டாக்டர் எம் : பதிவு கிடைக்காவிட்டாலும், பி.என்.- உடன் பேச்சுவார்த்தை…

டாக்டர் மகாதிர் முகமதுவின் கட்சியான, பெஜுவாங் தனா ஆயேர் கட்சி (பெஜுவாங்) பதிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தை ஆதரிக்க விரும்பவில்லை. இந்த விஷயத்தைப் பற்றி, உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜைனுடினுடன் விவாதிக்க மாட்டேன் என்று டாக்டர் மகாதீர் கூறியதாக தி மலேசிய இன்சைட்…

கோவிட் -19 மருத்துவமனையாக எச்.பி.கே.கே. யுகேஎம், சைபர்ஜயா மருத்துவமனைகள்

மலேசியத் தேசியப் பல்கலைக்கழகக் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை (எச்.பி.கே.கே. யு.கே.எம்.) மற்றும் சைபர்ஜயா மருத்துவமனை இரண்டையும், கோவிட் -19 மருத்துவமனைகளாக உருவாக்குவதற்கானச் சாத்தியக்கூறுகளைச் சுகாதார அமைச்சு பரிசீலித்து வருவதாக டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். முகநூல் அறிக்கை ஒன்றில், டாக்டர் நூர் ஹிஷாம், சுகாதார அமைச்சிற்கும் யுகேஎம்…

சையத் சதிக்கை ‘தொல்லை’ செய்வதை நிறுத்திவிட்டு, தடுப்புக்காவல் மரணங்களை விசாரியுங்கள்

மூவார் எம்.பி. சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மானுக்கு எதிரான "துன்புறுத்தல்களை" நிறுத்திவிட்டு, தடுப்புக் காவலில் இறந்த எ கணபதி மற்றும் எஸ் சிவபாலன் வழக்குகள் குறித்து விசாரணை நடத்த, போலீசாருக்குப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவுறுத்த வேண்டுமென செபுத்தே எம்.பி. திரேசா கோக் பிரதமரைக் கேட்டுக்கொண்டார். "தடுப்புக்…

தடுப்பூசி நன்கொடை – பினாங்கு காவல்துறை விசாரணை நடத்தும்

கோவிட் -19 சினோவாக் தடுப்பூசியை, மாநிலத்திற்கு வழங்கியதாகக் கூறப்படும் நபர்கள் மீதான விசாரணைக்கு உதவ, பல தரப்பினரின் சாட்சியங்களைப் பினாங்கு போலீசார் பதிவு செய்வார்கள். பினாங்கு காவல்துறைத் தலைவர் சஹாபுதீன் அப்துல் மனான், பினாங்கு முதலமைச்சர் அலுவலகம் உட்பட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலரிடமிருந்து இதுவரை ஆறு போலிஸ்…

‘முரண்பாடுகள்’ குறித்து கிள்ளான் எம்.பி.யின் கேள்விகளுக்குப் போலீசார் விளக்கம்

மறைந்த எஸ் சிவபாலனின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த கிள்ளான் எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ, மூன்று முரண்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார், கைதியின் மரணம் குறித்து மேல் விசாரணை தேவை என்று அவர் கூறினார். மறுபுறம், சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி முகமது, இந்த முரண்பாடுகளை மறுத்தார். சிவபாலன், 43,…

பி.கே.பி. 3.0: லாபுவான், தீபகற்பத்தில் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தல்கள்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0-ன் (பி.கே.பி. 3.0), வீட்டிலிருந்து பணியாற்றும் புதிய கட்டளை, தனியார் மற்றும் பொதுத் துறைகளைச் சார்ந்த ஏழு மில்லியன் தொழிலாளர்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி இன்று தெரிவித்தார். இந்த நடவடிக்கை, தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவானில்…

இன்று 6,320 புதிய நேர்வுகள், 50 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,320 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். தொடர்ந்து நான்காவது நாளாக, புதிய நேர்வுகள் 6,000-ஐத் தாண்டியுள்ளது. இதற்கிடையில், இன்று 50 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம்…

