‘புதுக் கிராமம்’ திரையிடப்படுவதை மலாய் மன்றம் எதிர்க்கிறது

பொது மக்களுக்கு 'புதுக் கிராமம்' திரையிடப்படுவதற்கு மலாய் ஆலோசனை  மன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்தத் திரைப்படம் வரலாற்று உண்மைகளை மாற்றிக் காட்டுவதால் அதனை  கற்பனை எனக் கருத முடியாது என அதன் தலைமைச் செயலாளர் ஹசான் மாட்  சொன்னார். "நிறைய தியாகங்களைச் செய்துள்ள மலாய்க்காரர்களுக்கு 'புதுக் கிராமம்'  ஆத்திரத்தை…

போலீஸ்காரர்களில் 80 விழுக்காட்டினர் குற்றத் தடுப்பில் ஈடுபட்டுள்ளனர்

குற்றப் புலனாய்வுத் துறை உட்பட போலீஸ் படையினரில் கிட்டத்தட்ட 80  விழுக்காட்டினர் குற்றத் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய  போலீஸ் படைத் தலைவர் செயலகத்தின் நிறுவனத் தொடர்புப் பிரிவு உதவித்  தலைவர் ஏசிபி ராம்லி முகமட் சொல்கிறார். குற்றச் செயல்களை ஒடுக்குவதில் முழுப் போலீஸ் படையும் சம்பந்தப்பட்டுள்ளதால் குற்றப்…

‘ஆர்ஒஎஸ் ஏன் அம்னோவுக்கும் அதே விதிகளை அமலாக்கவில்லை ?’

"அம்னோ சட்ட விரோத அமைப்பு என நீதிபதி ஹருண் ஹஷிம் தீர்ப்பளிப்பதற்கு  வழி வகுத்த அம்னோ 1987/88 தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கிறதா ?" மத்திய நிர்வாகக் குழு தேர்தலுக்கு டிஏபி இணங்குகிறது புரோராட்: தேர்தல் என வரும் போது டிஏபி வெண்மையிலும் வெண்மையாக  தோற்றமளிக்க வேண்டும். தவறான வேட்பாளர்கள்…

‘சபா மக்கள் தொகையை மாற்றியதற்கு முஸ்தாபாவே பொறுப்பு’

பிபிஎஸ் தலைமையிலான மாநில அரசாங்கத்தை வீழ்த்தும் பொருட்டு சபா மக்கள்  தொகையை மாற்றியமைக்கும் யோசனையை முதலில் முன்மொழிந்தவர் முன்னாள்  சபா முதலமைச்சர் முஸ்தாபா ஹருண் என குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று தெரிவிக்கப்பட்டது. உஸ்னோ எனப்படும் பலவீனமாக இருக்கும் தொகுதிகளில் புதிய வாக்காளர்களை  பதியும் பொறுப்பை காலஞ்சென்ற…

கைரி தேச நிந்தனைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என பிகேஆர்…

சரவாக் டிஏபி தலைவர் சோங் சியாங் ஜென்-னுக்கு எதிராக அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் போலீசில் புகார் செய்துள்ளதன்வழி தேச நிந்தனைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என பிகேஆர் சாடியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு எதிரான அறிக்கைகளுக்காக தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என பிகேஆரின் சட்ட,…

குடும்ப வன்முறையைக் கையாள போலீசுக்கு பயிற்சி தேவை

9,983 குடும்ப வன்முறை சம்பவங்களில் 817 மட்டுமே நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து குடும்ப வன்முறை விவகாரத்தில் போலீஸ் படைக்குப் போதுமான தேர்ச்சி இல்லை என்பது தெளிவாகிறது என டிஏபி-இன் புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம் கூறினார். எனவே, மகளிருக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளைக் கையாள்வதற்கு போலீசுக்குப்…

‘கள்ளக் குடியேறிகள் பிரச்னையைத் தீர்க்க நஜிப்பின் பிஎன் இறுதியில் அரசியல்…

சபாவில் வெள்ளம் போல் குவிந்துள்ள கள்ளக் குடியேறிகள் பிரச்னையைத்  தீர்ப்பதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான பிஎன் அரசியல்  உறுதிப்பாட்டைக் காட்டியுள்ளதாக அந்த மாநில துணை முதலமைச்சர் ஜோசப்  பைரின் கிட்டிங்கான் கூறினார். அவர் சபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ)  199வது சாட்சியாக…

நஸ்ரி: ஒற்றுமை அரசாங்கம் தேவை இல்லை

பக்காத்தான் ராக்யாட்-உடன் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை  பிஎன் தெரிவிப்பது பயனற்றது, முதிர்ச்சியற்றது என சுற்றுப்பயண, பண்பாட்டு  அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் சொல்கிறார். "தேர்தல் நடைபெறும் போது முடிவுகள் மாறுகின்றன. ஒவ்வொரு முறையும் நாம்  ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தால் தேர்தலை ஏன் நடத்த வேண்டும் ?" என…

