அமெரிக்காவிடம் ரகசிய ஆவணம் ஒன்றை TNA ஒப்படைத்துள்ளது

அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில் இலங்கைத் தமிழர்களின் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க அரசதுறை அதிகாரிகள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு இலங்கை மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த 30 பக்க ரகசிய ஆவணமொன்றை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. மனிதஉரிமை மீறல்கள்,…

தமிழீழ அரசியல் தந்தையின் உருவச்சிலை சிதைக்கப்பட்டது!

ஈழத்தமிழர்களின் அரசியல் தந்தை என போற்றப்படும் தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் அமரர் தந்தை செல்வநாயகத்தின் உருவச் சிலை இனந்தெரியாத சிங்கள இனவாதிகளினால் சிதைக்கப்பட்டுள்ளது. 1977-ம் ஆண்டு தமிழர்களுக்கென தமிழரசுக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் நினைவாக இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலையின் தலைப்பகுதியை சிங்கள இனவாதிகள்…

தாமஸ் கிண்ணம் – பூப்பந்து விளையாட்டில் ஒரு முக்கியமான போட்டி

[தொகுப்பு : தானப்பன்] தாமஸ் கிண்ணம் என்பது பூப்பந்து விளையாட்டில் ஒரு முக்கியமான போட்டி விளையாட்டு. இந்த தாமஸ் கிண்ண போட்டி இரண்டாடுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டியாகும். தாமஸ் கிண்ணத்தை அனைத்துலக பூப்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் சர் ஜார்ஜ் ஆலன் தோமஸ் 1939-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். தாமஸ்…

ஆஸ்திரேலியாவில் மகிந்தாவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலியாவின் பொர்த் நகரத்தில் கடந்த 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இலங்கை குடியரசுத் தலைவரும் போர்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே கலந்து கொண்டார். இவரின் வருகையடுத்து 28-ம் தேதி வெள்ளிக்கிழமை பெர்த் நகரத்தில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த தமிழ் உணர்வாளர்கள், ஆஸ்திரேலியாவின் ஏனைய சமூக அமைப்புக்களுடன் இணைந்து…

கடாபியின் மகன் சரண் அடைகிறார்!

கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபியின் மகன்களுள் ஒருவரான சயீப் அல் இஸ்லாம் (வயது 39) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.,) சரண் அடைவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறார். கிளர்ச்சியாளர்களினால் கடாபியும் அவரது மற்றொரு மகன் முட்டாசிமும் கொல்லப்பட்ட நிலையில், சயீப் அல் இஸ்லாம் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.…

காமன்வெல்த் புதிய சீர்திருத்தங்கள் குறித்து அகமது படாவி கருத்து

மனித உரிமைகள், எச்.ஐ.வி., பருவநிலை மாற்றம் போன்ற முக்கிய பிரச்னைகளில் ஒன்றிணைந்து முடிவெடுப்பதற்கான காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை காமான்வெல்த் நாடுகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், காமன்வெல்த் கூட்டம் தோல்வியில்தான் முடிவடையும் என முன்னாள் தலைமையமைச்சர் அப்துல்லா அகமது படாவி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்து வருகிறது.…

இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்?

பிமா ராவ் : கோமாளி, இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்? கோமாளி : பீமாராவ், கோயில் யானை மண்டி போட்டு சலாம் போடுவதை பார்த்திருப்பாய். யானை ஒரு பலசாலியான மிருகம், அது பாகன் கொடுக்கும் ஒரு வாழைப்பழத்திற்காக ஏன் சலாம் போடுகிறது. சுதந்திரமாக காட்டில் சுற்றித் திரியும்…

போர்க்குற்ற விசாரணை நடத்த அழுத்தம் கொடுக்கவேண்டும்: கமரோன்

ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் 22-வது உச்சி மாநாட்டில் மனித உரிமைகள் பற்றிய விவகாரம் முக்கிய இடம்பிடித்திருந்தது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்க உலகின் பலநாடுகளின் தலைவர்களும் முன்வைத்த யோசனைகள் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் தலைமையமைச்சர் டேவிட் கமரோன்,…

