ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கி ஊழல் விவகாரம் மால்டாவுக்கு பரவுகிறது

மலேசியா கொள்முதல் செய்த ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் சம்பந்தப்பட்ட  ஊழல் விவகாரம் மத்திய தரைக் கடலில் உள்ள மால்டா-வுக்கும் விரிவடைந்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்தக் கொள்முதலில் பெரிமெக்கார் சென் பெர்ஹாட்-டுக்கு தரகுப் பணமாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 114 மில்லியன் யூரோவில் (457 மில்லியன் ரிங்கிட்) ஒரு பகுதி மால்டா வழியாக சட்டப்பூர்வப்…

பொதுத் தேர்தலுக்குப் பிந்திய குழப்பம் என்பது “தீய அரசியல்” என…

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ராக்யாட்டும் பெர்சே-யும் கலவரத்தை மூட்டும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுவது "தீய அரசியலுக்கு" நல்ல உதாரணம் எனப் பெர்சே வருணித்துள்ளது. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் நடப்புத் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் தெரிவித்துள்ள அந்த ஆரூடங்கள் "கெட்ட எண்ணங்கள்- தவறாக வழி நடத்துகின்றவை"…

73 மணி நேர பெர்சே 3.0 பேரணி வீடியோவை வெளியிடுமாறு…

பெர்சே 3.0 பேரணி பற்றிய வீடியோ பதிவை வெளியிடப்போவதாகவும் பொதுமக்கள் அதனைப் பார்த்து அவர்களே அப்பேரணியில் என்ன நடந்தது என்பதை முடிவு செய்யட்டும் என்று உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் கூறியிருந்தார். அமைச்சரின் அந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், போலீசார் வசம் இருக்கும்…

கணபதி ராவ்: மஇகா இளைஞர் பிரிவு குற்றச்சாட்டு “முட்டாள்தனமானது”

சிலாங்கூர் மாநில டிஎபி செயலவை உறுப்பினர் வி. கணபதி ராவ், தம்மையும் தமது சகோதரரையும் கடந்த வாரம் தாக்கிய நபர்கள் பிகேஆர் உறுப்பினர்கள் என்று மஇகா இளைஞர் பிரிவு கூறியிருப்பதை நிராகரித்ததோடு அது முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள் என்றார். "இதெல்லாம் முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள்" என்று அவர் மலேசியாகினியிடம் இன்று கூறினார்.…

லியாவ்: என் எண் தகடு இலவசமானது

சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய், தாம் WWW 15 வாகன எண் தகட்டை ஏலத்தில் எடுத்ததாகக் கூறப்படுவது பற்றிய கேள்விகளுக்கு நேற்று பதில் அளிக்கத் தடுமாறினார். ஆனால் இன்று அந்த எண்ணுக்கு தாம் ஒரு சென் கூடக் கொடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார். தாம் கொடுக்க முன்…

பெர்சே 3.0 வீடியோ வெளியிடப்படுவதை ஹிஷாமுடின் நிறுத்தி விட்டதாகச் சொல்லப்படுகின்றது

இன்று வெளியிடப்படுவதாக இருந்த பெர்சே 3.0 பேரணி மீதான வீடியோவை உள்துறை அமைச்சின் இணையத் தளத்தில் சேர்க்கப்படுவதை அதன் அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் நிறுத்துமாறு தமது அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். பல வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்தத் தகவலை வெளியிட்ட சீன மொழி நாளேடான நன்யாங் சியாங் பாவ், அந்த…

இரண்டு ஜோகூர் போலீஸ் அதிகாரிகள் நிஜாரிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்

ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் WWW 1 வாகனத் தகடு எண்ணை ஏலத்தில் எடுத்தது மீது முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் தமது டிவிட்டரில் விடுத்த அறிக்கை மீது அவரிடமிருந்து வாக்குமூலத்தை வடக்கு ஜோகூர் பாரு போலீஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று பதிவு…

பிகேஆர்: கடற்படை இரகசியம் ‘விற்கப்பட்டதை’ நஜிப் விளக்க வேண்டும்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவருக்கு நெருக்கமான நிறுவனம் ஒன்று கடற்படை இரகசிய ஆவணம் ஒன்றை மூன்றாம் தரப்பு ஒன்றுக்கு ‘விற்பனை’ செய்திருப்பதை பிரான்சின் அரசுதரப்பு வழக்குரைஞர்கள் கண்டுபிடித்திருப்பது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஆதரவாக பிகேஆரும் குரல் கொடுத்துள்ளது. அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி (படத்தில்…

