பாரிசானுடன் ஹிண்ட்ராப் பேச்சுவார்த்தை நடத்துமா ?

-கி.தமிழ்ச்செல்வம், இரண்டாம் துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜனவரி 3, 2013. வஞ்சிக்கப்பட்ட மலேசிய ஏழை இந்தியர்களின் விடியலுக்கான  செயல் திட்ட வரைவு குறித்து, பாரிசான் நேசனல் அரசியல் கூட்டணியிடம் ஹிண்ட்ராப் பேச்சு வார்த்தை நடத்துமா? இந்த கேள்வி இப்போது அரசியல் ஆய்வளார்கள்  மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி வருகிறது.…

ஹிண்ட்ராப் செயல் திட்டமே இந்தியர்களுக்கு நிரந்தர தீர்வாகும்

-வி. சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி. 21/12 2012. 13 ஆவது பொது தேர்தலுக்கான முரசு முழக்கங்கள் முன் எப்போதையும் விட இப்பொதுவெகு சமீபத்தில் ஒலிக்க துவங்கி விட்டன. இனி விடியப் போகும் எதோ ஒரு  நாளில், மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப் பட்டு பொது தேர்தலுக்கான…

சிறுபான்மையினர் என்ற ஒப்பாரி ஏன்?

இந்நாட்டு இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் எழுப்பப்படும்போது அவர்கள் சிறுபான்மையினர் என்று முத்தாப்புடன் தொடங்கிறது. இந்நாட்டு இந்தியர்கள் இந்நாட்டின் குடிமக்கள், இந்திய மலேசியர்கள். குடிமக்கள் என்ற முறையில் அவர்கள் இந்நாட்டு இதர குடிமக்களுடன் (சீன மலேசியர், மலாய்/இந்தோனேசிய மலேசியர், சாபா, சரவாக் மலேசியர்) சேர்ந்த பெரும்பான்மையினராவர். அப்பெரும்பான்மையினருக்குள் சிறுபான்மையினர் இருக்க…

இண்ட்ராப்புடன் முறைப்படியான ஒப்பந்தம் எதுவும் இல்லை : தியான் சுவா

பக்காத்தான் ரக்யாட், இந்தியர்களில் வறிய நிலையில் உள்ளவர்களைக் கைதூக்கிவிடுவதன் தொடர்பில் இண்ட்ராப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தியை பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மறுத்துள்ளார். “இண்ட்ராப்பின் செயல்திட்டத்தை ஏற்றுகொண்டு பக்காத்தான் ரக்யாட் ஜனவரி முதல் வாரத்தில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் என இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறியதாக மலேசியாகினியில்…

இந்தியர் பிரச்னைகள் மீதான ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை பக்காத்தான் ‘ஏற்றுக் கொள்கிறது’

மலேசிய இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழு முன்மொழிந்துள்ள ஐந்து ஆண்டு பெருந்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் உடன்பாட்டில் அடுத்த மாதத் தொடக்கத்தில் பக்காத்தான் கையெழுத்திடும். "கொள்கை அளவில் அவை (பக்காத்தான் கட்சிகள்), (நமது பெருந்திட்டத்தை) ஒப்புக் கொண்டு ஆதரிப்பதாக…

மீண்டும் மீண்டும் இந்தியர்களை ஏமாற்ற முடியாது, வேதமூர்த்தி காட்டம்

இந்தியர்கள் தூங்கியிருந்த காலம் கடந்து விட்டது அவர்கள் விழித்துவிட்டார்கள் அவர்களை இனிமேலும் இந்த பாரிசான் அரசாங்கம் இனிமேலும் ஏமாற்ற முடியாது என ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி தெரிவித்தார். நேற்று டத்தாரன் மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற அனைத்துலக மனித உரிமை நாள் கொண்டாட்ட நிகழ்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.…

ஹிண்ட்ராப் பரிந்துரை: நிரந்தர தீர்வுக்கான செயல்திட்டம்

ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார விடியலுக்கான செயல் திட்ட அறிக்கையை பெருமளவில் திரண்ட மக்கள் முன்னிலையில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அறிவிப்பு செய்ததை அனைவரும் அறிவர். மலேசியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் இத்தகைய உறுதியான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டு நம்…

துணை அமைச்சர்: பிரதமரைச் சந்திக்கும் போது பிரச்னைகளைச் சொல்லுங்கள்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திப்பதற்கு ஒப்புக் கொள்ளும் முன்னர் ஹிண்டராப் 'முன் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது'. ஏனெனில் அதன் எந்தக் கோரிக்கையும் பேச்சுக்களின் போது எழுப்பப்பட முடியும் எனப் பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லான் கூறினார். "உண்மையில் நிபந்தனைகளை விதிக்க வேண்டிய அவசியமே இல்லை.…

