மா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

தெலோக் இந்தான்: இடைத்  தேர்தலுக்கான அவரது  தேர்தல்  அறிக்கையை இன்று  வெளியிட்ட  பிஎன்  வேட்பாளர்  மா  சியு  கியோங், மற்றவற்றோடு  அந்நகரின்  பிரபல  சாய்ந்த  கோபுரத்தை  யுனெஸ்கோவின்  உலக மரபுச் சின்னமாக்க  முயற்சிகள்  மேற்கொள்ளப்போவதாக   அதில்   வாக்குறுதி  அளித்துள்ளார். தெலோக்  இந்தானில்  ஒரு  பல்கலைக்கழகம்  அமைக்கப்படும்  என்றும் அவ்வறிக்கை…

தெலோக் இந்தான் டிஏபி செராமாவில் ஐயாயிரம் பேர் கலந்துகொண்டனர்

நேற்றிரவு  தாமஸ்  கிண்ண  இறுதி  ஆட்டம்  நடைபெற்றாலும்கூட  தெலோக்  இந்தான்  டிஏபி  செராமாவுக்கு  ஐயாயிரம்  பேர்  திரண்டு  வந்திருந்தனர். பக்காத்தான்  ரக்யாட்  தலைவர்  அன்வார்  இப்ராகிம், டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  முதலானோர்  அதில்  உரையாற்றினர். லிம், புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தல்  வெற்றி  தெலோக் …

மலாய் என்பது இனம், அம்னோ என்பது ஒரு கட்சி:அன்வார்

அம்னோவைக்  குறைகூறுவது  மலாய்க்காரரையும்  இஸ்லாத்தையும்  சிறுமைப்படுத்துவதாகும்  என  இன-வாத  கூச்சல்  போடுவதை  அக்கட்சி  நிறுத்த  வேண்டும்  என்கிறார்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம். அம்னோ, தான்  ஒரு  கட்சி  என்பதையும்  மலாய்  என்பது  ஓர்  இனம் என்பதையும்  உணர  வேண்டும். என்றாரவர். அம்னோவில்  கிறிஸ்துவ உறுப்பினர்கள்  உள்ளனர்.  அவர்கள் …

பிசிஎம் ஹுவானுக்கு தோல்வியிலும் ஒரு ஆறுதல்

பிசிஎம்  உதவித்  தலைவர்  ஹுவான்  செங்  குவான், புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தலில் தோற்றது  பற்றிக்  கவலைப்படவில்லை. டிஏபி-இன்   பெரும்பான்மையைக்  குறைக்க  முடிந்ததை  எண்ணி  ஆறுதல்  கொள்கிறார். ஹுவான்   வைப்புத்தொகையை  இழந்தார்  என்றாலும்  தாம் 3,583 வாக்குகள்  பெற்றதைப்  பெரிதாக  நினைக்கிறார். அது 13வது  பொதுத்  தேர்தலில்  பத்து …

கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு 2014

  மலேசிய உத்தமத்தின் ஏற்பாட்டில் கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு கோலாலம்பூரில் நடைபெறவுள்ளதாக  அந்த அமைப்பின் தலைவர் சி.ம. இளந்தமிழ் அறிவித்துள்ளார். இக்கருத்தரங்கு நிகழ்ச்சியை கோலாலம்பூரில் வழிநடத்துவதற்கு    தமிழ் கட்டற்ற மென்பொருள்  முன்னோடிகளில் மூவர் தமிழ் நாட்டிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் வரவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி பின்வருமாறு நடைபெற உள்ளது :…

ராம்கர்பால்: புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்

  இரவு மணி 9.01: புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத் தேர்லில் தேர்தலில் ராம்கர்பால் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரி அன்வார் யாயா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிகாரப்பூர்வமான இறுதி நிலவரம்: டிஎபி - 41, 242 பிசிஎம் - 3,583 முகமட் நபி பக்ஸ் - 798…