டிஏபி:வாக்காளர் பதிவை நிராகரிக்கும் அதிகாரம் இசிக்கு உண்டு

தேர்தல் ஆணையம்(இசி) கூறிக்கொள்வதுபோல் அல்லாமல், போதுமான விவரங்களைக் கொண்டிருந்த பதிவுப்பாரங்களை நிராகரிக்கும் அதிகாரம் அதற்கு உண்டு என்கிறது டிஏபி. இன்று காலை அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்கும் தேசிய பரப்புரைப் பிரிவுச் செயலாளர் டோனி புவாவும் பல்வேறு காரணங்களுக்காக…

பாஸ் கூட்டத்தைக் கண்டு பயந்துபோனார் மகாதிர்

“மகாதிர் அவர்களே,டிட்டி காஜாவில் எத்தனையோ ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறீர்கள், இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததுண்டா?”   பாஸ் வாடகைக்கு அமர்த்திய கூட்டம் என்று டாக்டர் எம் கிண்டல் தொலு: பாஸ்,அதன் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் வாடகைக்கு அமர்த்த வேண்டிய அவசியமில்லை.அதே வேளை டிஏபி, பிகேஆர் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் சுய விருப்புடன்தான் கூட்டத்துக்குச்…

மக்கள் எங்களை நம்பவில்லை என EAIC வருத்தமுடன் சொல்கிறது

அமலாக்க அதிகாரிகளுடைய அத்துமீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில ஆண்டுகளாக வேண்டுகோட்கள் அதிகரித்து வருகின்றன. காரணம் அவர்களுடைய குற்றங்கள் தண்டிக்கப்படாமல் போவதே காரணமாகும். ஆனால் அத்தகைய குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட அரசு துணை நிறுவனத்துக்கு அவை குறித்து எந்தப் புகாரும் கிடைக்கவில்லை.…

‘நோ எங்கள் அச்சத்தை உறுதி செய்து விட்டார்’

சிலாங்கூர்கூ பெர்சே நடவடிக்கையை  சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார் நிராகரித்துள்ளது, பிஎன்- எதனையோ மறைக்கிறது என்பதை மெய்பிப்பதாக மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் பாக்கே ஹுசின் கூறிக் கொண்டுள்ளார். அடுத்த மாநிலச் சட்டமன்றத் தேர்தல் தூய்மையாகவும் நியாயமாகவும் முறைகேடுகள் இல்லாமலும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கு வாக்காளர்களுடைய…

தற்காப்பு ரகசியங்கள் விற்கப்பட்டதாக கூறப்படுவது மீது கடற்படை மௌனம்

இரண்டு ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிகளுக்கான கொள்முதல் ஆணையுடன் தொடர்புடைய ரகசிய ஆவணம் ஒன்று அந்நிய நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுவது மீது கருத்துரைக்க அரச மலேசியக் கடற்படை மறுத்துள்ளது. "இப்போதைக்கு எந்தக் கருத்தும் தெரிவிக்கப்பட மாட்டாது," என அரச மலேசியக் கடற்படையின் ஊடக, இணையத் தள இயக்குநர் காமண்டர்…

புத்ராஜெயாவை பக்காத்தான் கைப்பற்றினால் வன்முறை மூளும் என்பதை அன்வார் நிராகரிக்கிறார்

அடுத்த பொதுத் தேர்தலில் சாதாரணப் பெரும்பான்மையுடன் புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை கொண்டுள்ளார். அந்த அதிகார மாற்றம் அமைதியானதாக இருக்கும் என்றும் அவர் சொன்னார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உட்பட பிஎன் தலைவர்கள், தாங்கள் தோல்வி கண்டால் அதிகாரத்தை…

சொய் லெக் மெர்டேகா மைய கருத்துக்கணிப்பால் கலக்கமுறவில்லை

சீனர்களிடையே, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ஆதரவு இறங்குமுகமாக இருப்பதைக் காண்பித்த மெர்டேகா மையத்தின் அண்மைய கருத்துக்கணிப்பு குறித்து மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கவலையுறவில்லை. இதெல்லாம் சகஜம்தான் என்ற பாணியில் “அப்படி , இப்படித்தான் இருக்கும்”, என்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.…

