சத்தமாக குரைத்து கின்னஸ் சாதனை படைத்த நாய்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாய், அதிக சத்தத்துடன் குரைத்து, கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின், அடிலெய்டு நகரில் வசிப்பவர் பெலின்டா ப்ரீபெய்ன். இவர், கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த, சார்லி என்ற, ஆறு வயது நாயை வளர்க்கிறார். உலக சாதனை அகடமி நடத்திய, 'அதிக சத்தத்துடன் குரைக்கும்…

இழந்த உயிர்களை தவிர்த்து ஏனைய அனைத்தையும் தமிழர்களுக்கு வழங்க தயாராம்!

போரினால் இழந்த உயிர்களை தவிர்த்து ஏனைய அனைத்தையும் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயார் என அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். போரினால் பறிக்கப்பட்ட சொந்த இடங்களின் உரிமையை மட்டுமின்றி அந்த மக்கள் இதுவரை கண்டிராத அபிவிருத்தியையும் வழங்க முடியுமென மகிந்த ராஜபக்சே சுட்டிக்காட்டியுள்ளார். தேசத்திற்கு மகுடம் …

தி.மு.கவிற்குள் உட்பூசல்; அடுத்த தலைவர் யார்?

இந்தியாவின் பிரபல அரசியல் கட்சியான மு.கருணாநிதியின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்திற்குள் தற்போது உட்பூசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு பொருத்தமானவரை தெரிவுசெய்வது  தொடர்பில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக 'த ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது. தி.மு.கவின் தலைமைத்துவம் தொடர்பில் மு.கருணாநிதியின் புதல்வர்களான…

பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்; ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த ஆண்டு நவம்பரில் கொழும்பில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டுமெனக்கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தொடர்ந்து தமிழர்களுக்கு அந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்டுவரும் வேளையில் இத்தருணத்தைப் பயன்படுத்தி போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு விசாரணைக்கு இலங்கையை ஒப்புக்…

தேவைக்கு ஏற்ப மட்டும் புலிகள் வெளியே வருவார்கள் என்றார் பிரபாகரன்!

விடுதலைப் புலிகள் இல்லாத விடுதலை வேண்டாம். அவர்களே விடுதலைக்காக போராடியவர்கள் அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதை இன்று உலகம் நம்புகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கும் போது அவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை. அப்போது பிரபாகரன் தனது அக்காவின் வளையல்களை வாங்கி விற்றார். கூட வந்தவர் தனது உழவு…

அந்நியப்பட்டுபோன மஇகா-விற்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?

கடந்த 12வது பொதுத் தேர்தல் வரை மலேசிய இந்தியர்களின் காவலனாகவும் அவர்களைப் பிரதிநிதிக்கும் ஒரே கட்சியாகவும் மஇகா விளங்கியது. ஆனால், 12-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் இந்தியர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் இந்தியர்களின் அரசியல் பார்வையும் காலத்திற்கு ஏற்ப மாறுதல்…

தமிழர்க்குத் தேவை தனித் “தமிழர் நாடு”

தமிழர் நாட்டு  தன்மானமுள்ள  மாணவ மணிகளே , அன்பு தம்பிகளே , தங்கைகளே , மாணவ கண்மணிகளுக்கு ஆதரவாக களமிறங்கி நிற்கும் பெற்றோர்களே , பொதுமக்களே , உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகள் ! அண்மைய செய்திகளின் வழி நாம் அறிவது காங்கிரசு அரசு தமிழர்களின் கோரிக்கைகளை…

அனைத்துலக நிலையில் மலேசியத் தமிழர்களைத் தலைக்குனிய வைத்த மலேசியா

முதன் முதலாய் மலேசியத் தமிழனாய்ப் பிறந்ததற்காய் வருத்தப்படுகிறேன். தொடர்ந்து அதே அடையாளத்துடன் மட்டுமே வாழவேண்டும் என்ற அச்சத்துடன் இதை எழுதுகிறேன். கடந்து இரு நாள்களாக உலகெங்கும் வாழும் நண்பர்களின் ஒரே கேள்வி இதுதான். “என்ன அக்கா. மலேசிய அரசாங்கம் இப்படி செய்துவிட்டார்களே என்பதுதான்.” சோமாலியா முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீன முஸ்லீம்களுக்கும்…

கிறிஸ்தவ சபை மீது புத்த பிக்குகளின் குழு தாக்குதல்

கொழும்புக்கு புறநகரான கொட்டாவை – ஹைலெவல் வீதியில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ் சபையின் பிரார்த்தனை மண்டபம் ஒன்றினுள் நுழைந்த புத்த பிக்குகளின் குழு ஒன்று அங்கு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த பிக்குகள் குழு…