புக்கிட் குளுகோர்: அசைக்க முடியாத நிலையில் ராம்கர்பால்

  புக்கிட் குளுகோர் இடைத் தேர்தல் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் டிஎபியின் ராம்கர்பால் 89 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். இரவு மணி 8.15: அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள்: டிஎபி - 41,236 பிசிஎம் - 3,507 முகம்மட் நபி பக்ஸ் - 756 அபு பாக்கார் - 218 செல்லாத…

புக்கிட் குளுகோர்: ராம்கர்பால் பெரும்பான்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது

  மணி இரவு 7.30:.புக்கிட் குளுகோர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் டிஎபியின் வேட்பாளர் ராம்கர்பால் 14,816 வாக்குகளைப் பெற்று முன்நிலையில் இருக்கிறார். இரவு மணி 7.00 நிலவரம்: ராம்கர்பால் வெற்றி நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். இக்கட்டத்தில் ராம் 12,375 வாக்குகளை பெற்றுள்ளார். பார்ட்டி சிந்தா மலேசியாவின் வேட்பாளர்…

ஹாடி: ஹுடுட் பற்றித் தெரியாதவர்கள் அதைப் பற்றிப் பேச வேண்டாம்

ஹுடுட்  பற்றி  அறியாதவர்கள்  அது  பற்றிப் பேசுவது  மக்களிடையே  குழப்பத்தை  உண்டுபண்ணும்  என  பாஸ் தலவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  கூறுகிறார். அது  நிலைமையை  மேலும்  மோசமாக்கி,  பாதிப்பை  உண்டுபண்ணும் என்பதால்  அவர்கள்  ஹுடுட்  பற்றிப்  பேசுவதைத்  தவிர்க்க  வேண்டும்  என்றாரவர். “அதைப்  பற்றித்  தெரியாதென்றால் பேசாதீர்கள்”, என்று…

இசி: காலை மணி 11வரை 20 விழுக்காட்டினர் வாக்களித்தனர்

புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தலில்  காலை  11 மணி  முடிய  16,418 பேர் அல்லது  19.95 விழுக்காட்டினர்  வாக்களித்திருப்பதாக  தேர்தல்  ஆணைய (இசி) தலைவர்  அப்துல்  அசீஸ்  முகம்மட்  யூசுப்  கூறினார். வாக்களிப்பு  மையங்களைப்  பார்வையிட்ட  அவர்,  மூத்த  வாக்காளர்களைவிட  இளம்  வாக்காளர்களின்  எண்ணிக்கை  குறைவு  என்றார். வாக்களிப்பு …

புக்கிட் குளுகோரில் வாக்களிப்பு தொடங்கியது

புக்கிட்  குளுகோரில்  இன்று  வாக்களிப்பு. அங்கு  பிஎன்  போட்டியிடவில்லை  என்பதால்  தேர்தல்  பரப்புரை  மிக  அடக்கமாகவே  நடந்தது. இந்த  இடைத்  தேர்தலில்  டிஏபி-இன்  ராம்கர்பாலை  எதிர்த்து  பார்டி  சிந்தா மலேசியா-வின்  ஹுவான்  செங்  குவானும்  சுயேச்சை வேட்பாளர்களான  அபு பக்கார்  சித்திக் முகம்மட் ஸானும்  முகம்மட்  நபி  பக்ஸ் …

தெலோக் இந்தானில் ரிம5 பில்லியன் நெடுஞ்சாலை திட்டத்தை முகைதின் தொடக்கி…

தெலோக்  இந்தானில்,  நாடாளுமன்ற  இடைத்  தேர்தலுக்கான  பரப்புரை  இரண்டாவது  வாரத்தில்  அடியெடுத்து  வைத்துள்ள  வேளையில்,  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  ரிம5 பில்லியன்  மேற்குக்கரை  நெடுஞ்சாலையை இன்று  தொடக்கி வைத்தார். அந்த  233 கிலோ  மீட்டர்  நெடுஞ்சாலை  சிலாங்கூரில்  பந்திங்கில்  தொடங்கி  பாகான்  டத்தோ,  தெலோக்  இந்தான்,  லெகிர்,…

