தீபகற்பத்தில் பச்சை மண்டலங்களே இல்லை – சுகாதார அமைச்சு

தீபகற்பத்தில் உள்ள மாவட்டங்கள் எதுவும் பசுமை மண்டலங்களாக வகைப்படுத்தப்படவில்லை. நேற்றைய நிலவரப்படி பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா ஆகிய 3 மாநிலங்களும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய 2 கூட்டரசுப் பிரதேசங்களும் கோவிட் -19 பரிமாற்றத்தின் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. மலேசிய சுகாதார அமைச்சு, தனது முகநூல் பக்கத்தில் இன்று…

மொஹமட் அமர் : முழு பி.கே.பி. தேவைப்பட்டால் கிளந்தான் ஒப்புக்கொள்ளும்

கோவிட் -19 தொற்றுநோய் பரவலைத் தடுக்க, முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி) செயல்படுத்த வேண்டியது அவசியம் என்றால் கிளந்தான் மாநில அரசு அதற்கு ஒப்புக்கொள்ளும் என்று துணை மந்திரி பெசார் மொஹமட் அமர் நிக் அப்துல்லா கூறினார். "தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்.) எந்தவொரு முடிவையும் கிளந்தான்…

‘முழு இயல்நிலை முடக்கம்’ – சிலாங்கூர் அரசு உடன்படவில்லை

மாநிலத்தில் கோவிட் -19 தொற்றுநோய் பரவலைத் தடுக்க கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (பி.கே.பி) அல்லது முழு இயல்நிலை முடக்கத்தை அமல்படுத்த சிலாங்கூர் மாநில அரசு உடன்படவில்லை. சிலாங்கூர் கோவிட் -19 பணிக்குழுத் தலைவர் டாக்டர் சுல்கெஃப்ளி அஹ்மத் கூறுகையில், இந்தத் திட்டம் வீட்டு பொருளாதாரத்தைப் பாதிப்பதோடு, பல…

கணபதி வழக்கு குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டும் –…

கடந்த ஏப்ரல் மாதம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இறந்த, போலிஸ் தடுப்புக்காவல் கைதி ஏ கணபதியின் மரணம் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களை விசாரிப்பது குறித்த போலிஸின் நடவடிக்கைகளை மலேசிய அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கண்டித்துள்ளது. கணபதியின் மரணம் குறித்த மூன்று கட்டுரைகள் தொடர்பாக, காவல்துறை தனது இரு பத்திரிகையாளர்களிடமிருந்து…

சபாவுக்குள் நுழைபவர்களுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்

கோவிட் -19 பரவலைத் தடுக்கும் முயற்சியாக, சபா அரசு நாளை முதல் மாநிலத்திற்குள் நுழையும் தனிநபர்கள் மீது 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் உத்தரவை அமல்படுத்தியுள்ளது என்று மாநில அரசு மற்றும் வீட்டுவசதி அமைச்சர் மாசிடி மஞ்சுன் தெரிவித்தார். சபாவைச் சேர்ந்தவர்கள், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மற்றும் மாநிலத்தில் வசிக்கும் பணி…

‘புகா புவாசா புகா பார்லிமென்’ பேரணி – போலீஸ் எண்மரிடம்…

ஏப்ரல் 30-ம் தேதி, நடைபெற்ற 'புகா புவாசா புகா பார்லிமென்' எதிர்ப்பு பேரணி தொடர்பாக விசாரிக்க, போலீசார் எட்டு பேரை அடையாளம் கண்டுள்ளனர். மே 20-ஆம் தேதி, மதியம் 1 மணிக்குப் புக்கிட் அமானில் தன்னோடு சேர்த்து மேலும் 6 பேருடன் விசாரிக்கப்படுவார் என்று மூடா சார்பு பொதுச்செயலாளர்…

கணபதி மரணப் பிரச்சினை : மலேசியாகினி நிருபர்களிடம் போலீசார் வாக்குமூலம்…

மலேசியாகினி செய்தித் தளம் வெளியிட்ட மூன்று கட்டுரைகள் குறித்து விளக்கமளிக்க, போலீசார் இன்று இரண்டு மலேசியாகினி பத்திரிகையாளர்களை அழைத்தனர். பிப்ரவரி மாதம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த ஏ கணபதி, 40, தொடர்பானவை அந்த மூன்று கட்டுரைகளும். மலேசியாகினி துணை ஆசிரியர்கள் ருஸ்னிஸாம் மஹாத்…

