நஜிப் ஆர்சிஐ பற்றி அறிவிக்காமல் சபாவிலிருந்து புறப்பட்டார்

அடையாளக் கார்டு திட்டத்தை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (RCI) அமைக்கப்படுவது தொடர்பில் எந்த அறிவிப்பும் செய்யாமல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று சபாவிலிருந்து புறப்பட்டார். அவர், அந்த ஆணையம் அமைக்கப்படுவது மீது தமது சபா பயணத்தின் போது அறிவிப்பு செய்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அடையாளக்…

பெர்க்காசா: நஜிப் பத்துமலைக்கு “ஒற்றுமை ஒளி விளக்குடன்” சென்றார்

பத்துமலையில் நடந்தப்பட்ட தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சென்றது இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணானது என பேராக் முப்தி அறிக்கை விடுத்துள்ள வேளையில் அந்த வருகை மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியாக இருக்கக் கூடுமென்று கூறி நஜிப் நடவடிக்கையை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி இன்று நியாயப்படுத்த முயன்றுள்ளார்.…

இஸ்ரேல் விவகாரத்தில் “இரட்டை முகம்”காட்டும் அன்வாரைச் சாடுகிறார் நஜிப்

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்,பாலஸ்தீன-இஸ்ரேலிய விவகாரம் குறித்து வெவ்வேறு கூட்டங்களில் வெவ்வேறு விதமாக பேசி வருவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  சாடினார். “ஒரு நிலைப்பாட்டைக் கொண்டால் அதில் உறுதியாக நிற்க வேண்டும். நீங்கள் பாச்சோக்கில் பேசினாலும் தாமான் துன்னில் பேசினாலும் அது உலகம் முழுவதும் தெரிந்துவிடும்”.இன்று…

பிரதமர் போலீசாருக்குச் சொல்கிறார்: பொது மக்களுடைய நம்பிகையை பெற முயலுங்கள்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் அகற்றப்படவிருப்பதைக் கருத்தில் கொண்டு போலீசார் புதிய சவால்களை எதிர்கொள்வதற்குத் தங்களது ஆற்றலை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். "நன்கு கல்வி கற்ற, விஷயங்களை அறிந்த சமுதாயம் உயரிய தரத்தை எதிர்பார்க்கிறது. ஆகவே போலீசார் புதிய எதிர்பார்ப்புக்களை…

மக்களிடம் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என நஜிப்புக்கு அறைகூவல்

குறைந்த  வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் வழங்குவதையும் எல்லாப் பள்ளிக்கூட மாணவர்களுக்கும் 100 ரிங்கிட் அலவன்ஸ் கொடுப்பதையும் ஆண்டு நிகழ்வுகளாக மாற்றுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். நஜிப், தாம் மக்களுக்கு உண்மையிலேயே உதவி செய்ய விரும்புவதை நிரூபிக்க அவ்வாறு செய்ய வேண்டும். "தேர்தலில்…

“நஜிப் மிதவாதம் குறித்து தவறான மரத்தைப் பார்த்துக் குரைக்கிறார்”

"சீனர்கள் அதிகமாக உள்ள கூட்டத்தைப் பார்த்து மிதவாதமாக இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொள்கிறார். அவர் அதனை அம்னோ, பெர்க்காசா, பெர்க்கிடா ஆகியவற்றிடம் சொல்ல வேண்டும்." நஜிப் மிதவாதப் போக்கைப் பின்பற்றுங்கள் என சாப் கோ மே கூட்டத்தினரிடம் சொல்கிறார் அடையாளம் இல்லாதவன்_4031: சாப் கோ மே…

இந்துக்கள் அரசாங்கத்தை நம்ப வேண்டும் என்கிறார் பிரதமர்

மலேசிய இந்துக்கள் தொடர்ந்து அரசாங்கத்தின் மீது "நம்பிக்கை" வைக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த நம்பிக்கையைக் கொண்டு அரசாங்கம் அந்த சமூகத்துடன் நம்பிக்கை' சிறந்த முறையில் தொடர்புகளை ஏற்படுத்தி அந்த சமூகம் சவால்களைச் சமாளிக்கவும் சிறந்த வாழ்க்கைக்கான தனிப்பட்ட இலட்சியங்களை அடைவதற்கும்…

அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதி குறித்து கோடி காட்ட பிரதமர்…

அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு முன்னதாக எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெற முடியும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியிருக்கிறார். "பாரிசான் நேசனல் (பிஎன்) மீது மக்கள் அதிக நம்பிக்கை வைப்பதற்காக இப்போது கூட்டணித் தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்," என்றார் அவர். அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவதற்கு…

