ஏஜி குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்கள் வழி போலீஸ் அதிகாரத்தைப்…

ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் அலுவலக ஆணைக்கு இணங்க பல பிரபலமான கிரிமினல் வழக்குகள் மறைக்கப்பட்டிருக்கலாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீஸ் புலனாய்வுகளில் ஏஜி நிலை வலுப்படுத்தப்பட்டுள்ளதே அதற்குக் காரணம். அதனால் அவரது அலுவலகம் எந்த நேரத்திலும் ஒரு…

ஸ்கார்ப்பியோன் புலனாய்வு கடுமையான விவகாரம் அல்ல என்கிறார் வெளியுறவு அமைச்சர்

இரண்டு ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகளை கொள்முதல் செய்ததில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது Read More

லியாவ் இறுதியில் WWW15 எண் தகட்டை கை விட்டார்

WWW15 எண் தகடு மீது தொடர்ச்சியாக குறை கூறப்பட்ட பின்னர் சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய், அந்த கவர்ச்சியான எண்ணை கை விடுவதாக அறிவித்துள்ளார். தாம் அந்த எண் தகடுக்கு ஏலம் கேட்கவில்லை என்றும் தமது அதிகாரத்துவ காருக்கு அந்த எண்ணைக் கோரியதாக மசீச துணைத் தலைவருமான…

குகன் வழக்கு: காயம் விளைவித்த கான்ஸ்டபிளுக்கு மூன்றாண்டுச் சிறை

ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றம், போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோன ஏ.குகன் வழக்கில், குகனுக்குக் காயம் விளைவித்த போலீஸ்காரருக்கு மூன்றாண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. குற்றவாளி வி.நவீந்திரன் குற்றச்சாட்டை மறுத்ததுடன் சரி ஆதாரங்கள் எதையும் முன்வைக்கவில்லை என்று கூறிய நீதிபதி அஸ்லாம் சைனுடின், காயம் விளைவித்ததாகக் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில்…

குவாந்தானில் சீன உயர்நிலைப்பள்ளி அமையும் சாத்தியம் இருக்கவே செய்கிறது

குவாந்தானில் சீன உயர்நிலைப்பள்ளிக்கு ஒப்புதல் கிடைக்கும் சாத்தியம் இன்னமும் உண்டு என்று வலியுறுத்திய மசீச துணைத் தலைவர் லியோங் தியோங் லாய், அவ்விவகாரத்துக்குத் தீர்வுகாண கட்சிக்கு சிறிது அவகாசம் தர வேண்டும் என்று சீனர் சமூகத்தைக் கேட்டுக்கொண்டார். சொங் ஹுவா சுயேச்சை உயர்நிலைப் பள்ளியின் கிளை ஒன்று குவாந்தானில்…

WWW15 எண் தகடு மீது லியாவ் இன்னும் எந்த முடிவும்…

சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய், WWW15 எண் தகட்டுக்கு தாம் ஏலம் கேட்டுள்ளது தொடர்பில் சாலைப் போக்குவரத்துத் துறை வழங்கியுள்ள மூன்று தேர்வுகளில் இதுவரையில் எதனையும் தேர்வு செய்யவில்லை. தமது அதிகாரிகளுக்கு இது வரையில் லியாவிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என அந்தத்  துறையின் தலைமை இயக்குநர்…

தற்காப்பு ஆவணங்கள் மீதான அவசரத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பிரஞ்சு நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுவது மீது தற்காப்பு அமைச்சு பதில் அளிக்க வேண்டும் எனக் கோரி மக்களவையில் சமர்பிக்கப்பட்ட அவசரத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிரந்தர விதிகள் 18(1)ன் கீழ் லெம்பா பந்தாய் உறுப்பினர் நுருல் இஸ்ஸா அன்வார் கடந்த…

நஸ்ரி: அவசரப்பட்டு சட்டதிருத்தத்தை மீட்டுக்கொள்ளவில்லை

தேர்தல் குற்றச் சட்ட(திருத்த) மசோதாவை அவசரப்பட்டு மீட்டுக்கொள்ளவில்லை, தேர்தல் ஆணைய(இசி)த்தின் ஒப்புதலுடன்தான் மீட்டுக்கொள்ளப்பட்டது என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதை மீட்டுக்கொள்ளுமுன்னர் மாற்றரசுக் கட்சித் தலைவருடனும் இசியுடனும் கலந்தாலோசிக்கப்பட்டதாக பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார். ஏப்ரல் 19-இல், மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மேலவைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஒரு…

