என்எப்சி விசாரணை அறிக்கையைப் போலீசிடம் திருப்பிக் கொடுத்தார் ஏஜி

நேசனல் ஃபீட்லோட் விவகாரம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ள பொதுமக்கள் அதற்கு மேலும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் போலத் தெரிகிறது. புலன்விசாரணையை முடித்து போலீஸ்  ஒப்படைத்த அவணங்களை மேலும் ஆய்வுகள் தேவை என்று கூறி சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) திருப்பி அனுப்பிவிட்டார். அவ்வழக்கில் மேலும் விசாரணை செய்யப்பட வேண்டும்…

என்எப்சி 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனையும் முழுமையாகப் பெற்றுள்ளது

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் அரசாங்கத்திடமிருந்து 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் முழுவதையும் எடுத்து விட்டதாக டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா கூறுகிறார். "2008ம் ஆண்டு அந்த நிறுவனம் முதலில் 130 மில்லியன் ரிங்கிட்டை பெற்றது. 2009ம் ஆண்டுக்குள் அது…

தொழில் விரிவாக்க நோக்கில் சிங்கை சென்றதாக என்எப்சி கூறுவது அபத்தம்,…

உள்நாட்டுச் சந்தை சிறியது. அதனால் தொழிலை வெளிநாடுகளிலும் விரிவுபடுத்துவது அவசியம் என்று கருதி  நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் சாலே இஸ்மாயில் அளித்துள்ள விளக்கத்தில் பொருளில்லை என்கிறார் வியூக இயக்குனர் ரவிசி ரம்லி. அந்நிறுவனம்,அரசாங்கம் எதற்காக என்எப்சி-க்கு எளிய நிபந்தனைகளில்  ரிம250மில்லியன் கடன்…

பதவிமோகம் வேண்டாம்: ஷாரிசாட்டுக்கு மகாதிர் அறிவுரை

அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில், பதவியை நேசிப்பதைவிட கட்சியை அதிகம் நேசிக்க வேண்டும்  என்கிறார் முன்னாள் அம்னோ தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட். இன்று செர்டாங்கில், பெர்டானா பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாதிர்,“அவர் கட்சிக்கு ஏற்படும் பாதிப்பை எண்ணிப்பார்க்க வேண்டும். பதவிமீது…

நஸ்ரி: ஷாரிசாட் குடும்பத்தினர் ரிம250மில்லியனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) திட்டத்தில் சம்பந்தப்பட்ட மகளிர், குடும்ப, சமூக மேம்ப்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலிலின் குடும்பத்தார் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ரிம250மில்லியன் கடனைத் திருப்பிக் கொடுத்திட வேண்டும். பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் இவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரது தொகுதியான பாடாங் ரெங்காசில் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரி,…

ஷாரிசாட் பதவிவிலக வேண்டும், கெராக்கான் துணைத் தலைவர்

சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் ஷாரிசாட் அப்துல் ஜலிலுக்கு மேன்மேலும் நெருக்குதல் அதிகரித்து வருகிறது. நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) குளறுபடியில் அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துவோர் வரிசையில் கெராக்கான் துணைத் தலைவர் சாங் க்கோ யோனும் சேர்ந்துகொண்டிருக்கிறார். சாங் இன்று வெளியிட்ட அறிக்கையில், “அநியாயமாகவும்…

அம்னோ தொகுதித் தலைவர்: அந்த ஊழலுக்கு முடிவு காணுங்கள் இல்லை…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் விவகாரத்தில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை எதிர்த்தரப்பு  அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து 13வது பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் அந்த சர்ச்சை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என வெளிப்படையாகப் பேசும் அம்னோ தொகுதித் தலைவரான சையட் அலி அல்ஹாபாஷி…

ஷாரிஸாட்டை எம்ஏசிசி அழைத்துள்ளது

மூன்று வார விடுமுறைக்குப் பின்னர் இன்று வேலைக்குத் திரும்பிய மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். மாலை மணி 4.00 வாக்கில் அம்னோ மகளிர் தலைவியுமான ஷாரிஸாட் எம்ஏசிசி கட்டிடத்துக்குள்…

