திட்டமிடப்பட்டிருந்த பக்கத்தான் – ஹிண்ட்ராப் சந்திப்பு கைவிடப்பட்டது, கணேசன்

பக்கத்தான் மற்றும் ஹிண்ட்ராப் தரப்பினர்களுக்கிடையில் கடந்த வாரம் வரையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால், அதனைத் தொடர்ந்து நடைபெறவிருந்த கூட்டம் கைவிடப்பட்டது. கடந்த வாரம், டிஎபி தேர்தல் வியூகர் டாக்டர் ஓங் கியன் மிங் ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தையும் பக்கத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையையும் ஒப்பிட்டு தயாரித்திருந்த…

வேதமூர்த்தி உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார்

மார்ச் 10 ஆம் தேதியிலிருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி இன்று இரவு மணி 8.45 க்கு அவரது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார். வேதமூர்த்தியின் மகள் வைஷ்ணவியும் இன்னொரு சிறுமி வேதஸ்ரியும் கொடுத்த சோயாபீன் நீரை பருகி அவர் கடந்த 22 நாள்களாக மேற்கொண்டிருந்த அவரது உண்ணாவிரதத்தை…

இண்ட்ராப் பிரதமரைச் சந்தித்ததை எண்ணி பிகேஆர் கலங்கவில்லை

எதிர்வரும் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட்டுக்கு இண்ட்ராப் ஆதரவு இல்லை என்றாலும்கூட அதற்கு இந்தியர் ஆதரவு குறைந்துவிடாது என பிகேஆர் நம்புகிறது. பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், அச்சமூகத்துக்காக பக்காத்தான் குறிப்பாக பிகேஆர்  “என்ன செய்துள்ளது என்பதை” இந்திய வாக்காளர்கள் அறிவார்கள் என்று கூறினார். “நாங்கள் என்ன செய்தோம் என்பதை…

ஹிண்ட்ராப் : “நஜிப் எங்களுடன் மேலும் பேச்சுக்களை நடத்துவார்”

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அடுத்த சில நாட்களில் ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக்  குழுவுடன் மேலும் விவாதங்களை நடத்துவார். அந்தத் தகவலை அரசு சாரா அமைப்பான ஹிண்ட்ராப் இன்று வெளியிட்டது. புத்ராஜெயாவில் இன்று நஜிப்புடன் நடத்தப்பட்ட ஒரு மணி நேர சந்திப்பு 'பயனுடையதாக' இருந்தது எனக்…

பிஎன்-உடன் தேர்தல் ஒப்பந்தம் ஏதுமில்லை என்கிறார் வேதமூர்த்தி

"பிரதமர் ஹிண்ட்ராப்பை அழைத்தால் - ஹிண்ட்ராப் அவரது அங்கீகாரத்துக்கு தனது பெருந்திட்டத்தைச் சமர்பிக்கும். ஆனால்,  அவர் (பிரதமர்) இன்று வரை அதனை செய்யவில்லை." "என்றாலும் பக்காத்தானிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் பதிலுக்கும் பிஎன் பதிலுக்கும் இடையில் பல முக்கிய வேற்பாடுகள் உள்ளன. பிஎன் எங்கள் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால்…

Hindraf may be overrating its own strength

-R.Kengadharan, March 13, 2013. COMMENT I would like to rejoin the debate on the Hindraf issue after having read DAP MP M Kulasegaran's opinion that the Hindu Rights Action Force (Hindraf) has waned in strength…

ஹிண்ட்ராப் வேதமூர்த்தி உண்ணா விரதம்

-வி.சம்புலிங்கம், ஹிண்ட்ராப்,  துணைத் தலைவர். மார்ச் 12, 2013. ஹிண்ட்ராப் தலைவர்  வேதமூர்த்தி மலேசிய இந்தியர்களின் 56 ஆண்டு கால மனித உரிமை  மீறல்களுக்கு முற்றி புள்ளி வைக்கும் நோக்கில் மேற்கொண்டிருக்கும்   உண்ணாவிரத பிரார்த்தனையை  2 ஆம் நாளாக  தொடர்கிறார். ரவாங் , ஜாலான்  டெம்ப்லர் 17 1/2…

வேதமூர்த்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்

ஒரங்கட்டப்பட்ட இந்திய சமூகத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப் வழங்கிய ஐந்தாண்டுப் பெருந்திட்டத்தை அங்கீகரிக்குமாறு பிஎன் -னுக்கும் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அழுத்தம் கொடுக்கும் பொருட்டு தனி மனிதராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். "மலேசிய இந்தியர்களுடைய மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதை அவை (பக்காத்தானும் பிஎன் -னும்) அங்கீகரிக்குமாறு செய்வதே உண்ணாவிரதப்…