ஜோகூர் ஆட்சியாளர் நிஜாரிடம் சொல்கிறார்: ஜோகூர் மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்

ஜோகூர் சுல்தான் 'WWW1' என்ற எண் தகட்டை ஏலத்தில் எடுத்தது மீதான தமது டிவிட்டர் செய்திகளுக்காக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் ஜோகூர் மக்களிடம் மன்னிப்புக் கேட்பது பற்றி பரிசீலிக்க வேண்டும். டிவிட்டர் வழியாக நிஜார் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது உண்மையானதாக இல்லை என…

அன்வார்: கீழ் நிலையில் உள்ள போலீஸ்காரர்கள் மீது மட்டும் குற்றம்…

தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணியின் போது பட/பத்திரிக்கையாளர் ஒருவரை  அடித்ததாக கீழ் நிலையில் போலீஸ்காரர்கள் மீது மட்டும் குற்றம் சாட்டுகின்ற பெயரளவுக்கான நடவடிக்கை போதுமானது அல்ல என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். அந்த நடவடிக்கை பேரணியின் போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து…

அடுத்த மாற்றம்: என்எப்சி நெடுங்கதை வெள்ளித் திரையில் என்கிறது பிகேஆர்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட ஊழல் மீது திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க பிகேஆர் திட்டமிட்டுள்ளதாக அந்தக் கட்சியின் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் அறிவித்துள்ளார். அந்தத் திரைபடம் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஷாரிஸாட்டின் கணவரும்…

நாடற்றவர்கள் புத்ரா ஜெயா சென்றுதான் தீர்வுகாண வேண்டும்

நேற்று அலோர் ஸ்டாரில், நாடற்றவர்களுக்கு அவர்களைக் குடிமக்களாக அங்கீகரிக்கும் சட்டப்பூர்வ ஆவணங்களைப் பெற்றுத்தர பிகேஆர் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், மத்திய தலைமை மன்ற உறுப்பினர் லத்திபா கோயா, கோலா கெடா எம்பி அஹமட் காசிம் முதலியோர் மைகார்ட் வைத்துள்ள 100பேரை அழைத்துக்கொண்டு…

பினாங்கு டிஏபி நடத்திய கூட்டத்துக்கு பெருந்திரளாக மக்கள் திரண்டனர்

தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் உட்பட பல இந்தியர் பிரச்னைகளை விவாதிப்பதற்காக நேற்று பினாங்கில் டிஏபி ஏற்பாடு செய்த கூட்டத்தில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். ஜார்ஜ் டவுனில் உள்ள பினாங்கு சீனர் நகர மண்டபத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்டனர். மாநில டிஏபி தலைவரும்…

சிஎம்-முக்கு எதிரான பினாங்கு அம்னோவின் ரிம30மில். வழக்கு தள்ளுபடி

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக பினாங்கு அம்னோ தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான் தொடுத்திருந்த ரிம30மில்லியன் அவதூறு வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று காலை நீதிபதி அமிலியா டி ஹொங் கியோக் அப்துல்லா, தமது அறையில் வழக்கைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்தார். லிம்மின்…

அந்நிய நாடுகளில் அம்னோ நடவடிக்கைகள் பதுங்குவதற்காக வீடு திரும்புகின்றன

பிஎன் வீழ்ச்சி அடையும் போது நாட்டுக்கு வெளியில் பாதுகாப்பாக இருக்க இயலும் என அவர்கள்கருதினர். ஆனால் அவர்களது சட்டவிரோத நடவடிக்கைகள் எங்கு சென்றாலும் அவர்களைத் தொடரும் எனத் தோன்றுகிறது முதலில் பிரஞ்சு நீர்மூழ்கிகள் இப்போது ஆஸ்திரேலிய வங்கி நோட்டுக்கள் வேட்டைக்காரன்: அவர்களுடைய பேராசை மலேசியக் கடற்கரைகளையும் தாண்டிச் சென்றது.…

சபாவில் இரண்டு பிஎன் தலைவர்கள் இன்று கட்சி மாறுவார்களா ?

