பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
‘நஜிப் x அன்வார் விவாதத்திற்கான வேண்டுகோள் அதிகரிக்கிறது
அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீனுக்கும் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலுக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற விவாதம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக 'பிரதமர் நிலையிலான விவாதத்திற்கு' வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிரதமராகக் காத்துக் கொண்டிருக்கும் பக்காத்தான் ராக்யாட்டின் அன்வார்…
தலைப்புச் செய்தி:- பிரதமர் மருதாணி அரைக்கிறார்!
கடந்த வாரம் சன் நாளிதழில் முகப்புப் பக்கத்தில் பிரதமர் மருதாணி அரைத்துக் கொண்டிருந்தார். தோசை சுட்டு, மீ கோரிங் பிரட்டி, தே தாரிக் ஆற்றி இப்போது அம்மிக் கல்லில் மருதாணி அரைக்கிற நிலைமைக்குத் தேர்தல் பிரதமரைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. பிரதமர் எதற்காக இதையெல்லாம் செய்கிறார் என்பதுதான்…
அன்வார் இப்ராஹிம்: நஜிப் எனக்கு எதிராக நீதிமன்றங்களைப் பயன்படுத்துகிறார்
13வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் தம்மை மேலும் மேலும் ஒடுக்குவதற்கு நஜிப் நீதிமன்ற நடைமுறைகளைப் பயன்படுத்துகிறார் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்டுள்ளார். தாம் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுக்கள் எதிர்த்தரப்புத் தலைவர் என்ற முறையில் தமக்கு எதிராக ஜோடிக்கப்பட்டவை என்றும் தேர்தல் நடைமுறைகளில் காணப்படும் மோசடிகள்…
Utter bad faith for Najib to charge Anwar,…
It is an act of utter bad faith for the Najib administration to charge the Leader of the Opposition, Datuk Seri Anwar Ibrahim and PKR leaders Azmin Ali and Badrul Hashim for breach of the…
நஜிப்பை எதிர்க்கட்சி தலைவராக்க சிலாங்கூர் இந்தியர்களிடையே பலத்த ஆதரவு!
வரவிருக்கும் தேர்தலில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளின் தலைவராக்க வேண்டும் என்ற வகையில் சிலாங்கூர் இந்தியர்களின் கருத்துக்கணிப்பு அமைந்துள்ளது. இவ்வாண்டு மார்ச் 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையில் மலாயா பல்கலைக்கழகத்தின் சனநாயக தேர்தல் ஆய்வு மையம் மேற்கொண்ட…
ஆட்சிமாற்றத்தை மதிக்கத் தயாரா? நஜிப்புக்கு கிட் சியாங் கேள்வி
13வது பொதுத் தேர்தல் முடிவை, அதன் விளைவாக ஆட்சிமாற்றம் ஏற்படுவதாக இருந்தாலும், பிஎன்னும் அம்னோவும் மதிக்கும் எனப் பிரகடனம் செய்யத் தயாரா என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் சவால் விடுத்துள்ளார். அவ்வாறு கூறுவது மலேசியாவை “உலகின் தலைசிறந்த ஜனநாயமாக்க” விரும்புவதாக…
போலீசாரே பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் நஜிப்
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது எல்லாத் தரப்புக்களிலும் காயங்கள் ஏற்பட்ட போதிலும் போலீசாரே அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "நாம் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். பொதுவாக போலீசாரே பாதிக்கப்படுகின்றனர். வன்முறைகள் போலீசாரை குறி வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன," என…
பிகேஆர்: பெர்சே பேரணியின் போது ஊடகங்கள் தாக்கப்பட்டதற்கு நஜிப் பொறுப்பேற்க…
நேற்று நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி குறித்த செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட "முன்பு எப்போதும் நிகழ்ந்திராத" தாக்குதல்களுக்கும் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் பிகேஆர் பிரதமரைச் சாடியுள்ளது. "போலீஸ் படை திட்டமிட்டும் வேண்டுமென்றே பத்திரிக்கையாளர்களைத் தாக்கியுள்ளது என்பது வெள்ளிடைமலை," என அது கூறியது. "போலீஸ் தலைமைத்துவம்,…
பிரன்ச் நீதிமன்றத்தில் நஜிப் சாட்சியமளிக்காதது பாதகமான தோற்றத்தை அளிக்கும்
பிரதமர் நஜிப் ஃப்ரன்ச் நீதிமன்றத்தில் ஸ்கோர்ப்பீன் நீர்மூழ்கி விசாரணையில் சாட்சியமளிப்பது குறித்து தொடர்ந்து எதுவும் கூறாமல் இருப்பது மலேசிய அரசாங்கத்தின் மீது தவறான தோற்றத்தை உருவாக்குகிறது என்று டிஎபி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் டியோ கூறுகிறார். "நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து பாரிஸ்…
நம் மக்கள் பிச்சைக்காரர்களா?