செயல்திட்டத்துக்கு பக்காத்தானின் முழு உத்தரவாதம் தேவை: இண்ட்ராப் வலியுறுத்து

இந்தியர்களின் மனக்குறைகள் பக்காத்தான் ரக்யாட்டின் தேர்தல்கொள்கை அறிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அன்வார் இப்ராகிம் என்னதான்  உறுதிமொழி அளித்திருந்தாலும் அதுஇண்ட்ராப்புக்கு அவ்வளவாக உற்சாகம் அளிக்கவில்லை. மாற்றரசுக் கட்சித் தலைவரை “விடுபட்டதை ஒப்புக்கொண்ட துணிச்சலுக்காக பாராட்டலாம்” என்று கூறிய இண்ட்ராப் ஆலோசகர் என். கணேசன்,  ஆனாலும் அவரது வாக்குறுதி“இந்திய வாக்காளர்களைச் சாந்தப்படுத்தும்…

சனிக்கிழமை போர்ட் கிள்ளானில் வேதமூர்த்தி

-க.சந்திரமோகன், ஹிண்ட்ராப் ஊடக தொடர்பாளர். ஹிண்ட்ராப் தலைவர் பொ. வேதமூர்த்தி தமது தொடர் உண்ணாவிரத பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு முன்னர் எதிர்வரும் சனிக்கிழமை, மார்ச்  9 ஆம் தேதி, போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் விளக்க கூட்டம் ஒன்றில் பொதுமக்களை சந்திக்கவிருக்கிறார். மலேசிய இந்தியர்கள் நெடுங்காலமாக சமூக, பொருளாதார துறைகளில்…

ஹிண்ட்ராப் உண்ணாவிரதம் காலத்தின் கட்டாயம்

-வி.சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப். மார்ச் 6, 2013. மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார பின்னடைவுகளுக்கு நிரந்தர தீர்வைக் கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தேக்கம் கண்ட பின்னரே உண்ணாவிரத பிரார்த்தனைக்கு ஹிண்ட்ராப் இயக்க பொறுப்பாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத வகையில், இந்தியர்களின் விடியலுக்காக தீட்டப்பட்டதுதான் ஹிண்ட்ராப்…

மலேசிய இந்தியர்களின் விடியலுக்காக வேதமூர்த்தி உண்ணாவிரத பிரார்த்தனை

தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு மறுக்கப்பட்டிருக்கும்    மலேசிய இந்தியர்களுக்கான நீதியையும், உரிமையையும் , தன்மானத்தையும் மீட்டு நிலை நிறுத்தும் நோக்கத்தில்   ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி உண்ணாவிரத பிரார்த்தனை  மேற்கொள்வார் என்று ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் நா. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார். ஹிண்ட்ராப் போராட்டத்தின் மிக முக்கிய திருப்பு முனையாக இது…

ஹிண்ட்ராப் கேட்பது விளக்கங்கள் அல்ல, உரிமைக்கான உறுதிமொழி

-என். கணேசன், தேசிய ஆலோசகர், ஹிண்ட்ராப், மார்ச் 1, 2013. இந்தியர்களின் சமூக பொருளாதார பின்னடைவுகளுக்கு நிரந்தர தீர்வுகளை முன்வைத்து உருவாக்கப்பட்ட ஹிண்ட்ராப் அமைப்பின் ஐந்தாண்டு செயல் திட்டத்தை எழுத்து பூர்வமாக ஆதரித்தால் பக்கதானுடன் இணைந்து ஆட்சி  மாற்றத்திற்கான வேலைகளை முடுக்கி விடலாம் என்று ஹிண்ட்ராப் அமைப்பு தொடர்ந்து…

தவறான தடத்தில் இண்ட்ராப் – கணபதி ராவ், வசந்தகுமார்

இண்ட்ராபுடன் கருத்துப்பூசலில் ஈடுபடும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இந்திய ஏழைகள் சமூக-பொருளாதார மேம்பாடு காண்பதற்கான இண்ட்ராபின் செயல்திட்டம் மீது ஒரு விவாதம் நடக்கிறது. அதில் எங்களின் கருத்தை முன்வைக்கவும் அந்த இலக்கை அடைவதற்கு சிறந்த வழியை எடுத்துரைக்கவும் விரும்புகிறோம். மலேசியர்கள் என்ற முறையிலும், 2007-இல் இண்ட்ராப் இயக்கத்திலும் அவ்வாண்டு…

ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை அமலாக்க 22.5 பில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை

"ஏழை இந்தியர்களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் முக்கிய தேசிய மேம்பாட்டு நீரோடையில் இணைப்பதற்கான ஐந்தாண்டுப் Read More