உப்கோ எனப்படும் United Pasokmomogun Kadazandusun Murut Organisation அமைப்பின் துணைத் தலைவர் வில்பிரெட் பூம்புரிங்-கும் சபா அம்னோ தலைவர் லாஜிம் உக்கினும் எதிர்த்தரப்புக்குத் தாவக் கூடும் என்ற வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் இன்று அந்த மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு பிகேஆர் நிகழ்வுகளில் கலந்து…

எஸ்ஏஎம்: பினாங்கு அரசாங்கம் தவறியுள்ளதால் வெள்ளம் அதிகமாகும்

பினாங்கு மாநில அரசாங்கம் வெள்ளப் பிரச்னையை தடுக்கத் தவறியுள்ளதால் அடுத்து வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் அதிகமான வெள்ளத்தை எதிர்பார்க்கலாம் என Sahabat Alam Malaysia என்ற சுற்றுச் சூழல் போராட்ட அமைப்பின் தலைவர் எஸ் எம் முகமட் இட்ரிஸ் கூறுகிறார். வெள்ளத்தைத் தடுப்பதற்கு உருப்படியான அல்லது நிலையான நடவடிக்கைகள்…

தெங்: நான் கோ-வைக் காட்டிலும் உறுதியாகச் செயல்படுவேன்

பினாங்கு பிஎன்-னின் முன்னாள் தலைவரும் முன்னாள் மாநில முதலமைச்சருமான கோ சூ கூன்-ஐக் காட்டிலும் தாம் உறுதியாக செயல்படப் போவதாக நடப்பு மாநில பிஎன் தலைவர் தெங் சான் இயாவ் கூறியிருக்கிறார். கோ பினாங்கிற்கு மேம்பாட்டைக் கொண்டு வந்துள்ள போதிலும் மக்கள் அவருடைய தலைமைத்துவப் பாணி குறித்து ஏமாற்றம்…

பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் தங்கள் சின்னங்களின் கீழ் தேர்தலில் போட்டியிடும்

பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகள் அடுத்து வரும் தேர்தலில் தங்களது சின்னங்களின் கீழ் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்காத்தான் ராக்யாட் கூட்டணிக்கு நாளை சங்கப் பதிவதிகாரி அதிகாரத்துவ அங்கீகாரத்தை அளித்தாலும் அந்த நடைமுறையே பின்பற்றப்படும் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார். கூட்டுச் சின்னத்தின்…

WWW15 சர்ச்சை: போக்குவரத்து அமைச்சர் பேசுகிறார்

சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் கோரிய WWW15 என்ற கவர்ச்சியான எண் தகடு மீது யாரோ ஒருவர் பொய் சொல்லியிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹார் கூறியிருக்கிறார். அதன் மூலம் அவர் தமது மசீச சகாவை மறைமுகமாகச் சாடியிருக்கிறார். அந்தத் தகவலை வெளியிட்ட சின் சியூ…

உண்மையில் மலாய் முஸ்லிம்கள் யாருக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் ?

"மக்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு பொதுவான போராட்டத்துக்குக் கை கோர்த்துக் கொள்ளும் போது தான் உண்மையிலேயே மலேசியா விடுதலை பெற்றதாகக் கருதப்படும்." துணைப் பிரதமர்: இந்த நாட்டின் எதிர்காலம் மலாய்-முஸ்லிம் ஒற்றுமையைச் சார்ந்துள்ளது ஜேம்ஸ்1067: அவர்களைப் பொறுத்த வரையில் நாட்டின் நிலைக்களன்களான நீதித் துறை, போலீஸ், மலேசிய…

இசி: அடையாளக் கார்டு எண்கள் பிறந்த தேதியுடன் ஒத்துப் போகவில்லை…

மை கார்டு எண்களும் பிறந்த தேதியும் ஒத்துப் போகாத பல வாக்காளர்கள் சட்டப்பூர்வமானவர்களே என்று தேசியப் பதிவுத் துறை சொல்வதாக இசி என்னும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தவறு என அரசியல் ஆய்வாளர் ஒங் கியான் மிங் அம்பலப்படுத்தியுள்ள நான்கு வாக்காளர் பற்றிய விவரங்கள் தேசியப் பதிவுத் துறையில்…

கடற்படை ஆவணக் கசிவை போலீஸ் விசாரிக்க வேண்டும்:முன்னாள் போலீஸ் அதிகாரி

இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாகவும் வெளிநாடு ஒன்றுக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவதைப் போலீஸ் விசாரிக்க வேண்டும். அதற்கு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் போன்ற உயர் அதிகாரி தலைமை தாங்க வேண்டும். இவ்வாறு மலேசியாகினியிடம் கூறிய முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜைன் இப்ராகிம்,…