வணிக நடவடிக்கைகள் காலை 8 முதல் இரவு 8 மணி…

பி.கே.பி. 3.0-ஐ செயல்படுத்துவதில், பொருளாதாரத் துறைகளுக்குப் புதிய எஸ்ஓபிகளைச் சேர்க்கவுள்ளதாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார். "வணிக நடவடிக்கைகளுக்கு காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை மட்டுமே அனுமதி," என்று அவர் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம்…

புலம்பெயர் அமைச்சின் மலேசியப் பிரதிநிதியாக தமிழர் நியமனம் பெற வேண்டும்…

தமிழக அரசால் முதல்முறையாக அமைக்கப்பட்டிருக்கும் புலம்பெயர்ந்த உலகத் தமிழர்கள் நலன்களைக் கையாளும் அமைக்சிச்சின் மலேசியப் பிரதிநிதியாக ஒரு தூயத் தமிழரை நியமிக்க வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் ச விக்னேசுவரன் அவர்களிடம் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் மனு ஒன்றை வழங்கி இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன்…

இன்று 6,493 புதிய நேர்வுகள், 50 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,493 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். கிள்ளான் பள்ளத்தாக்கு அதிக எண்ணிக்கையிலான தினசரி நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, அதனைத் தொடர்ந்து சிலாங்கூரில் 2,163, கோலாலம்பூரில் 641 நேர்வுகள் பதிவாகியுள்ளன.…

போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர் மாரடைப்பால் இறந்தார் – சிலாங்கூர்…

நேற்று, கோம்பாக் காவல் நிலையத்தில், போலிஸ் காவலில் இருந்தபோது இறந்த எஸ் சிவபாலன் என்ற பாதுகாவலரின் பிரேதப் பரிசோதனையில், அவர் மாரடைப்பால் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று சிலாங்கூர் போலீசார் தெரிவித்தனர். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி முகமது ஓர் அறிக்கையில், கோம்பாக் போலிசாரால் கைது செய்யப்பட்ட ஒரு மணி…

அவசர நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்தால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை டிஏபி ஆதரிக்காது

பிரதமர் முஹைதீன் யாசின், நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தை நடத்தினால், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் என்று டிஏபி இன்று உறுதியளித்தது. இன்று ஓர் அறிக்கையில், டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், 42 டிஏபி எம்.பி.க்களும் கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி திட்டங்கள் மற்றும்…

துண்டிக்கப்படாது – 6 மாதங்களுக்கும் குறைவான வீட்டு மின்சாரக் கட்டண…

தீபகற்ப மலேசியாவில், ஜூன் 30 வரையில், 6 மாதங்களுக்கு நிலுவைத் தொகை கொண்ட குடியிருப்பு வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்படாது என்று எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) காலத்தில், மக்களுக்கு உதவ தெனகா நேஷனல் பெர்ஹாட்டுடன்…

தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பான அறிக்கை – சையத் சதிக்கிடம்…

பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, ஏப்ரல் 18-ம் தேதி இறந்த ஏ கணபதிக்கு நீதி கோரி, ஒரு வீடியோ கிளிப்பில் அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருவதாக மூவார் எம்.பி. சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான் இன்று…

அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவரவும் – ஜொகூர் பி.எச். பரிந்துரை

ஜொகூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களும் எம்.பி.க்களும், அவசரகாலத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு மத்திய அரசை வலியுறுத்துவதற்கான ஒரு தீர்மானத்தை விவாதிக்குமாறு வலியுறுத்தப்பட்டனர். மக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் குறித்து விவாதிக்க, நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள், நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூடுவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்று…

போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் சிவபாலன் மரணம்

கோம்பாக் மாவட்டப் போலிஸ் தலைமையகத்தில் (ஐபிடி), விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு மணி நேரத்தில், பாதுகாவலர் ஒருவர் இறந்து போனார். நேற்று காலை 11.20 மணியளவில் விசாரணைக்கு உதவ அழைத்துச் செல்லப்பட்ட சிவபாலன் சுப்பிரமணியம், 43, மதியம் 12.30 மணியளவில் இறந்து போனார். போலீசாரின் சம்பவ அறிக்கையில், அவர்…

