மலேசியாகினி கட்டிட நிதி: பினாங்கு கெராக்கான் தலைவர் ஒரு கல்…

மலேசியாகினியின் கட்டிட நிதிக்கு உதவியாக பினாங்கு கெராக்கான் தலைவர் தெங் சாங் இயோ ரிம1,000 கொடுத்து ஒரு கல் வாங்கினார்.  அவரே கட்டிட நிதிக்குக் கொடை வழங்கிய  முதலாவது பிஎன் தலைவர் ஆவார். “மாட் சாபு அதற்குக் கொடை வழங்கினார் என்றால் அரசியல் நோக்கத்துடன் செய்தார். நான் பத்திரிகைச்…

இசி: தேர்தல் தொகுதிகள் திருத்தப்படுவது மலாய்க்காரர் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக அல்ல

தேர்தல் ஆணையம்(இசி) விரைவில்  தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது. ஆனால், அது மலாய்க்காரர் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செய்யப்படாது என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் அப்துல் யூசுப் கூறுகிறார். அரசியலமைப்பைப் பின்பற்றி அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். “மலாய்க்காரர் அதிகாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இசி தேர்தல் தொகுதிகளைத்…

என்எப்சி மீதான அறிக்கையை பிஏசி டிசம்பர் 3-இல் சமர்ப்பிக்கும்

நேசனல் ஃபீட்லோட் செண்டர் (என்எப்சி) மீதான  பொதுக் கணக்குக் குழு(பிஏசி)-வின்  அறிக்கை ஒரு வாரம் தாமதித்து டிசம்பர் 3-இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். முந்தைய பிஏசி தயாரித்திருந்த அந்த அறிக்கையை  இப்போதைய பிஏசி கடந்த வாரம் ஏற்றுக்கொண்டது. அந்த அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று பிஏசி-இன் கூட்டத்துக்குப்…

கூ நான்: சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு குப்பை அகற்ற…

மாநகரில் சேரும் குப்பையை அள்ளும் செலவு கூடிக் கொண்டே போகிறது. அதுதான் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) சொத்து மதிப்பீட்டு வரியை உயர்த்த முக்கிய காரணம் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறுகிறார். டிபிகேஎல் தலைமையகத்தில் செய்தியாளர்களீடம் பேசிய தெங்கு அட்னான், குப்பையின்…

பகாங் சட்டமன்றம் பிகேஆர் உறுப்பினரை இடைநீக்கம் செய்தது

பகாங் சட்டமன்றம், மாநில பட்ஜெட் உபரியைப் “பொய்” என்று கூறிய பிகேஆர் செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சியான் சுங்கை இரண்டு கூட்டங்களில் கலந்து கொள்வதினின்றும் தள்ளி வைத்தது. உரிமை, சலுகைக் குழுவில் தம்மைத் தற்காத்துக்கொள்ள வாய்ப்பு கொடுக்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என லீ கூறினார். லீயை இடைநீக்கம்…

கிளந்தான் எம்பி பிரதமரைச் சந்தித்து ஹுடுட் பற்றி விவாதிப்பார்

கிளந்தான் மந்திரி புசார் அஹ்மட் யாக்கூப்பும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சந்திக்கும்போது ஹுடுட் அமலாக்கம் பற்றித்தான் கலந்துரையாடுவார்களே தவிர, பரவலாகக் கூறப்படுவதுபோல் மலாய் ஒற்றுமையைப் பற்றியல்ல. “மாநில அரசு ஹுடுட் சட்டத்தைச் செயல்படுத்த எண்ணம் கொண்டிருப்பதை அவருக்குத் தெரியப்படுத்துவோம்”, என்று அஹ்மட்  கூறியதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ்…

கான் மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவு

மசீச உதவித் தலைவர் கான் பிங் சியு-வும் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர், ஏற்கனவே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள துணைத் தலைவர் லியோ தியோங் லாயையும் முன்னாள் தலைவர் ஒங் தி கியாட்டையும் எதிர்த்துக் களம் இறங்குகிறார். இன்று கோலாலும்பூரில் விஸ்மா மசீச-வில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்…

ஜிஎஸ்டி நாட்டின் குறைதீர்க்கும் அற்புத மருந்தல்ல :நஜிப்புக்கு எம்பிகள் அறிவுறுத்தல்

பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) என்பது நாட்டை நொடிப்பு நிலையினின்றும் காக்கும் அற்புத மருந்தல்ல என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உணர வேண்டும் என எதிரணி எம்பிகள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் நிதி நிலை வலுவாக உள்ளதா அல்லது நாடு நொடித்துப்போகும் நிலையில் உள்ளதா என்பதை நஜிப் உரைத்திட வேண்டும்…