பக்காத்தான் இண்ட்ராபின் செயல்திட்டத்தை ‘இன்னமும் பரிசீலிக்கிறது’

பக்காதான் தலைவர்கள் இண்ட்ராபின் செயல் திட்டத்தை “அமலாக்கத்தக்கக் கொள்கைகளாகவும் சட்டத் திருத்தங்களாகவும்” மாற்றும் வழிமுறைகளை இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். பக்காத்தான் “கொள்கை அளவில்” ஆதரிக்கும் அத்திட்டம் நிராகரிக்கப்படவில்லை என்று பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார். “செயல்திட்டம் எங்களின் தேர்தல் கொள்கை அறிக்கையுடன் ஒத்துப்போக வேண்டும். இல்லையேல்…

ஹிண்ட்ராப் ஆதரவு இன்றி பக்கத்தான் 25 எம்பிகளை இழக்கக்கூடும்

அடுத்த பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப்பின் ஆதரவு இல்லை என்றால் பாக்கத்தான் ரக்யாட் 25 நாடாளுமன்ற இருக்கைகளை இழக்க வேண்டியிருக்கும் என்று அந்த இயக்கத்தின் தலைவர் பி. வேதமூர்த்தி கூறுகிறார். பிரதமர் நஜிப்பின் தலைமையிலான பாரிசான் நேசனல் பக்கம் இந்தியர்களின் ஆதரவு கூடிவரும் வேளையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. ஆனால்,…

‘வெற்றி பெற்ற 100 நாட்களில் ஹிண்டராப் பெருந்திட்டம் நடைமுறைக்கு வரும்’

பக்காத்தான் ராக்யாட் கூட்டரசு அதிகாரத்தை ஏற்குமானால் இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்க்க ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு வெளியிட்டுள்ள ஐந்தாண்டு பெருந்திட்டம் 100 நாட்களுக்குள் அமலாக்கப்படும் என பக்காத்தான் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "பக்காத்தான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய 100 நாட்களுக்குள் நாங்கள்…

ஹிண்ட்ராப்: பக்காத்தானுடனான பேச்சுக்கள் முறியும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன

ஏழை இந்தியர்கள் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கை மன்றம் வழங்கிய ஐந்தாண்டு பெருந்திட்டத்தை அங்கீகரிப்பதில் பக்காத்தான் ராக்யாட் காட்டும் நீண்ட தாமதம், வரும் பொதுத் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கான  ஆதரவை ஹிண்ட்ராப் மீட்டுக் கொள்ள வழிகோலி விடும் என ஹிண்டராப்…

Is Hindraf still relevant?

-R.Shan (Human Being), February 8, 2013. It is an open secret that we practice communal politics in Malaysia - whether it is BN or the opposition. Whether it is healthy is not the question, but…

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் நம் நாட்டிலே?

-வி.சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜனவரி 31, 2013. கி.மு 300 முதல் 1279 வரை, தஞ்சையையும், கங்கைகொண்ட சோழபுரத்தையும் தலைநகராக கொண்டு புலிக்கொடியை காற்றில் படபடக்க விட்டார்களாம் சோழ மன்னர்கள். கி.மு 500 துவங்கி 16 ஆம் நூற்றாண்டுவரை, கொற்கை, மதுரை,தென்காசி, திருநெல்வேலி போன்ற…

சமூகத்தை தாரை வார்த்துக் கொடுக்கும் ஈனர்கள் அல்ல ஹிண்ட்ராப்!

2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஹிண்ட்ராப்  தடை செய்யப்பட்டு, ஒரு சட்ட விரோத அமைப்பாக மலேசிய அரசால் பிரகடனப் படுத்தப் பட்டது. மலேசிய  திருநாட்டின் பொது ஒழுங்கிற்கும், பாதுகாப்பிற்கும் , இறையாண்மைக்கும் , இன  நல்லினக்கதிற்க்கும் ஹிண்ட்ராப் குந்தகம் விளைவித்ததாக தவறான காரணங்கள்…

ஹிண்ட்ராப்: தடை நீக்கப்பட்டது மீது சந்தோஷப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை

ஹிண்ட்ராப் என்னும் இந்து உரிமை நடவடிக்கை முன்னணி மீது விதிக்கப்பட்டிருந்த நான்கு ஆண்டு காலத் தடை நீக்கப்பட்டுள்ளது, கொண்டாடுவதற்கு எந்தக் காரணத்தையும் தரவில்லை. ஏனெனில் மலேசியாவின் இனவாதக் கொள்கைகள் நீடிக்கின்றன என அந்த அமைப்பை தோற்றுவித்த உறுப்பினரான பி உதயகுமார் கூறுகிறார். 13வது பொதுத் தேர்தல் நெருங்குவதால் எடுக்கப்பட்ட…