மக்கள் சக்தி தலைவர் ஆர்.எஸ். தானேந்திரன், பாரிசான் நேசனலில் (பிஎன்) மஇகாவை மாற்றும் எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்று வலியுறுத்தியுள்ளார். மஇகா மற்றும் பாரிசான் இடையே நடந்து வரும் உள் பதட்டங்களை கட்சி பயன்படுத்திக் கொள்ளாது என்றும், இந்திய சமூகத்தின் நலன்களை முன்னேற்றுவதற்காக மஇகாவுடன் இணைந்து பணியாற்ற…
லிம் குவான் எங் விளம்பரத்தை ( billboard ) வாரியம்…
பினாங்கில் தைப்பூசக் கொண்டாட்டங்களின் போது பக்காத்தான் ராக்யாட் தலைவர்களுடைய படங்களைக் கொண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டதை பினாங்கு இந்து அற வாரியம் தற்காத்துப் பேசியுள்ளது. அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் பெரிய படமும் மற்ற தலைவர்களுடைய சிறிய படங்களும் இடம் பெற்றுள்ளன. நேற்று தைப்பூச கொண்டாட்டங்கள்…
சுகுமாரன் குடும்பம்: மரண விசாரணை வேண்டாம் கொலை தொடர்பான புலனாய்வு…
அண்மையில் போலீஸ் காவலில் இருந்த போது மரணமடைந்த சி சுகுமாரன் குடும்பத்தினர், அந்த விவகாரம் மீது மரண விசாரணை நடத்துவதற்குப் போலீசார் முன் வந்ததை நிராகரித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு முழுமையான கொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். "சுகுமாரன் இறந்தது தொடர்பில் மரண…
கிறிஸ்துவர்களுடன் உறவுகளைச் சீர்செய்யும் முயற்சியில் தோக் குரு
பாஸ் ஆன்மிகத் தலைவர், நிக் அசீஸ் நிக் மாட், பினாங்கு சென்று பக்காத்தான் பங்காளிகளையும் கிறிஸ்துவ சமூகத்தினரையும் சந்தித்துள்ளார். அவர், மலாய்மொழி பைபிளில் இடம்பெற்றுள்ள ‘அல்லாஹ்’என்ற சொல்லால் ஏற்பட்ட சர்ச்சையைச் சரிப்படுத்தும் முயற்சியாகத்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார் எனத் தெரிகிறது. நேற்று, தைப்பூசத் திருநாளில் டிஏபி தேசிய தலைவர்…
ஹிண்ட்ராப் மீதான தடையை அகற்றியதற்கு நன்றி, இப்போது மன்னிப்புக் கேளுங்கள்
"அம்னோ ஆட்சி அந்தப் போராளிகள் மீது தவறாகக் குற்றம் சாட்டி, அவர்களது வாழ்க்கையைச் சிரமமாக்கி விட்டது. அதற்கும் அது பதில் சொல்ல வேண்டும்." ஹிண்ட்ராப் மீதான நான்கு ஆண்டுத் தடையை அரசாங்கம் அகற்றியது சின்ன அரக்கன்: ஹிண்ட்ராப் மீதான தடையை அரசாங்கம் நீக்கியிருப்பது இந்திய சமூக ஆதரவைப் பெறுவதற்கான…
‘அப்படி என்றால் மற்ற நாடுகளில் உள்ள எல்லா முஸ்லிம்களும் சமய…
"அல்லாஹ்' என்னும் சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்துவதை முஸ்லிம்கள் எப்படித் தடுக்க வேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் 'பொறுமை இழந்தால்' என்ன நடக்கும் என்பதையும் அவர் விளக்க வேண்டும்." முஸ்லிம்கள் 'அல்லாஹ்' என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதித்தால் சமய நம்பிக்கையற்றவர்களாகி விடுவர் தோலு: இந்த நாட்டில் முஸ்லிம்…
தோக் குரு (Tok Guru) வின் 82வது பிறந்த நாள்…
பினாங்கில் இன்று பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்-கைச் சந்தித்தார். பிற்பகல் மணி மூன்று வாக்கில் கர்பால் வீட்டுக்குச் சென்ற நிக் அஜிஸ் கிட்டத்தட்ட அங்கு 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தார். பினாங்கு தைப்பூசக் கொண்டாட்டங்கள் காரணமாக…
இப்ராஹிம் அலிக்கு எதிராக ஏழு புகார்கள்
'அல்லாஹ்' என்னும் சொல்லைக் கொண்ட மலாயிலும், ஜாவியிலும் எழுதப்பட்ட பைபிள் பதிப்புக்களை எரிக்குமாறு சர்ச்சைக்குரிய அறைகூவலை விடுத்த பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி-க்கு எதிராக ஏழு போலீஸ் புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹானாபி பட்டர்வொர்த் போலீஸ் நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்த போது அதனை…
வேத நூல்கள்: நீங்கள் கற்றுக் கொள்ள முடியும் போது அவற்றை…