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

நாடாளுமன்றம், மலேசியாவில் வேவுபார்த்ததாகக் கூறப்படும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்றை நிராகரித்தது. அத்தீர்மானத்தை  ஷம்சுல் இஸ்கண்டர் அகின் (பிகேஆர்- புக்கிட் கட்டில்) கொண்டுவந்தார். ஆனால், வேவுபார்த்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அமெரிக்க தூதரகத்துக்கு ஏற்கனவே ஆட்சேபக் குறிப்பு அனுப்பி விட்டதால் தீர்மானம்…

அனிபா: மலேசியாவுக்கு எதிரான உளவு நடவடிக்கைகளை ஆராய்வோம்

மற்ற நாடுகள், குறிப்பாக சிங்கப்பூர் மலேசியாவில் வேவுபார்த்ததாகக் கூறும் ஊடக தகவல்களில் உண்மை உண்டா என்று மலேசிய அதிகாரிகள் தீர்க்கமாக ஆராய்வார்கள். இதன் தொடர்பில் சிங்கப்பூர் தூதரை அழைத்து விளக்கம் கோரப்படும் என்று வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் கூறினார். “நல்ல நட்பு கொண்ட அண்டை நாட்டை வேவுபார்ப்பது…

அம்பிகா: முன்னாள் இசி-தலைவர் பிஎன் எடுபிடி என்று கூறப்படுவதை நிரூபித்திருக்கிறார்

முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், பெர்காசாவில் சேர்ந்திருக்கிறார். அரசியல் அதிகாரம் மலாய்க்காரர்களிடம் இருப்பதை உறுதிசெய்யவே பெர்காசாவில் சேர்ந்ததாகக் கூறிய அப்துல் ரஷிட், மலாய்க்காரர்களை அதிகாரத்தில் வைத்திருப்பது முன்னாள் இசி தலைவரான தமக்குக் கைவந்த கலை என்றார். தம் பதவிக்காலத்தில் மும்முறை தேர்தல் எல்லைத்…

சாலைக்கட்டணத்தை நீக்குவது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும்

நாடு முழுக்க சாலைக்கட்டணங்களை எடுப்பது அரசாங்கத்துக்கு நிதிச் சுமையை உண்டாக்கும், முடிவில் அது முதலீட்டாளர்கள் அரசாங்கத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கையையும் சிதறடித்து விடும் என்கிறார் பொதுப்பணி அமைச்சர் பாடில்லா யூசுப். சாலைக்கட்டணங்களை நீக்குவது அரசாங்கத்தின் வருமானத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் காண்பிப்பதாக அவர் குறிப்பிட்டார். “அத்துடன்  ஒப்பந்தங்களையும் மதிக்க வேண்டும்”.…

தற்கொலை முயற்சி நாடற்றோரின் பரிதாப நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது

மைகார்ட் பெற முடியாத 12-வயது சிறுமியின் தற்கொலை முயற்சி, அரசாங்கம்  இந்திய மலேசியரில் நாடற்றவர்களாக இருப்போரின் பிரச்னையைக் களையத் தவறிவிட்டது என்பதைக் காட்டுவதாக இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறியுள்ளார். இப்பிரச்னைக்கு இண்ட்ராப் ஒரு “முழுமையான தீர்வை” பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் முன்வைத்தும்கூட இவ்வாறு நடந்துள்ளது எனப் பிரதமர்துறை…

இனவாதத்தை சாமாளிக்க புதிய ஒற்றுமை மன்றம்

பல்வேறு துறைசார்ந்த 29 உறுப்பினர்கள் அடங்கிய தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் (என்யுசிசி) புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.  தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் புதிய நடவடிக்கைகள் பற்றி விவாதித்து முடிவெடுக்க  அதற்கு ஆறு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமநிதி தலைவர் ஷம்சுடின் ஒஸ்மானைத் தலைவராகக் கொண்ட  அம்மன்றம்,  அதன் பரிந்துரைகளை…

தேச துரோகம் என்றுரைத்து மிரட்ட வேண்டாம்: வான் ஜுனாய்டிக்குக் கடும்…

மலேசிய ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோருவோர்மீது தேசதுரோக சட்டம் பாயும் என்று மிரட்டும் உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பாரை எதிரணித் தலைவர் இருவர் கண்டித்தனர். ”மலேசிய ஒப்பந்தம் பற்றி விவாதிப்பதில் தேசதுரோகம் எதுவுமில்லை. மலேசியர்கள் அதைப் பற்றிப் பேசக்கூடாது என வான்…

