட்ட  நடவடிக்கைகளை  எடுக்காதிருந்தால்  மலேசியாவின்  இறையாண்மைக்கே  ஆபத்து  ஏற்பட்டிருக்கும்  என்றாரவர்.…

ஐயையோ! தாய்க் கட்சி மஇகாவின் கதி என்னவாகும்?

- மு. குலசேகரன், மார்ச் 6, 2014.   வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் இந்திய கட்சிகளை தேசிய முன்னணியில் சேர்க்கலாம் என்று பாரிசான் மேலிடம் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக  தகவல் வெளி வந்துள்ளது.   இது எந்த வகையில் தேசிய முன்னணியை பலப்படுத்தப் போகிறது என்பது…

நிஜார் வழக்கு: நீதிபதியின் நேர்மைக்கு டிவி3 சவால் விடுகிறது

  சமீபத்தில் பேராக் மாநில முன்னாள் மந்திரி புசாரும் பாஸ் கட்சி மேல்மட்ட குழு உறுப்பினருமான முகமட் நிஜார் ஜமாலுடினுக்கு சாதகமாக மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரும் மனு ஒன்றை டிவி3 இன்று தாக்கல் செய்துள்ளது. இன்று காலையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவை…

இந்தியர் விவகார வாரியத்தை மீண்டும் உயிர்பிக்கும் முயற்சி ஏன்? வேதா…

இந்தியர்  விவகாரங்கள் மீதான  அமைச்சரவைக்  குழுவை  மீண்டும் உயிர்ப்பிக்கும்  நடவடிக்கையில்  அரசாங்கம்  ஈடுபட்டிருப்பது  குறித்து  கேள்வி  எழுப்பும்  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி,  அது,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு இந்தியர்  ஆதரவை  மீட்டுத்தரும்  முயற்சியா  என்றும்  வினவுகிறார்.  ஆனால்,  அது  நடக்காது. ஏனென்றால்  இந்திய  சமூகத்தின்  முன்னேற்றத்தை  இலக்காகக் …

பெற்றோர் சீபோர்ட் பள்ளி விவகாரத்தை காஜாங் கொண்டுசெல்வர்

கூட்டரசு  அரசாங்கமும்  சிலாங்கூர்  அரசும்  எதுவும்   செய்யாமலிருப்பதால்  அதிருப்தி  அடைந்துள்ள  சீபோர்ட்  பள்ளியைக்  காப்போம்  அமைப்பு  அவ்விவகாரத்தை  காஜாங்  இடைத் தேர்தலுக்குக்  கொண்டுசெல்ல  தீர்மானித்துள்ளது. இடைத்  தேர்தலுக்கான  பரப்புரை  நடக்கும்  காலத்தில்   காஜாங்  வேட்பாளரான  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமிடம் இடமாற்றம்  செய்யப்பட்ட  அப்பள்ளி  தொடர்பில் ஒரு …

அன்வார் குற்றவாளி என முடிவானால் காஜாங்கில் போட்டியிட முடியாமல் போகலாம்

இரண்டாவது  குதப்புணர்ச்சி  வழக்கில்  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்   இப்ராகிம்  விடுவிக்கப்பட்டதற்கு  எதிரான  மேல்முறையீட்டில்  அரசுதரப்பு  வெற்றிபெற்றால் அன்வார்  காஜாங்  இடைத்  தேர்தலில்  போட்டியிட  முடியாமல்  போகும்  சாத்தியம்  அதிகம்  இருப்பதாகக்  கூறுகிறார் பாயான்  பாரு  பிகேஆர்  எம்பியான  சிம்  ட்ஸே  ட்ஸின். முறையீட்டு  நீதிமன்றம்  இன்றும்  நாளையும் …