மஇகா: பிரதமரைச் சந்திக்க ஹிண்ட்ராப் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திப்பதற்கு ஹிண்ட்ராப் முன் நிபந்தனைகளை விதித்துள்ளது குறித்து இந்த நாட்டில் மிகப் பெரிய இந்தியர் அரசியல் கட்சியான மஇகா ஏமாற்றமடைந்துள்ளது. "பிரதமரைச் சந்திப்பதற்கு முன் நிபந்தனை விதிப்பது நியாயமற்றதாகும். ஏனெனில் அவரைச் சந்திக்க விரும்பியது ஹிண்ட்ராப் ஆகும். அது இப்போது முன் நிபந்தனைகளை…

ஏழ்மையில் உள்ள இந்தியர்களுடைய துயரங்களைத் துடைக்க ஐந்து ஆண்டு கால…

ஏழ்மையில் வாடும் இந்தியர்களுடைய இன்னல்களைப் போக்குவதற்கு ஹிண்டராப் ஐந்து ஆண்டு கால பெருந்திட்டத்தை வெளியிடும் என அதன் தலைவர் பி வேதமூர்த்தி அறிவித்துள்ளார். "2007ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மாபெரும் ஹிண்ட்ராப் பேரணியின் ஐந்தாம் ஆண்டு நிறைவை ஒட்டி வரும் நவம்பர் 25ம் தேதி தேசிய மேம்பாட்டு…

நஜிப் கூட்டத்தைப் புறக்கணியுங்கள் என ஹிண்ட்ராப் சட்ட ஆலோசகர் வேண்டுகோள்

நஜிப் அப்துல் ரசாக்-உடனான சந்திப்பை புறக்கணிப்பதற்கு ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தியையும் அவரது மூத்த சகோதரர் உதயகுமாரையும் அந்த அமைப்பின் சட்ட ஆலோசகர் எம் மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளார். 2007ம் ஆண்டு உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களில் மனோகரனும் ஒருவர்…

வேதா: இண்ட்ராப் மீதான தடையை நீக்குங்கள், பிறகு பேசலாம்

இண்ட்ராப்புடன் பேச்சு நடத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விரும்பினால் முதலில் அந்த இயக்கத்தின் மீதுள்ள தடையை நீக்க வேண்டும் என்கிறார் இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி. அரசாங்கம் இண்ட்ராபுடன் பேச்சு நடத்த விரும்புவதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறிய வேதமூர்த்தி, தாம் ஆகஸ்டில் வெளிநாட்டிலிருந்து திரும்பியதுமே நஜிப்பிடமும்…

பிரதமருக்கு உதயகுமாரின் 5 கோரிக்கைகள்

மனித உரிமைக் கட்சித் தலைவர் பி.உதயகுமார், இண்ட்ராபின் 18 கோரிக்கைகளில் ஐந்தையாவது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 2013 ஜனவரி முதல் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் அப்போதுதான் அவரைச் சந்திக்க முடியும் என்கிறார். இண்ட்ராப் அதன் 18 கோரிக்கைகளை 2007 ஆகஸ்ட் 12-இல், அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியது. ஆனால், அவப்பேறாக…

இப்போது பிரதமர் ஹிண்ட்ராப்பை சந்திக்க விரும்புகிறார்

இந்திய சமூகம் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்னைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணும் பொருட்டு தம்முடன் விவாதம் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு ஹிண்ட்ராப் உட்பட இந்திய சமூக அமைப்புக்களைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அழைத்துள்ளார். "இது அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்படும் திறந்த அழைப்பாகும். ஹிண்ட்ராப் மிகவும் வெளிப்படையாக பேசும்…

ஹிண்ட்ராப்-அன்வார் சந்திப்பு நிகழ்ந்தது

இந்திய சமூகத்தைப் பாதிக்கின்ற விஷயங்களை விவாதிப்பதற்காக ஹிண்ட்ராப் என்னும் இந்து உரிமை நடவடிக்கைக் குழு முதன் முறையாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் உட்பட பிகேஆர் உயர் நிலைத் தலைவர்களை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்துள்ளது. ஹிண்ட்ராப் குழுவுக்கு அதன் தலைவர் பி வேதமூர்த்தி தலைமை தாங்கினார். தமது சகோதரர் உதயகுமாருடன்…

