இந்தியாவுடன் போரிட முடியாத பாக்., ராணுவ வீரர்களிடம் பிரதமர் பேச்சு

லே: போர் காலத்தை விட பயங்கவரவாதத்திற்கு ஏராளமான இந்திய வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர். பாகிஸ்தான், இந்தியாவுடன் நேரடி போரை நடத்த முடியாது. இதற்கு திராணி இல்லாததால் அந்நாடு பயங்கரவாதம் என்ற பெயரில் மறைமுக போரை நடத்துகிறது. இதனை பாகிஸ்தான் அரசும் ஊக்குவிக்கிறது. இது கண்டனத்திற்குரியது. இவ்வாறு பிரதமர் பேசினார். முன்னதாக…

டீத் தூளில் பூச்சிக் கொல்லி மருந்துகள் : க்ரீன் பீஸ்…

இந்தியாவின் முன்னணி தேயிலை உற்பத்தி நிறுவனங்களின் டீ தூளில் உயிரைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக க்ரீன் பீஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்திய தேயிலைகள் உலக நாடுகளிடையே புகழ்பெற்றது. அதில் பூச்சி மருந்துகள் கலந்திருப்பது ஒருவர் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதனால்…

பெரும்பான்மையான மக்களை திருப்திபடுத்தும் மோடி அரசு

பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக இணையத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். மோடி தலைமையில் பாஜக அரசு கடந்த மே மாதம் பதவி ஏற்றதில் இருந்து, பிரதமர் மோடி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்நிலையில், இந்த 3 மாதங்களில் மோடி அரசின் செயல்பாடுகள்…

நேதாஜிக்கு “பாரத ரத்னா’ வேண்டாம்: குடும்பத்தினர்

சுதந்திரப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸýக்கு நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விருதை ஏற்க மறுத்துள்ள நேதாஜி குடும்பத்தினர், முதலில் அவர் காணாமல் போனதற்கான மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கொல்கத்தாவில்…

வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்: ரிசர்வ் வங்கியிடம் அருண் ஜேட்லி…

புது தில்லியில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன். பணவீக்கம் குறைந்து வரும் நிலையில், வட்டி விகிதத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய…

உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசமா? மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில், உலக வர்த்தக அமைப்பிடம் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சமரசம் செய்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வர்த்தகத்துறை அமைச்சருமான ஆனந்த் சர்மா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட…

எனது தந்தை கடுமையாக உழைத்தார். ஆனால் அவரது உழைப்பு போற்றப்படவில்லை

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மகள் தமன்சிங், மன்மோகன், குர்சரண் ஆகியோரது வாழ்வு குறித்து புத்தகம் எழுதியுள்ளார். கடந்த 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த காலத்தை இவர் இந்த புத்தகத்தில் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஆங்கில செய்தி சேனல்  அப்போது அவர் கூறியதாவது:- எனது தந்தை எல்லாவற்றையும்…

காங்கிரஸிடம் இருந்து நாட்டை முழுமையாக விடுவிக்க வேண்டும்: அமித் ஷா

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவராக அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கிறார் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி. அருகில், பிரதமர் நரேந்திர மோடி,மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாட்டை…

உலக நாடுகளின் கவனம் இந்தியா மீது திரும்பியுள்ளது: பிரதமர் மோடி

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று காலை துவங்கியுள்ளது. இக்கூட்டத்தில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித் ஷாவுக்கு கட்சி தலைவருக்கான செங்கோலை முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார். பின்னர் இறுதியாக பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகையில், 60 ஆண்டுகாலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து நாட்டிற்காக எதையுமே செய்யாதவர்கள்,…

இந்து முன்னணி தலைவர் கொலை: கைதான 6 தீவிரவாதிகளுக்கு மருத்துவ…

திருவள்ளூர், ஆக. 9– திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் அம்பத்தூரில் சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்துல் சமீம், அப்துல் ஹக்கீம் சாதிக் பாஷா, அபுதாகீர், சையத் அலி நவாஸ் முகமது, சமிமுல்லா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள்…

மக்களவையில் முதல்முறையாக அரங்கேறிய தமிழ் வார்த்தைகள்

மக்களவையில் கேள்வி நேரத்தில், முதல் முறையாக தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஒருவர் தமிழிலேயே பதிலளித்துள்ளார். அதிமுக எம்.பி. ராதாகிருஷ்ணன், சீன பட்டாசுகள் ஊடுருவலால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறியதோடு, தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி, அதன் மீது என்ன…

3 அப்பாவி தமிழர்களை மீண்டும் தூக்குமேடையில் ஏற்ற துடிப்பதா?: ராமதாஸ்…

3 அப்பாவித் தமிழர்களை மீண்டும் தூக்கு மேடையில் ஏற்றத் துடிப்பதா? என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜிவ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்ட நிலையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களும்…

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நகைகள் மதிப்பீட்டு பணி நிறைவு

