2028-ஆம் ஆண்டு மக்கள் தொகையில் இந்தியா சீனாவை முந்தும்!

உலகின் அதிக ஜனத்தொகை கொண்ட முதல் நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது. 2028ஆம் ஆண்டு வாக்கில் சீனாவை விஞ்சி உலகின் அதிக ஜனத்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஐநா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. அந்த சமயத்தில் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளின் ஜனத்தொகையும்…

பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டம்

"பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டத்தில், 3,291 மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் மாறியுள்ளன. இந்த விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, "17-பி' பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார். பிளஸ் 2, மறு மதிப்பீடு திட்டத்தில், 5,726 மாணவர்கள்…

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இல்ல திருமண விழா, சென்னையில் இன்று நடைபெறுகிறது. காங்., கூட்டணியை விட்டு, தி.மு.க., வெளியேறி, நீண்ட இடைவெளிக்கு பின், காங்., முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் திருமண விழாவில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்பதால் கூட்டணியை புதுப்பிப்பதற்கு அச்சாரம் போடப்படுகிறது என அக்கட்சி…

ஒரே நாளில் 49 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

"கச்சத்தீவை, இலங்கை அரசிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும்" என, முதல்வர் ஜெயலலிதா, அறைகூவல் விடுத்த அன்றே, ராமேஸ்வரம் மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது. ராமேஸ்வரம் மீனவர்கள், 24 பேர், நேற்று முன்தினம், கடலுக்கு சென்றனர். பிற்பகல், 12:00 மணிக்கு, இவர்களை கைது செய்த…

முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் ஜெயலலிதா, மமதா

இந்திய உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதல்வர்களின் மாநாடு இன்று இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறகிறது. மாநாட்டை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி…

சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு மாவோயிஸ்டுகள் குறி

சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சார பேரணியை குறிவைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் தலைவர்களை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் பிரிவு கூறியது. தாக்குதலில் அப்பாவிகள் இறந்ததற்கு வருத்தமும் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாவோயிஸ்டுகளை…

சத்தீஸ்கர் தாக்குதலுக்கு மாவோயிஸ் போராளிகள் பொறுப்பேற்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டகாரண்ய காடுகளில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் Read More

தமிழ் மண்ணில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி இல்லை : இந்திய…

இலங்கை சிங்கள இராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படமாட்டாது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். தஞ்சையிலுள்ள விமானப்படை தளத்தில் புதுப்பிக்கப்பட்ட விமான ஓடுதளத்தை திங்களன்று திறந்து வைத்தபோதே அவர் அவ்வாறு கூறினார். ஆனால் அது தொடர்பான வேறு கேள்விகள் எழுப்ப செய்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை…

தமிழுக்கு இடம் இல்லையா? கருணாநிதி கண்டனம்

கல்லூரி தேர்வுகளிலும், தமிழுக்கு இடம் இல்லையா என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, அவரது அறிக்கை : தமிழ் வழிக்கல்விக்கு முற்றிலும் எதிராக, அ.தி.மு.க., அரசு மேற்கொண்டு வரும், நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, வரும் கல்வி ஆண்டிலிருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், 'அசைன்மென்ட்' மற்றும்தேர்வுகளை…

நக்ஸல் போராளிகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர்…

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மீது மாவோயியவாத ஆயுததாரிகள் நடத்தியுள்ள தாக்குதலைக் கண்டித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், "இந்திய ஜனநாயகத்துக்கு இது ஒரு கருப்பு தினம்" எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது மாவோயியவாதிகள் இருநூறுக்கும் அதிகமானவர்கள்…

பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் நேற்று சனிக்கிழமை அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக…

சம்பாதிப்பது கணவனின் கடமை : மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு

சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான், கணவர்களின் கடமை. அதைச் செய்யத் தவறிய கணவன், தன் மனைவிக்கு பராமரிப்பு செலவுக்கான தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும்,'' என, மும்பை ஐகோர்ட் நீதிபதி, எம்.எல்.தகிலியானி உத்தரவிட்டுள்ளார். மகேஷ் என்பவரின் மனைவி சசி. மும்பையில் வசிக்கும் இருவருக்கும், கருத்து வேறுபாடு…