அரசாங்கக் கடன் சற்றே உயர்ந்தது

அரசாங்கக் கடன், இவ்வாண்டு அக்டோபர் முடிய ரிம529.6 பில்லியனாக கூடி இருக்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) விகிதத்தில் 53.6 விழுக்காடாகும். ஆனாலும் கடன் நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் இன்று நாடாளுமன்றத்தில் அளித்திருந்த எழுத்துவடிவிலான பதிலில் கூறினார். ஜூன் மாதம் கடன்…

பாஸ் கட்சியுடன் அம்னோ பேசத்தாயார்

பாஸ் கட்சி பேசத் தாயார் என்றதால் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக், கிளந்தான் மந்திரி புசார் அகமட் யாகூப்பை  சந்திக்கவுள்ளார்.   கடந்த வார இறுதியில் நடந்த  பாஸ் முக்தாமாரில் (மாநாடு) இந்த சந்திப்பு சார்பாக விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  இந்த சந்திப்புக்கு தான் தயார்  என்கிறார் நஜிப். "நாங்கள்…

மலேசியாவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு

மலேசியாவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு, செம்பருத்தி.கொம் ஏற்பாட்டில்  வருகிற புதன்கிழமை, நவம்பர் 27, 2013 இரவு மணி 7.30 அளவில் கோலாலம்பூர் தான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் நடைப்பெறும். மாவீரர்  நாள் , தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டு தாய்மண் விடுதலைக்காக விதையாகிப்போன போராளிகளை நினைவுகூர்ந்து வீர வணக்கம் செலுத்தி …

ஒங் தி கியாட் மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார்

அரசியல் வனவாசத்திலிருந்து திரும்பும் மசீச முன்னாள் தலைவர் ஒங் தி கியாட், அடுத்த மாதம் நடைபெறும் கட்சித் தேர்தலில் தலைவர் போட்டியிடுவார். இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய அவர் “ஒங் தி கியாட்டான நான், தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன் என்பதை அறிவித்துக்கொள்கிறேன்”, என்றார். தலைவர் பதவிக்குப் போட்டியிடும்…

டிஏபி-இல் அணிகள் உண்டு ஆனால், அவற்றால் கட்சிக்குப் பாதிப்பு இல்லை

பினாங்கு டிஏபி தலைவர்கள் இருவர், அக்கட்சியில் இரண்டு அணிகள் அமைந்து டிசம்பர்- 1  தேர்தலையொட்டிய பரப்புரைகளைச் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதை ஒட்டுமொத்தமாக மறுக்கவில்லை, அதேவேளை அதைப் பெரிதுபடுத்தவுமில்லை. “இதெல்லாம் ஜனநாயக செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். எந்தக் கட்சியிலும் அரசியலில் ஒத்த கருத்துக்கொண்டோர்  அணிசேர்வது இயல்பான ஒன்றுதான்”, எனத் துணை…

தத்துநடை போடும் எரிஉலை எதிர்ப்பு இயக்கம்

கெப்போங்கில் எரிஉலை கட்டப்படுவதை எதிர்க்கும் KL Tak Nak Insinerator (கேடிஐ) இயக்கம்,   நாளை நாடாளுமன்றத்துக்கு ஊர்வலமாக செல்வதற்கு முன்னர் அவ்வியக்கத்துக்கு வலுச் சேர்க்க நேற்று ஒரு செராமாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.  ஆனால், அக்கூட்டத்திற்கு வந்திருந்தோர்  எண்ணிக்கை உற்சாகம் தருவதாக இல்லை. சுமார் 200 பேர்தான் வந்திருந்தனர். …

பிகேஆர் தேர்தலில் ஊழல் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது: வான் அசிசா திட்டவட்டம்

அடுத்த ஆண்டு பிகேஆர் தேர்தல்களில் ஊழலுக்கு இடமில்லை என்றும்  ஒழுங்குமீறி  நடந்துகொள்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சித் தலைவர் வான் அசிசான் வான் இஸ்மாயில் எச்சரித்துள்ளார். “கட்சிக் கொள்கைகளை மீறுவோரும் ஊழல் செய்வோரும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழப்பார்கள்”.  இன்று ஷா ஆலமில், பிகேஆர் சிறப்புக் கூட்டத்தில்…

ஹுசாம், சலாஹுடின் துவான் இப்ராகிம் ஆகியோர் பாஸ் உதவித் தலைவர்கள்

பாஸ் கட்சித் தேர்தலில், நடப்பு உதவித் தலைவர்களில் ஹுசாம் மூசா, சலாஹுடின் ஆயுப் ஆகிய இருவரும் தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொண்டனர். கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் இப்ராகிம் துவான் மான் மூன்றாவது உதவித் தலைவராக வெற்றி பெற்றார். உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மற்றொரு நடப்பு உதவித்…