MACC விசாரணை இறுதிக் கட்டத்தில், ஷாரிஸாட் விசாரிக்கப்படலாம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் மீதான தனது விசாரணை அறிக்கைகளை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேல் நடவடிக்கைக்காக சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திடம் விரைவில் சமர்பிக்கும். எம்ஏசிசி விசாரணைகள் 'இறுதிக் கட்டத்தில்' இருப்பதாக அதன் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் முஸ்தாபார் அலி…

ஷரிசாட்டின் விடுப்பை அமைச்சரவை நீட்டிக்க வேண்டும்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) விவகாரத்தில் அம்னோ மகளிர் தலைவியும் குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமான ஷாரிசாட் அப்துல் ஜலிலுக்குத் தொடர்பில்லை என்று எம்ஏசி இன்னும் அறிவிக்கவில்லை என்பதால் அவர் தொடர்ந்து விடுப்பில் இருப்பதுதான் முறையாகும் என்கிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங். “ஷாரிசாட் முறைகேடுகள் எதிலும்…

என்எப்சி தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள ஷாரிஸாட் தயாராக இருக்கிறார்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட பிரச்னையில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள தாம் அஞ்சவில்லை என ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார். மூன்று வார விடுமுறைக்குப் பின்னர் அடுத்த புதன்கிழமை மகளிர், சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சர் பொறுப்புக்களை அவர் மீண்டும் ஏற்றுக் கொள்ளவிருக்கிறார். தமக்கு எதிராக கூறப்பட்ட அனைத்து…

ஷாரிஸாட்: “நான் விலக மாட்டேன்”

அம்னோ மகளிர் பதவியைத் தாம் துறக்க வேண்டும் என எந்தத் தரப்பு அழுத்தம் கொடுத்தாலும் தாம் அதற்குப் பணியப் போவதில்லை என மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார். அரசியல் தலைவர்கள் நெருக்குதலை எதிர்நோக்குவது வழக்கத்திற்கு மாறானது அல்ல. அது அரசியலில் ஒர்…

பிகேஆர், ஷாரிஸாட் வேலைக்கு திரும்புவதை இன்னும் அதிகமான தகவல்களை அம்பலபடுத்துவதுடன்…

நெருக்கடியில் சிக்கியுள்ள மகளிர் சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் அடுத்த வாரம் வேலைக்கு திரும்புகிறார். அவர் மீண்டும் அலுவலகத்துக்குத் திரும்புவதை இன்னும் அதிகமான தகவல்களை அம்பலபடுத்துவதுடன் வரவேற்கும். அந்த அமைச்சருடைய குடும்பம் வாங்கிய சொத்துக்கள் மீது கூடுதலான தகவல்களை வரும் புதன் கிழமை பிகேஆர்…

விலகுவதே நல்லது: ஷாரிசாட்டுக்கு ரபிடா அசீஸ் அறிவுரை

அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜலில், கட்சியிலும் அரசாங்கத்திலும் வகிக்கும் பதவிகளிலிருந்து விலக வேண்டும். இவ்வாறு கருத்துரைத்திருப்பவர் முன்னாள் அம்னோ மகளிர் தலைவி ரபிடா அப்துல் அசீஸ்.  இன்று மலாய் மெயில் நாளேட்டில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் முன்னாள் பன்னாட்டு வாணிக, தொழில் அமைச்சர் ரபிடா,  ஷாரிசாட்டைக்…

“போலீசுக்குக் கையூட்டுக் கொடுக்கச் சொன்னதில்லை’’, என்எப்சி

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) நிர்வாகத் தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில், போலீசுக்குக் கையூட்டுக் கொடுக்குமாறு ஒரு வணிகரான ஷாம்சுபாஹ்ரினிடம் தாம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுவதை மறுத்தார். இன்று நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சில் வெளிவந்திருந்த ஒரு செய்தியில் சாலே, போலீசார் அரசாங்கக் கடன்மீதான விசாரணையில் நியாயமாகவே நடந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்குக்…

ஷம்சுபாஹ்ரின்: ‘போலீஸுக்கு லஞ்சம் கொடுக்குமாறு என்னை என்எப்சி தலைவர் நெருக்கினார்’