LTTE பயங்கரவாத அமைப்பு அல்ல : நெதர்லாந்து நீதிமன்றம் பரபரப்பு…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அனைத்துலக பயங்கரவாத இயக்கம் அல்ல என்று நெத‌ர்லா‌ந்து ‌நீ‌திம‌ன்ற‌ம் பரபர‌ப்பு ‌தீ‌ர்‌ப்பு அ‌ளி‌த்து‌ள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நன்கொடை வசூலித்தார்கள் என்ற குற்றச்சா‌ற்‌றின் பேரில், நெதர்லாந்‌தி‌ல் உள்ள 5 இலங்கை தமிழர்கள் மீது, ஹேக் நகரில் உள்ள ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை…

கடாபி ஆதரவாளர்கள் 50 பேர் கொடூரமாக சுட்டுக்கொலை!

சுட்டுக்கொல்லப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் கர்ணல் கடாபியின் ஆதரவாளர்கள் 50 பேர் கிளர்ச்சியாளர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க மனித உரிமை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து நியூயோர்க் நகரிலிருந்து செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பு ஒன்று தனது இணையதளத்தில் ‌தெரிவித்திருப்பதாவது: கடந்த 21-ம் திகதி லிபிய…

ராஜபக்சே மீதான வழக்கை விசாரிக்க முடியாது : ஆஸ்திரேலியா அரசு

இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே மீதான போர்க் குற்ற வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என ஆஸ்திரேலிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்தவரும் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான அருணாசலம் ஜெகதீஸ்வரன் (வயது 63) என்ற பொறியாளர், இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே…

நெகிழியால் செய்யப்பட்ட முதல் விமானம்

போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம், '787 ட்ரீம் லைனர்' நேற்று முதன் முறையாக பயணிகளுடன் விண்ணில் பறந்தது. உலகின் முதல் 'பிளாஸ்டிக் ஜெட்' என்று போயிங் நிறுவனத்தால் வர்ணிக்கப்படும் இந்த விமானத்தின் கட்டுமானப் பொருட்களில் சுமார் அரைப்பகுதி, கார்பன் இழைகள்…

கடாபியின் உடல் புதைக்கப்பட்டது

லிபியாவின் முன்னாள் அரசத் தலைவர் கர்ணல் கடாபியின் உடல் பாலைவனத்தில் ஒரு ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டுவிட்டது. செவ்வாய்க்கிழமை காலை உடல் புதைக்கப்பட்டதாக லிபியாவின் இடைக்கால நிர்வாக மன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கர்ணல் கடாபியின் மகனான முடாசிம்மின் உடலும், கடாபியின் உடல் அருகே புதைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது கடாபியின் சில…

நரகாசூரனும் தமிழனும்!

தேன்மொழி : கோமாளியே! உங்களின் தீபாவளி சிந்தனையுண்டோ; பரிசுப் பொட்டலம் கிடைத்திருக்குமே? கோமாளி :  தேன்மொழி, இந்த நூற்றாண்டின் பதினொன்றாவது தீபாவளி இனிமையானது. கல்லுருண்டையை கையில் எடுத்த உலகமும் உருண்டையானது என்ற நினைப்பு எழாமலேயே, கடித்து சுவைப்பதும், நமக்கும் உருண்டைக்கும் இடையே உள்ள போராட்டமும் எவ்வளவு இனிமையானது. மிகவும்…

துருக்கியில் நிலநடுக்கம்; 1,000 பேர் பலி

துருக்கியின் தென்கிழக்கு மாகாணம் ஒன்றில் நேற்று நிகழ்ந்த 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வான் இலி மாகாணத்தில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தில்…

இலங்கை காவல்துறை மீது குற்றச்சாட்டு

இலங்கையில் காவல் துறையினரின் காவலில் இருப்போர் மீதான சித்திரவதைகளும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் அளவின்றி தொடர்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த ஆண்டின் கடந்த 9 மாதங்களில் மட்டும் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே காவல் நிலையங்களுக்குள் நடந்துள்ள சித்திரவதைகள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் என கிட்டத்தட்ட…