நஜிப் பத்துமலைக்கு வருகை புரிவதை பிகேஆர் ஆட்சேபிக்கிறது

அடுத்த வாரம் நிகழும் தைப்பூசக் கொண்டாட்டங்களை ஒட்டி பத்துமலை கோயில் வளாகத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வருகை அளிப்பதின் நோக்கம் "அரசியல் ஆதாயம்" தேடுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என பிகேஆர் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர் நடவடிக்கையாக, பிகேஆர் கெப்போங் தகவல் பிரிவுத் தலைவர் எம்…

பெர்க்காசாவின் வெள்ளை அங் பாவ்-வுக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை

பெர்க்காசா நடத்திய சீன புத்தாண்டு நிகழ்வின் போது பாரம்பரிய 'அங் பாவ்' சிவப்பு உறைகளுடன் வெள்ளை நிற கடித உறைகளும் பயன்படுத்தப்பட்டதற்கும் அரசாங்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அந்த அரசு சாரா அமைப்பின் தலைவர் நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினர் என…

புவா: நஜிப் மிதவாதி என்றால் பெர்காசாவை கண்டிக்க வேண்டும்

பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் மிதவாதத்தை ஊக்குவிப்பவராக இருந்தால், அதை நிரூபிக்க மலாய் உரிமைகளுக்காக போராடும் அமைப்பான பெர்காசாவுடன் எல்லா உறவுகளையும் துண்டித்துக்கொள்ள வேண்டும். அதைச் செய்யத் தவறினால், உலகளாவிய மிதவாத இயக்கத்தை ஊக்குவிக்கும் நஜிப்பின் முயற்சியெல்லாம் “வெறும் அரசியல் மோசடிதானே தவிர வேறு ஒன்றுமல்ல”…

Why Brother Jib can’t be trusted

-Josh Hong, Jan 20, 2012     Those who follow current affairs religiously must have heard of the famous saying of US Senator Hiram Johnson that ‘truth is the first casualty of war'. Given that…

தமிழ்ப்பள்ளிகளை மாற்றான் தாய்ப்பிள்ளையாக நடத்துவதை நிறுத்துவீர்!

[கா. ஆறுமுகம்] இன்று கோலாலம்பூரில் கின்ராரா தேசிய வகைத் தமிழ்ப் பள்ளியில் மலேசியத் தமிழ்ப் பள்ளிக்கூட சமூகத்தை சந்தித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்த நாட்டில் இந்தியர்களுக்கு தமிழ்ப் பள்ளிகள் முக்கியம் என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும், தமிழ்ப்பள்ளிக் கூடங்களின் எதிர்காலம் பற்றி விவாதிக்கவும்  நகல் பெருந்திட்டத்தை தயாரிக்கவும்…

வரும் பொதுத் தேர்தல் “இது வரை இல்லாத அளவுக்கு மிகவும்…

"அதிகாரத்தில் நிலைத்திருக்க ஊழலான அம்னோ தலைவர்களும் ஆதரவாளர்களும் எதனையும் செய்வார்கள் என்பதால் வரும் 13-வது பொதுத் தேர்தல் இது வரை இல்லாத அளவுக்குக் 'கறை படிந்ததாக' இருக்கும்." இவ்வாறு மலேசியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஜான் ஆர் மாலோட் ஆரூடம் கூறியிருக்கிறார். அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி வழக்கு II-லிருந்து விடுதலை…

“நஜிப் கொடி” சம்வம் மீது மாணவர்கள் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை

அம்னோ தலைமையகத்தில் சிறிது நேரத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொடியை அகற்றி விட்டு தங்களது எதிர்ப்பு பதாதையைப் பறக்க விட்டதற்காக சனிக்கிழமையன்று அங்கு நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை. ஒரு கருத்தை வெளியிடுவதற்கு அது தங்களுக்கு உள்ள உரிமை என அவர்கள் கூறினர்.…

”தேர்தல் நிதிகளைத் திரட்ட சில கும்பல்கள் பிரதமருடைய பெயரைப் பயன்படுத்துகின்றன”

பொதுத் தேர்தலுக்கு நன்கொடைகளைத் திரட்டுவதற்கு சில கும்பல்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பெயரைப் பயன்படுத்துவதாக மலாய் மொழி நாளேடான சினான் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கும்பல்கள் மக்களை ஏமாற்றுவதற்கு அதி நவீன தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்துவதாக மசீச பொதுப் புகார் பிரிவுத் தலைவர் மைக்கல் சொங்…