பட்டர்வொத்தில் பைபிள் எரிப்பு நடவடிக்கை நிகழவில்லை என வதந்திகள் பரவிய வேளையில் கோலாலம்பூர் கேஎல்சிசி பூங்காவில் 40 பேர் கூடி அந்த நிகழ்வுக்கு எதிர்ப்புக் காட்டும் வகையில் பல புத்தகங்களை-பெரும்பாலும் சமய வேத நூல்கள்- வாசித்தனர். "ஒரு புத்தகத்தை குறிப்பாக மக்களில் ஒரு பிரிவு புனிதகாகக் கருதும் நூல்…
பைபிள் எரிப்பு விழா நடக்கவில்லை
பட்டர்வொர்த்தில் இன்று நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய பைபிள் எரிப்பு விழா நிகழவில்லை. பைபிள் எரிப்பு விழா நடைபெறவிருந்த தேவான் டத்தோ அகமட் படாவிக்கு நிருபர்கள் காலை மணி 9.30 வாக்கில் சென்ற போது அங்கு பல போலீஸ் அதிகாரிகள் காவல் சுற்றுப் பணிகளை மேற்கொண்டிருந்ததைக் கண்டனர். அதற்கு…
ஹிண்ட்ராப் மீதான தடையை அரசாங்கம் அகற்றியுள்ளது
நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தடை செய்யப்பட்டும், சட்டவிரோத அமைப்பு என்றும் முத்திரை குத்தப்பட்டிருந்த ஹிண்ட்ராப் மீதான தடையை அரசாங்கம் அகற்றியுள்ளது. இத்தகவல் அந்த அமைப்பிற்கு நேற்றைய தேதியிடப்பட்ட உள்துறை அமைச்சின் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டதாக ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார். ஆனால், அவர் தற்போது…
இரண்டாவது சவப் பரிசோதனை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என சுகுமார்…
போலீசார் பின்தொடர்ந்த பின்னர் மர்மமான முறையில் மாரடைப்பால் மரணமடைந்த 39 வயது சுகுமார் செல்லையாவின் குடும்பத்தினர் உண்மையைக் கண்டறிவதற்கு இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். கூடிய விரைவில் அந்த இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்பட முடியும் என்றும் அந்தக் குடும்பத்தினர் நம்புவதாக அவர்களுடைய…
பிஎன் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும், அரசு நிறுவனம் நம்பிக்கை
13வது பொதுத் தேர்தலில், பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும் ஆற்றல் உண்டு என்கிறார் சிறப்பு விவகாரத் துறை (ஜாசா) தலைமை இயக்குனர் புவாட் ஹசான். சீனர்களின் குறைந்தது 30விழுக்காட்டு வாக்குகளையும், மலாய்க்காரர்களிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும் முறையே 65விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றால் பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்து விடும்…
எந்த மொழியில் இருந்தாலும் பைபிள் பைபிள்தான்: பெர்காசாவுக்கு அறிவுறுத்தல்
தாம், பெர்காசா தலைவர் இப்ராஹிம் அலி மீது அவதூறு கூறியுள்ளதாக நாடு முழுக்க செய்யப்பட்டுள்ள போலீஸ் புகார்களை அபத்தம் என்று ஒதுக்கித்தள்ளியுள்ளார் மனித உரிமை வழக்குரைஞர் சித்தி ஸபேடா காசிம். “அது மலாய்மொழி பைபிளா, ஆங்கிலமொழி பைபிளா, கடாசான்மொழி பைபிளா, தமிழ்மொழி பைபிளா என்பது பிரச்னையில்லை. விவகாரமே அவர்…
பைபிள் எரிப்பு மீது பெர்க்காசா சொந்தப் புகார்களை நாடு முழுவதும்…
பைபிள் எரிப்பு மீது பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவருக்கு எதிராக செய்யப்பட்ட போலீஸ் புகாருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பெர்க்காசா உறுப்பினர்கள் நாடு முழுவதும் தங்கள் சொந்தப் புகார்களைச் சமர்பித்துள்ளனர். மனித உரிமை வழக்குரைஞரான சித்தி ஸாபேடா காசிம், தங்கள் தலைவருக்கு எதிராக…
தேர்தல் வேட்பாளர் ஆய்வு முடிவுகளைக் கசியவிடவில்லை என எம்ஏசிசி கூறுகிறது
சாத்தியமான தேர்தல் வேட்பாளர்கள் பற்றிய தனது தொடக்க ஆய்வு முடிவுகள் வெளியில் கசிந்ததற்குத் தான் காரணம் எனச் சொல்லப்படுவதை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மறுத்துள்ளது. அந்த ஆய்வில் இரண்டு கூட்டரசு அமைச்சர்கள், ஒரு மந்திரி புசார், ஒரு முதலமைச்சர் ஆகியோர் தோல்வி கண்டுள்ளதாக பல…
சிலாங்கூர் ஒப்புதல் இல்லாமல் லங்காட் 2 திட்டம் மேற்கொள்ளப்படும்