மகாதீர்: அதிகமான சுதந்திரத்தின் விலை கூடுதலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

சாலைகளில் கொலைகள் அதிகரித்துள்ள சூழ்நிலைக்கு மலேசியர்கள் தங்களைப்  பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்  முகமட் கூறுகிறார். காரணம் அந்தச் சம்பவங்கள் 'அதிகமான சுதந்திரத்தின் விலை' என அவர்  சொன்னார். அதிகமான சிவில் உரிமைகள் வழங்கப்படும் போது அத்தகைய குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு அதிகாரிகள்…

டிஏபி மத்திய நிர்வாகக் குழு மறு தேர்தலுக்கு இணங்குகிறது

சங்கப் பதிவதிகாரியுடன் (ஆர்ஒஎஸ்) நீண்ட இழுபறிக்குப் பின்னர் டிஏபி தனது  மத்திய நிர்வாகக் குழுவுக்கு மறு தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. கோலாலம்பூரில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டு மணி மத்திய நிர்வாகக் குழுக்  கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக மலேசியாகினியிடம் சில வட்டாரங்கள்  தெரிவித்தன. அந்தக் கூட்டத்துக்கு கட்சியின்…

நஸ்ரி: அமைச்சரின் தனியுரிமையைக் கேள்விகேட்கக் கூடாது

ஓர் அமைச்சருக்குத் தம் பேலையாள்களைத் தீர்மானிக்கும் உரிமை உண்டு. அதைக் கேள்விகேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்கிறார் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ். அவரது அமைச்சில் அவரின் மகன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் வினவியதற்கு நஸ்ரி இவ்வாறு பதிலிறுத்தார். “நீங்கள் என்ன நினைத்தாலும்…

‘சூளு அரசும் இரண்டு பிரதமர்களும் சந்திக்க ஏற்பாடு செய்தேன்’

சாபா சுல்தான்  என்று தம்மைப் பிரகனப்படுத்திக் கொண்டிருக்கும் முகம்மட் அக்ஜான் அலி முகம்மட்,  தாம் முன்னாள் மலேசியப் பிரதமர்கள் இருவரும் சூளு அரசும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததாகக் கூறிக்கொண்டார். இன்று சாபாவில், குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தில் (ஆர்சிஐ) சாட்சியமளித்த அவர், டாக்டர் மகாதிர் முகம்மட், அப்துல்லா…

பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் பாஸ் தலைவரும் பெளத்த சமய இயக்கமும்

பாஸ் தலைவர் ஒருவரும் உள்ளூர் பெளத்த சமய இயக்கமும் ஒன்று சேர்ந்து அவர்களின் சமயங்களுக்கிடையில் சமயக் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசுப் ராவாவும் பெளத்த வஜ்ராலிங் இயக்கத்தின் தலைவர் ஷெராப் யோங்கும், தனிப்பட்டவர்களுக்கும் சமய அமைப்புகளுக்குமிடையில் “ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான, முனைப்பான”…

பார்சலோனா ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் கறுப்புப் பட்டியலிடப்படலாம்

பார்சலோனா குழுவுக்கும் மலேசியக் குழுவுக்குமிடையில் நட்புமுறை கால்பந்தாட்டத்தை  நடத்தியதில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக தெரிய வந்தால்  ஆட்டத்துக்கு   ஏற்பாடு செய்த நிறுவனம் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான அதன் உரிமம் இரத்துச் செய்யப்படலாம். இதனைத் தெரிவித்த இளைஞர், விளையாட்டு அமைச்சார் கைரி ஜமாலுடின், சர்ச்சைக்குரிய அந்தக் கால்பந்தாட்டம் குறித்து…

தயவு செய்து ஒரே மலேசியா பிரதமர் எழுந்து நிற்க வேண்டும்

"நமது பொருளாதாரமும் இன இணக்கமும் படு வேகமாக சரியும் வேளையில்  அவர் மிக மிக அமைதியாக இருக்கிறார்" இஸ்லாமிய அறிஞர்கள்: சூராவ் விஷயத்தை விவேகமாகக் கையாளுங்கள் டபிள்யூஜி321: ஒரே மலேசியா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏதாவது சொல்ல  வேண்டும். முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியை அவருடைய…

