முன் கூட்டியே வாக்களிக்கும் முறை பிஎன் வெற்றிக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும்…

முன் கூட்டியே வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்வதை பெர்சே அமைப்பும் எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ள போதிலும் அதன் அமலாக்கத்திற்கு தெளிவான நடைமுறைகள் இல்லாததால் அது வாக்கு மோசடிகளுக்கு வழி வகுத்து பிஎன்-னுக்குச் சாதகமாக அமையக் கூடும் என பிகேஆர் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். தேர்தல் முகவர்களை பயிற்றுவிப்பதில் தனித்துவம் பெற்றுள்ள…

பிகேஆர்: பெர்சே பேரணியின் போது ஊடகங்கள் தாக்கப்பட்டதற்கு நஜிப் பொறுப்பேற்க…

நேற்று நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி குறித்த செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட "முன்பு எப்போதும் நிகழ்ந்திராத" தாக்குதல்களுக்கும் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் பிகேஆர் பிரதமரைச் சாடியுள்ளது. "போலீஸ் படை திட்டமிட்டும் வேண்டுமென்றே பத்திரிக்கையாளர்களைத் தாக்கியுள்ளது என்பது வெள்ளிடைமலை," என அது கூறியது. "போலீஸ் தலைமைத்துவம்,…

பிகேஆர்: என்எப்சி இப்போது சொத்துக்களை விற்கத் தொடங்கியுள்ளது

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனைப் பயன்படுத்தி வாங்கியதாகக் கூறப்படும் மூன்று சொத்துக்களை விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பிகேஆர் இன்று கூறிக் கொண்டுள்ளது. அந்த சொத்துக்களை Insun Development Sdn Bhd என அழைக்கப்படும் நிறுவனம் ஒன்றுக்கு…

பிகேஆர் பலவீனமான இணைப்பு அல்ல என்கிறார் அஸ்மின்

பிகேஆர் பக்காத்தான் ராக்யாட்டில் பலவீனமான இணைப்பு அல்ல. உண்மையில் அதுதான் வலுவானது என்று அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார். அவர் நேற்றிரவு கோத்தா கினாபாலுவில் 150க்கும் மேற்பட்ட பிகேஆர் உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பேசினார். கடந்த ஒரு மாதமாக முக்கிய ஊடகங்கள் பிகேஆர் மீது…

பெல்டா குறித்து வாதமிடத் தயாரா?-இசா சமட்டுக்கு பிகேஆர் சவால்

பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட்(எப்ஜிவிஎச்) பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது தொடர்பில் பொதுவிவாதம் நடத்தத் தயாரா என்று  பெல்டா தலைவர் இசா சமட்டுக்கும் பெல்டா விவகாரங்களுக்குப் பொறுப்பான துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானுக்கும் பிகேஆர் சவால் விடுத்துள்ளது. நாட்டில் பொதுவிவாதமிடுவது இப்போதைய போக்காக இருப்பதால் அதற்கேற்ப இப்படி ஒரு…

பிகேஆர் தனது வார இறுதி விவாதங்களை குவாந்தானுக்கு மாற்றுகிறது

பிகேஆர் இந்த வார இறுதியில் பேராக், லுமுட்டில் தான் நடத்தவிருந்த விவாதங்களை பாகாங், குவாந்தானுக்கு மாற்றியுள்ளது. அந்த விவாதங்களில் பங்கு கொள்ளும் 130 பேராளர்களில் பெரும்பாலோர் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  Himpunan Hijau 2.0 பேரணியிலும் கலந்து கொள்வதற்கு உதவியாக அந்த இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த…

தேர்தல் ஆணையம் “கள்ளத்தனமாக தில்லுமுல்லு ” செய்வதாக பிகேஆர் குற்றச்சாட்டுகிறது

தேர்தல் ஆணையம் தொகுதி நடைமுறை என அழைக்கப்படும் ‘Belah Bahagi’ என்ற போர்வையில் சிலாங்கூரில் உள்ள  நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்குள் வாக்காளர்களை சட்ட விரோதமாக இடம் மாற்றி வருகிறது என பிகேஆர் கூறுகிறது. "வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும் அளவுக்கு சட்டவிரோதமான ஒர் நடவடிக்கையை தேர்தல்…

901 விசாரணை: போலீஸ் அச்சுறுத்தல் என்கிறது பிகேஆர்

கோலாலம்பூரில் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு முன்பு ஜனவரி 9ம் தேதி பேரணி நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருந்த போதிலும் அந்தப் பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றவர்களை பதிவு செய்யும் சாத்தியத்தை போலீஸ் ஆராய்ந்து வருகிறது. எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் போராளிகளும் அடங்கிய 17 தனிநபர்கள் மீது செந்தூல் மாவட்ட…

அஸ்மின்: யார் இந்த RPK எங்களுக்கு ஆணையிட?