பிரதமர் மீது “நம்பிக்கை” வைத்து, நட்டாற்றில் நிற்கின்றனர் புக்கிட் ஜாலில்…

-கி.தமிழ்செல்வம், சிலாங்கூர் ஹிண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர். அக்டோபர் 6, 2012. 1800 ஏக்கர் பரப்பளவை கொண்ட புக்கிட் ஜாலில் ரப்பர் தோட்டம் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டு இன்று  26 ஏக்கராக மெலிந்து கிடக்கிறது.வாடாமல்லி தோட்டம் என்பது இத்தோட்டத்தின் இயற்பெயர்.இதிலிருந்தே தெரிகிறது ரப்பர் கன்றுகளை  ஊன்றிய காலத்திலிருந்தே  இத்தோட்ட நிலத்தில்…

நீண்ட காலத்திற்குப் பின்னர் ஹிண்ட்ராப்- பிகேஆர் சந்திப்பு நிகழ்ந்தது

2008 மார்ச் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எழுந்த வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு ஹிண்ட்ராப்பும் பிகேஆரும் முதல் நடவடிக்கையை எடுத்துள்ளன. ஹிண்ட்ராப் ஆலோசகர் என் கணேசன் கடந்த வாரம் கோலாலம்பூரில் பல பிகேஆர் தலைவர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு இரு தரப்புக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான…

HINDRAF CALLS ON THE UMNO GOVERNMENT TO STOP…

   -P. Waythamoorthy, Chair,  Hindraf. WE at HINDRAF are strongly opposed to how the UMNO led government is persecuting Suaram through its media to create an ugly  shadow of anti-nationalism on the part of Suaram.…

இண்ட்ராப்: ஸாகீர் நாய்க் மலேசியாவிற்குள் அனுமதிக்கப்படக்கூடாது

-வி.சம்புலிங்கம், தேசிய ஒருங்கிணைப்பாளர், இண்ட்ராப் மக்கள் சக்தி. செப்டெம்பர் 26, 2012. பல சமயத்தவர்கள் ஒருவர் மற்றவரை  மதித்து முதிர்ந்த நல்லிணக்கத்தோடு வாழ வகை செய்யும் அரசியலமைப்பைக் கொண்ட நாடு மலேசியா. அதே நேரத்தில், ஒருவரின் மத நம்பிக்கைகளைச் சிறுமைப்படுத்தும் எவ்வித நடவடிக்கையும் எரிமலையாக வெடித்திடும் அளவுக்கு உணர்சிகளைத்…

முஸ்லிம்களை புண்படுத்தும் காணொளி: ஹிண்ட்ராப் வன்மையான கண்டனம்

உலக முஸ்லிம்களை அவமானத்திற்கு உள்ளாக்கிய "Innocence of  Muslims" என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி தயாரிப்பாளர்களின் நடத்தையை ஹிண்ட்ராப்  அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. ஒரு சமூகத்தின் அடையாளத்தை பிரதிபலிப்பதில் சமய நம்பிக்கைகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் தாங்கள் ஒடுக்கப்படுவதாக கருதும் சமூகத்தினரிடையே சமய நம்பிக்கைகள் ஆழ்ந்த உணர்ச்சிமயமான பற்றுதலை…

ஹிண்ட்ராப் தலைவர் நாட்டை விட்டு புறப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டார்

ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர் பி வேதமூர்த்தி நாட்டை விட்டு புறப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளார். அவர் தேசிய மருட்டலாக இருப்பது அந்தத் தடைக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. "குடி நுழைவுத் துறை தலைமை இயக்குநரும் தேசியப் போலீஸ் படைத் தலைவரும் என் மீது கட்டுப்பாடு விதித்துள்ளதாக என்னிடம்…

ஹிண்ட்ராப் விளக்கக் கூட்டங்கள் நாடு முழுதும் தொடர்கின்றன

ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் திரு வேதமூர்த்தி நாடு முழுதும் சென்று மலேசிய இந்தியர்களை சந்தித்து வருகிறார்.மலேசிய இந்தியர்கள் மலேசியாவிற்கு எப்படி கொண்டுவரப்பட்டார்கள், ஆங்கிலேயர்கள் எப்படிப்பட்ட வாக்குறுதிகளை வழக்கினார்கள், நாம் இந்நாட்டிற்கு எப்படியெல்லாம் உழைத்திருக்கிறோம்  போன்ற விவரங்களை தெளிவாக விளக்கி வருகிறார். மேலும் மலேசிய இந்தியர்களின் சார்பில் பிரிட்டிஷ் அரசுக்கு…