பெட்ரோனாஸ் நிறுவனம், ஜப்பானின் ஜேரா நிறுவனத்துடன் நீண்ட கால திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, 2028-ஆம் ஆண்டு முதல் அடுத்த 20 ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் இரண்டு மில்லியன் டன் எல்என்ஜி விநியோகம் செய்யப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வர்…
ஆர்ப்பாட்டக்காரர்களைச் சீண்டிவிட முயன்றவர் கைது
பினாங்கு சட்டமன்றக் கட்டிடத்தில் இன்று மீண்டும் அம்னோ இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆத்திரத்தைத் தூண்டிவிட முயன்ற ஒரு ஆடவரை போலீசார் கைது செய்தனர். “அம்னோ செலாகா” என்று கூறிய ஸ்ரீடெலிமா டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் …
நஜிப் என்யுசிசி-யைப் பாராட்டுவது இஸ்லாமிய என்ஜிஓ-களை அவமதிப்பதாகும்
தேசிய ஒருங்கிணைப்புக்காக தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம்(என்யுசிசி) மேற்கொள்ளும் முயற்சிகளைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாராட்டிப் பேசியது பெர்காசாவுக்குப் பிடிக்கவில்லை. பிரதமரின் பாராட்டு இஸ்லாமிய, மலாய் என்ஜிஓ-களைச் சிறுமைப்படுத்துவதாகும் என்று பெர்காசா தலைமைச் செயலாளர் சைட் ஹசான் சைட் அலி குறிப்பிட்டார். என்யுசிசி-இல் மலாய், முஸ்லிம் பிரதிநிதிகளின் …
உயிருக்கு அஞ்சுகிறார் ராயர் ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டார்
டிஏபி ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் தம் பாதுகாப்பை எண்ணி அஞ்சினாலும் அம்னோ உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை. அவர் ‘செலாகா’ என்று குறிப்பிட்டதற்காக பினாங்கு அம்னோ உறுப்பினர்கள் அவர்மீது ஆத்திரம் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தாம் அம்னோவை நோக்கி அச்சொல்லைப் பயன்படுத்தவில்லை என்கிறார் ராயர். அதனால் அதை …
சுரேந்திரன் இனி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க மாட்டார்
பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரன், இனி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க மாட்டார். உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க நீண்ட காலம் ஆவதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர் இம்முடிவுக்கு வந்துள்ளார். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டம் ஜூன் 9-இல் தொடங்கும். எம்பிகள் மே 19-க்குள் கேள்விகளைத் தாக்கல் செய்ய வேண்டும் …
ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டமன்றத்தில் புகுந்து அட்டகாசம் செய்தனர்
சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயருக்கு எதிராக பினாங்கு சட்டமன்றக் கட்டிடத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் சுமார் 10 பேர், அந்த ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினரைத் தேடி சட்டமன்றக் கட்டிடத்துக்குள்ளேயே நுழைந்தனர். ஒருவர் சட்டமன்றத் தலைவர் லவ் சூ கியாங்கின் மேசைமீது ஏறி நின்று ராயரைத் தேடினார். “ராயரின் இடம்…
18 மாதங்களில் மின்கட்டணம் 39 விழுக்காடு உயரும்?
நீர், எரிபொருள் ஆராய்ச்சி சங்கம் (ஏவர்), இன்னும் 18 மாதங்களில் மின் கட்டணம் மேலும் உயரும் என ஆருடம் கூறியுள்ளது. அது 24-லிருந்து 39 விழுக்காடுவரை உயருமாம். 2016, ஜனவரிக்குள் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் இயற்கை எரிவாயுவின் விலை சந்தைவிலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் என்றும் அப்போது மின்கட்டணம்…
‘celaka’ என்று கூறிய ராயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
அம்னோவை 'celaka' என்று கூறிவிட்டாராம் டிஏபி ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பினாங்கு மாநிலச் சட்டமன்றக் கட்டிடத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நிகழ்ந்தது. பினாங்கு பெர்காசா இளைஞர் தலைவர் ரிஸ்வாட் அஸுட்டின் உள்பட, ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டமன்றக் கட்டிடத்தின் கதவுகளைப் பலமாக தட்டியும் ராயருக்கு …