இன்று 4,865 புதிய நேர்வுகள், 47 மரணங்கள்

கோவிட் 19 | சுகாதார அமைச்சு இன்று 4,865 கோவிட் -19 புதிய நேர்வுகளை அறிவித்துள்ளது. இதற்கிடையில், இன்று 47 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இது நாட்டில் பதிவான ஆக அதிக மரண எண்ணிக்கையாகும். இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 1,994 பேர் பலியாகியுள்ளனர். இந்த இறப்புகள் சிலாங்கூர் (18),…

இரண்டு மில்லியன் இளைஞர்கள் RM150 மின்-பணக்கடன் பெறலாம்

தகுதிவாய்ந்த சுமார் இரண்டு மில்லியன் மலேசிய இளைஞர்களுக்கு, ஜூன் 1 முதல் ஜூலை 22 வரை இபெலியா (eBelia) திட்டத்தின் கீழ், RM150 மின்-பணக் கடன் (e-tunai) பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கடன் தொகையை ஜூலை 31 வரையில் செலவிடலாம். "தகுதியுள்ளவர்கள் இ-ரொக்க…

12 மூத்த அதிகாரிகள் இடமாற்றம் – பி.டி.ஆர்.எம். அறிவிப்பு

ஜூன் 21 முதல், இடமாற்றம் செய்ய பட்டியலிடப்பட்டுள்ள அரச மலேசியக் காவல்துறையின் 12 மூத்த அதிகாரிகளில் கெடா சிறப்பு புலனாய்வு மற்றும் செயல்பாட்டுக் கிளையின் துணைத் தலைவர் ஏ.சி.பி. அப்துல் கஃபர் இப்ராஹிமும் அடங்குவார். அப்துல் கஃபர் பஹாங் சிறப்பு மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு கிளை துணைத் தலைவராக…

இன்று 4,446 புதிய நேர்வுகள், 45 மரணங்கள்

கோவிட் 19 | நோன்புப் பெருநாள் விடுமுறை முடிந்த நிலையில், நாட்டில் இன்று புதிதாக 4,446 கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 201 புதிய நேர்வுகளுடன் திரெங்கானுவில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிய நேர்வுகளில் பெரும்பகுதி இன்றும் கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து (44 விழுக்காடு) வந்துள்ளது,…

சிலாங்கூரில் முழு பி.கே.பி. அமலாக்கத்தை அமைச்சர் பரிசீலித்து வருகிறார்

மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நேர்வுகள் பதிவாகி வருவதை அடுத்து, சிலாங்கூரில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) செயல்படுத்த வேண்டியிருக்கலாம் என்று சுகாதார அமைச்சு கருதுகிறது. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பி.கே.பி.யால், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க இயலாது எனக் கருதப்படுவதால், கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகளை முன்மொழிய வேண்டிய…

RM9.4 மில்லியன் வரி நிலுவை – எல்.எச்.டி.என். நீதிமன்றம் சென்றது

நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் முஹம்மது ஷஃபி அப்துல்லாவிடமிருந்து, RM9.41 மில்லியன் வரி நிலுவைத் தொகையை வசூலிக்க உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.) நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், எல்.எச்.டி.என். இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக ஷஃபியின் வழக்கறிஞர் முஹம்மது ஃபர்ஹான் முஹம்மது ஷாஃபி இன்று உறுதிப்படுத்தினார். கடந்த வாரம்,…

தனியார் மருத்துவமனைகள் : நெரிசலைக் குறைக்க கோவிட்-19 அல்லாத நோயாளிகளை…

கோவிட்-19 தொற்று அல்லாத நோயாளிகளைத், தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்குமாறு மலேசியத் தனியார் மருத்துவமனை சங்கம், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களைக் கேட்டுக்கொள்கிறது. அதன் தலைவர் டாக்டர் குல்ஜித் சிங், சுகாதார அமைச்சின் இரண்டு சுற்றறிக்கைகளின் அடிப்படையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று கடந்த ஆண்டு மற்றும் சமீபத்தியப்…

அஸ்ட்ராஸெனெகா அனைத்து மக்களுக்கும் திறக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டு போலியானது

மலேசியாவில் உள்ள அனைவருக்கும், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி ஆர்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என சமூக ஊடகத் தளங்களில் பரவிவரும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாதச் சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.எ.வி.) தெரிவித்துள்ளது. நேற்று ஓர் அறிக்கையில், அக்குழு அனுப்பிய இணைப்பு https://www.vaksincovid.gov.my/en/register என்பது தேசியக் கோவிட்…

இறப்பு எண்ணிக்கை உயர்ந்தது, மருத்துவமனையில் உடல்கள் கொள்கலன்களில் வைக்கப்பட்டன

உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தின் முக்கிய மருத்துவமனையான சுங்கை பூலோ மருத்துவமனையில் உடல்களை வைக்க கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. "சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறை, கோவிட் -19 காரணமாக இறந்தவர் சடலங்களை வைக்க கூடுதலாக ஒரு சிறப்பு கொள்கலனை…