கட்சி இந்தத் திசையில்தான் போக வேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும் என்று கூற ராஜா பெட்ரா கமருடினுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. “கட்சிக்குக் கட்டளை இட ராஜா பெட்ரா யார்? அவர் ஓர் உறுப்பினராகக்கூட இல்லை. நாட்டுடன் அவருக்கிருந்த தொடர்பும் அறுந்து போய்விட்டது.”…

பிகேஆர்: டாக்டர் மகாதீர் பொய் சொன்னார், தொடர்ந்தும் பொய் சொல்கிறார்

நிதி நெருக்கடியின் தாக்கத்தை சமாளிப்பதற்கு 1999ம் ஆண்டு உலக வங்கியிடமிருந்து மலேசியா கடன்களை வாங்கியிருப்பதை அரசாங்கப் பதிவேடுகள் காட்டுவதை பிகேஆர் இன்று சுட்டிக் காட்டியுள்ளது. 2010ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துக்கான இணைப்புப் பகுதிகளை மேற்கோள் காட்டிய பிகேஆர் வியூகப் பிரிவுத் தலைவர் ராபிஸி இஸ்மாயில், உலகப் பொருளகத்திடமிருந்து…

பிகேஆர்: ஷாரிஸாட் குடும்பத்துக்கு சிங்கப்பூரில் 10 மில்லியன் ரிங்கிட் ஆடம்பர…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் விவகாரம் தொடருகிறது. அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்துக்கு சிங்கப்பூரில் 10 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்று சொந்தமாக உள்ளது என பிகேஆர் இன்று தகவல் வெளியிட்டது. 2010ம் ஆண்டு ஜனவரி மாதம்…

“போலீஸ் மீது அவதூறு கூறியதற்காக அஸ்மின் விசாரிக்கப்படுகிறார்”

போலீஸ் மீது அவதூறு கூறியதாக சொல்லப்படுவது தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி விசாரிக்கப்படுகிறார். அந்தத் தகவலை பெரித்தா ஹரியான் நாளேட்டிடம் ஜோகூர் போலீஸ் தலைவர் முகமட் மொக்தார் முகமட் ஷரிப் உறுதி செய்தார்.  செய்தி இணையத் தளம் ஒன்றில் அஸ்மினுடைய கருத்துக்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த…

ஜொகூர் பிகேஆர் கூட்டங்களுக்குக்கான அனுமதி ரத்தால் பிரச்னை

ஜொகூரில் அடுத்த சில தினங்களுக்கு இரவில் சொற்பொழிவுக் கூட்டங்கள் நடத்துவதற்காக பிகேஆர் வரைந்திருந்தத் திட்டம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அங்கு  பிகேஆர் அதன் தேசிய மாநாட்டை நடத்தவிருக்கிறது. இன்றிரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரையில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கான போலீஸ் அனுமதிகள் நேற்றிரவு ரத்து செய்யப்பட்டது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின்…

அரசு சேவை விவகாரத்தில் ‘சேதத்தைக் கட்டுப்படுத்தும்’ முயற்சியில் பிகேஆர் இறங்கியுள்ளது

அரசு சேவை அளவைக் குறைப்பதற்கு எதிரான நிலையை பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அகின் அறிவித்துள்ளார். அந்த விஷயம் மீது பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கைகள் கட்டுக்கோப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாக அவர் சொன்னார்.' சம்சுல் இன்று ஜோகூரில் பிகேஆர் இளைஞர் பிரிவின் தேசியப்…

அம்னோ கோட்டையில் பிகேஆர் தேசியப் பேரவை கூடுகிறது

அம்னோ கோட்டை என்று கருதப்படும் ஜோகூர் மாநிலத்தில் அடுத்த வார இறுதியில் பிகேஆர் தேசியப் பேரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தப் பேரவை, பிகேஆர் செல்வாக்கையும் பக்காத்தான் ராக்யாட் செல்வாக்கையும் உயர்த்தும் என பிகேஆர் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார். இது வரை மற்ற…

பிகேஆர்: “நஜிப்பை வீழ்த்துவதற்கு ஆயுதங்கள் தயார் நிலையில்’ இருப்பதைப் புத்தகம்…

அம்னோ விவகாரங்களுடைய பரிதாபகரமான நிலைக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது பழி போடப்பட்டாலும் அந்த மலாய் தேசியவாதக் கட்சியின் சிரமங்களுக்கு அதன் கூட்டுத் தோல்வியே காரணம் என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறுகிறார். Kesilapan-kesilapan Najib (நஜிப்பின் தவறுகள்) என்ற தலைப்பைக் கொண்ட அந்தப்…

பக்காத்தான் பதிவு: ஆர்ஓஎஸ் “பொய்சொல்கிறது”

