அன்வார் கண்ணியமாக நடந்துகொள்ள ரயிஸ் கோரிக்கை

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்ற குழப்பங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து தலைவருக்குரிய பண்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனத் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் கேட்டுக்கொண்டிருக்கிறார். “நான் அறிந்தவரை அன்வார் வன்முறையை நாடுபவர் அல்லர். “அவர் தலைவருக்குரிய…

பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்கிறார் அன்வார்

"திருப்பிக் கொடுக்காதீர்கள், அவர்கள் விரும்பினால் உங்கள் மீது வழக்குப் போடட்டும். ஆனால் நீங்கள் மற்ற கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பிடிபிடிஎன் கடனுக்கு அவசியமில்லை." கடந்த சனிக்கிழமை இரவு தமது கோட்டையான பெர்மாத்தாங் பாவ்-வில் கூடிய 10,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த செய்தி…

அன்வார் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிறது வால் ஸ்டிரீட்…

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியின் போது சட்டத்தை மீறியதாக பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி, ரெம்பாவ் பிகே ஆர் கிளைத் தலைவர் பாத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னர் ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும்…

‘நஜிப் அவர்களே, முட்டைகளும் கற்களும் எங்கள் எலும்புகளை நொறுக்கப் போவதில்லை’

உங்கள் கருத்து: "அடுத்த பொதுத் தேர்தலில் குண்டர்தனத்துக்கு முடிவு கட்டுவோம். வாக்குப் பெட்டிகளில் மிதவாதமும் நாகரீகப் பண்புகளும் தழைக்கட்டும்." அன்வார் செராமா மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன கைரோஸ்: எதிர்க்கட்சி செராமாக்களில் நிகழும் சம்பவங்கள் மிகவும் ஆபத்தான போக்கை உணர்த்துகின்றன. இதனைத் தொடக்கக் கட்டத்திலேயே கிள்ளி எறியா விட்டால்…

அன்வார் செராமாவில் கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன

 பக்காத்தான் ராக்யாட் செராமா ஒன்றில் கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன. அதனால் மூத்த குடி மகன் ஒருவர் தலையில் காயமடைந்தார். ஒரளவு சுய நினைவில் இருந்த அந்த மனிதர் தலையிலிருந்து ரத்தம் கசியும் நிலையில் மருத்துவச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். நேற்றிரவு கோலாலம்பூரில் பிகேஆர் வசம் இருக்கும் லெம்பா பந்தாய்…

அன்வார் தொடுத்த அவதூறு வழக்கை வீ கா சியோங் நீதிமன்றத்துக்கு…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் மீது தாம் தொடுத்துள்ள அவதூறு வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார். அந்தத் தகவலைத் வெளியிட்ட அன்வார் வழக்குரைஞரான ஜே லீலா, நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஆனால் விவரங்கள் இன்னும்…

‘உரிய நடைமுறைகள்’ பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அமெரிக்கா வலியுறுத்து

தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரும் பேரணி ஒன்றில் பங்கு கொண்டதற்காக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பின்னர் அந்த வழக்கில் 'உரிய நடைமுறைகள்' பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அமெரிக்கா மலேசியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது. "உரிய நடைமுறைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு நாங்கள் மலேசிய அதிகாரிகளைக்…

அன்வார் இப்ராஹிம்: நஜிப் எனக்கு எதிராக நீதிமன்றங்களைப் பயன்படுத்துகிறார்

13வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் தம்மை மேலும் மேலும் ஒடுக்குவதற்கு நஜிப் நீதிமன்ற நடைமுறைகளைப் பயன்படுத்துகிறார் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்டுள்ளார். தாம் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுக்கள் எதிர்த்தரப்புத் தலைவர் என்ற முறையில் தமக்கு எதிராக  ஜோடிக்கப்பட்டவை என்றும் தேர்தல் நடைமுறைகளில் காணப்படும் மோசடிகள்…