மருந்து விலைகள் மீது உறுதியாக இருக்கப் போவதாக சுப்ரா சூளுரை

பசிபிக் பங்காளித்துவ உடன்பாடு கையெழுத்திடப்பட்டால் மருந்து விலைகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியத்திற்கு எதிராக அரசாங்கம் 'உறுதியான' போக்கைப்  பின்பற்றும் என சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறுகிறார். மருந்து விலைகளை  அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் தமது அமைச்சு  'ஆட்சேபிக்கும்' என அவர் நேற்று நிருபர்களிடம் கூறினார். முன்னதாக அவர்…

‘அவதூறு’ தொடர்பில் அமெரிக்-கின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர்

வழக்குரைஞர் அமெரிக் சித்து கடந்த மாதம் சுவாராம் நிதி திரட்டும் விருந்தின்  போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது அவதூறான கருத்துக்களைச்  சொன்னதாக கூறப்படுவது தொடர்பில் அவருடைய வாக்குமூலத்தை போலீசார்  இன்று பதிவு செய்துள்ளனர். அந்த உரையின் உள்ளடக்கம் பற்றி குறிப்பாக நஜிப்புக்கு எதிராக தாம் ஏதும்…

நஸ்ரியின் புதல்வர் இப்போது தந்தையின் அமைச்சில் ஒர் அதிகாரி

பாதுகாவலர் ஒருவர் சம்பந்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சர்ச்சைக்கு இலக்கான  முகமட் நெடிம் நஸ்ரி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளதாகத் தெரிகின்றது. இந்த  முறை அவரது தந்தையின் அமைச்சில். சுற்றுப்பயண, பண்பாட்டு அமைச்சின் இணையத் தளத்தில் நெர்டிம் அமைச்சில்  'சிறப்பு அதிகாரி' என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது அந்த அமைச்சுக்கு அவரது  தந்தை…

கூட்டரசு பிரதேச டிஏபி தேர்தலில் தெரெசா கொக் போட்டியிட மாட்டார்

டிஏபி உதவித் தலைவரும் சிலாங்கூரின் நடப்பு டிஏபி தலைவருமான தெரேசா கொக், எதிர்வரும் கூட்டரசு பிரதேச(எப்டி) டிஏபி தேர்தலில் போட்டியிட தமக்குத் தகுதி இல்லை என்று கூறினார். அவரது சிலாங்கூர் டிஏபி தலைவர் பதவி, நவம்பரில்தான் முடிவுக்கு வருகிறது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே எப்டி டிஏபி தேர்தல்…

பொதுத் தேர்தலுக்குப் பின் நஜிப்பின் செல்வாக்கு மேலும் கூடியுள்ளது

13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடி வருவதாக சாபாவின் பிரபல அரசியல்வாதி சாலே சைட் கெருவாக் கூறுகிறார். “நஜிப், எதிர்த்தரப்பினர் கொடுக்கும் அரசியல் நெருக்கடிகளைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு எது நல்லதோ அதைச் செய்வதில் கவனம் செலுத்துகிறார்”, என கோத்தா கினாபாலுவில்…

TPPA பேச்சுக்களை விட்டு அரசாங்கம் விலக வேண்டும்: இட்ரிஸ்

பசிபிக் தோழமை ஒப்பந்தத்தை (TPPA) எதிர்ப்பவர்கள், மலேசியா அந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களிலிருந்து  வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். “அமெரிக்காவுடனான  தடையில்லா வாணிக ஒப்பந்தப் பேச்சுக்களைப் பல நாடுகள் முறித்துக் கொண்டிருப்பதுபோல் மலேசியாவும் இந்தப் பேச்சுக்களிலிருந்து வெளியேற வேண்டும்”, என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க(கேப்)த் தலைவர் எஸ்.எம். முகம்மட்…

“உள்துறை அமைச்சு குற்றங்களை ஒடுக்க முனைய வேண்டும், அவசர காலச்…

நாட்டில் நிகழும் ஒவ்வொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையும் அவசர காலச்  சட்டத்துக்கு புத்துயிரூட்டுவதற்கு காரணமாக சொல்வதை விட குற்றங்களை  முறியடிப்பதற்கு உள்துறை அமைச்சு கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள  வேண்டுமென பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான்  கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் நாடும் நன்றாக இருக்கும்…

உணர்ச்சிவசப்பட வைக்கும்’ காணொளிகளைப் பரப்பாதீர்- துணை அமைச்சர்

‘சர்ச்சைக்குரிய காணொளிகளைக் கண்டு ஆத்திரத்துடன் கத்திக் கூச்சலிடுவதைவிட, அவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதே மேல் என்று தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் ஜைலானி ஜொஹாரி அறிவுறுத்தியுள்ளார். “அப்படிப்பட்ட காணொளியைக் காண்பவர்கள் அதைப் பரப்பிவிடக் கூடாது. “ (அதன்) உள்ளடக்கம் உணர்ச்சிவசப்பட வைப்பதாக இருந்தால் (சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்)…