இந்தியாவும், சீனாவும் இனி, கூட்டாளிகள் என்கிறார் சீனப் பிரதமர்

டெல்லி: இந்தியாவுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்தது, எல்லைப் பிரச்சினை தீர்ந்தது. இந்தியாவும், சீனாவும் போட்டி நாடுகள் அல்ல, கூட்டாளிகள் என சீனப் பிரதமர் லீ தெரிவித்துள்ளார். 3 நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக இந்தியா வந்திருந்த சீனப்பிரதமர் லீ கெகியாங், நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன்சிங்குடன் விரிவான…

இமயமலையில் ஏறி சாதனை படைத்த காலை இழந்த அருணிமா சின்ஹா

இந்தியாவைச் சேர்ந்த அருணிமா சின்ஹா என்ற ஒரு காலை மட்டுமே கொண்ட பெண் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதால் ஒரு காலை இழந்த இளம் பெண் அருணிமா சின்ஹா .…

பாதுகாப்பு விஷயங்கள் குறித்து இந்திய ஆப்கான் தலைவர்கள் பேச்சு

இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயமாக வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று பின்னேரம் சந்தித்து பேசுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகளை அதிகரிக்கக் கோரி கர்சாய் இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்துவார் என்று கருதப்படுகிறது. ஆப்கானிய அதிகாரிகளுக்கு…

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் : தமிழக முதல்வர்

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா-இலங்கை இடையே, கடந்த 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவானது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர்…

போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்

கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டமாக நடத்திப் பேசினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். பத்து மணிக்குள் பேச்சை முடித்து விட வேண்டும் என்று போலீஸார் வலியுறுத்தியிருந்தனர். அதற்கு முன்னமே 9 மணி…

உயிர்த் தோழியை மணக்க விரும்பிய மாணவி: மறுத்ததால் கத்திகுத்து

பிவானி: ஹரியானா மாநிலத்தில் 17 வயது மாணவி ஒருவர் தன்னுடைய தோழியை மணக்க ஆசைப்பட்டுள்ளார். தோழி மறுத்ததால் அவரை கத்தியால் குத்திய மாணவி கைது செய்யப்பட்டார். ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம், சன்வார் கிராமத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் 17 வயது சரிகா (பெயர்…

மீண்டும் தமிழக அமைச்சரவை மாற்றம்?: கலக்கத்தில் அமைச்சர்கள்

சென்னை: தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும்பாலன அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளளனர் என்று கூறப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறினார். இதையடுத்து அவர் ஆதரவாளர்கள் சிலர் மீது…

LTTE தலைவர் பிரபாகரன் படம் : நாம் தமிழர் கட்சி…

கடலூரில் இன்று நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவை வாங்க மறுத்த அக்கட்சியின் பொறுப்பாளர் வீட்டில் இந்த நோட்டீசை ஒட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது…

தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கைக்கு அரசு பணி

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைக்கு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த திருநங்கை குணவதி (வயது 23). இவர் எம்.ஏ.(ஆங்கிலம்) முதுகலை பட்டப் படிப்பு மற்றும் கணிப் பொறி ஆசிரியர் பயிற்சி படித்துள்ளார். முதுகலை பட்டம் பெற்று இருந்தாலும், குணவதி திருநங்கையாக இருந்ததால் பல…

ஐபிஎல் போட்டி முறைகேடுகள்: மூன்று கிரிக்கெட் வீரர்கள் கைது

இந்தியா மட்டுமல்லமால் கிரிக்கெட் உலகில் மிகப் பிரபலமாகவும் பல கோடி ரூபாய்கள் பணம் புழங்கும் ஐ பி எல் போட்டிகள் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் உட்பட மூன்று பேர் முறைகேடுகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ்…

தமிழகம் வாழ் இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

தமிழகத்தில் வாழ்கின்ற இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது. தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான நலமேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு கட்டமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதுதவிர பாடசாலை கல்வி கற்கின்ற இலங்கை அகதி  மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடைகள் மற்றும்…