பெஸ்தாரி ஜெயா (பத்தாங் பெர்ஜுந்தை) தாமான் தென்னமரம் மைதானத்தில் நடைபெற்ற 'ஒரே மலேசியா' உதவித் திட்டம் குறைந்தபட்சம் இருவரின் உயிரைப் பலிகொண்டுள்ளது என்ற செய்தி தற்போது காட்டுத்தீ போல் பரவிவருகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேசிய முன்னணி பேராளர்கள் அச்சம்பவத்தை எப்படியாவது மூடிமறைக்க வேண்டும் என்பதில்…
பாதி வழியில் ஒட்டுநரை மாற்ற வேண்டாம் என்கிறார் நஜிப்
நாட்டின் உருமாற்றத் திட்டங்கள் பாதி வழியில் சென்று கொண்டிருக்கும் வேளையில் நாட்டின் ஒட்டுநரை மாற்ற வேண்டாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியர்களை வேண்டிக் கொண்டிருக்கிறார். நேற்றிரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமது உரையில் நஜிப் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஒடிக் கொண்டிருக்கும் வாகனம் ஒன்றுடன் ஒப்பிட்டுப் பேசிய…
இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்துகிறார்
1984ம் ஆண்டுக்கான அச்சுக்கூட, வெளியீடுகள் சட்டத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தற்போது விடுபட்டுள்ள மின்னியல் ஊடகங்களைக் கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் கொண்டுள்ள நோக்கத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். "தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனத்தில் கொண்டு நடப்பிலுள்ள சட்டங்களைப் போன்று புதிய சட்டம் ஏதும்…
அன்வார்: நஜிப் ரோஸ்மாவையும் மகாதீரையும் பார்த்துப் பயப்படுகிறார்
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமது சொந்த மாநிலமான பினாங்கில் பல செராமாக்களில் கலந்து கொண்டார். அங்கு ஆற்றிய உரைகளில் அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பற்றியும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் பற்றியும் பல நகைச்சுவைகளைக் கூறினார். தமது பரம எதிரியான நஜிப்-பை கோழை என…
பிரதமர் இந்தியர்களிடம் சொல்கிறார்: “என்னுடன் நடந்து வாருங்கள்”
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது நிர்வாகம் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்பதை மெய்பித்திருப்பதால் தம்முடன் இணைந்து நடந்து வருமாறு இந்திய சமூகத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அரசாங்கம் 2009ம் ஆண்டு தொடக்கம் தமிழ்ப் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்கு 440 மில்லியன் ரிங்கிட்டை செலவு செய்துள்ளதாக கூறிய அவர், அந்த சமூகம்…
‘எம்ஏஎஸ் குறித்த நஜிப் முடிவுகள் அவருடைய சீர்திருத்தங்கள் மீது ஐயத்தை…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,எம்ஏஎஸ்-ஸும் ஏர் ஏசியாவும் பங்குகளைப் பரிவர்த்தனை செய்து கொள்வதற்கு உணர்வுகளுக்கு அடிமையாகி உடனடியாக எடுத்த முடிவும் அது இப்போது நேர்மாற்றம் காணும் எனத் தோன்றுவதும் உருப்படியான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அவருக்கு உள்ள ஆற்றல் மீது நம்பிக்கையைத் தரவில்லை என டிஏபி கூறுகிறது. கடந்த…
பக்காத்தானை ஆதரித்து உங்கள் எதிர்காலத்தை இழக்க வேண்டாம்: நஜிப்
நாடு மற்றும் மக்களுடைய வளப்பத்தை தான் உறுதி செய்ய முடியும் என்பதை அரசாங்கம் இதுகாறும் நிரூபித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் தொடுக்கும் குற்றச்சாட்டுக்கள், கொடுக்கும் வாக்குறுதிகள் ஆகியவற்றுக்குச் செவி சாய்த்து எதிர்காலத்தை இழக்க வேண்டாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார். நாட்டை திறமையாக நிர்வாகம் செய்யும் ஆற்றலை…