பக்காத்தான் ரக்யாட்டைப் பதிவு செய்ய புதிதாக விண்ணப்பம் செய்யப்படவில்லை என்று சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) கூறியிருப்பதை அக்கூட்டணி மறுத்துள்ளது. சொல்லப்போனால், மார்ச் மாதத்திலிருந்து அது பதிவகத்தை விரட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியோன் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நவம்பரில், பக்காத்தான் இடைக்காலத் தலைவர்…

என்எப்சி தோல்வி குறித்து “அம்பலப்படுத்தப் போவதாக” பிகேஆர் மருட்டுகிறது

என்எப்சி என அழைக்கப்படும் தேசிய விலங்குக் கூட மையத் திட்டம் மோசமான தோல்வியைத் தழுவியிருப்பது மீது தெளிவான பதில்கள் கிடைக்கா விட்டால் அந்தத் திட்டம் குறித்துக் கவனம் செலுத்தப் போவதாக பிகேஆர் மருட்டியுள்ளது. அந்தத் திட்டம் "ஒரே குழப்பத்தில்" மூழ்கியிருப்பதாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை வருணித்துள்ளது. நெகிரி செம்பிலான்…

பிகேஆரும் தேர்தல் வேட்பாளர்களும்

பிகேஆர் ஒரு புதிய கட்சி என்பதால் கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில்-2004 இலும் 2008 இலும்-வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களைத் தேடிப் பிடிப்பது அதற்குப் பெரும்பாடாக இருந்தது. அது, அப்போது. இப்போது அப்படி இல்லை என்கிறார் பினாங்கு பிகேஆர் தலைவர் மன்சூர் ஒஸ்மான். தகுதியான வேட்பாளர்கள் குவிந்து கிடக்கிறார்கள். யாரைத் தேர்வு…

மலாய்க்காரர்கள் பினாங்கில் தங்கள் குரல் ஓங்கி ஒலிக்க பிகேஆருக்கு வாக்களிக்க…

பினாங்கு சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள பாரிசான் நேசனிலின் ஒரே பங்காளிக்கட்சியான அம்னோ, ‘டிஏபி தலைமையிலான’ மாநில அரசில் மலாய்க்காரர் பிரதிநிதித்துவம் குறைவு என்று அடிக்கடி குறைகூறுவதுண்டு. ஆட்சிக்குழுவில் இரண்டு மலாய்க்கார்கள் மட்டுமே உள்ளனர்-இருவரும் பிகேஆர் உறுப்பினர்கள். அந்த வகையில் பினாங்கில் இருப்பது  டிஏபி அரசுதானே தவிர பக்காத்தான் ரக்யாட் அரசல்ல…

பினாங்கு-எதிர்ப்பு துண்டறிக்கை குறித்து போலீஸ் புகார்

பினாங்கு மாநில அரசை இழித்துரைக்கும் துண்டறிக்கைகள் குறித்து பினாங்கு பிகேஆர் இளைஞர் பகுதி போலீசில் புகார் செய்துள்ளது.அந்தத் துண்டறிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை பெர்மாத்தாங் பாவில் நடைபெறும் தேசிய ஹரி ராயா விருந்துபசரிப்பின்போது விநியோகிக்கப்படுவதற்காக தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று அது கருதுகிறது. அப்புகாரைச் செய்த பிகேஆர் இளைஞர் தலைவர் அமிர் முகம்மட்…

அன்வாருடைய இரண்டாவது புதல்வி நிபோங் திபாலில் போட்டியிடலாம்

அன்வார் இப்ராஹிமின் இரண்டாவது புதல்வி நுருல் நுஹா அன்வார் அடுத்த பொதுத் தேர்தலில் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம். பகுதி நகர்ப்புறக் கலப்புத் தொகுதியான அதில் போட்டியிடுவதற்குச் சாத்தியமான வேட்பாளராக நுஹாவை பிகேஆர் நிப்பொங் திபால் தொகுதி முன்மொழிந்திருப்பதை பினாங்கு பிகேஆர் தலைவர் மான்சோர் ஒஸ்மான்  நேற்று…

செப்.16-இல் சாபா, சரவாக் அரசியல்வாதிகள் பிஎன்னிலிருந்து விலகத் திட்டமிட்டிருந்தனர், விக்கிலீக்ஸ்

அமெரிக்கத் தூதரகம் அனுப்பி வைத்த ஆவணத்திலிருந்து கசிந்த ஒரு தகவல் 2008, செப்டம்பர் 16-இல் சாபா, சரவாக் அரசியல்வாதிகள் பிஎன்னிலிருந்து விலகத் திட்டமிட்டிருப்பதாக பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியது  உண்மைதான் என்று கூறுகிறது. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அந்த ஆவணம், சாபாவின் 25 எம்பிகளில் பெரும்பாலோர் பிஎன்னைவிட்டு வெளியேறத்…