சிலாங்கூர் அரசாங்கத்தின் அங்கீகாரம் இல்லாமல் லங்காட் 2 என அழைக்கப்படும் லங்காட் 2 நீர் சுத்திகரிப்புத் திட்டத்தைக் கூட்டரசு அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று அறிவித்துள்ளார். "அங்கீகரிக்கப்படுகிறதோ இல்லையோ நாங்கள் லங்காட் 2ஐ கட்டுவதற்கான குத்தகைகள் கோரி டெண்டர்களை வெளியிட்டுள்ளோம் எனக்…
காலித் அறிவித்த ‘கொண்டோ’ முடிவு நெற்றியடி
"பிஎன் -னைப் போன்று பத்துமலை கொண்டோ திட்டத்தைக் கைவிடுவதற்கு 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தானை இந்தியர்கள் ஆதரிக்க வேண்டும் என அவர் அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை" சிலாங்கூர் பத்துமலை 'கொண்டோ' திட்டத்தை ரத்துச் செய்தது மூன் டைம்: பத்துமலை 'கொண்டோ' திட்டத்தை ரத்துச் செய்வது என மாநில அரசு…
இசி: வாக்காளர்களுக்குத் தெரியாமல் அவர்களைப் பதிவு செய்வது சட்ட விரோதமாகும்
ஒரு வாக்காளரை அவருக்குத் தெரியாமல் பதிவு செய்வது சட்ட விரோதம் என தேர்தல் ஆணையம் (இசி) சொல்கிறது. அவ்வாறு பலர் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியானதைத் தொடர்ந்து அது கருத்துரைத்தது. வாக்காளர் விண்ணப்ப பாரத்தில் விண்ணப்பதாரர் கையெழுத்திட்டிருப்பதோடு அடையாளக் கார்டின் பிரதியையும் இணைத்திருக்க வேண்டும் என இசி தலைவர்…
ஐஜிபி: சமய விவகாரங்களைக் கேலி செய்ய வேண்டாம்
சமய விவகாரங்களை அல்லது இன விவகாரங்களைக் கேலி செய்யக்கூடாது, அது ஆத்திரத்தை உண்டுபண்ணும் என்பதை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் நினைவுறுத்தியுள்ளார். அதன் விளைவாக ஒற்றுமையும் இன இணக்கமும் பாதிப்புறும் என்பதால் அனைவரும் நாட்டின் சட்ட அமைப்பை மதித்து உயர் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றவர்…
அன்வார்: முஸ்லிம் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற வேகத்தில் பெரும்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவசரம் அவசரமாக காசா பகுதிக்கு வருகை மேற்கொண்டதன்வழி அனைத்துலக அரங்கில் பெரும் பிழை செய்துவிட்டார் என்கிறார் மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். பிரதமர் காசா பகுதிக்கு மேற்கொண்ட வருகையின்போது மற்ற தலைவர்கள் வழக்கமாகப் பின்பற்றும் அரசதந்திர நடைமுறையைப் பின்பற்றாதது விவேகமற்ற செயலாகும் என்று …
தண்ணீர் பிரச்னை மீது பிகேஆர் சிலாங்கூர் சுல்தானிடம் மகஜர் சமர்பித்தது
சிலாங்கூரில் தொடர்ந்து நீடிக்கும் தண்ணீர் விவகாரம் மீது சிலாங்கூர் சுல்தான் தலையிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை சமர்பிப்பதற்காக ஷா அலாமில் உள்ள சுல்தான் சலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா பள்ளிவாசல் முன்பு 30 பேர் கூடினர். சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த…
பிஎன் முக்கியப் பிரமுகர்கள் எம்ஏசிசி ஆய்வில் தோல்வி
அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்பும் பல பிஎன் முக்கியப் பிரமுகர்கள் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆய்வில் தோல்வி கண்டுள்ளனர். அந்தப் பிரமுகர்களில் இரண்டு கூட்டரசு அமைச்சர்கள், ஒரு மந்திரி புசார், ஒரு முதலமைச்சர், இரண்டு உயர் நிலை கட்சித் தலைவர்கள் ஆகியோரும் அடங்குவர்…
வெளிநாட்டு வாக்காளர் 30 நாட்கள் இங்கு தங்கியிருக்க வேண்டும் என்ற…
வெளிநாட்டு வாக்காளர் ஒருவர் அஞ்சல் வாக்காளராக தகுதி பெறுவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 30 நாட்கள் மலேசியாவில் தங்கியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை கைவிடுமாறு தேர்தல் ஆணையத்தை (இசி) தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான முன்னாள் நாடாளுமன்றத் தேர்வுக் குழு உறுப்பினரான அந்தோனி லோக் கேட்டுக் கொண்டுள்ளார். "அந்தத்…