அன்வார் பெர்சே 3.0 மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

தெரு ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கு கொண்டதாக அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி அந்தக் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினரான பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் ஆகியோர் மீது இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.…

பிகேஆர் தலைவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: கடும் பாதுகாப்பு நடவடிக்கை

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் பாட்ருல் ஹிசாம் ஷஹாரின் ஆகியோர் மீது அமைதியாகக் கூடுதல் சட்ட விதிகளை மீறினர் என்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகின்றனர். கோலாலம்பூர், ஜாலான் டூத்தா பகுதிகள் போலீசாரால் சுற்றிவலைக்கப்பட்டுள்ளது. அன்வார்…

பெர்சே 3.0 தொடர்பில் அன்வார், அஸ்மின் மீது குற்றம் சாட்டப்படும்

பெர்சே 3.0 பேரணி தொடர்பில் பிகேஆர் கட்சியின் இரண்டு மூத்த தலைவர்களான அன்வார் இப்ராஹிம், அஸ்மின் அலி மீது நாளை நீதிமன்றத்தில்  குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் குற்றவியல் சட்டத்தின் 188வது பிரிவை (அது 109வது பிரிவுடனும் அதே சட்டத்தின் 34வது பகுதியும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டும்)…

அன்வார்: பெர்சே 3.0 பாதிக்கப்பட்டவர்கள் வில்லன்களாக சித்தரிக்கப்படுகின்றனர்

அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் பெர்சே 3.0 பேரணியின் போது பாதிக்கப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை  வில்லன்களாக சித்தரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்வதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். இதுதான் சர்வாதிகார ஆட்சிகளின் இயல்பான குணம் என அவர் சொன்னார். "ஒடுக்கப்பட்டதாலும் கொடூரத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களை கிரிமினல்களாக காட்டுவதற்கு அரசாங்கக்…

அன்வார்: தடுப்புக்களை மீறுமாறு நாங்கள் ஆணையிடவில்லை

டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த கம்பி வேலியை உடைக்குமாறு தாமோ அல்லது கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலியோ ஆணையிடவில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியிருக்கிறார். என்றாலும் தாம் "அந்த முடிவைத் தற்காக்கப் போவதாக" அவர் சொன்னார். ஏனெனில் தடுப்புக்களை அகற்றுவது ஒரு குற்றமல்ல…

குழப்பத்தைத் “தூண்டி விட்டதாக” அஸ்மின், அன்வார் மீது பத்திரிக்கைகள் பழி…

நேற்று நிகழ்ந்த மோதல்களின் போது சேதமடைந்த போலீஸ் காரின் படங்கள் இன்றைய ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற பெர்சே 3.0 பேரணி வன்முறையில் முடிந்ததற்கு இரண்டு முக்கிய நாளேடுகள் பிகேஆர் தலைவர்களே காரணம் எனச் சுட்டிக் காட்டின. டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு…

அன்வார் அவசர வேண்டுகோள்: தேர்தல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்

ஊழலுக்கும் தேர்தல் ஆணையம், அரசாங்க மோசடிகளுக்கு முடிவு கட்டுமாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த எதிர்த்தரப்புத் தலைவர் தேசியப் பள்ளிவாசலில் மக்களிடையே பேசினார் அப்போது அவருடன் சில அனைத்துலக பார்வையாளர்களும் பிகேஆர் தலைவர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலும் இருந்தார்கள். டத்தாரான்…

அன்வார்: இசா-வுக்கும் புதிய சட்டத்துக்கும் வேறுபாடு இல்லை

மக்களவையில் இன்று இரண்டாவது வாசிப்புக்குச் சமர்பிக்கப்பட்டுள்ள 2012ம் ஆண்டுக்கான புதிய பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) மசோதாவுக்கும் அது மாற்றாக விளங்கும்  உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். அதில் ஏதாவது இருக்கிறது என்றால் அது மேலும்…