கருணாவின் பிரிவுதான் போரை வெற்றி பெற காரணமாம்; சொல்கிறார் சிங்கள…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசில் இணைந்திராவிடில் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது என இலங்கை கடற்தொழில் நீரியல் வளத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில்…

ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்திய அரசுக்கு வரிகொடா இயக்கம்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் அடுத்த கட்டமாக இந்திய அரசுக்கான வரிகொடா இயக்கம் நடத்தப்போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் தழுவிய அளவில்…

பர்வேஸ் முஸாரப் பாகிஸ்தான் திரும்பினார்

தானாகவே 4 வருடங்கள் நாடு கடந்து வாழ்ந்த முன்னாள் பாகிஸ்தானிய அதிபரான பர்வேஸ் முஸாரப் அவர்கள் நாடு திரும்பியுள்ளார். அவரது விமானம் கராச்சியில் தரையிறங்கிய போது அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பி அவரை வரவேற்றார்கள். மே மாதம் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு அவர்…

சுதந்திர விசாரணையை இலங்கை நடத்தாவிட்டால் சர்வதேச பொறிமுறை வலியுறுத்தப்படும்

போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத் தன்மையுடைய விசாரணையை இலங்கை நடத்தத் தவறினால், சர்வதேச சமூகம் அங்கு ஒரு சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தும் என்று அமெரிக்காவின் அரசுத்துறையின் துணைச் செயலர்களில் ஒருவரான றொபர்ட் பிளேக் கூறியுள்ளார். தற்போதைய ஜெனிவா தீர்மானம் ஒரு சுதந்திரமான, நம்பகத்தன்மையுடைய புலன்விசாரணை…

தண்டா புத்ரா திரைப்படமும், அம்னோவின் இனவாதமும்!

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 24.03.2013 மே 13 இனக்கலவரமும், புக்கிட் கெப்போங் தாக்குதலும் அம்னோவுக்குத் தேவை. ஆனால் கம்போங் மேடான் வன்முறை மூடி மறைக்கப்பட வேண்டும். 1969 மே 13 இனக்கலவரத்தை பற்றி கடந்த ஆண்டு வெளிவந்த தண்டா புத்ரா என்ற மலாய்ப்படம் தற்போது…

அதிபர் மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் முடிவு!

இலங்கை பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, சாலைமறியல், முற்றுகை என பல்வேறு அறவழிகளிலும் கடந்த 20 நாட்களாக போராடி வருகிறோம். ஆனால் இந்திய அரசு எந்தவொரு அக்கறையும் காட்டிக்கொண்டதாக தெரியவில்லை என தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…

‘இலங்கை விடயத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு மிக அவசியம்’

இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு தொடர்பில் திருப்தியடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆரம்பம் முதல் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை இந்தியாவோடு மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டதாகவும் அமெரிக்காவின் மத்திய ஆசிய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ராபர்ட்…

நீ ஒருவன் மட்டும் தான்! (ஆதிநேசன்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

அப்பாவித் தமிழர்களை கொன்ற கொலைகாரனுக்கு மலேசியா உடந்தையாவதா?

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிந்து ஆதரவளிக்க வேண்டும் என போராட்டங்கள், கோரிக்கை மனுக்கள் என பல வழிகளிலும் நமது அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டபோதும், அது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டுள்ளது. இச் செயலானது இந்நாட்டில் வாழும் தமிழர்களுடைய உணர்வுக்களுக்கு மலேசியா…

ஜெனீவாத் தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியல்ல, ஆனால் இலங்கைக்கு தோல்வி! –…

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை எதிர்பார்ப்புக்களை நெருங்கி வரவில்லை. இதனால் இத் தீர்மானத்தை நாம் தழிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதமுடியாது. ஆனால் நிச்சயமாக இதனை சிறிலங்காவுக்கான தோல்வியாக நாம் பார்க்கமுடியும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரமதர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று…

ராஜபக்சேவை தூக்கிலிடு! பால்மணம் மாறா பிஞ்சுகள் போராட்டம்!

மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை. சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர்   போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது. ஆம் அனைவரும்…

அமெரிக்கா நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்

இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:- சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள் குறித்து சுதந்திரமான நம்பகரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்ற…

‘ஜெனீவா தீர்மானத்தில் மலேசியாவின் நடுநிலைமை ஏமாற்றமளிக்கிறது’

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 18.03.2013 நேற்று ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை  தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவளித்த வேளையில் மலேசிய சற்றும் தயக்கமற்ற நிலையில் நடுநிலை வகித்தது மலேசிய தமிழர்களுக்குப் பலத்த ஏமாற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட…

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது; மலேசியா நழுவல்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இதேவேளை ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன. தீர்மானத்திற்கு எதிராக 13…