இசி: நாங்கள் முழுமையாக இல்லாத முகவரிகளை நிராகரிக்க முடியாது

போலியானது எனக் கூறப்படும் முழுமையில்லாத முகவரிகளைக் கொண்டுள்ள வாக்காளர்கள் பதிவை நிராகரிக்கும் அதிகாரம் இசி என்ற தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என அதன் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறியிருக்கிறார். அந்தப் பதிவுகள் மீது உள்ளூர் மக்களிடமிருந்து ஆட்சேபம் ஏதுமில்லாத சூழ்நிலையில் அவை பெரிய  வாக்காளர் பட்டியலில்…

பெர்க்காசா: பெர்சே விசாரணைக் குழு கால விரயம்

பெர்சே 3.0 மீது அரசாங்கம் அமைத்துள்ள விசாரணைக் குழு 'கால விரயம்' என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி வருணித்துள்ளார். ஏனெனில் அந்த ஆர்ப்பாட்டத்தை சூழ்ந்துள்ள விவரங்கள் அனைவருக்கும் தெரிந்தவை என்றார் அவர். 'இதில் விசாரிப்பதற்கு எதுவுமே இல்லை. அந்தப் பேரணி சட்டவிரோதமானது என நமக்கு ஏற்கனவே தெரியும்.…

கணபதிராவையும் ராய்டுவையும் தாக்கிய மூவர் கைது

டிஏபி மாநில செயலவை உறுப்பினர் வி.கணபதி ராவ் அவரின் சகோதரர் ராய்டு ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மூவரைக் கைது செய்திருக்கிறார்கள். 28-க்கும் 45வயதுக்குமிடைப்பட்டவர்களான அம்மூவரும் கிள்ளான் பத்து பெலாவில் ஓர் உணவகத்தில் கைது செய்யப்பட்டதாக வட கிள்ளான் போலீஸ் மாவட்டத் தலைவர் முகம்மட் சுக்குர் சூலோங்…

பெர்சே தொண்டர்மீதான குற்றச்சாட்டைக் கைவிடுக:என்ஜிஓ-கள் வலியுறுத்து

சுவாராமில் இருந்துகொண்டு பயிற்சி பெற்று வருபவரான டான் ஹொங் காய்மீது யுனிவர்சிடி சயன்ஸ் மலேசியாவுக்குள் அத்துமீறி நுழைந்தார் என்று சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு என்ஜிஓ-கள் சட்டத்துறை தலைவர்(ஏஜி)அலுவலகத்துக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன. 50க்கு மேற்பட்ட சமூக அமைப்புகள் அம்மகஜரை ஆதரித்துக் கையொப்பமிட்டிருப்பதாகக் கூறிய…

கேலிச்சித்திரத் தடை ‘அழுக்கு அரசியலை’த் தடுக்காது

தேர்தல் ஆணையம்(இசி), பொதுத் தேர்தலில் அரசியல் கேலிச்சித்திரங்களுக்கு தடை விதித்திருப்பது தேவையற்றது, அது ஆணிவேர் பிரச்னையான அழுக்கு அரசியலுக்குத் தீர்வுகாணும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்கிறது கெராக்கான். அந்தத் தடைவிதிப்பை ஏற்காத கெராக்கான் உதவித் தலைவர் மா சியு கியொங், “அந்தத் தடைவிதிக்கக் காரணமே இல்லை...... உண்மையில் அது தேவையற்றது”,…

கார் எண் தகடு மீது லியாவ் தடுமாற்றம்

சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய், WWW15 கார் எண் தகட்டை 24,300 ரிங்கிட்டுக்கு தாம் ஏலத்துக்கு எடுத்ததாக கூறப்படுவது மீது தொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு இன்று பதில் அளிக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் அவர் பதில் கொடுக்க முடியாமல் தடுமாறினார். அந்த ஏலத்துக்கு யார் பணம் கொடுத்தார்கள்…

சிலாங்கூர் வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையைப் புறக்கணிக்குமாறு இசி-யும் கேட்டுக்…

'Selangorku Bersih' என்னும் இயக்கத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுடைய Read More