வேந்தர்: மாரா பல்கலைக்கழகம் மலாய்க்காரர்களுக்கே
யுனிவர்சிடி டெக்னலோஜி மாரா(யுஐடிஎம்) மலாய்க்காரர்களுக்கு உயர்க் கல்வி வழங்கும் கல்விக்கழகமாக தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என அதன் இணை- வேந்தர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் கூறுகிறார். யுஐடிஎம், மலாய்க்காரர்களுக்கும் மற்ற பூமிபுத்ராக்களுக்கும் கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக அரசமைப்பின் 153வது விதிப்படி அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், அச்சலுகைகளை …
டியானா கெட்டிக்காரப் பெண்: மரினா பாராட்டு
சமூக ஆர்வலர் மரினா மகாதிர், தெலோக் இந்தான் டிஏபி வேட்பாளர் டியானா சோப்யா முகம்மட் டாவுட், சிந்தனை திறம்படைத்த புத்திசாலி பெண் எனப் புகழாரம் சூட்டியுள்ளார். “அவர் நன்கு பேசுவார். எழுதுவார். இதனாலேயே மற்ற பல அரசியல்வாதிகளைவிட அவரது வெற்றிவாய்ப்பு மும்மடங்கு அதிகமாகி விடுகிறது”, என முகநூலில் மரினா …
தெராஸ் பிஎன்னில் அனுமதிக்கப்பட்டால் ‘போர்தான்’: தியோங் எச்சரிக்கை
பார்டி தெனாகா ரக்யாட் சரவாக், பிஎன்னில் சேர்த்துக்கொள்ளப்பட்டால் “வெளிப்படையான போர்” வெடிக்கும் என சரவாக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி (எஸ்பிடிபி) இடைக்காலத் தலைவர் தியோங் கிங் சிங் அறிவித்துள்ளார். “அடுத்த மாநிலத் தேர்தலில் இப்போது பிஎன் பங்காளிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஏதாவது ஒன்றில் தெராஸ் போட்டி இட்டால்கூட …
ராம்கர்பால் ‘ஓரினச் சேர்க்கையாளரா’என்று வினவிய செய்திதாளுக்குக் கண்டனம்
புக்கிட் குளுகோர் வேட்பாளர் ராம்கர்பால் சிங்கை நோக்கி “நீங்கள் ஓரினச் சேர்க்கையாளரா” என்று கேள்வி எழுப்பிய சீன நாளேடு ஒன்று கண்டனத்துக்கு இலக்கானது. ராம்கர்பால் சிங் அவரது முகநூல் பக்கத்தில் பலசாளி ஆண்களின் படங்களைப் பதிவேற்றுவதையும் 38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது ஏன் என்றும் பார்டி …
சிரம்பானில் தாக்கப்பட்ட கன்னித்துறவி காலமானார்
கடந்த புதன்கிழமை சிரம்பான் தேவாலயம் ஒன்றில் தாக்கப்பட்ட இரண்டு கன்னித்துறவிகளில் ஒருவர் இறந்து போனார். ஜூலியானா லிம், 69, இன்று பிற்பகல் மணி 3.25க்கு சிரம்பான் மருத்துவமனையில் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. அவரின் வழக்குரைஞர் ஜோய் அப்புக்குட்டனும் அதை உறுதிப்படுத்தினார். “இன்பெண்ட் ஜீசஸ் (ஐஜே) ஸிஸ்டர்ஸ் விரைவில் ஓர் …
சிஎம்-மின் கார்முன் குதித்த வேட்பாளர்
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கைச் சந்திக்க முயன்று முடியாமல் போனதால் வெறுப்படைந்த புக்கிட் குளுகோர் சுயேச்சை வேட்பாளர் அபு பக்கார் சித்திக் முகம்மட் ஸன், முடிவில் முதலமைச்சர் மாநிலச் சட்டமன்றத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்போது அவரின் காரின் முன் குதித்து அதனுடன் மோதிக் கொண்டார். பின்னர், காரின்முன் படுத்துக்கொண்டு …
‘ஆலோசனைக்கு நன்றி, ஆனால் கெராக்கானுக்கு அது தேவையில்லை’
கெராக்கான் ஆலோசகர் சாங் கொ யோன் தமது கட்சி, டிஏபி வேட்பாளர் டியானா சோப்யா முகம்மட் டாவுட் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலியுடன் இருப்பதைக் காண்பிக்கும் படத்தை அதன் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திக்கொள்ளாது என்று கூறினார். “அந்த வகை உத்தியை நாங்கள் பயன்படுத்த மாட்டோம்”,என்றாரவர். கெராக்கான் வேட்பாளர் மா …
மா: தோற்றால் செனட்டர் பதவியா? அதற்கு வாய்ப்பில்லை
தேர்தலில் தோற்றாலும் செனட்டர் பதவி கொடுத்து அமைச்சர் ஆக்கப்படலாம் என்று தம்மைப் பற்றி டிஏபி கூறி இருப்பதை தெலோக் இந்தான் பிஎன் வேட்பாளர் மா சியும் கியோங் மறுக்கிறார். “தோற்றுப்போனால் அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றா நினைக்கிறீர்கள்?”, என மா இன்று காலை மார்க்கெட்டை வலம் வந்தபோது …
இப்ராகிம்: டியானாவுக்கு சீனர் வாக்குகள் கிடைப்பதைத் தடுக்க என்னைப் பயன்படுத்துங்கள்
பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, தாம் டிஏபி வேட்பாளர் டியானா சோப்யா முகம்மட் டாவுட்டுடன் இருப்பதைக் காண்பிக்கும் படத்தை கெராக்கான் அதன் தெலோக் இந்தான் இடைத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். காஜாங் இடைத் தேர்தலின்போது பிகேஆரும் டிஏபியும் மசீச வேட்பாளர் பெர்காசா தலைவர்களுடன் இருப்பதைக் …
இணையத்தில் இப்ராகிம் அலியுடன் டியானா
தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் கணினிப் போரும் முழுவீச்சுடன் தொடர்கிறது. இப்போது டிஏபி வேட்பாளர் டியானா சோப்யா முகம்மட் டாவுட், பெர்காசா தலைவர் இப்ராகிம் அலியுடன் காட்சியளிக்கும் படமொன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் இப்ராகிம், டியானாவுக்கும் அவரின் தாயார் யம்மி சமத்துக்குமிடையில் சிரித்த முகத்துடன் நிற்கிறார்.…
சட்டவிரோத பேரணி குற்றச்சாட்டிலிருந்து 42 பேர் விடுதலை
2008-இல், சட்டவிரோதமாகக் கூட்டம் கூடியதாகவும் விலைவாசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் போலீசாரை அவர்களின் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்த 41 சமூக ஆர்வலர்களும் செய்தியாளர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர். அரசுத்தரப்பு, அவர்கள்மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிவிட்டதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாட் கனி அப்துல்லா கூறினார். விடுவீக்கப்பட்டவர்களில் பத்து எம்பி தியான் …
பிள்ளைகளை டியானாவைப் போல் வளர்க்காதீர்: அம்னோ உறுப்பினர்களுக்கு மகாதிர் அறிவுரை
டியானா சோப்யா முகம்மட் டாவுட்டை டிஏபி அதன் மலாய் வேட்பாளராக தெலோக் இந்தானில் களம் இறக்கியதால் கடுப்பாகியுள்ளார் டாக்டர் மகாதிர் முகம்மட். டியானா, காலங்காலமாக அம்னோவை ஆதரித்து வந்துள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் இதற்குக் காரணமாகும். இதுபோன்ற நிலையைத் தவிர்க்க பிள்ளை வளர்ப்புப் பற்றி அம்னோ உறுப்பினர்களுக்கு …
காடிர்: கெராக்கான் ‘ஆண்சிங்கம்’, அது மசீச போல் அல்ல
புக்கிட் குளுகோரில் மசீச செய்ததுபோல் விலகிச் செல்லாமல் தெலோக் இந்தானில் போட்டியிட முன்வந்துள்ள கெராக்கானையும் அதன் தலைவர் மா சியு கியோங்கையும் மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் பாராட்டினார். “பொறுப்பிலிருந்து விலகி ஒடாத, பழம்பெரும் கூட்டணியைக் கேவலப்படுத்தாத கெராக்கானுக்கு சபாஷ்”என்றவர் பாராட்டினார். “மா, உங்கள் துணிச்சலுக்கு வீர வணக்கம்.…
ஊடகங்கள் கவனிப்பதில்லை: சுயேச்சை வேட்பாளர் வருத்தம்
புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் போட்டியிடும் இரு சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவரான அபு பக்கார் சித்திக் முகம்மட் ஊடகங்கள் தம்மைப் பற்றிச் செய்தி சேகரிப்பதில்லை என வருத்தப்படுகிறார். இதனால் வெறுப்படைந்த அவர் ஒரு கட்டத்தில் தேர்தலிலிருந்து விலகிக் கொள்வது என்ற முடிவுக்குக்கூட வந்துவிட்டதாக கண்களில் நீர்மல்கக் குறிப்பிட்டார். “ஊடகங்களை …
மசீச: ரசாலி யுடாரை இன விவகாரமாக்குவது தப்பு
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரசாலி இப்ராகிம், மசீச-வுக்குச் சொந்தமான துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தை இன விவகாரமாக்கியது தப்பு என மசீச தலைவர் லியோ தியோங் லாய் கூறினார். பூமிபுத்ராக்களுக்கு மட்டுமே இடமளிக்கும் யுனிவர்சிடி டெக்னலோஜி மாராவைக் குறைகூறும் தெலோக் இந்தான் வேட்பாளர் டியானா சோப்யா முகம்மட் டாவுட் …
போலீஸ் காவலில் கணவர் காயமடைந்ததாக மனைவி புகார்
ஈப்போ போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த தம் கணவர் காயமடைந்திருப்பதாக எம்.புஷ்பா,37, புகார் செய்துள்ளார். மே 14-இல், தம் கணவர் நினைவிழந்த நிலையில் ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனையின் தீவிர கவனிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாக போலீசிடமிருந்து தகவல் கிடைத்தது என புஷ்பா கூறினார். மே 7-இல், ஈப்போ …