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாபன் சுவாமி கோவிலில் 'ஏ' என்ற ரகசிய அறையில் கிடைத்த தங்கத்தினால் ஆன மணிகள், சுவாமி சிலைகள், குடங்கள் உள்ளிட்ட பொற்குவியல்களின் மொத்த மதிப்பு ரூ.2.50 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் 'ஏ' அறையில் உள்ள விலை உயர்ந்த நவரத்தின கற்கள், வைரம்…

பாலியல் குற்றங்களால் இந்தியாவிற்கு வர மறுக்கும் வெளிநாட்டு பெண் சுற்றுலா…

புதுடில்லி : இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டில்லியில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார குற்றங்கள் காரணமாக டில்லிக்கு வர வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகள் மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. டில்லியில் குதுப்மினார், ஹிமாயூன் ஸ்தூபி, செங்கோட்டை, தாஜ்மஹால் உள்ளிட்ட…

ரயில்வேயில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு; ராஜ்யசபாவில் அமளி ஒத்தி வைப்பு

புதுடில்லி: ரயில்வே மற்றும் பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீடு கொண்டு வரும் முயற்சிக்கு காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் கடும் அமளி நிலவியது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இது போல் மிசோரம் கவர்னர் கமலா பெனிவால் நீக்கம் தொடர்பாகவும் அவையில் காங்.,…

இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய அல்-உம்மா பயங்கரவாதிகள்…

இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி உட்பட 4 அல் உம்மா பயங்கரவாதிகள் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி அம்பத்தூர் எஸ்டேட்டில் சுரேஷ்குமார்  கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இந்த…

மருத்துவமனையை அடைய ஆற்றில் நீந்திக்கடந்த 9 மாத கர்ப்பிணிப் பெண்

கர்நாடக மாநிலத்தில் கிராமம் ஒன்றில் மருத்துவ வசதி இல்லாததால், ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவமனையை அடைய, கிருஷ்ணா நதியை நீந்தி கடந்திருக்கிறார். எல்லாவா என்ற இந்த 22 வயதுப் பெண், கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவின் வடக்கே சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள யாட்கிர்…

மூளைக்கு யோகாசனம் “தோப்புக் கரணம்”

மூளைக்கு என்ன பயிற்சி எனக் கேட்டால், பலரும் தலையை அமுக்கி விடுவது, மனனம் செய்வது அதாவது ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்லுதல் என்று தான் சொல்வது வழமை. ஆனால், முன்னாளில் நமது ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் நமக்கு வழங்கிய தண்டனை “தோப்புக்கரணம்” தான் மூளைக்கு சிறந்த யோகாசனம். தோப்புக்கரணம் போடுவதால்…

தமிழ் இனப்படுகொலை குறித்து மோடி அரசுக்கு கிஞ்சிற்றும் கவலையில்லை: வைகோ…

இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்தோ, தற்போது மனித உரிமைகள் நசுக்கப்படுவது குறித்தோ இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கிஞ்சிற்றும் கவலைப்படுவதாக இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தீவில் தமிழினப்…

ஐசிஸ் டி – ஷர்ட் : தமிழகத்தில் இரு இளைஞர்கள்…

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு மசூதியின் முன்பாக, ஈராக்கில் செயல்படும் ஐசிஸ் அமைப்பின் முத்திரையுடன் டி-ஷர்ட் அணிந்து புகைகப்படம் எடுத்துக்கொண்ட இளைஞர்கள் இரண்டு பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜுலை 29ஆம் தேதியன்று, தொண்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 24 பேர் ஐசிஸ் அமைப்பின் முத்திரை பொறிக்கப்பட்ட கறுப்பு…

மோடியை தீர்த்துக்கட்டுவோம்: திட்டம் தீட்டும் பயங்கரவாதிகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. வரும் 15ம் திகதி இந்திய சுதந்திர விழாவின் போது, மோடி உரையாற்றவுள்ளார். அப்போது அவரை கொல்ல பாகிஸ்தானின் லக்ஷர்-ஐ-தொய்பா, சிமி போன்ற தீவிரவாத அமைப்புக்கள் குறிவைத்துள்ளது. எனவே மோடிக்கு பாதுகாப்பை…

கச்சதீவு விவகாரத்தில் நேரடியாக தலையிட முடியாது!- சென்னை உயர்நீதிமன்றம்

கச்சதீவு விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.  கச்சதீவு விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.…

ஜெயலலிதா அவதூறு விவகாரம்: இலங்கைத் தூதரை நேரில் அழைத்து இந்தியா…

ஜெயலலிதா பற்றி அவதூறான கட்டுரையை பிரசுரித்தமைக்காக இலங்கைத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனத்தை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் அதிகார பூர்வ இணையத்தளத்தில் அவதூறுக் கட்டுரை வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்த நிலையில் இலங்கை இந்தியாவிடம் மன்னிப்புக்…