அம்பிகா: ரேலா-வுக்கு ஜாஹிட்டின் எச்சரிக்கை தேர்தல் சட்டத்தை மீறுகிறது

தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தல்  தொடர்பில்   ரேலா  படையினரிடையே    உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி   பேசிய  பேச்சில்  பல   தேர்தல்  சட்ட மீறல்கள்  நிகழ்ந்திருப்பதாக  முன்னாள்  பெர்சே  இணைத் தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்   குறிப்பிட்டுள்ளார். “அவர்களின்  வாக்குகள்  பற்றி  அவருக்கு (ஜாஹிட்) எப்படித்  தெரியும்?  வாக்குகள்  இரகசியமானவை  அன்றோ?…

அன்வார்: 20 அம்னோ சம்செங்கைக் கண்டு பயந்து விடாதீர்

  புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கு முன்னதாக நேற்றிரவு பக்காத்தான் தலைவர்கள் அங்கு ஒன்றுகூடி தங்களுடைய வலுமையைக் காட்டினர். ஹான் சியாங் கல்லூரி மண்டபத்தில் திரண்டிருந்த சுமார் 3,000 பேர் அவர்களுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர். ஒவ்வொரு தலைவரும்…

ஐஜிபி: மலேசியாவில் மேலும் பல போராளிகள் பதுங்கியுள்ளனர்

பயங்கரவாத  நடவடிக்கைகளில்  ஈடுபட்டதற்காக  இண்ட்ர்போலால்   தேடப்படும்  அந்நிய போராளிகள்  பலர்  மலேசியாவில்  பதுங்கி  இருப்பதை  போலீசார்  அறிவார்கள். அவர்களின்  நடமாட்டத்தை  போலீஸ்  தொடர்ந்து  கண்காணிப்பதாக  இன்ஸ்பெக்டர்  ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  பினாங்கில்  கூறினார். “சிலரை  அடையாளம் கண்டு  விட்டோம். பலரைத்  தேடிக்  கொண்டிருக்கிறோம்”, என்று …

மன்னிப்பு கேட்டார் கைரி, ஆனால், டிஏபி அதை ஏற்கத் தயாராக…

அம்னோ  இளைஞர்கள்  டிஏபி  பெயர்  பலகையைச்  சேதப்படுத்தியதற்கு  வருத்தம்  தெரிவித்து  கைரி  ஜமாலுடின்   தனிப்பட்ட  முறையில்  மன்னிப்பு  கேட்டதை  டிஏபி-இன் வியூக இயக்குனர்  ஒங்  கியான்  மிங்  ஏற்கவில்லை. “டிஏபி-இன்  சொத்துக்கள்  சேதப்படுத்தப்பட்டதற்கு  வருத்தம்  தெரிவித்தேன்.......பெயர்ப்  பலகை  உடைக்கப்பட்டதற்கு  மன்னிப்பு  கேட்டேன். அதற்காக  பணம்  கொடுப்பதாகவும்  சொன்னேன்”, என…

மசீச: கைரி அம்னோ இளைஞர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்

மசீச  இளைஞர்  பகுதி,  நேற்று  டிஏபி தலைமையகத்தைத்  தீவைத்துக்  கொளுத்தப்போவதாக  மிரட்டிய   அம்னோ  இளைஞர்களை  அதன்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  கட்டுக்குள்  வைத்திருக்க  வேண்டும்  எனக் கேட்டுக்கொண்டது. “கூட்டரசு  பிரதேச  அம்னோ  இளைஞர்கள்  டிஏபி  தலைமையம்  கொளுத்தப்படும்  என  மிரட்டி  இருப்பதை   மசீச  இளைஞர்  பகுதி  கடுமையாக  கண்டிக்கிறது.…

டிஏபி: அம்னோ இளைஞர்கள் நஜிப்பின் பலவீனத்தைத்தான் வெளிப்படுத்தினர்

அம்னோ  இளைஞர்களின்  நடவடிக்கைகள்  பிரதமரும்  அம்னோ  தலைவருமான  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பலவீனத்தைத்தான்  காண்பிக்கின்றன  என்று  டிஏபி  கூறுகிறது. இந்த  வன்செயல்கள்  அம்னோ  அரசியலையும்  நஜிப்பின்  தலைமைத்துவத்தின்  பலவீனத்தையும்  காண்பிக்கின்றன  என  டிஏபி  தேசிய  சட்டப்  பிரிவுத்  தலைவர்  கோபிந்த்  சிங்  டியோ  கூறினார். நேற்று  நடந்தது  பற்றி …