இன்று 3,780 புதிய நேர்வுகள், 36 மரணங்கள்

கோவிட் 19 | சுகாதார அமைச்சு இன்று 3,780 கோவிட் -19 புதிய நேர்வுகளை அறிவித்துள்ளது. இன்று 36 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 1,902 பேர் பலியாகியுள்ளனர். இன்று 3,990 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 520 பேர் சிகிச்சை பெற்று…

அறிவார்ந்த ஆசிரியம், புதிய தலைமுறை ஆக்கம் – குமரன் வேலு

ஆசிரியர் தினச் சிறப்புக் கட்டுரை | இந்த முழக்கவரி, 21-ஆம் நூற்றாண்டுக்கு எவ்வளவு பொருத்தம் என்பதைப் பார்ப்போம். Berguru எனும் சொல்லாடல் ஆசிரியராக இருத்தலும் ஆசிரியரைப் பெற்றிருத்தலும் எனும் இருமைப் பண்பினைக் குறிக்கிறது. #ஆசிரியராக இருத்தல் ஆசிரியராக இருந்தால் தன்னிடம் இருக்கும் ஆர்ந்த அறிவின் உதவியால் புதியத் தலைமுறையை…

ஆசிரியத் தெய்வமே உன்றன் மலரடிப் பணிகின்றேன்

காசு கொடுத்துப் படிக்கவில்லை - நான் காசுக் காகவும் படிக்கவில்லை பாசத் திற்கா கவேபடித்தேன்- உன் பாராட் டுக்கா கவேபடித்தேன் ஆசான் உன்றன் முகம்பார்க்க- நான் அதிகா லையிலே எழுந்திடுவேன் கூசும் குளிரை மறந்திட்டேன்- தினம் குளிர்ந்த பூவாய் மலர்ந்திட்டேன்! வாடா குமரா என்றதுமே - என் வாடி…

‘தோல்வியுற்ற அரசு’ எதிர்ப்பு : 13 பேர் போலீஸ் ஜாமீனில்…

சமூக ஊடகங்களில் பரவிய, ஜொகூர், பத்து பஹாட், பாரிட் ராஜாவில் நடந்த கலவர சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக, சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உதவுவதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 பேர் இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். விசாரணை அதிகாரி விசாரணைகளை முடித்ததை அடுத்து, அவர்கள் அனைவரும் இன்று…

பி.கே.பி. எஸ்ஓபியை உயர்க்கல்வி டிஜி மீறினார் – குற்றச்சாட்டுகளைப் போலீஸ்…

கடந்த வியாழக்கிழமை, பொது பல்கலைக்கழகம் ஒன்றில், நன்கொடை வழங்கல் விழா மற்றும் நோன்புப் பெருநாள் விருந்தில் கலந்து கொண்டபோது, ​​உயர்க்கல்வி தலைமை இயக்குநர் (டிஜி) பேராசிரியர் டாக்டர் ஹுசைனி ஒமர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் போலீசார் விசாரிக்கின்றனர்.…

பி.கே.ஆர்.சி. மேப்ஸின் நிலை மேலும் சவாலானது, படுக்கைகள் 1,000-ஆக உயர்த்தப்படுகின்றன

மலேசியா செர்டாங் வேளாண் எக்ஸ்போ பூங்காவில் (மேப்ஸ்) உள்ள கோவிட் -19 தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையத்தின் (பி.கே.ஆர்.சி.) நிலைமை, 3-வது வகை கோவிட் -19 நோயாளிகளை அதிகமாக அனுமதிப்பதனால் பெருகிய முறையில் சவாலாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் பி.கே.ஆர்.சி. மேப்ஸில் ஜனவரி 3-ஆம் தேதி, வகை 3 நோயாளிகளுக்கு…

ஒராங் அஸ்லி கட்டாய வெளியேற்றம் : சிலாங்கூர் அரசு மனிதாபிமானமற்றது…

பாகான் லலாங் கம்போங் ஒராங் அஸ்லியில் இருந்து, மாஹ் மேரி பழங்குடியினர் வெளியேற வேண்டுமென நோட்டீஸ் வழங்கிய சிலாங்கூர் அரசாங்கத்தின் நடவடிக்கை மனிதாபிமானமற்றது என்று ம.சீ.ச. இளைஞர் அணியின் மத்தியச் செயற்குழு உறுப்பினர் சீயு ஷேன் காய் கூறினார். சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, ஒராங் அஸ்லி சமூகத்தினர் தங்கள்…