சுவாராம் மனித உரிமைகள் மீது நஜிப்புக்கு 10க்கு 4 மதிப்பெண்களை…

இவ்வாண்டு பல சிவில் சமூக இயக்கங்களை ஒடுக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளில் மனித உரிமைகளை அத்துமீறியதற்காக அரசாங்கம் கடுமையாக குறை கூறப்பட்டுள்ளது. மக்களுடைய உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கீழ் இயங்கும் அரசாங்கம் தவறி விட்டதாக சுவாராம் என அழைக்கப்படும் மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாரா…

பிரதமர் நஜிப்: பக்கத்தான் ஆட்சியில் மலாய்க்கார்களுக்கு அழிவு ஏற்படும்

மலாயக்கார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தைத் தற்காப்பதைத் தவிர வேறு வழியில்லை ஏனென்றால் மலாய்க்காரர்களின் எதிர்காலத்தையும் இஸ்லாத்தின் உன்னத்தையும் பாதுகாப்பதற்கு இது ஒன்றுதான் வழி என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறினார். "மாற்று வழியைக் காட்டுகிறவர்கள் இருக்கிறார்கள். கேட்கப்பட வேண்டிய கேள்வி இதுதான்: அவர்கள் தற்போதைய நிருவாகத்தைவிட சிறப்பாக இருக்க…

பிரதமர் முன்னாள் எம்பிகள் சந்திப்பு: நாடாளுமன்றக் கலைப்பின் அறிகுறியா?

சீன நாளேடு ஒன்றில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பணி ஓய்வுபெற்ற பிஎன் எம்பிகளை இன்று சந்திப்பார் என்று வெளிவந்திருக்கும் செய்தி விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்காக நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற வதந்திக்கு மேலும் வலுச்சேர்ப்பதுபோல் அமைந்துள்ளது. 13-வது  பொதுத் தேர்தல் தொடர்பில் சந்தித்துப் பேச எல்லா…

நஜிப்: அரசியல் ஆதாயத்துக்காக குடும்பத்தினரைப் பயன்படுத்த வேண்டாம்

"அரசியல்வாதிகளுடைய குடும்பங்கள், கறை படிந்த அரசியலில் இழுக்கப்படக் கூடாது. அரசியல் ஆதாயத்துக்காக அவை பயன்படுத்தப்படக் கூடாது." இவ்வாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். "நவீன ஜனநாயகத்தின் அடிப்படை இதுதான். நீங்கள் கொள்கை விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அரசியல் வேறுபாடுகளை அரசியல்வாதிகளுடைய பலவீனங்கள் அடிப்படையில் விவாதிக்கலாம்."…

“அனைத்து வகை பள்ளிகளுக்கும் சமநிலை சலுகைகளே” என்று நஜிப் கூறுவது…

மலேசியாவிலுள்ள தேசியப்பள்ளி, சீனமொழிப்பள்ளி, தமிழ்ப்பள்ளி மற்றும் சமய அமைப்புகள் நடத்தும் பள்ளி ஆகியவை எவ்வித பாகுபாடுமின்றி சரிசமமாக நடத்தப்படுகின்றன என்று பிரதமர் நஜிப் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நஜிப்பின் கூட்டணி அரசாங்கம் "இந்நாட்டிலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி சரிசமமான சலுகைகளையே வழங்கி வருகிறது", என்று கூறும்…

பிரதமர்: மலாய்க்காரர்கள் பாதுகாப்பு உணர்வுக்கு அப்பாலும் சிந்திக்க வேண்டும்

மலாய் தொழில் முனைவர்கள் வெற்றி பெறுவதற்கு அரசாங்கப் பாதுகாப்பை நம்பியிருக்கக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு மாறாக மலாய் தொழில் முனைவர்கள் தங்கள் சொந்த திறமையையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு கௌரவமும் மரியதையும் கிடைக்கும். "உரிமைகளை மட்டும் பேசிக்…

நஜிப்: மலேசியாவைச் சிறந்த ஜனநாயகமாக்குவதற்காக இசா ரத்துச் செய்யப்படுகிறது

இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப்படுவது,  உலகில் தலை சிறந்த ஜனநாயக நாடாக மலேசியாவைத் திகழச் செய்வதற்கான முயற்சி என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியுள்ளார். நாட்டை மேம்படுத்துவதில் அடைந்துள்ள வெற்றி, மக்களுடைய மன முதிர்ச்சி அதிகரித்துள்ளது, சமூகத்தில் மனித உரிமைகள் பற்றிய…