முகைதின்: கொதிப்படைந்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தது இயல்பானதே

நேற்று  டிஏபி  தலைமையகத்துக்கு  வெளியில்  அம்னோ  இளைஞர்கள்  ஆவேசமாக  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டதை “இயல்பான  எதிர்வினை”  எனத்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  வருணித்துள்ளார். தங்கள்  கட்சி  களங்கப்படுத்தப்படும்போது  உறுப்பினர்கள்  கொதிப்படைவது  இயல்பானதே  என்று  அம்னோ  துணைத்  தலைவருமான  முகைதின்  கூறினார். ஆனாலும். நாட்டில்  சட்டங்கள்  உண்டு  என்று   கூறிய …

அபு பக்கார் சிஎம்-மை மன்னித்து விட்டாராம்

புக்கிட்  குளுகோர்  சுயேச்சை  வேட்பாளர்  அபு  பக்கார்  சித்திக்  முகம்மட்  ஸான்,  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்-கின்  காரின்முன்  விழுந்து  மறியல்  செய்ததில்  காயங்கள்  ஏற்பட்டிருந்தாலும் அதற்காக  சிஎம்-மீது   ஆத்திரம்  கொள்ளவில்லை; வழக்கு  தொடுக்கப்  போவதுமில்லை. அவர்  சிஎம்மை  ‘மன்னித்து’  விட்டாராம்.   “அந்த  நேரத்தில்  ஆத்திரப்…

ஐந்து வழக்குரைஞர்களின் கைது சட்டவிரோதமானது

ஐந்தாண்டுகளுக்குமுன்  பிரிக்பீல்ட்ஸ் போலீஸ்  நிலையத்தில்  மெழுகுதிரி  அஞ்சலியில்  ஈடுபட்ட  14  பேருக்கு  உதவச்  சென்ற  ஐந்து  வழக்குரைஞர்களை  போலீசார்  கைது   செய்தது  சட்டவிரோதமானது  என கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  இன்று  தீர்ப்பளித்தது. அவர்களை  இரவுமுழுவதும்  பிடித்துவைத்ததும்  வழக்குரைஞர்களைச்  சந்திக்க  அனுமதியளிக்க  மறுத்ததும்கூட  சட்டவிரோதமான  செயல்களாகும்  என  நீதிபதி  ஜோன் …

நஜிப்பின் இயக்கம் நடத்திய ஹுடுட் வட்டமேசை

2012-இல் உலக மிதவாதிகள் இயக்கத்தை (Global Movement of Moderates) தோற்றுவித்தவர் மலேசிய பிரதமர் நஜிப் அவர்கள். அவ்வியக்கம்  தோற்றுவிக்கப் பட்டதற்கான முக்கிய காரணம், 2010-இல் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் நஜிப் ஆற்றிய உரையாகும். அதில், “உண்மையான பிளவு முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களும் இடையிலோ அல்லது…

சஞ்சீவன் ‘மலிவு விளம்பரம்’ தேடுகிறார்: போலீஸ் தலைவர் சாடல்

சாபா  போலீஸ்  தலைவர்,  ஹம்சா  தயிப்,  தம்  மகனைப்  பற்றி மைவாட்ச்  தலைவர்  ஆர்.ஸ்ரீசஞ்சீவன்  கூறுவதெல்லாம் வெறும்  அபாண்டம்  எனவும்  அதன்வழி  அவர்  மலிவு  விளம்பரம்  தேடிக்கொள்ளப்பார்க்கிறார்  எனவும்  குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்  கூறுவதுபோல் தம்  மகன்  முகம்மட்  அஷான்,30, வேலை இல்லாதவர்  அல்லர்  என்றும்  பல  ஆண்டுகளாகவே  அவர் …