கெடாவில் வாழ்வா, சாவா நிலை : ‘மோசமான நிலையில் உள்ள…

கெடாவில், தீவிரச் சிகிச்சை பிரிவு (ஐசியு) படுக்கைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு, மீள்வார்கள் என்ற நம்பிக்கையில்லாத நோயாளிகள் இனி ஐசியுவில் வைக்கப்பட மாட்டார்கள். இந்நிலை கோவிட் -19 நோயாளிகளையும், கோவிட்-19 அல்லாத நோயாளிகளையும் பாதிக்கிறது என்று பெரித்த ஹரியான் செய்திகள் கூறுகிறது. தற்போது போதுமான…

இன்று 6,806 புதிய நேர்வுகள், 59 மரணங்கள்

கோவிட் - 19 | சுகாதார அமைச்சு இன்று 6,806 கோவிட் -19 புதிய நேர்வுகளை அறிவித்துள்ளது, ஆக இதுவரை நாட்டில் மொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 492,302 ஆக உள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக, புதிய நேர்வுகளின் எண்ணிக்கை 6,000-ஐ தாண்டி பதிவாகியுள்ளது. அந்த எண்ணிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கில்…

‘என்னை அவமதிப்பவர்களை அடிக்க சொன்னதில்லை’ – ம.இ.கா. தேசியத் தலைவர்

தனக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பேசியவர்களை அடிக்க, தான் யாருக்கும் உத்தரவிடவில்லை என்று மஇகா தேசியத் தலைவர் ஏ விக்னேஸ்வரன் கூறினார். தனக்கு எதிராக தவறான வார்த்தைகளை வெளியிட்டவர், ஏற்கனவே அவரிடம் மன்னிப்பு கூறிவிட்டதாக, ஒரு போலிஸ் அறிக்கையில் அவர் சொன்னார். மலேசியாகினி பார்த்த போலிஸ் அறிக்கையின்படி, வீடியோவில்…

‘நாடாளுமன்றத்தைத் திற’ பேரணி : 8 பேர் இன்று வாக்குமூலம்…

கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற "புகா புவாசா புகா பார்லிமென்" பேரணி தொடர்பில் சாட்சியமளிக்க, எட்டு பேர் இன்று டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகம் (ஐபிடி) சென்றனர். மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களான அவர்கள்…

ஜொகூர் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வேண்டும் – ஜொகூர்…

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், கோவிட் -19 பரவல் குறித்தும், மாநில மக்கள் மீதான அதன் தாக்கம் குறித்தும் விவாதிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களும் சந்தித்து, கலந்து பேச வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும் அனைத்து ஜொகூர் நாடாளுமன்ற…

எரிந்த ஒராங் அஸ்லி வீட்டின் வீடியோ, புதிய நில அபகரிப்பு…

மார்ட்டின் வெங்கடேசன் | ஒராங் அஸ்லி செமலை பெண் ஒருவர், தனது தாத்தாவின் எரிந்த தோட்ட வீட்டைப் பார்க்கும் காணொளி, சமீப காலமாக அச்சமூகம் நில அபகரிப்பு முயற்சிக்கு ஆளாகி வருகிறது என்பதற்கான அறிகுறியாகும் என்று ஒராங் அஸ்லி அக்கறை மையத்தின் (Centre for Orang Asli Concerns)…

1எம்டிபி தொடர்பான RM114 மில்லியன் பறிமுதல் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி…

1எம்டிபி-உடன் தொடர்புடையது என்று கூறப்படும், பறிமுதல் செய்யப்பட்ட RM114 மில்லியன், அரசு நிதியில் இருந்து பண மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அவ்வழக்கை இன்று தள்ளுபடி செய்தது. இந்த நிதி, 2018-ஆம் ஆண்டில், ஓப்யு ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட்டுக்குச் சொந்தமான,…