ஹிண்ட்ராப்-பைச் சந்திப்பது மீது அன்வார் இன்னும் முடிவு செய்யவில்லை

அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் ஏழ்மையில் உள்ள இந்திய சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கான பக்காத்தான் ராக்யாட்டின் 100 நாள் திட்டத்தை விளக்குமாறு அந்த எதிர்த்தரப்புக் கூட்டணிக்கு ஹிண்ட்ராப் விடுத்துள்ள அழைப்பு மீது பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்னும் முடிவு செய்யவில்லை. "நான் அது பற்றி…

அன்வார் நல்லாவுக்கும் உத்துசானுக்கும் எதிராக 100 மில்லியன் ரிங்கிட் வழக்கு

உத்துசான் மலேசியா பத்திரிக்கையில் மார்ச் மாதம் 20ம் தேதி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் ( MUIP ) தலைவர் செனட்டர் எஸ் நல்லகருப்பனுடைய அறிக்கையில் உள்ள இழிவுபடுத்தும் கருத்துக்கள் மீது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்,  நல்லகருப்பனுக்கு எதிராக 100 மில்லியன் ரிங்கிட்…

ஆர்பிகே-யுடன் விவாதமிட அன்வார் மறுப்பது ஏன்?

சர்ச்சைக்குரிய வலைப்பதிவரான ராஜா பெட்ரா கமருடினுடன்(ஆர்பிகே) பொது விவாதத்தில் ஈடுபடுவது “ஒரு தங்கமான வாய்ப்பு” அதை உதறித்தள்ளிய மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் செயலைக் கண்டு பினாங்கு என்ஜிஓ ஒன்று வியப்புத் தெரிவித்துள்ளது. அன்வார், ராஜா பெட்ராவுடன் பொதுவிவாதத்தில் கலந்துகொள்ள மறுத்தது மலாய்க்காரர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது…

அன்வார்: “நான் ஹாமாஸ், பாத்தா கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்”

இஸ்ரேல் மீது அண்மையில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அனைத்துலக ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்கள் பெர்ம் சர்ச்சையை உருவாக்கி விட்டன. அதன் தொடர்பில் தன்னிலையை விளக்குவதற்காக அன்வார், இன்று பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்ஹுல் அஜிஸ் நிக் மாட்-டை இன்று சந்தித்தார். 40 நிமிடங்களுக்கு மேல்…

பகாங் பெல்டாவில் அன்வாருக்கு உற்சாகமான வரவேற்பு

நேற்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கொள்ளைப்புறமாக விளங்கும் பகாங்கில் உள்ள பெல்டா குடியிருப்பு ஒன்றுக்குச் சென்றபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அண்மையில் மலாக்கா, மாச்சாபில் உள்ள பெல்டா நிலத்திட்டத்துக்கு அவர் சென்றபோது ஏற்பட்ட குழப்பம்போல் அல்லாது இங்குள்ள மக்கள்…

பெக்கானில் அன்வாரின் செராமா காரணமாக 5கிமீ தூரத்துக்குப் போக்குவரத்து நெரிசல்

பெக்கானில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் சொற்பொழிவு நடைபெறவிருந்த பாஸ் தலைமையகத்தை நோக்கிச் செல்லும் முக்கிய சாலையில் போலீசார் சாலைத்தடுப்பு ஒன்றைப் போட்டதால் 5கிலோமீட்டர் தூரத்துக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் விளைவாக அன்வாரின் பேச்சைக் கேட்கச்  சென்றவர்கள் “40 நிமிடத்துக்கு மேலாக” போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள…

அன்வார் தமது கருத்துக்களை மீட்டுக் கொள்ள வேண்டும் அல்லது நீக்கப்படலாம்…

இஸ்ரேல் மீது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த சர்ச்சைக்குரிய அறிக்கை மீது தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பினாங்கில் அவருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல முஸ்லிம் அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ள அந்தப் பேரணி டோபி காட் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் நடைபெறும்…