பதவி விலகல் பற்றி பிரதமரும் ஷாரிசாட்டும் அடுத்த வாரம் விளக்குவர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அம்னோ மகளிர் பகுதி தலைவி ஷரிசாட் அப்துல் ஜலிலும் அடுத்த வாரம் மகளிர் பகுதியைச் சந்தித்து ஷாரிசாட் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான சூழலை விளக்குவர். “நாடு முழுவதிலுமிருந்து ஏழாயிரம் மகளிர் பேராளர்கள் திரள்வார்கள்.அதில் எல்லாம் விளக்கப்படும்”, என்று மகளிர் பகுதி உதவிச் செயலாளர்…
ஜிஎல்சி-க்களில் நல்ல நிறுவன நடைமுறைகளை உறுதி செய்யுங்கள்
சிலாங்கூர் மாநிலத்தை மேம்படுத்துவதற்கு உதவி செய்யுமாறு அண்மையில் 300க்கும் மேற்பட்ட ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அண்மையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ள போதிலும் அவர் அந்த நிறுவனங்களில் மோசமான நிறுவன நடைமுறைகள் பின்பற்றப்படுவதற்கு அனுமதித்துள்ளார் என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம்…
“நஜிப்,உங்கள் தவறுகளுக்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள்”
பிரதமர், பிஎன் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது என்று கூறும் டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங், நஜிப் அப்துல் ரசாக்கே அவரது 35-மாத ஆட்சியில் அனேக தவறுகளைச் செய்துள்ளார் என்கிறார். டிஏபி அரசியல் செயலாளர் தியோ பெங் ஹொக்கின் மரணமும் அதில் ஒன்று என…
நஜிப் பிஎன் செய்த கடந்த காலத் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டார்
கடந்த பொதுத் தேர்தலில் பிஎன் செய்த தவறுகளுக்காக அந்தக் கூட்டணியின் சார்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்களிடம் இன்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்தத் தவறுகள் காரணமாக கெடா உட்பட பல மாநிலங்களையும் பல தொகுதிகளையும் பிஎன் இழந்தது என்றார் அவர். பிஎன் அந்தத் தவறுகளை சரி …
ரம்லி அம்பலப்படுத்திய விசயங்கள் மீது நீதித் தீர்ப்பாயம் அமைக்கத் தயாரா?…
வணிகக் குற்றப் புலன்விசாரணைத் துறை முன்னாள் தலைவர் ரம்பி யூசுப், சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்லின் பழிவாங்கும் நடவடிக்கை பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியதை அடுத்து நீதித் தீர்ப்பாயம் அமைத்து உண்மையைக் கண்டறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தயாரா என்று டிஏபி மூத்த தலைவர் லிம் கிட்…
தமிழர் நீதி கோரும் தீர்மானத்தை மலேசியா எதிர்க்கும்?
தமிழர்களுக்கு நீதி கேட்டு கொண்டுவரப்படும் ஐக்கிய நாட்டுசபை தீர்மானத்தை மலேசியா எதிர்க்கும் என ஜெனிவாவில் உள்ள மலேசிய பிரதிநிதிகள் கோடிகாட்டியுள்ளனர். அடுத்த வாரம் முதல் துவங்கும் ஐநா மனித உரிமைகள் சபைக் கூட்டம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல்…
‘பிஎன் மட்டும்’ கூட்டத்தை நடத்திய நஜிப்பை காலித் சாடுகிறார்
114வது மந்திரி புசார்கள், முதலமைச்சர்கள் கூடம் பிஎன் மாநிலத் தலைவர்களுக்கு மட்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் சிடிக் ஹசான் அங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். "அரசாங்க ஊழியர் என்ற முறையில் தலைமைச் செயலாளர், அரசியல்…