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் ஊழல்களை மறைப்பதற்கு போலீஸுக்கு லஞ்சம் கொடுக்குமாறு அதன் தலைவர் முகமட் சாலே இஸ்மாயில் நெருக்குதல் கொடுத்தார் என சாலே-யை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வணிகரான ஷம்சுபாஹ்ரின் இஸ்மாயில் கூறிக் கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கிள்ளான் பொது மருத்துவமனையில் சமர்பித்த போலீஸ்…

பக்காத்தான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் என்எப்சிமீது ஆர்சிஐ

டிஏபி ஆட்சிக்கு வந்தால், அரசு  எளிய நிபந்தனைகளில் வழங்கிய ரிம250மில்லியன் கடன்தொகையைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) பற்றி விசாரிக்க அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைக்கப்படும் என்று டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். “மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் இது…

ஏஜி விளக்கத்தால் என்எப்சி குற்றம் செய்யவில்லை என்றாகிவிடாது

கணக்காய்வுத் துறை, தேசிய ஃபீட்லோட் செண்டர் மீதுதான் தணிக்கை செய்ததே தவிர நேசனல் ஃபீட்லோட்  கார்ப்பரேசன் (என்எப்சி) மீது அல்ல என்று விளக்கமளித்து  தலைமைக் கணக்காய்வாளர் நேற்று  அறிக்கை விடுத்திருப்பதால் அங்கு அத்துமீறல்கள் நிகழவில்லை என்றாகிவிடாது. இதை நேற்று டிவிட்டர் பதிவுகளில் தொடர்ந்து வலியுறுத்திய பிகேஆர் தலைமைச் செயலாளர்…

என்எப்சி: குளறுபடி நிலவுவதாக ஏஜி கூறவே இல்லை

கடந்த சில மாதங்களாக செய்தித்தாள்களில் கடும் கண்டனத்துக்கு இலக்காகி வந்துள்ள நேசனல் ஃபீட்லோட் செண்டர் (என்எப்சி), தலைமைக் கணக்காய்வாளர் தம் 2010 அறிக்கையில் என்எப்சி-இல் குளறுபடி என்று குறிப்பிடவே இல்லை என்று கூறுகிறது.  பத்திரிகைச் செய்திகளில் அவ்வாறு குறிப்பிடப்பட்டது “குறும்புத்தனமானது” என்றும் அது “குழப்பத்தை உருவாக்கியுள்ளது” என்றும் என்எப்சி…

“என்எப்சி குளறுபடி”க்கு விரைவில் தெளிவான விளக்கம்: தலைமைக் கணக்காய்வாளர்

கணக்காய்வுத் துறை, நேசனல் ஃபீட்லோட் செண்டர்(என்எப்சி)  மீதான 2010 தணிக்கை அறிக்கை குறித்து  விரிவான விளக்கம் அளிக்கும் என்று தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங் கூறியுள்ளார். விரைவில் வெளிவரவிருக்கும் அவ்விளக்கத்தால் அந்த கால்நடை வளர்ப்புத் திட்டத்தைச் சூழ்ந்துள்ள நெருக்கடி குறித்து ஒரு தெளிவு ஏற்படும் என்று அவர் நம்புகிறார்.அம்ப்ரின்…

NFC தாமதம் தொடர்பில் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் விலகவேண்டும்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் நிர்வாக முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது Read More

RM 600,000 தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவதை எதிர்க்குமாறு NFC-க்கு பெர்க்காசா…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை நடத்துகின்றவர்கள், 600,000 ரிங்கிட் நிறுவன நிதிகளை தவறாகப் பயன்படுத்தும் பொருட்டு கிரடிட் கார்டுகளை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்து போலீஸில் புகார் செய்யுமாறு மலாய் வலச்சாரி அமைப்பான பெர்க்காசா இன்று என்எப்சி-க்கு சவால் விடுத்தது. மறுப்பறிக்கைகளை வெளியிட்டு வரும் என்எப்சி…

பிகேஆர்: ஷாரிஸாட் குடும்பத்தின் கொள்முதல்களையும் ஆய்வு செய்யுங்கள்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை புலனாய்வு செய்வதற்கு கணக்காயர் நிறுவனம் ஒன்று நியமிக்கப்படவிருப்பதை பிகேஆர் வரவேற்றுள்ளது. என்றாலும் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தினர் கொள்முதல் செய்த அனைத்து அம்சங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அது கேட்டுக் கொண்டது. அந்த ஆய்வில் குத்தகை வழங்கப்பட்ட…